இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்

360 Views

8 1 இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையை வந்தடைந்தார்.

நேற்று மாலை 7 மணியளவில் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிவிவார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

09 1 இலங்கையை வந்தடைந்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்உயர் ஸ்தானிகர் மற்றும் இலங்கை வெளிவிவகார செயலர் அட்மிரல் (ஓய்வு) பேராசிரியர் ஜயநாத் கொலம்பஹே ஆகியோர் வெளியுறவுச் செயலாளரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் தங்கியிருக்கும் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவர் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் பயணங்களை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021

Leave a Reply