இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெற்றிக் தொன் உரம் இன்று (9) இலங்கைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 மெற்றிக் தொன் உரம் கொழும்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது. இந்தநிலையில் உர விநியோகம் ஜூலை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெரும் போகத்துக்கு தேவையான உர இருப்புக்களை விநியோகிப்பதற்கு தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.



