அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய தூதரகம்!

அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை ஒக்டோபர் 31ஆம் திகதி வரை மட்டுமே செயற்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நவம்பர் 3ஆம் திகதி முதல் இந்திய உயர்ஸ்தானிகராலயம் (கொழும்பு), உதவி உயர்ஸ்தானிகராலயம் (கண்டி) மற்றும் இந்திய துணைத் தூதரகம் (யாழ்ப்பாணம்) என்பவற்றினால் நேரடியாகக் கையாளப்படும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

சேவையினை பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள http://hcicolombo.gov.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

image ec3e13da82 அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய தூதரகம்!