இலங்கையுடன் எப்போதும் இந்தியா இருக்கும் – இந்திய தூதரகம் தெரிவிப்பு

97 Views

இலங்கையுடன் எப்போதும் இந்தியா

நெருங்கிய நண்பராகவும் அயலவராகவும் இலங்கையுடன் எப்போதும் இந்தியா இருக்கும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மாத முற்பகுதியில் புது டெல்லியில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைய, இலங்கைக்கு நீண்ட கால மற்றும் மத்திய கால ஒத்துழைப்புக்கள் கிடைக்கவுள்ளதாக வருட இறுதி விருந்துபசராத்தில் கலந்துகொண்டு இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது உணவு, சுகாதார பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் செலாவணி ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

Leave a Reply