ராஜபக்சர்களுக்கு இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும்-சுப்ரமணியம் சுவாமி

ராஜபக்சர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும், கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாக தெரிவானவர்கள். அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும். அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது.

எனவே ராஜபக்சர்களுக்கு தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பிரதமராக இருந்த மகிந்தவின் இல்லம்கூட எரிக்கப்படுகின்றது என்றால் அதற்கு காரணமானவர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள் அல்ல என கடந்த மே மாதம் இடம்பெற்ற வன்முறையின் போது சுப்ரமணியம் சுவாமி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் குறித்த சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.