நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு எனப்படும் வொசிங்டனைத் தளமாகக் கொண்ட அமைப்பின் மீது அமெரிக்காகடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அந்த அமைப்பு இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டு ள்ள அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ருல்சி கபாட்டிடம் இந்திய பாது காப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கடந்த திங்கட்கிழமை(17) தெரிவித் துள்ளதார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள அவர், புதுடில்லியில் இடம்பெறும் வரு
டாந்த வெளிவிவகார கொள்கைகள் தொடர்பான மாநாட்டிலும் உரையாற்றவுள்ளார். அதேசமயம் அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்படட இந்திய பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமெரிக்காவில் இயங்கிவரும் காலிஸ்தான் அமைப்புக்களுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்தியா தனது விசனத்தை வெளிப் படுத்தியுள்ளது. அதேசமயம், நீதிக்கான சீக்கியர் கள் அமைப்பின் நிறுவுனர் குர்பத்வன் சிங் பன்னும் மீது இந்தியா படுகொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அங்கு ஆராயப் பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



