ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC) நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் விருப்பத்தை சீனா “மதிக்கிறது மற்றும் புரிந்துகொள்கிறது” என்று பெய்ஜிங் கின் நிலைப்பாட்டை துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு கடந்த புதன் கிழமை(11) தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்திருந்த மாவுடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா-சீனா மூலோபாய உரையாடலை நடத்திய பின்னர் “இந்தியாவில் வெற்றிகரமான பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு சீனத் தரப்பு தனது ஆதரவைத் தெரிவித்தது” துணை அமைச்சர் மாஸ UNSC உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் விருப்பத்தை சீனா புரிந்துகொண்டு மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு, இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை ஆழப்படுத்த வேண்டும், ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும், வேறுபாடுகளை முறையாக நிர்வகிக்க வேண்டும், உறவுகளின் வளர்ச்சியை ஊக்கு விக்க வேண்டும் என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங், கூறினார்.
புதுப்பிக்கப்பட்ட விமான சேவை ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிக்க வேண்டியதன் அவசியத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையி லான நேரடி விமானங்கள் 2025 அக்டோபரில் அதிகாரப் பூர்வமாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைவராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இந்தியா பிரிக்ஸ் தலை மைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
2024 அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருந்தது.



