அறிகுறியற்ற ஒமிக்ரோன் பரவல் அதிகரிப்பு -சுகாதார அமைச்சு

185 Views

அறிகுறியற்ற ஒமிக்ரோன் பரவல்

அறிகுறியற்ற ஒமிக்ரோன் பரவல்: அறிகுறியற்ற கோவிட் -19 தொற்றுகள் மூலம் ஒமிக்ரோன் வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக ஏற்கனவே கோவிட் -19 தொற்றுகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டில் 1 முதல் 2 மில்லியன் மக்கள் தடுப்பூசி போடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply