கடந்த மே மாதத்தில் 83,309 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.
இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 100,000 க்கும் குறைவான வருகையை பதிவு செய்த முதல் மாதமாக மே மாதம் உள்ளது.
இருப்பினும், மே 2022 இல் பதிவுசெய்யப்பட்ட வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் எண்ணிக்கை 175.5 சதவீதம் அதிகமாகும்.
மே மாதத்தில் பருவ காலம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எப்போதும் குறைவாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் வழங்கல் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 524,486 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.