இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்வர்களது எண்ணிக்கை 5 இலட்சத்து 92 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் மேலும் 461 பேருக்கு நேற்றைய தினம் கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 592,128 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் 15,119 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Tamil News