161 Views
இந்திய கடனின் கீழ் அரச வைத்தியசாலைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மருந்து இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் 85% மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.