மன்னார் மாவட்டத்தில் கொரோனா பயணத்தடை காரணமாக மட்பாண்டத் தொழில் பாதிப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பயணத் தடையால், மன்னார் மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பினை அடைந்திருக்கிறார்கள்.

மன்னாரில் மடுக்கரை, கறுக்காக்குளம், செம்மண்தீவு போன்ற இடங்களில் மாத்திரமே மட்பாண்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் மேற்குறிப்பிட்ட கிராமங்களில்   செய்யப்படுகின்ற சட்டி, பானை, அடுப்புகள் போன்ற மட்பாண்டப் பொருட்களை  வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யவோ அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து, மட்பாண்டப்  பொருட்களை எடுத்துச் செல்வதற்கோ இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உருவாக்கப்பட்ட மட்பாண்டப்  பொருட்கள் தேங்கி கிடைப்பதன் காரணமாக மட்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும்  பாதிப் படைந்துள்ளது.

இதனால் இவர்களுடைய குழந்தைகளின் கல்வி எதிர்காலமும்  கேள்விக் குறியாகி உள்ளது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மட்பாண்டத் தொழில் மன்னார் மாவட்டத்தில் அற்றுப் போவதற்கு வாய்ப்பு உள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ilakku-weekly-epaper-143-august-15-2021