மீன்பிடி படகில் கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தமிழக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், தெற்கு கேரளாவில் உள்ள கொல்லத்தில் உள்ள ஒரு விடுதியில் இருந்து 11 இலங்கையர்களை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த இரண்டு இலங்கை பிரஜைகள் காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குற்றப் புலனாய்வுத்துறையினரின் (சிஐடி பிரிவு) தொலைபேசி சமிக்ஞைகளைப் பின்பற்றி கொல்லத்தில் அவர்களைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன குறித்த இருவர் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.