Home Blog Page 83

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு: அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தகவல்

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

இதற்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த சிறந்த புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:

“18 வயதுக்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பங்கள், அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதுடன், பல்வேறு சிக்கல்களை உருவாக்குகின்றன. இதனால், பெற்றோரின் கவனிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் சமூகத்தில் கைவிடப்பட்ட அல்லது அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் பிறப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க அரசாங்கமாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு குறித்த தெளிவான புரிதலை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு, அதற்கான முழுப் பொறுப்பு ஒரு பெண்ணின் மீது மட்டும் விழுவதில்லை. அனாதையாகவோ அல்லது கைவிடப்பட்டவர்களாகவோ சமூகத்தில் விடப்படும் குழந்தைகள், சமூக களங்கத்தையும், பாவத்தையும், சாபத்தையும் சுமக்க நேரிடுகிறது. எனவே, உறவு வைத்திருக்கலாம், ஆனால் பொறுப்பான குடும்ப உறவு இல்லாமல் குழந்தை பெறுவது சாத்தியமில்லை என்றால், கர்ப்பத்தைத் தடுக்க அறிவியல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கரு உருவான பிறகு அதை அழிப்பது குற்றவியல் கொலையாகும். ஆகவே, குழந்தைகளை அனாதைகளாகவோ அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ ஆக்காமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும்.”

இசைப்பிரியா உள்ளிட்டோரின் மரணம் தொடர்பில் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வு கோரி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தம்மால் சமர்பிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும், அது தொடர்பான எழுத்துமூல பதிலை எதிர்பார்ப்பதாகவும், முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்திலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
தாம் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்கு கிடைக்கவில்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எனவே, தமது கோரிக்கை கடிதம் கிடைக்கப்பெற்று, 7 வேலை நாட்களுக்குள் பதிலை எதிர்பார்ப்பதாகவும், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அவர் கூறியுள்ளார்.

தனது முறைப்பாடு தொடர்பில் கோப்பு இலக்கம் மாத்திரமே இதுவரையில் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.எனவே, பொலிஸாரின் பதிலை பொறுத்து தாம் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொலிஸாரினால் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாவிடின் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்படும் மனித உரிமை நிறுவனங்களும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படும் என தனது கோரிக்கை கடிதத்தில் சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் முறைப்பாடு செய்தார்.
இறுதிப்போரின் போது சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்து சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகேவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது. இதில், பிரதானமாக, இசைப்பிரியா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவின் கருத்தால் அமைதியின்மை!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி சபைகள் முறையாக கழிவகற்றலை மேற்கொள்ளவில்லை என்றும், இதனால், வீதிகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார்.

இதன்போதே, அவருக்கும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. இதேவேளை, யாழ்ப்பாண அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இனிவரும் காலங்களில் விடயங்களைத் தவிர வேறு பிரச்சினைகளுக்கு இடம்தரப்பட மாட்டாது என, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர், அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் அவருக்கும் இடையிலும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள்

நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள் ,புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக “செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்” என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

1996ம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பரீட்சை முடிந்து செம்மணியூடாக வீடு திரும்பும் போது செம்மணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையும் அவரைத்தேடிச் சென்ற அவரது தாயும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதும் பின்னர் இந்நிகழ்வுகள் வெளிவந்து குற்றவாளிகள் கோர்ப்புரல் சோமரட்ண ராஜபக்ஷ ஆகியோர் குற்றவாளிகளாகக்காணப்பட்டு 1998 ஆண்டு ராஜபக்ஷவிற்கு மரண தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டுக்குப்பின் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டவை என்பன வரலாறுகள்.

கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாகிய சோமரட்ண ராஜபக்ஷ கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் சில தமிழ் மக்கள் செம்மணியில் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அப்போது செம்மணிப்பகுதி ஒரு பாரிய மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதன்பின் அதுபற்றி எவரும் பெரிதாக பேசவில்லை.

ஆயினும் சில மாதங்களுக்குமுன் செம்மணிப்பகுதியில் ஒரு தகனமேடைக்கெனத் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனித உடற் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் உத்தியோகபூர்வமாக அப்பகுதியில் நீதிமன்ற அனுசரணையுடன் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேலும் பல எலும்புத் தொகுதிகள் கண்டுபடிக்கப்பட்டன.

இரண்டு கட்டங்களாக இடம் பெற்ற அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக 10.7.2025 நிறுத்திவைக்கப்பட்போது ஏறக்குறைய 65 மனித உடற்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லையாயினும் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அதிர்ச்சியூட்டுபவையாகவுள்ளன.

அவற்றுள் சில சிறுவர்களுடையது. ஒரு இடத்தில் சிறுவர்களது விளையாட்டு பொம்மை, பாடசாலை புத்தகப்பை,  சிறுமியின் உடை, சில வளையல்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

15.7.2025 அன்று இவ்வழக்குக்குப் பொறுப்பான நீதிவான் அ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வின் போது பிரசன்னமாயிருந்த தொல்லியல் பேராசிரிய ராஜ்சோம தேவாவும், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனும் பிரசன்னமாயிருந்தனர்.

அப்போது தொல்லியல் பேராசிரியரும் சட்ட வைத்திய நிபுணரும் தமது இடைக்கால அறிக்கைகளில் இப்புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் உள்ள இடம் ஒரு குற்றப்பிரதேசமாகவும், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற இடமாகவும் கருதப்படச்சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பாக 4-5 வயதுச்சிறுமியின் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சடலம் மேலும் இக்காலகட்டத்தில் கிருஷாந்தி கொல்லப்பட்டதற்கு (1996க்கு) முந்திய பிந்திய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இராணுவ முகாம்களும் வீதிக்குவீதி சென்ற்றி போயின்ற்றுகளும் இருந்தன.

சர்வ சாதாரணமாக கைதுகளும், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவதும் இடம்பெற்றுவந்தன. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது பற்றி பாராளுமன்றத்தில் 2025 ஆனி ஆடி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கிலத்தில் ‘tip of the iceberg’ (நீரில் மிதக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய பகுதிஎன்று ஒரு சொற்றொடர் உண்டு, பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதந்துவரும் போது வெளியே கண்ணுக்குத்தெரியும் சிறியதொரு பனிக்கட்டியை இது குறிக்கின்றது. ஆனால் அதைப்போல் ஏழு மடங்கு பெரிய பனிப்பாறை தண்ணிருக்குள் அமிழ்ந்திருப்பது வெளியே தெரியாது) இது போலத்தான் இதுவரை செம்மணி சிந்துபாத்திப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 65 மனித எலும்புக்கூடுகள் (பாடசாலை சிறுமிகளது உட்பட) சோமரட்ண ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த எலும்புக்கூடுகள் இப்பகுதியில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 600க்குக்குறையாத எலும்புக்கூடகளாயிலுக்கலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரமுடியும்.

இதற்குமேலாக 2024ம் ஆண்டு குழாய்நீர் வசதி வழங்க சில அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கொக்கு தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இறந்த இளைஞர், இளம் பெண்களுடைய எலும்புக்கூடுகள், மன்னார் பாலத்துக்கருகாமையில் ‘சதோச’ வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை முடிவு வெளிவராத எலும்புகூட்டு விபரங்கள், திருக்கேதிஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எல்லாவற்றையும் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டதை பார்க்கும் போது எலும்பு கூடுகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுள்  வீதமானவர்களது எலும்புக்கூடுகள் என்ற முடிவுக்கு வரலாம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு கமிஷனர் வோக்கர் டக் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அப்போது அணையா விளக்கு’ நிகழ்வும் சிவில் சமுகங்கள் செயற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் செம்மணிப்பகுதியில் ஏற்பாடு செய்த 3 நாள் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது.

ஆயினும் இவரது கருத்துக்கள் விசாரணையில் சர்வதேச பங்களிப்பை சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றமே. 3000 நாட்களைக் கடந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போரின் பின் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று கவனயீர்ப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த 3000 நாட்களில் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுள் 200க்கு மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாது இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடும் ‘பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை’ என்று தான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசின் செயற்பாடு ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை. நல்லிணக்கத்தைக்கொணர்வோம் என்று பதவிக்கு வந்த தற்போதைய அரசு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாக அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளன.

வீதிகள் திறக்கப்பட்டாலும்  மறுபுறத்தில்  இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில வீதிகள் காணிகள் இன்னும் முறைப்படி விடுவிக்கப்படவில்லை. பாரம்பரியக்காணிகள் கிழக்கில் தமிழரது பெரும்பான்மையினருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன.

வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மை மிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்பட்டபாடில்லை.

2009 ம் ஆண்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த பின் போர்க்குற்றங்கள் (சரணடைந்தவர்களைக் கொல்வது உதாரணம் : இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள்) பற்றிய பொறுப்புக்கூறல் இதுவரை இடம் பெறவில்லை.

செம்மணி,கொக்குத்தொடுவாய், மன்னார் திருக்கேதிஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புனித குழிகள் பற்றிய அகழ்வுக்கும் ஆய்வுக்கும் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லையென்று தெரிந்தும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு அனுமதி மறுப்பு. போர்க்காலத்தில் இடம் பெற்ற படுகொலைகள் உதாரணம்,நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ஆலயக்குண்டு வீச்சு, நாகர்கோவில் குண்டுவீச்சு,புனித ஜேம்ஸ் ஆலய குண்டுவீச்சு, மடு தேவாலய ல் வீச்சு, மூதூர் வெளிநாட்டு  தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, திருகோணமலையில் பரீட்சை எழுதிமுடித்திருந்த 5 மாணவர் படுகொலை போன்றவை எவற்றிலும் உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு அங்குலம் முதலாக முன்னேற்றம் இல்லை.

இதனால் தான் தமிழ் மக்கள் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டிருக்க வேண்டும். சாத்வீரசேகர விமலவன்ச, விமல ரத்னதேரர் போன்றவர்களது இனவாத கருத்துக்களுக்கு இவ் அரசும் அடிபணிகிறது போலத் தென்படுகிறது.

2009ம் ஆண்டுக்குமுன் குறிப்பாக 30 ஆண்டுகாலம் நடந்த உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்கள் மூலமும் தரையில் கடத்தப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு, கடலில் சாதாரண பயணிகள் கொல்லப்பட்டதாலும் (குமுதினி படுகொலை) ஆசியாவை இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்புக்களின் வெளிப்பாடுகளே.

அத்துடன் யாழ் நூலக எரிப்பு, பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பெளத்த விகாரைகள் நிர்மாணம் எல்லாம் இனஅழிப்பின் பல்வேறு பரிமாணங்களே. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 2009ம் ஆண்டுக்குப்பின் யுத்த வெற்றி நாள் கொண்டாடப்பட்டு கடற்படை, விமானப்படை, தரைப்படையினருக்கு யுத்தகால வீரதீரச்செயல்களுக்குப்பதவி உயர்வுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த வீரதீரச்செயல்களுக்காக இப்பதக்கங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன? இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி நிகழாது, நல்லிணக்கமே எமது குறிக்கோள் என்று பதவிக்கு வந்த இவ்வரசு இவ்வருட வெற்றி விழாவில் மேற்படி வீர தீரச்செயல்களுக்காக பதவி உயர்வுகளும் பதக்கங்களும் வழங்கியிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்றுள்ளது.

பாகிஸ்தானில் வெள்ளம்: 150 பேர் உயிரிழப்பு

பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர்.

பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், இராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு இருக்​கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பாகிஸ்​தானின் பொருளா​தா​ரம் மிக மோச​மாக பாதிக்​கப்​பட்டு இருக்​கிறது. அந்த நாட்டு மக்​கள் தொகை​யில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் குடிசை வீடு​களில் வசிக்​கின்​றனர். இதன் ​காரண​மாக இயற்கை பேரிடரின்​போது பெரும் பாதிப்​பு​கள் ஏற்​படு​கின்​றன. பரு​வநிலை மாறு​பாட்டை சமாளிக்க பாகிஸ்​தான் அரசு போதிய நடவடிக்​கைகளை எடுத்​தால் மட்​டுமே வெள்ள பாதிப்​பு​களில் இருந்து மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு சர்​வ​தேச சுற்​றுச்​சூழல்​ ஆர்​வலர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

 

தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் கட்ட முயற்சி

சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் வியாழக்கிழமை  (17) மாலை இடம்பெற்றது.

அதன் போது சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் தவிசாளர் தலைமையில் சில உறுப்பினர்கள் தையிட்டி விகாரைக்கு சென்று இருந்தனர்.

அதன் போது விகாரை வளாகத்தினுள் , கட்டட ஒன்று அமைப்பதற்கான அத்திவார கிடங்கு போன்றதொரு கிடங்கு காணப்பட்டுள்ளது.

விகாரை வளாகத்தினுள் புதிய கட்டடம் அமைப்பதற்கு விகாரதிபதியினால் சபையில் அனுமதி கோரப்படாத நிலையில் , புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் அங்கு சென்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், புதிய கட்டடங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா ? என்பது தொடர்பில் விகாரதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்தார்.

இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் போராட்டம்!

அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன. என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது

அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது.

1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன.

2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல்  தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன.

புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள்  இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம்,என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன.

இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை ,இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் .

தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம்.

இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள்,உயிர்பிழைத்தவர்கள்,மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும்  வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள்.நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும்,உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும்.

இந்த ஆவணங்கள்

தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்,

செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்

யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான  ஆதரவை நிறுத்தவேண்டும்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும்.

தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள்,அதற்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம்.

இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது.ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது. அதனை சூழவுள்ள மௌனமும்  குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே,திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கினார் ரணில்!

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது  என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு தெஹிவளை ரயில் நிலையத்துக்கு நேற்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குற்றத்தை மறைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு வழிமுறையே அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்குவதாகும்.  இதற்கமைய கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததன் பின்னர் சி.ஐ.டியில் இருந்த 600 இற்கும்  மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கினார்.

அதேபோன்று  அதிகாரிகளை பதவி நீக்கம் செய்தனர். விளக்கமறியில் வைத்தனர். சாட்சியங்களை திரட்டும் திறமையான அதிகாரிகளுக்கு பதிலாக திறமையற்ற அதிகாரிகளை பதவிகளுக்கு அமர்த்தினார்கள்.

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு  ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது.

ஆனால் எமக்கு எந்த தனிப்பட்ட தேவையும் கிடையாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள திறமையான அதிகாரிகளை நியமிக்குமாறு கர்தினால் மாத்திரம் அல்ல முழு கத்தோலிக்க சமூகமும் எம்மிடம் கோரிக்கை விடுத்தது.

எனவே  நாம் விசாரணைகளுக்காக திறமையான அதிகாரிகளை ஈடுபடுத்துவோம். குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்போம் என்றார்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபட பிரத்தியேக பாதை அமைத்த மக்கள்!

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர்.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள குறித்த ஆலயத்துக்கு கடந்த ஆறுமாத காலத்துக்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. விசேட தினங்களில் மாத்திரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு’ என உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு. அந்தப்பாதை ஊடாக மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆலயத்துக்குச் செல்வதற்காக அந்தப் பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலேயே குறித்த பிரத்தியேகப் பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

Unknown 1 3 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கும் அங்கு இடம்பெற்ற படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்று கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Unknown 3 2 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

குறித்த இவ் ஆர்ப்பாட்டத்தில் சிவில் அமைப்பு உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Unknown 4 1 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

இப் போராட்டத்தில் ஈழத் தமிழர்களுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகவும் செம்மணி மற்றும்,பாலச்சந்திரன்,இசைப்பிரியா போன்றவர்களின் படுகொலை தொடர்பிலும் நீதிக்காகக் குரல் கொடுத்து வரும் இளம் சிங்கள சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக உள்ளிட்ட பல சிங்கள செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தமையும் விஷேட அம்சமாகும்.

Unknown 12 செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: கொழும்பில் போராட்டம்

இதே வேளை, செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியில் 24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் 21 ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.