Home Blog Page 71

செம்மணியில் இன்று மேலும் மூன்று என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று (28) மேலும் மூன்று என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இதுவரை சித்துப்பாத்தியில் இருந்து மொத்தமாக 104 என்புக்கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றில், 97 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சித்துப்பாத்தி புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 23 நாள் அகழ்வுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் நாளையும் (29) அகழ்வுப்பணிகள் தொடரவுள்ளன.

முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்வதாக சுரேஷ் சாடல்

கட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று ஈ.பி.ஆர். எல்.எஃப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கமானது தமிழ் மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமென்றோ, வாக்குறுதிகள் அளித்தபடி எமது பிரச்சினைகளை தீர்ப்பார்களென்றோ முழுமையாக எதிர்பார்க்க முடியாது.

அவர்கள் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.பயங்கரவாத தடைச் சட்டமாக இருக்கலாம், மாகாண சபை தேர்தலாக இருக்கலாம், காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கலாம் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்கள் தீர்வினை வழங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் தேர்தல் வரும் என இப்போதும் ஒரு கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம்.
முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முல்லைத்தீவு, வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அல்லது புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்குவதாக இருக்கலாம் அல்லது இராணுவத்தின் நடவடிக்கைகளாக இருக்கலாம் எதுவும் நிறுத்தப்படவில்லை.

ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அனைத்து விடயங்களையும் இந்த அரசும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. உலகத்திலேயே மிகவும் பெருமளவிலான பலம்பொருந்திய கடற்படை, விமானப்படை, காலாட்படை என பல படையணிகளை கொண்டு தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி இப்போது பாராளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்கள் ஊடாக அரசாங்கத்துடன் பேச முடியுமா என்ற நிலைமைக்குள் வந்திருக்கின்றோம் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டி உள்ளார்.

இப்போது அரசாங்கத்துடன் பேச வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களோ தமிழ் கட்சிகளோ சிதறுண்டு நின்று எதனையும் சாதிக்க முடியாது. எது பெரிய கட்சி எது சிறிய காட்சி என்பது அல்ல இங்கு விடயம்.
அனைவரும் ஒன்று திரண்டு நின்று தமிழ் மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கப் போகின்றோமா? அல்லது பெரிய கட்சி சிறிய கட்சி என்று பேசப்போகின்றோமா என்பதுதான் விடயம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிகாரப்பகிர்வு முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்…

இலங்கை அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வு பகுதி முறையாகவும் உண்மையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில், தமிழ் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அதிகாரப்பகிர்வையே விரும்புகின்றன.
இந்த விடயம் தொடர்பில், வடகிழக்கில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக தமிழ் கட்சிகள் இந்தியாவுடனான தங்களது ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டும்.இந்தியாவில் வசிக்கும் அகதிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் நாட்டுக்கு வருகைத்தருவதற்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.எனவே, அது அவர்களின் பொறுப்பு என்றும் இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

மாலைதீவை சென்றடைந்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28) முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் ஜனாதிபதியை அந்நாட்டு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed Muizzu) வரவேற்றார்.

ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக மாலைதீவு வெலானா சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் வருகை முனையத்தில் சிறுமிகள் குழுவொன்று அழகிய கலாசார நடனத்தை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி அந்த சிறுமிகளுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவம் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு (Dr Mohamed Muizzu) தலைமையில் மாலைதீவின் தலைநகரான மாலேயில் உள்ள குடியரசு சதுக்கத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

“சர்வதேச நீதியை தடம் புரளச்செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம்”

சர்வதேசநீதியை தடம்புரளச்செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தமிழ் மக்கள் கலக்கமடைந்துள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ள  பிரித்தானிய தமிழர் பேரவை, மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். சர்வதேச நீதியை தடம்புரளச்செய்வதற்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுபொறிமுறை – கலப்பு பொறிமுறை மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை பயன்படுத்த முயல்வது குறித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள்;.இந்த முட்டுக்கட்டை தந்திரோபாயங்களை நிராகரிக்கவேண்டும்,இந்த போலி நாடகத்தை அம்பலப்படுத்தவேண்டும்,சர்வதேச நீதி செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்கவேண்டும். இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடரும் வன்முறைகள் குறித்தும் 1948 முதல் இடம்பெறும் இனப்படுகொலைகள்  குறித்தும் அறிக்கையிடுதல் வேண்டும்.

”ஜெனிவாவில் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களை பயன்படுத்தி இலங்கை தப்பித்துள்ளது” -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீ காந்தா தலைமையில் இடம்பெற்ற 1983 கறுப்பு ஜூலை படுகொலை வாரத்தின் நேற்று, இன்று ,நாளை மக்கள் கருத்தாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நாங்கள் 1983 கறை படிந்த கறுப்பு ஜூலை வாரத்தை நினைவு கூருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் வெலிக்கடை சிறைச்சாலையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பவர்களாக இருக்கிறோமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

தமது உயிர் பறிக்கப்படப் போகிறது எனத்  தெரிந்தும் எமது இனத்தின் கொள்கைக்காக எந்தவித விட்டுக்கொடுப்புக்களையும் காட்டிக் கொடுப்புகளையும் செய்யாது தமது உயிர்களை தியாகம் செய்தவர்கள்.

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகம்.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் சுமார் 12 வருடங்களாக கிடப்பில் கிடக்கின்றது. தொடர்ந்தும் தீர்மானங்களை எடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் ஐநா மனித உரிமைகள் பேரவையிலே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தி வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு நகருவதற்காக அண்மையில் தமிழ் தேசியப் பரப்பில் பயணித்துக் கொண்டிருக்கின்ற அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததோடு சிவில் சமூகத்தையும் அழைத்தோம் துரதிஷ்ம் தமிழரசு கட்சி  மட்டும் கலந்து கொள்ளவில்லை.

ஐநா மனித உரிமைகள் பேரவையிலிருந்து  தமிழ் மக்களுடைய விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கான இரண்டு வழிகள் இருக்கிறது .

இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவது அல்லது உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்ட நாடுகளில் விசாரணைகளை ஆரம்பிப்பது.

இலங்கை ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிட்டாலும் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான உதாரணமாக மியன்மாரில் இடம் ரோஹிந்திய முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிபு விவகாரத்தை கூறலாம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இலங்கை போன்று மியான்மாரும் ஏற்காத நிலையில் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அங்கத்துவ நாடு ஒன்றினால் விசாரணை கோரப்படடது.

அதேபோன்று ரோம் உடன்படிக்கையில் அமெரிக்கா கைச்சாத்துடாவிட்டாலும் ஆப்கானிஸ்தானில் சென்று அமெரிக்கா இராணுவம் இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஆப்கானிஸ்தான் ரோம் உடன்படிக்கையை ஏற்றுள்ள நிலையில் உடன்படிக்கையை ஏற்ற நாடு ஒன்றில் இன்னொரு நாடு சென்று இழைத்த மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது ஐநாவுக்கு வெளியில் இலங்கையில் போர் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்பில் ஈடுபட்டவர்கள்  ஐநா  உறுப்பு நாடுகளுக்கு நுழையும் போது தமது நாடுகளில் போர் குற்ற விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு பல வழிகள் இருக்கின்ற நிலையில் 2012 இல் இருந்து தமிழ் மக்களுடைய தீர்மானங்கள் தமிழ் மக்களின் ஆணை பெற்றவர்களினால் கிடப்பில் போடுவதற்கு காரணமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையை மாற்றி எல்லோரும் ஒரணியாக புதிய தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ஒன்றுபட்டு வாருங்கள் என அழைப்பு விடுத்தும் தமிழரசு கட்சி வரவில்லை.

அவர்கள் வரவில்லை என்றாலும் எமது புதிய தீர்மானம் அனுப்பும் வரைவை தமிழரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம் வராவிட்டாலும் திருத்தங்களை கூறினால் திருத்துவதற்கும் தயாராக இருக்கிறோம்.

ஆகவே தமிழ் மக்களுக்காக பல உயிர் தியாகங்கள் இந்த மண்ணில் இடம் பெற்றுள்ளதை நினைவில் வைத்து  வர இருக்கும் ஜெனிவா அமர்வுகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான ஒத்துழைப்புக்களை அனைவரும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை  வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது.

இது குறித்து  சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

524328374 1831622784430134 4176378335269581283 n குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது.

இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக இதனை செய்வதாக தெரிவித்தாலும் அது ஒரு பொய். குழந்தைகளை  கொலைசெய்யும் சாகசபிரியர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு எந்தசுற்றுலாப்பயணியும் விரும்பவில்லை.

இந்த இஸ்ரேலிய படைவீராகள் மிகவும் ஆபத்தான மனோநிலையில் உள்ளனர்.அவர்களின் மதிப்பு மிக்க குணங்களான சுற்றுலாவிற்கு செல்லும் நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்நாட்டவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் குணங்கள் குறித்து உலகின் பல பகுதிகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் மாத்திரமல்லாமல் வேறு பல நாடுகளில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் உள்நாட்டு கலாச்சாரங்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான மனிதாபிமானமற்ற சிந்தனையாளர்கள் எங்களின் பெறுமதியான சுற்றுலாத்துறையை அழிப்பதை தடுத்து நிறுத்துவோம்.

சட்டவாக்கக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, சிறுவர்களைப் பாதுகாக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சட்டவாக்கக் கட்டமைப்புகளை பலப்படுத்தி- சிறுவர்களுடன் கட மையாற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் ஆற்றலை மேம்படுத்தி சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் கார்மென் மொரெனோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறுகின்ற சிறுவர்களுக்கெதிரான அனைத்துவகையான வன்முறைகளையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அழுத்தங்களை வழங்கும் நோக்கில் நடைபெறும் சர்வதேச சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-சிறுவர்களுக்கான நீதியில் நேர்மையும் சமத்துவமும் பிரதிபலிக்க வேண்டும். பலமான சான்றுகள், வினைத் திறன்மிக்க தலைமைத்துவம். ஒருங்கிணைப்பு மற்றும் முதலீட்டுடன் இலங்கைக்கு அனைத்து சிறுவர்களும் பயன்பெறும் ஒரு பாதுகாப்பு முறைமையைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளுக்குத் தீர்வு காண்பதில் கல்வித்துறையின் வகிபாகம் இன்றியமையாதது- என்றார்.

கறுப்புயூலையும் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களும்.!-பா. அரியநேத்திரன்

கறுப்பு யூலை காலப்பகுதியில் 1983, தமிழினப் படுகொலை நடந்த சமயம் வடகிழக்கை பிரதி நிதித்துவப்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியில் 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி தலைவராக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைவரும் கடந்த 1977,ஆகஷ்ட்,04, தொடக்கம்  1983, அக்டோபர்,24, வரை பாராளுமன்றத்தில் பதவியில் இருந்துள்ளனர்.
ஆனால் அவர்களால் கறுப்புயூலை சம்மந்தமாக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு காட்டமுடியவில்லை இதற்கான காரணம்.1977, பாராளுமன்றம் மேலும் 5, வருடங்கள் நீடிக்க 1982ல் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு முன்னம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற ஆயுள்காலத்தை நீடிப்பது தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது தமிழர் விடுதலை கூட்டணி எதிர்த்து விவாதித்துவிட்டு வாக்களிப்பு நாளில் எதிர்க்காமல் அதில் கலந்துகொள்ளாமல் நழுவிவிட்டனர். அதனை எதிர்த்து வாக்களிக்கவில்லை  என்ற விமர்சனம் தமிழ்மக்கள் மத்தியிலும் விடுதலை இயக்கங்கள் மத்தியிலும் அப்போது இருந்தது.
1983, யூலை, 22க்கு பின்னர் பாராளுமன்றம் செல்லக்கூடாது என விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினர்.1983, யூலை, 23ல் கலவரம் ஏற்பட்டது. 1983 யூலை படுகொலை இடம்பெற்று அடுத்த மாதமே எட்டு தினங்களால்  1983, ஆகஷ்ட் 08ல் ஆறாவது திருத்தச்சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பை திருத்துவதற்கான சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.ஆதரவாக 150, வாக்குகள் கிடைத்தன தமிழர்களில் ஆதரவாக கல்குடா ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கே டவிலியூ தேவநாயகம், மட்டக்களப்பு தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து அரசுடன் இணைந்த செல்லையா இராசதுரை, பொத்துவில் ஐக்கியதேசியகட்சி பாராளு மன்ற உறுப்பினர் றங்கநாயகி ஆகியோர் ஆறாவது திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். மறுநாள் 1983, ஆகஸ்ட் 09ல் 6வது திருத்த சட்டத்திற்கு அமைவாக சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர்.
தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்றத்தில் சமூகம் கொடுக்கவில்லை. ஆறாவது திருத்தச்சட்டம் என்பது இலங்கையின் ஆள்புல கட்டுகோப்பை மீறுவதற்கு எதிரான தடை விதிக்கும் திருத்த சட்டமாகும். இது அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவின் பின்னர் 157A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. மேலும், 167A என்ற பிரிவும் சேர்க்கப்பட்டது, இது இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டை மீறுவதற்கெதிரான தடை யைக் குறிக்கிறது.
இந்த சட்டமூலம் ஒரு நாட்டில் பிரிவினை கூறுவது தடைசெய்யப்பட்டதுடன் அதற்கு சார்பாக சத்தியபிரமாணத்தை செய்ய வேண்டும் என்று சட்டத்தில் நிறைவேறியது.  இதற்காக “ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் யாப்பை உறுதியாக போற்றிக் காப்பேன் என்றும்,இலங்கை ஆள்புலத்துக் குள்
ளாகத்தனி அரசொன்று தாபிக்கபடுவதற்கு மறை முகமாகவோ,இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியிலோ ஆதரவு அளிக்கவோ,ஆக்கமளிக்கவோ,ஊக்கிவிப்பு அளிக்கவோ, நிதி உதவவோ, பரிந்துரைக்கவோ மாட்டேன் என்றும் பயபக்தியுடன் வெளிப்படுத்தி உறுதி செய்கிறேன் / சத்தியம் செய்கிறேன். என கையொப்பம் கட்டாயம் இடும் சட்ட மூலமாகவே 6, வது திருத்த சட்டம் அமைந்தது. இந்த சத்தியப்பிரமானத்தை தமிழர் விடுதலை கூட்டணி 18, பாராளுமன்ற உறுப்பினர்களும்  எடுக்க கூடாது என்று அப்போது வடகிழக்கில் பலமான சக்தியாக இருந்த சகல விடுதலை இயக்கங்களும் உத்தரவிட்டதற்கு அமைவாக அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்க வில்லை.
அதனால் 18, பாராளுமன்ற உறுப்பினர் களும் தொடர்ச்சியாக மூன்று மாதம் பாராளு மன்றத்திற்கு செல்லாமையால் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை தானாகவே இழந்தனர்.
அந்த 18, பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்:
1. வட்டுக்கோட்டை, அ.அமிர்தலிங்கம்.
2. திருகோணமலை, இரா.சம்பந்தன்.
3. பட்டிருப்பு.பூ.கணேசலிங்கம்.
4. வவுனியா,தா.சிவசிதம்பரம்.
5. நல்லூர்.மு.சிவசிதம்பரம்.
6. யாழ்ப்பாணம்,வே.யோகேஸ்வரன்.
7. முல்லைத்தீவு, அசை.செல்லத்தம்பி.
8. மன்னார்,சோ.சூசைதாசன்.
9. கிளிநொச்சி.வீ. ஆனந்தசங்கரி.
10. சாவகச்சேரி,வீ. என். நவரெத்தினம்.
11. வட்டுக்கோட்டை, நீலன் திருச்செல்வம்.
12. ஊர்காவல்துறை,க.பொ.இரத்தினம்.
13. பருத்தித்துறை, வீ. என். நவரெத்தினம்.
14. உடுப்பிட்டி.த.இராசலிங்கம்.
15. உடுவில்,வீ.தருமலிங்கம்.
16. கோப்பாய்.மு.ஆலாலசுந்தரம்.
17. மட்டக்களப்பு செ.இராசதுரை.
18. பொத்துவில் . எம்.கனகரெட்ணம். (இவர் 1978, ல் சுட்டுக்கொலை, இடைத் தேர்தலில் அவருடைய சகோதரி திருமதி றங்கநாயகி ஐக்கியதேசியகட்சி மூலம் வெற்றியீட்டினார்)
இவர்களில் மட்டக்களப்பு செ.இராசதுரை அரசுடன் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார். இந்தியாவில் தங்கி இருந்த பருத்திதுறை துரைரெட்ணம் இயற்கை எய்தினார்.பொத்துவில் கனகரெட்ணம் 1978, ஜனவரி, 27ல் கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் இதனை விடுதலைப்புலிகள் செய்ததாக அப்போது கூறப்பட்டது.
கோப்பாய் எம்.ஆலாலசுந்தரம்,உடுவில் வீ.தருமலிங்கம்(தற்போதைய புளட் தலைவர் சித்தாத்தன் தந்தை) இருவரும் 1985, செப்டம்பர் 02ல் கடத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் வீதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை ரெலோ இயக்கம் செய்ததாக அப்போது கூறப் பட்டது.
‘ஏனையவர்கள் இந்தியாவில் தங்கி இருந்தும், சிலர் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தும் சென்றனர். இந்தியாவில் தங்கி இருந்தபோதும் இந்தியப்பிரதமர், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டு அரசியல் பணியை சிலர் மேற்கொண்டனர்.
1982, டிசம்பர் 22ல் சர்வசனவாக்கெடுப்பு இடம்பெற்று  1989, பிப்ரவரி 15ல் ஏறக்குறைய ஆறுவருடங்கள் பாராளுமன்றம் தொடர்ந்தது.இந்த காலத்தில் வடகிழக்கில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் பிரதிநிதித்துவம் வெற்றிடமா கவே கடந்தன.
1983, யூலை இடம்பெற்ற இனக்கலவரத் தின் பின்னர் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் கள் சமூகம் இல்லை என்பதால் எதிர்ப்பு காட்டவில்லை. 1989, விகிதாசார தேர்தலில்தான் வடகிழக்கில் மீண்டும் தமிழர் விடுதலை கூட்டணி இடம்பிடித்தது.

ஆபிரிக்க நாட்டில் கொடிய காய்ச்சலுக்கு 150க்கும் மேற்பட்டோர் பலி

நைஜீரியாவின் நோய் கட் டுப்பாட்டு மையம் கடந்த திங்கட்கிழமை (21), நாட்டில் அதிகரித்து வரும் லாசா காய்ச்சல் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந் தது 800 தொற்றுகளையும் 151 இறப்புகளையும் ஏற்படுத்தியுள் ளது.
X தளத்தில் வெளியிடப் பட்ட நிறுவனத்தின் 27வது வார தொற்றுநோயியல் அறிக்கையின் படி, இறப்பு விகிதம் 18.9% ஆக உயர்ந்துள்ளது; இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17.3% ஆக இருந்தது.
லாசா காய்ச்சல் என்பது மேற்கு ஆபிரிக்காவில் சில பகுதிக ளில் காணப்படும் ஒரு கடுமையான வைரஸ் இரத்தக்கசிவு நோயாகும். இந்த வைரஸ் முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டது. இது எலிகளின் சிறுநீர் அல்லது மலத்தால் மாசு பட்ட உணவு அல்லது வீட்டுப் பொருட்களுடன் தொடர்பு கொள் வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது; குறிப்பாக தரம் குறைந்த சுகாதாரத் தொற்று கட்டுப்பாட்டு நட வடிக்கைகள் உள்ள நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
லாசா காய்ச்சல் முதலில் தொண்டை வலி, தசை வலி, இருமல், குமட் டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளி ட்ட காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பமாகிறது. பின்னர், இது முகம் வீக்கம், நுரையீரலில் திரவம் சேருதல் மற்றும் வாய், மூக்கு மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
2024 ஆம் ஆண்டில், நைஜீரியாவில் குறிப்பிடத்தக்க லாசா காய்ச்சல் பரவல் ஏற் பட்டது; மொத்தம் 1,309 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் மற்றும் 214 இறப்புகள் ஏற்பட்டி ருந்தன. மருத்துவமனை முயற்சிகளால் மட்டும் லாசாவை எதிர்த்துப் போராட முடியாது. இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பதையும், குறிப்பாக எலிகளின் சிறுநீர் அல்லது மலம் மூலம் பரவுவதைத் தடுக்கும் முறைகள் பற்றியும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள சமூகங்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என மருத்துவ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
தாமதமான நோயறிதல், மருந்து பற்றாக்குறை மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவு கள் இல்லாதவை ஆகியவை இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய தடைகளாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.