தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்…..மாறுபடும் ஐ.நா அளவுகோல் -சுடரவன்-
இன்று மனித சமூகம் போர்கள் ஆயுத மோதல்கள் வன்முறைகள் அற்ற ஒரு உலகை காணத்தவிக்கிறது. ஆகக்குறைந்தது போர்கள்இ மோதல்களின் போது பேரழிவுஆயுதங்களால் பாரிய உயிரழிவுகள் ஏற்படுவதைத் தடுக்கவேண்டும் என்ற நோக்குடன் முயற்சிள் மேற்கொள்கிறன. அதிலும் குறிப்பாக அப்பாவிப் பொதுமக்களை இத்தகைய தாக்குதல்களில் இருந்து காப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்ற முனைப்பு மேலோங்கியுள்ளது.
போர்கள் மோதல்கள் நடைபெறும் போது பொதுமக்களை பாதுகாக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்இ கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் பற்றி பன்னாட்டு நடைமுறைமரபுகள் மற்றும் உடன்படிக்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை அழிவுத் தவிர்ப்புக்கான வழிகாட்டு கோவைகளாக மட்டுமன்றி குற்றமிழைப்பவர்களை நீதியின் முன் நிறுத்தக் கூடியவையாகவும் அமைகின்றன. இந்த வகையில் இரசாயனஇஉயிரியல் மற்றும் கொத்துக்குண்டுப் பாவனை என்பன மிகவும் பாரதூரமான மானுடத்திற்கெதிரான குற்றச் செயல்களாகவே கொள்ளப்படுகின்றன.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை அப்பாவித் தமிழ்மக்கள்இ சிறிலங்காவின் பேரழிவு ஆயுதங்களால் குறிவைத்துக் குதறப்பட்டபோது அதைத் தடுப்பதற்கு யாரும் முயலவில்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பேசப்படுகின்ற நிலைமையிலும் அதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்படும் நிலையிலும் நீதிக்கான எந்த முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை.
அண்மைக்காலத்தில் சிரியாவில் தடைசெய்யப்பட்ட ஆயுதப்பவனை தொடர்பில் செய்திகள் வந்தவுடனேயே ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் குதித்தன. ஐ.நா வின் வேதியியல் ஆயுதங்களை தடைசெய்வதற்கானஅமைப்பின் (OPCW- Organisation for the Prohibition of Chemical Weapons) கண்காணிப்பாளர்கள் உண்மை கண்டறியும் நடடிக்கைக்காக அனுப்பிவைக்கப் பட்டனர்.அங்கு நடைபெற்ற பரிசோதனை நடவடிக்கையில் சிரிய அரசபடைகளால் தடைசெய்யப்பட்ட வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருவதாக அவர்கள் அறிக்கையிட்டனர். இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என பலதரப்பிலுமிருந்தும் பலமான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காதடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதை உரத்துப் பேசும் தரப்புகளைஇ அதற்கான நீதி வழங்கப்படவேண்டும்என முயற்சிகளை மேற்கொள்ளும் தரப்புகளை காணமுடியவில்லை. தத்தமது சொந்த நலன்களை பொறுத்தே ‘மனிதவுரிமை’ பேசும் இன்றைய உலகில் பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கான குரலை ஓங்கி ஒலிக்கவேண்டியது கட்டாயமாகிறது.
தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை சிறிலங்கா பயன்படுத்தியுள்ளது என்பதை ஐ.நாவின் அபிவிருத்தி அமைப்பின் கண்ணிவெடிகள் தொடர்பான நடவடிக்கைக்குழு ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியிருந்தும் இன்றுவரை இவ்விடயம் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஐ.நாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி நிற்கிறது.
ஐ.நா அபிவிருத்தித் திடடத்தின்(UNDP)கண்ணிவெடிகள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசகர் அலன் போஸ்டன்(Allan Poston)சிறிலங்காவின் கொத்துக் குண்டு பாவனை தொடர்பில் ஐ.நாவுக்கு தகவல் தந்திருந்தார். கிடைக்கப்பெற்ற ஒளிப்படங்கள் மற்றும் சிதறுதுண்டுகளை ஆராய்ந்ததில் தான் இந்த முடிவிற்கு வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். (””After reviewing additional photographs from the investigation teams, I have determined that there are cluster sub-munitions in the area” )அங்கு கண்டெடுக்கப்பட்ட கொத்துக்குண்டின் பகுதிகள் ரசியத் தயாரிப்பான RBK-500_AO-2,5RT_aerial cluster bombவகையைச் சார்ந்தவை எனவும் UNDP வல்லுநர்கள் உறுதி ய்திருந்தனர்.
தமிழர் தரப்பால் கொத்துக்குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் அதனை சிறிலங்கா மறுதலித்துவந்தது. ஐ.நாவின் பிரதிநிதிகள் அதனை ஆதாரத்துடன் உறுதிசெய்த வேளையிலும் கூட சிறிலங்கா அதனை முற்றாக நிராகரித்தது. தங்களிடம் இல்லாதஇ தாம் ஒருபோதும் கொள்வனவு செய்யாத குண்டை எப்படி வீசமுடியும் என ஏளனமும் செய்தது.
ஆனால் சிறிலங்கா கொத்துக்குண்டுகளை பாக்கிஸ்தானில் இருந்தும் கொள்வனவு செய்திருப்பதைஇ அந்நாட்டின் ஆயுத ஏற்றுமதி அமைப்பின் இயக்குனர் மேஜர் ஜெனரல் முஹமட் பாரூக் உறுதிசெய்திருந்தார். அவர் 2008ஜூலை பாகிஸ்தானிய டோன்(Dawn) செய்த்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் இதைத் தெரிவித்திருந்தார். (It has been reported that Sri Lanka has purchased cluster bombs, deep penetration bombs and rockets and UAVs from Pakistan)
இது தவிர சிறிலங்கா தரப்பால் வன்னியில் தமிழர்கள் மீது வேதியல் ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆதாரங்களையும் நாம் கண்டுகொள்ளமுடியும். சிறிலங்கா அரசால் பரவலாக பயன்படுத்தப்பட்ட ரசியத்தயாரிப்பு ஆயுதமான RPO-A Shmel thermobaric rocket launcher மிக ஆபத்தான வேதியல் ஆயுதமாகும். சிவிலியன் இலக்குகளுக்கு மிகுந்த பாதிப்பைத் தரும் என்றவகையில் இவ்வாயுதம் பொதுவாக தடைசெய்யப்பட்ட தொன்றாகக் கொள்ளப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கம் இதனை உக்கிரேன் நிறுவனமொன்றிடமிருந்து இரசிகமாக கொள்வனவு செய்த்திருந்தது. இந்த கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் காரணமாக இந்த விடையம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் அதனை ஏற்றே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சிறிலங்கா படைத்துறை அவை காலாவதியானவை எனக்கூறி சமாளிக்க முயன்றது.
ஆயினும் இத்தகைய ஆயுதங்கள் சிறிலங்கா படைகளால் வன்னியில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டமை வெளிப்படை. பயன்படுத்தப்பட்ட வெற்று எறிகணைத்தொகுதிகள் பல அங்கு கண்டெடுக்கப் பட்டிருந்தமை இதற்குச் சான்றாகும். இந்த ஆயுதத்தில் உள்ள எரிபொருள்வேதியல் கலவையானது (FAE fuels)மிகவும் நச்சுத் தன்மையானது. இந்த வெடிபொருள் மிகமோசமான எரிகாயங்களை ஏற்படுத்துவதுடன் இ இதனை சுவாசிப்பதாலும் மிக ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்றன.
மேலும் இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் பணியாற்றிய வைத்தியர்களின் குறிப்புகளும்இ’சாட்சியங்கள் இல்லாத போர்’ (War Without Witness)அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீனமான விசாரணையின் முடிவுகளும் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை அறிவியல் ரீதியில் நிரூபித்து நிற்கின்றன.
சிறிலங்காப் படையினரால் வேதியல் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டமையும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டமையும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள் இங்கிலாந்தின் அனுபவம் வாய்ந்த வைத்தியர் ஒருவரால் மறுசீராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.மருத்துவ மற்றும் வேதியல் அறிக்கையின்படி காயங்களில் Triethanolamine (C6H15NO3) , Phosgene (CCl2O) போன்ற வேதியல் பொருட்கள் காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வெண் பொஸ்பரஸ் (White phosphorous ) பயன்பாடு தடைசெய்யப்பட்ட தொன்றாகும். ஆனால் வன்னியில் இந்த வேதியல் பொருள் சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்பட்டமை அப்போது செட்டிகுளத்தில் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டு வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டள்ளது. (Tamil civilians who escaped the Sri Lankan military bombardment, treated by French doctors, included those with injuries from phosphorous bombs, AFP reported).
இவைதவிர சிறிலங்காவின் ‘உண்மை கண்டறியும்’ ஆணைக்குழுமுன் சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் இவ்வாறான தடைசெய்யப்பட்ட ஆயுதப் பயன்பாடுபற்றி தங்கள் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளார்.
மேற்கண்ட விடயங்களின் அடிப்படையில் சிறிலங்காவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டிய தார்மீகக் கடமையிலிருந்து அனைத்துலக சமூகம் விலகிநிற்பது வியப்பளிக்கிறது. தானே கண்டறிந்த ஆதாரங்கள் கூட கண்முன்னே இருக்கஇ ஐ.நா ஏன் இன்னும் ஒரு நீதி விசாரணையினை முன்னெடுக்காமல் இருக்கிறது என்பது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே உள்ளது.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை சிறிலங்கா தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தியமை தொடர்பில் போதுமான விழிப்புணர்வுகள்இ வெளிப்படுத்தல்கள் எம்மவர் மத்தியில் இல்லாமல் இருப்பது மிக வேதனையான விடயமே. இறுதிக்கட்ட போரின்போது வன்னியில் வாழ்ந்த சராசரி மனிதன் ஒவ்வொருவருக்கும் இத்தகைய ஆயுதங்கள் தொடர்பான முதல்தர பட்டறிவு இருக்கும். அவற்றை அறிவியல் ரீதியில் ஆவணப்படுத்துவது அவர்களுக்கு இலகுவான விடயமல்ல. இந்த கொடூர நடவடிக்கைகளை உரியமுறையில் ஆவணப்படுத்தி அறிவியல்ரீதியான நிறுவல்களுடன் அனைத்துலக சமூகத்துக்கு கொண்டுசெல்லவேண்டிய பொறுப்பு எமது சமூகம் சார்ந்த ஆர்வலர்கள்இபுத்திஜீவிகள்இ துறைசார் வல்லுநர்களையே சாரும்.
இந்த விடையத்தில் தமிழ் சமூகம் காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்காத பட்சத்தில்சிறிலங்காவின் தமிழர் இனப்படுகொலை தொடர்பில் வலிமையானதொரு துருப்புச்சீட்டை நாம் இழந்துவிடும் நிலைமை தவிர்க்க முடியாததாகிவிடும்.
-சுடரவன்-
இனப்படுகொலையில் சிக்கிய எமது மக்களின் கதறல் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது….-போராளி மருத்துவர் வாமன்
இறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தங்களால் முடிந்த மருத்துவ சேவையினையும் ஆற்றுப்படுத்தும் பணிகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர்.
மருத்துவர்களை இறைவனுக்கு அடுத்த நிலையிலேயே வைத்து மனித சமூகம் கொண்டாடும் இந்த உலகிலே இறுதி யுத்;ததிலே அங்கு பணியாற்றிய ஒவ்வொரு மருத்துவர்களையும் இறைவ னுக்கு நிகராகவே எமது மக்கள் நேசித்தார்கள் எநத்வொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே உயிர் இழப்புக்களை தடுப்திலும் நோய் கிருமிகள் பரவுவதை தடுப்பதிலும் இவர்கள் சந்தித்த சவால்களை மருத்துவ உளவியல் நிபுணர்களாலேயே வரையறுக்க முடியாதவை அந்தளவு மக்களிற்கு அருகில் இருந்து சாவின் நிமிடங்களையுமஇ; மக்களின் வலிகளையும்இ கதறல்களையும் ஒவ்வொரு மணித்துளிகளும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டவர்கள்.
இவர்களில் தர்மரத்தினம் வாமனும் ஒருவர் இவர் தாயக விடுதலை என்ற இலட்சியதற்காக தனது காலை இழந்த நிலையிலும் ஒரு மருத்துவ போராளியாக முள்ளிவாக்கால் மண்ணில் கடைசி நிமிடம்வரை தனது பணியினை சிறப்பாக முன்னெடுத்திருந்தார்;
ஐக்கிய நாடுகள் சபையும்இ அனைத்துலக சமூகமும் எமது இனத்தை கைவிட்ட நிலையில் சாட்சிகள் அற்ற இனப்படுகொலையை மேற்கொண்ட சிறீலங்கா அரசின் வான்படையும்இ கனரக ஆயுதப்பிரிவும் வைத்தியசாகைளை தேடித்தேடி தாக்கியழித்த போதும்இ தமது உயிர்களை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிய மருத்துவர்களில் வாமனும் ஒருவர். இவர் தமிழீழ சுகாதார சேவைகளின் துணைப் பொறுப்பாளராக இருந்தவர் தற்போது பிரித்தானியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச சனநாயக பொறிமுறைகளிற்கு உட்பட்டு தன்னால் முடிந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார் முள்ளிவாக்கால்; 10வது நினைவேந்தல் தினத்தை உலக் தமிழர்கள் நினைவு கூரவுள்ள நிலையில் இலக்கு மின்னிதழுக்காக அவர் வழங்கிய நேர்காணல்.
கேள்வி: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு சுமந்து தமிழினம் தற்போது நிற்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையானது அனைத்துலக சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது தொடர்பில் நீங்கள் என்ன கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றீர்கள்?
தமிழரின் பேரரசை அழித்தொழிக்கும் வரலாற்று அத்தியாயத்தின் முடிவுகாலத்தில் நாடற்றவர்களாக தமிழர்கள் உலகெங்கும் பரவித் தப்பி வாழ்கிறோம். அதன் ஓட்டத்தில் தோற்றம்பெற்ற தன் இனத்தின் தலைமையையே தமிழினம் இழுந்திருக்கிறது.
தென்னாசியப் பிராந்தியத்தின் உலகப் பொருளாதாரப் போட்டியாளர்களின் நலன்களுக்கு போதுமான அளவுவரை மட்டுமே இலங்கையின் இனப்படுகொலை விவகாரம் எனும் பந்து மனிதவுரிமைகள் மைதானத்தில் விளையாடப்படுகிறது. இந்த நலன்கள் சார்ந்து பணிந்து விட்டுக் கொடுக்க முடியாத அரசியல் தேவையாகவே தமிழின இறைமை அடிப்படையிலான உரிமை அமைந்து கிடக்கிறது.
இந்தியாவின் பிராந்திய ஆதிக்கம் நிலைபெறுவதற்கு தமிழர் தாயகத்தை வலுப்படுத்துவது ஒன்று மட்டுமே தீர்வாகுமானால் மாத்திரமே இலங்கையின் திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை ஒரு முதலீடாக இந்தியா எடுத்தாழும்.
உலக ஒழுங்கில் இந்தியாவுடன் சாரும் நாடுகள் இந்த அடிப்படையிலேயே இலங்கையின் இனப்படுகொலையைக் கையாளும்.
இந்த வல்லாண்மைப் போட்டிகள் தெளிவாகத் தெரியும் வகையிலேயே இலங்கைப் பாராளுமன்ற இழுபறியில் ஈழத் தமிழரின் ஜனநாயக சக்தியை உலகம் பாவித்துக் கொண்டுள்ளது.
இந்த உலகத்துக்கு மனிதவுரிமைகளை நிறுவுவது மட்டுமே தேவையாக மாறும் நாள் சில நூற்றாண்டுகள் தொலைவிலேயே உள்ளது.
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களை வன்னியில் இருந்து வெளியேற்றிய சிறீலங்கா அரசு ஒரு சhட்சியமற்ற இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது. எனவே சிறீலங்கா அரசு மேற்கொண்ட இந்த இனப்படுகொலையின் சhட்சியமாக அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்.
அதிஸ்ட வசமாக அனேகமான வைத்தியர்கள் போரில் தப்பிப் பிழைத்துத் தமது சாட்சியங்களை முடிந்தளவுக்கு அனைத்து மட்டங்களிலும் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும் அவர்களது சாட்சியங்கள் உலக மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பப் போதுமானதாக இல்லை. தமது கண் முன்னே நடைபெற்ற பல உண்மைகளைக் கண்ட சில நடுநிலைச் சாட்சியாளர்களாக அமையக் கூடிய வைத்தியர்கள் விளைவுகளைக் கருதி அமைதி காத்து வருவதை மறுப்பதற்கில்லை. சர்வதேச நீதி விசாரணை சாத்தியமாகும் தருணத்தில் அனைவரும் மௌனம் கலைப்பார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் அழுத்தத்துக்கு மத்தியிலேயே சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைத்தியர்கள் ஊடகத்தில் பொய்யாகச் சாட்சியமளிக்க நேர்ந்தது. அமெரிக்காவில் தஞ்சமடைந்த பின்னர்; வைத்தியர் வரதராஜா அழுத்தத்திற்குப் பணிந்தே கூறியதாகப் பின்னாளில்; பகிரங்கப்படுத்தியுள்ளார். வாகரையில் மற்றும் வன்னியில் போர் நடந்தபோது ஊடகங்களுக்கு உண்மைகளைக் கூறியதனால் போர் முடிந்த வேளையில் மூச்சுத் திணறும் நெஞ்சுக் காயத்துடன் கைது செய்யப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்படாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் அதே வைத்தியர் வரதராஜா. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபைவரை சென்று தனது சாட்சியத்தை அவர் பதிவு செய்திருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
தனது சாட்சியங்களை ஒரு திரைப்படமாக்கும் படப்பிடிப்பு முயற்சியிலே அவர் தற்போது உள்ளார். அதற்காக நிதி உதவிகளை தேசப்பற்றாளர்களிடம் அவர் பெரிதும் எதிர்பார்த்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கேள்வி: வன்னிப் போரின் போது சிறீலங்கா அரசு மருந்தையும் உணவையும் போர் ஆயுதாமாகப் பயன்படுத்தியிருந்ததா?
ஆம். அரச மருத்துவ நிர்வாகம் கோரிய மருந்துகளில் போர்க்காயங்களை பராமரிக்கத் தேவையான குருதி மாற்றீட்டு பைகள் மயக்க மருந்துகள் அன்ரிபாயோடிக் மருந்துகளை அனுமதிக்காமல் தடை செய்தது இலங்கை அரசு. அனுமதிக்கப்பட்ட மருந்துகளை எடுத்து வரும் போது வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியூடாக கொண்டுவர முடியாதபடி இராணுவம் தடுத்ததாக முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி வரதராஜா வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆபத்துக்களை எதிர்கொண்டு அத்தியாவசியமான மயக்க மருந்துகள் எப்படியோ வன்னிக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டதால் இன்று பலர் உயிர் பிழைத்து வாழ்கிறார்கள் என்பதை இங்கு கூறியாகவேண்டும்.
வன்னிக்குள் தொண்டு நிறுவனங்களால் எடுத்துவரப்பட்ட உணவு வாகனத் தொடரணியை எறிகணைத் தாக்குதலால் தடை செய்ய முற்பட்டது இலங்கை அரசு. விசுவமடு கூட்டுறவுச் சங்கத்தின் கையிருப்பில் இருந்த உணவுச் சேமிப்பை இலக்கு வைத்து செல் தாக்குதல் நடாத்தியது. பெருமளவு அரிசிச் சேமிப்பு எரிந்து அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மேய்ச்சல் நிலங்களில் நின்ற கால் நடைகள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கியழிக்கப்பட்டதை நேரில் காண முடிந்தது. இதனால் பட்டினிச் சாவு இனவழிப்பின் உபாயமாக்கப்பட்டது.
கேள்வி: முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலை மீது சிறீலங்கா இராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு பல தடவைகள் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த நடவடிக்கையானது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பின் வடிவமாகும் என நீங்கள் கருதுகின்றீர்களா?
அரச சுகாதார சேவைகளின் நோயாளர் காவு வண்டிகள்இ தியாகி திலீபன் மருத்துவசேவை வாகனங்கள், தமிழீழ சுகாதார சேவைகளின் தெற்று நோய்த் தடுப்புப் பிரிவு நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் போன்றவற்றின் மீது இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதலை நடாத்தியது இலங்கை அரசு. இதில் பல திறன்மிக்க மருத்துவ ஆளணிகள் கொன்றழிக்கப்பட்டனர். இது காயப்படுத்தப்படும் நோய்வாய்ப்படும் மக்களை காப்பாற்றிவிடாமல் தடுப்பதாகும்.அத்துடன் இது தொற்று நோய்கள் பரவ வைத்து நோயால் மக்களைச் சாகடிக்கும் இனவழிப்பு யுக்தியாகும். முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த மலேரியா நோய்க் கிருமிகள் ஊடுருவிய இராணுவ அணிகளால் ஏதோ ஒரு வழியில் மீண்டும் வன்னிக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் மலேரியா நோய் மீண்டும் ஊடுருவும் இராணுவ வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் இனங்காணப்பட்டது. இதனை எமது தமிழீழ சுகாதார சேவை தொற்று நோய்த் தடுப்புப் பிரிவே கண்டுபிடித்துத் தடுத்தது.
இந்த இனவழிப்பு யுக்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடாதபடி தமிழரின் சுகாதார அணிகள் ஓரணியாகி முறியடித்துக்கொண்டிருந்தன.
இதன் காரணமாக பொறுமையிழந்த இலங்கை அரசு மருத்துவ மனைகளை நேரடியாகத் தாக்கத் தொடங்கியது.
செயற்பாட்டில் இருந்த அனைத்து மருத்துவ மனைகளும் தாக்குதலுக்குள்ளாகின. செஞ்சிலுவைச் சங்கம் மருத்துவ மனைகளைக் காப்பாற்றுவதற்கென ஆழ்கூறுகளை எடுத்துச் சென்று பாதுகாப்பு அமைச்சிடம் கொடுத்ததும் சில மணி நேர இடைவெளியில் அதே மருத்துவ மனைகள் தாக்கியழிக்கப்பட்டன. ஒரு சந்தர்ப்பத்தில், முகட்டில் தெளிவான சிலுவைக் குறியிடப்பட்ட நான் பணியில் நின்ற, உடையார்கட்டு பாடசாலை இடம்பெயர் மருத்துவமனை மீதும் அரசால் அறிவிக்கப்பட்ட சுதந்திரபுரம் போர் தவிர்ப்பு வலையத்தில் கூடிய மக்கள் மீதும் வீதிகளில் நெரிசலாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள்மீதும் ஒரே நேரத்தில் செறிவாக்கப்பட்ட எறிகணைத் தாக்குதல்கள்; நடாத்தப்பட்டன. இதில் தலத்திலேயே பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுவிட நூற்றுக்கணக்கானோர் எங்கள் மருத்துவமனைக்கு பாரிய காயங்களோடு கொண்டுவரப்பட்டார்கள். அந்த வேளையில் எங்கள் மருத்துவ மனை தாக்கப்படுவதை தடுப்பதற்காக அரச சுகாதார சேவை அதிகாரி ஒருவர் தொலை பேசியில் அரசின் சுகாதார உயர் பீடத்துக்கு தொடர்பு கொண்டு நிலைமை பற்றிப் பேசினார்.
மருத்துவமனை தொடர்ந்தும் இயங்குவதைத் தெரிந்துகொண்ட அரசு மீண்டும் அடுத்த அரைமணி இடைவெளிக்குள் மருத்துவ மனைக்குள் துல்லியமாகத் தாக்கியதில் மின்னியந்திரங்கள் நின்றுவிட கடமையில் நின்ற பெண் தாதி செத்து வீழ்ந்தார். காயமடைந்து வந்தவர்கள் மீண்டும் காயமடைந்தார்கள். காயங்களைக் கொண்டு வந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் மருத்துவ மனைமீது தாக்குதல் நடத்தப்படுவதையும் மக்கள் சிதறி ஓடியதையும் வேவு விமானத்தின் துல்லியமான காணொளிக் கருவி மூலம் ஜனாதிபதி உட்பட படையதிகாரிகள் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். இதை நான் பூசாவில் அடைக்கப்பட்டு இருந்தபோது மனம் திறந்த விசாரணை அதிகாரி ஒருவர் என்னிடமே கூறினார். இது அரசின் உயர்பீடம் திட்டமிட்டே நடாத்திய கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக உறுதிபடக் கூறுவேன்.
கேள்வி: கடந்து சென்ற பத்து வருடங்களில் உங்களால் அங்கு ஏற்பட்ட துயரங்களில் இருந்து விடபட முடிந்துள்ளதா?
இலங்கைக் குடிமகன் ஒருவரின் உயிரைக் காப்பதற்காக (அரச இராணுவச் சிப்பாய் உட்பட) பயங்கரவாதியாக உலகால் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவக் குழாமில் ஒருவனாக தற்காப்பின்றி காயப்பட்டபோதும் உயிர் காக்கும் பணியில் நான் இருக்க ஒரு நூறு பேரைக் கணப்பொழுதில் கொன்று வீழ்த்தியது இலங்கைக் குடிமக்களின் அரசு. அதனை வேடிக்கை பார்த்தபடி மனிதவுரிமை பேசி முண்டு கொடுக்கிறது உலகு. இதற்காக நீதி கேட்டுப் போராடுவதிலே தசாப்தம் கடந்து முரண்பட்டுக் கிடக்கிறது தமிழரின் அமைப்பு. இந்தப் புறநிலையில் இனவழிப்புக்கு எதிராக மனித உரிமைக்காக வாழ்நாளை அர்ப்பணித்துப் போராடி அதன் தோல்வியின் நீட்சிகளைக் கண்டுணரும் கணங்கள் மேலும் கொடுமையானவை. இந்த வகையில் சொல்லப்போனால் போரில் உயிர்தப்பியதே என்போன்றவர்களுக்கு மிகவும் துரஸ்டமானது என்றே நினைக்கின்றேன்.
சுவீஸ் இளம் தலைமுறையினரால் தாயகம் தொடர்பான நூல் வெளியீடு
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் 19.05.2019 அன்று பேர்ண் நகரில் வெளியிடப்படவுள்ளது.
ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த தொகுப்பாய்வு நூலானது தமிழீழ தேசத்தின் கட்டமைப்புகள் பற்றி எடுத்துக்கூறுகிறது. எட்டு பாகங்கள் மற்றும் இருபத்தாறு அத்தியாயங்கள் கொண்டதாக இந்நூல் அமைவதுடன் தொடர்புடைய கட்டுரைகள், ஒளிப்படங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் இந்நூலின் தமிழ்பதிப்பும் பின்னர் வெளியிடப்படுமெனவும் அறியமுடிகிறது.
இந்நூல் வெயியீடுபற்றி அக்கினிப் பறவைகள் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழர் இறைமையை தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்தநூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நொடிகள் மெதுவாகக் கரைந்தோடி தமிழ் இனவழிப்பின் தசாப்தத்தை அம்பலப்படுத்தும் வேளையிலும் அவ்விளைநிலத்தில் பிறந்த அடிபணியா சித்தாந்தங்களோ அந்த மணல் துளிகளில் தோய்ந்து கிடக்கின்றன.
சர்வதேச கூட்டுச்சதிகளுடன் நின்றாடும் வழிதவறிய அமைதி காப்பவர்களின் சுழலும் புயலுக்கு மத்தியில், நந்திக்கடலின் கடற்கரைகளில் எம்பாதங்களை நிலையாகப் பதித்து சாம்பல் பறவைகளாய் நாம் தலைநிமிர்த்தி முரசறைவது யாதெனில் தமிழ்இறைமை என்றும் விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்பதாகும். இந்த வாசகங்களோடு இளைஞர்கள் சாம்பல்பறவைகளாய் கிளர்ந்தெழுந்து ஆக்கியிருக்கும் ஆவணமே இந்த நூல்…’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் குறித்த நூல் தொடர்பான கருத்துக்களை இந்நூலில் பதிவுசெய்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நூல் தமிழீழ தேசவிடுதலைப் போராட்டத்தின் சிறப்புமிக்க பரிமாணமொன்றை உலகெங்கும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு ஆவணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குலகத்தின் நலன் சார் அரசியலில் நாம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்
கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ளவில்லை. ஏனெனில் தம் மீது அழுத்தங்கள் கொண்டுவரப்படமாட்டாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்கான காரணம் தமிழ் மக்களின் இனவிடுதலை தற்போது மேற்குலகத்தின் நலன்சார் அரசியலுக்குள் சிக்கியுள்ளது. போர் நிறைவடைந்த பின்னர் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்களின் ஒரு சில பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் அதனை நாம் தெரிந்துகொள்ளலாம்.
போர் நிறைவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ,நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரை இந்திய அரசின் உதவியுடன் சிறீலங்கா அரசு முறியடித்திருந்தது. அது மட்டுமல்லாது சிறீலங்காவை பாராட்டும் நிகழ்வாகவே அது அமைந்திருந்தது. ஆனால் 18 ஆவது கூட்டத்தொடரை கட்டுப்படுத்தும் நிலையை இந்திய அரசு சற்றே தளர்த்தியிருந்தது.
சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் வலுவடைந்துவந்த பிணைப்புக்கள், சிறீலங்காவுக்காக தமிழகத்தை இழக்கும் நிலைக்கு இந்திய காங்கிரஸ் தள்ளப்பட்டதும் இந்தியாவின் அந்த பின்னடிப்புக்கான காரணம். அதனை சரிசெய்வதற்கு இந்திய, இலங்கை கடற்படையினரின் கூட்டுப் போர் ஒத்திகைக்கு சிறீலங்கா ஒத்துறைப்புக்களை வழங்கியிருந்தது. போர் நிறைவடைந்த பின்னர் நடைபெற்ற கடல் ஒத்திகைகளில் அதுவே மிகப்பெரிய ஒத்திகை.
2010 ஆம் ஆண்டளவில் திருமலைத்துறைமுகத்தில் கடற்காகம் என்ற முப்படை சிறப்பு கடல் ஒத்திகையை சீனாவின் ஆதாவுடன் சிறீலங்கா அரசு மேற்கொண்டுடிருந்த நிலையில் ஐந்து நாள் கடல் ஒத்திகை ஒன்றை இந்தியா மேற்கொண்டிருந்தது.
மேற்குலகின் அன்றைய நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக இந்தியாவை அனுசரிக்க வேண்டிய நிலைக்கு மகிந்த ராஜபக்சா அரசு தள்ளப்பட்டிருந்தது. அதாவது அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் இன் வருகையை முன்னிட்டு சிறீலங்காவின் கையை முறுக்கி அந்த கடல் ஒத்திகைக்கு இணங்க வைத்திருந்தது இந்தியா.
அமெரிக்கா உள்நுளைவதும், சீனா உள் நுளைவதும் தனக்கு ஆபத்தானது என இந்தியா கருதுகின்றது. 1987 ஆம் ஆண்டு சிறீலங்காவுடன் அவசர அவசரமாக இந்தியா மேற்கொண்ட செல்லுபடியாகாத ஒப்பந்தம் கூட மேற்குலகத்தின் உள்நுளைவதை தடுப்பதாற்காகவே மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் சிறீலங்கா அரசை பணியவைக்கும் முயற்சிகளை அமெரிக்காவும் சீனாவும் வேறுபட்ட தளங்களில் அணுகியிருந்தன. நிதி மற்றும் படைத்துறை ஒத்துறைப்புக்கள் என்ற தளத்தை சீனா எடுத்துக்கொண்டது, மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற தளத்தை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. எனவே தான் 2011 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியதும், அதற்கு தேவையான அனுசரணைகளை வழங்கி சிறீலங்கா அரசு மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அதனைக் காரணம் காட்டி பேரம்பேசும் நோக்கத்துடன் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக் சிறீலங்காவுக்கு வருகை தந்திருந்தார்.
பிளேக்கைப் பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பயணியாற்றியவர். அதாவது சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு முழு ஆதரவை வழங்கி தமிழ் மக்களின் அழிவுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த மனிதர். அது தான் அவருக்கான அறிமுகம்.
பிளேக்கின் நகர்வுக்கு அமைவாக அன்றைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பியிருந்தார். அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் போது சிறீலங்கா விவகாரம் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே சிறீலங்கா அரசு தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு முன்னராக ஐ.நா அறிக்கை அங்கு அனுப்பப்பட்ட விடயம் சிறீலங்கா அரச தரைப்பை அதிர்ச்சிக்குள் தள்ளியிருந்தது.
எனினும் சிறீலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பித்த இராணுவ அறிக்கையை நவநீதம்பிள்ளைக்கு அனுப்பும் பணியை ஐ.நா செயலாளர் நாயகத்தின் அன்றைய சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் மேற்கொண்டது சிறீலங்கா அரசுக்கு சிறு ஆறுதலை கொடுத்ததுடன் இந்தியா மீண்டும் சிறீலங்காவை காப்பாற்றியிருந்தது.
அதேசமயம் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜக்சாவை தனிமையில் சந்தித்த பிளேக், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் சிறீலங்கா மீது தீர்மானங்கள் கொண்டுவரப்படாமாட்டாது என்ற உறுதிகளை வழங்கியதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
அது மட்டுமல்லாது சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை முறித்துக்கொண்டு வெளியேறிய தமிழத் தேசியக் கூட்டமைப்பையும் சிறீலங்காவுடன் மீண்டும் பேசி காலத்தை இழுத்தடிக்கும் நகர்வுக்குள் பிளேக் பலவந்தமாக தள்ளியிருந்தார். தமிழத் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் அமெரிக்காவையோ, இந்தியாவையே எதிர்த்து தமது வாதங்களை முன்வைக்கும் உறுதியான நிலையில் அவர்கள் என்றுமே இருந்ததில்லை.
ஒருபுறம் மகிந்தாவை சமாதானப்படுத்தும் நடவடிக்கையை பிளேக் மேற்கொள்ள, மறுபுறம் சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவரும் நடவடிக்கைகளை அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா 2011 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தது. அதனை கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் மேற்கொணடிருந்தார். ஆனால் அதற்கு போதிய காலஅவகாசம் அப்போது இருக்கவில்லை. பின்னர் 2012 ஆம் ஆண்டு கனடா பிரதமர் காப்பர் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டிருந்தார்.
தனது நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியாக பல நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விருந்துபசார நிகழ்வை மேற்கொண்ட கனடாவுக்கான ஐ.நா பிரதிநிதிகள் அந்த நிகழ்வில் சிறீலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விளக்கங்களை அளித்து தமது தீர்மானத்திற்கான ஆதரவையும் கோரியிருந்தனர்.
ஆனால் அவை யாவும் சிறீலங்காவை மிரட்டப் பயன்படுத்தப்பட்டதே தவிர, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அல்ல என்பதை காலம் நமக்கு தற்போது உணர்த்தியுள்ளது.
ஏனெனில் அதே கனடா தான் தற்போது சிறீலங்கா கேட்காமலே அதற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அதற்கான காரணம் அமெரிக்காவுக்கு சார்பான அரசு ஒன்று சிறீலங்காவில் அமைந்துள்ளதேயாகும்.
தற்போது சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மீது அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கும் ரணில் அரசை காப்பாறறும் அமெரிக்காவின் அடுத்த கட்ட நடவடிக்கையே தவிர அதில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை.
அதாவது இது ஒரு பேரம்பேசும் அரசியல் அழுத்தம். 2011 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானங்களை பேரம்பேசும் பொருளாகப் பாவித்து அன்றைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவுடன் பேரபேச முற்பட்ட பிளேக்கின் செயற்பாட்டிறிகும் தற்போதைய வழக்கிற்கும் அதிக வேறுபாட்டை காணமுடியாது.
அதாவது இந்த நாடுகளின் நலன்சார்ந்த அரசியலில் தான் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியும் தங்கியுள்ளது. இந்த நலன்சார் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் மேற்குலகத்;தை மட்டும் சார்ந்திருக்கும் எமது இராஜதந்திர உறவுகளை ஏனைய நாடுகளை நோக்கி நகர்த்த வேண்டும்.
விண்வெளிப்போருக்கு பின்னுள்ள பூகோள அரசியலை உள்வாங்க தமிழினம் தயாராகுமா? – வேல்ஸ் இல் இருந்து அருஷ்
பூமியில் இருந்து 186 மைல்கள் (274 கி.மீ) தொலைவில் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பூமியின் கீழ்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருந்த மைக்ரோசற்- ஆர் என்ற தனது செயற்கைக்கோளை இந்தியா கடந்த புதன்கிழமை சுட்டுவீழ்த்தியுள்ளது.
900 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்திய தேசத்தில் இன்னும் இரண்டு வாரங்களில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
அமெரிக்க மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளே விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் திறனை முன்னர் கொண்டிருந்தன, 1950 ஆம் ஆண்டு அமெரிக்கா ஆரம்பித்த இந்தத் தி;ட்டத்தைத் தொடர்ந்து, 1960 களில் ரஸ்யாவும் செயற்கைக்கேளை சுட்டு வீழ்த்தும் பரிசோதனையை மேற்கொண்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு சீனாவும் அதில் இணைந்து கொண்டது. சீனாவும் ஏவுகணை மூலம் தனது உபயேகமற்ற செய்மதி ஒன்றை பரீட்சார்த்த முயற்சியாக 2007 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியிருந்தது. ஆனால் சீனாவின் ஏவுகணையானது பூமியில் இருந்து 800 கி.மீ தூரத்தில் இருந்த செயற்கைக்கோளைச் சுட்டு வீழத்தியிருந்தது.
அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு செயற்கைக் கோளை சுட்டுவீழத்தும் தொழில்நுட்பத்தை தாம் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு 24 மாதங்கள் தேவையெனவும் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்தியாவின் கடந்த வார நடவடிக்கை தொடர்பில் தமக்கு முன்னரே தெரியும் எனவும், விண்வெளியில் ஏற்பட்ட வெடிப்பை கொலொராடாவில் உள்ள தமது வான்படைத் தளத்தில் இருந்து பதிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க வான்படையின் விண்வெளிப் பிரிவுக்கான தளபதி லெப். ஜெனரல் டேவிட் தோம்சன் அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முயற்சியானது சீனாவுக்கு எதிரான போட்டியாகும் என யப்பானின் கொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பேராசிரியர் கசூடோ சுசூக்கி தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனா மேற்கொண்டுவரும் விஸ்த்தரிப்புக்களை முறியடிக்கும் நகர்வுகளை மேற்குலகமும், யப்பானும் மிகத்தீவிரமாக மேற்கொண்டுவரும் நிலையில் யப்பான் பேராசிரியரின் கருத்து முக்கியமானது.
1990 களில் சிறீலங்காவுக்கு நிதியை வழங்கும் நாடுகளில் முதன்மையில் இருந்த யப்பானை 2000 ஆம் ஆண்டுகளில் பிற்பகுதியில் சீனா பின்தள்ளியிருந்ததுடன், சிறீலங்காவின் பல பகுதிகளை தனது ஆதிக்கத்திற்குள்ளும் சீனா கொண்டுவந்திருந்து.
இந்த நிலையில் தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரை தனது பிராந்திய நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட மேற்குலகக் கூட்டணி தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக சிறீலங்கா மீது தொடர் அழுத்தங்களை தக்கவைப்பதற்கு முயற்சித்து வருகின்றது. அதாவது சிறீலங்கா மீது நடவடிக்கை அற்ற ஒரு அழுத்தமான சூழ்நிலை.
சிறீலங்கா அரசு கேட்காமலேயே பிரித்தானியா தலைமையிலான இணைத் தலைமைக்குழு நாடுகளின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியதன் பின்னனியும் இதுவே.
ஆனால் இந்த நடவடிக்கை தமிழ் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அனைத்துலக சமூகத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் அது தகர்;த்துள்ளது.
அது மட்டுமல்லாது கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தாம் ஏற்கப்போவதில்லை என சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளதும், நாம் கால அவகாசத்தை கோரவில்லை என சிறீலங்கா அரச தரப்பு கூறுவதும், ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் பிழைகளைக் கண்டறிந்து தான் அதில் திருத்தங்களைக் கூறியதாக வடமாகாணத்திற்கான சிங்கள அரசின் ஆளுநர் பொய்யுரைப்பதும் ஐ.நாவின் நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கியுள்ளது.
அதாவது சிறீலங்கா அரசு அழுத்தமான கோரிக்கையை முன்வைக்காமலேயே ஐ.நா காலஅவகாசம் வழங்கியது என்பது தமிழ் மக்களுக்கு கடுமையான அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த கால அவகாசத்திற்கு ஆதரவு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவுக்கு சென்று சிறீலங்கா அரசுக்கு பாதிப்புக்கள் வராதவாறு பார்த்துக்கொண்டதும், கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு சில புலம்பெயர் அமைப்புக்கள் ஆதரவுகளை வழங்கியதும் தமிழ் இனம் தனது வழ்நாளில் கண்ட துரோகத்திற்கான வரலாறாகும்.
எனினும் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தாம் அனுமதிக்கப்போவதில்லை என தற்போது கூட்டமைப்பு தெரிவித்துவரும் கருத்துக்கள் நகைப்புக்கிடமானது என்பதுடன் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் அடுத்த நகர்வுமாகும்.
ஏனெனில் தொடர் காலநீடிப்புக்களுக்கு ஆதரவு வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தும் கூட்டமைப்புத்தான் தற்போது அதில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்போவதிலலை என்று கூறுகின்றது.
ஆனால் தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி என்ன என்றால் நிறைவேற்றப்படாத தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவந்தால் என்ன அல்லது கொண்டுவராது விட்டால் தான் என்ன? என்பது தான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தனது இன மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு தீர்வுகாண விரும்பினால் அரசியல் கைதிகளாக உள்ளவர்களின் விடுதலை, தமது வாழ்நிலங்களின் விடுதலை, காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்கள் போன்ற கோரிக்கைகள் தொடர்பில் தொடர்போராட்டங்களை மேற்கொண்டுவரும் தமிழ் மக்களின் கோரிக்கைளை முன்வைத்து எதிர்வரும் மாதத்தின் முன்பகுதியில் இடம்பெறவுள்ள சிறீலங்கா அரசின் வரவுசெலவுத்திட்டத்தின் மீதூன வாக்கெடுப்பை புறக்கணிக்குமா?
அதாவது பல சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் உள்ளபோதும் அதனை தனது உறுப்பினர்களின் சுய விருப்பு வெறுப்புக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறம்தள்ளிவருவது ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.
ஆனால் தற்போது உலகின் கவனத்தை பெற்றுள்ள விண்வெளிப்போரின் அடுத்த நகர்வில் உள்ள பூகோள அரசியலை உள்வாங்குவதற்கு தமிழ் இனம் தனக்கான ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஏனெனில் 1990 களின் பிற்பகுதியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மேற்கொண்ட அணுவெடிப்பு போட்டியை போல எதிர்வரும் காலத்தில் பாகிஸ்தானும் விண்வெளிப்போரில் தனது திறமையை காண்பிக்க முற்படும், அதேசமயம், திருமலைத்துறைமுகத்தை அமெரிக்காவிடம் பறிகொடுத்த சீனா தனது அடுத்த நகர்வை வடக்கை நோக்கி ஆரம்பிக்கும்.
இலக்கு – 23 (28-4-2019)
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கு 28-4-2019
இலக்கு-21 (14-4-2019)
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கு 14-4-2019