Home Blog Page 2799

நவம்பர் மாதம் சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்றிற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்போது வேட்புமனுத் தாக்கலுக்கான நாள் தீர்மானிக்கப்படுவதுடன் மேற்படி காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றார். சிறிலங்கா ஜனாதிபதியின் பதவிக்காலம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்

‘திருக்கோணமலைத் துறைமுகத்தை அமெரிக்காவிற்குத் தாரைவார்க்க விடுதலைப் புலிகள் விரும்பினார்கள். அதனை மகிந்தராஜபக்ச முறியடித்தார்.’ என்று புதுக்கதை ஒன்றினை அவிழ்த்துவிட்டுள்ளார் விமல் வீரவன்ச.

தேசிய வளங்களை அந்நியருக்கு வழங்கும் சிங்களத்தின் அண்மைக்கால வரலாற்றினை வீரவன்ச மறந்துவிட்டாரோ…

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99 வருட குத்தகையில் சீனாவிற்கு கொடுத்த அந்த புண்ணியவான் யார்?.

ஸ்ரீலங்கா கெட்வெய் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஊடாக திருக்கோணமலைத் துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பில் கனரக தொழிற்பேட்டையை அமைப்பதற்கும் ஒப்பந்தம் ஒன்றினைக் கைச்சாத்திட முன்னின்றவர்கள் யார்?.

தமிழீழ இறைமையின் மீதுள்ள விடுதலைப்புலிகளின் பற்றுறுதியை தமிழ் மக்கள் நன்கறிவர்.

பேரினவாதத்  தலைமைகள் இலங்கையின்  வளங்களை வல்லரசுகளுக்கு விற்று, தம்மை வளப்படுத்திய  வரலாறும் நமக்குத் தெரியும்.

Nappi PRO 09 17 open விடுதலைப் புலிகள் மீதான விமல் வீரவன்சாவின் அவதூறு -இதயச்சந்திரன்‘திருக்கோணமாலைத் துறைமுகத்தினை அமெரிக்கா கையகப்படுத்தப் போகிறது’ என்கிற செய்தியை, 80 களின் முற்பகுதியில் ஈழப்போராட்ட அமைப்புகளுக்கு இந்தியா எச்சரித்த விவகாரம் வீரவன்சாவிற்குத் தெரிந்திருக்கும்.

அதன் உண்மைத் தன்மையையும், அதனைக்கூறும் இந்தியாவின் நோக்கத்தையும் விடுதலைப்புலிகள் புரிந்துவைத்திருந்தார்கள்.

இப்போது விமல்வீரவன்சாவின் பிரச்சினை என்ன?.

மந்திரிப் பதவி ஒன்றினைப்பெற அவருக்கு ஆட்சிமாற்றம் தேவைப்படுகிறது.

மகிந்தர் தான் உண்மையான ‘சிங்களதேசியவாதி’ என்று சித்தரிக்க, விடுதலைப்புலிகளை மலினப்படுத்தி அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கையாட்கள் என்று ஒப்பீடு செய்யவேண்டிய அரசியல் கையறுநிலைக்கு அவர் வந்துள்ளார் என்கிற முடிவிற்கு வரலாம்.

1997 இல் புலிகள் மீது கொண்டுவந்த தடையை அமெரிக்கா இன்னமும் நீக்கவில்லை.

யப்பானின் முதன்மை இராஜதந்திரி யசூசி அகாசி, தேசியத்தலைவரை வன்னிக்குச் சென்று ஏன் சந்தித்தார்? என்கிற விடையம் விமலுக்குத் தெரியும்.

எமது தேசியவளங்களை கொண்டு சென்ற கப்பலுக்கு புல்மோட்டைக் கடற்பரப்பில் என்ன நடந்தது?.

யார் ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகள் என்பதை விமல்வீரவன்ச திரிபுபடுத்தலாம்.

ஆனால் வரலாறு சொல்லிக்கொண்டேயிருக்கும்.

இப்போது அமெரிக்காவுடன் 24 பக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள திலக்மாரப்பன என்பவர் புலியா?.

அந்நியப்படைகளை இலங்கைக்குள் கொண்டுவந்த இதே பௌத்த சிங்களப் பேரினவாதந்தான், துறைமுகங்களையும் மண்ணையும் கார்பொரேட்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் தாரைவார்க்கிறது.

விடுதலைப்புலிகள் எந்தநிலையிலும் எவருடனும் இவ்வாறான உடன்பாடுகளில் ஈடுபடவில்லை.

ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்.

எதிர்கொள்ளத்தயார்.

அவதூறுகள் யாவும் கருத்துருவமாகாது.

ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூறும் படம்

ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ள திரைப்படம், ”சினம் கொள்”  இப் படம் குறித்து அவர் கூறுகையில், ஐரோப்பா, கனடா, தமிழகம் ஆகிய பகுதிகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் இப்படத்தைத் தயாரிக்க நிதியுதவி செய்தனர்.

போருக்குப் பின்னரான இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இப்படம் பேசுகிறது. 6வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று, வெளியே வரும் நபராக ஆண்டவன் கட்டளை அரசிந்தன் நடித்துள்ளார்.

சென்சரில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் “U”  சான்றிதழ் கிடைத்துள்ளது. ஜுலையில் இந்தப்படம் வெளிவருகின்றது என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் இணைய சீனா மறுப்பு

அமெரிக்கா திட்டமிட்டுள்ள புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாட்டில் தான் இணைந்துகொள்ளப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளதாக எம்.எஸ்.என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகப்பெரும் நாடுகள் தாம் முன்னர் மேற்கொண்ட உடன்பாடுகளை கடைப்பிடிக்கத் தவறுகின்றன. அதிகரித்து வரும் இந்த உறுதியற்ற தன்மை உலகின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

சில பெரிய நாடுகள் தமது அணு ஆயுத மற்றும் ஏவுகணை வளங்களை அதிகரித்த பின்னர் ஒரு உடன்பாட்டில் இருந்து விலகி வேறு ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றன என சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லு காங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்னர் ரஸ்யாவுடன் மேற்கொண்டிருந்த ஆயுதக்கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களில் இருந்து விலகிய பின்னர் அதன் அதிபர் டெனால்ட் ரம்ப் புதிய ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கைக்கு சீனாவை அழைத்துள்ளார் இந்த நிலையில் சீனா தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நகர்வு உலகின் உறுதித்தன்மைக்கு ஆபத்தானது. சீனாவும், ரஸ்யாவும் தமது கூட்டு வியூகங்களை வலுப்படுத்த வேண்டும் என நம்புகின்றன. எனவே சீனாவின் முடிவு தெளிவானது அதாவது சீனா ஒருபோதும் இந்த முத்தரப்பு ஆயுதக்கட்டுப்பாட்டில் இணைந்து கொள்ளப்பொவதில்லை.

1987 ஆம் ஆண்டு ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டிருந்த நடுத்தர அணுவாயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா தன்னிட்சையாக விலகியிருந்தது.

இரு நாடுகளும் தரையில் இருந்து ஏவப்படும் 310 மைல்கள் தொடக்கம் 3,420 மைல்கள் தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகளை ஏனைய நாடுகளில் நிறுத்துவதில்லை மற்றும் மட்டுப்படுத்துவது என்ற முன்னைய உடன்பாட்டில் இருந்தே அமெரிக்கா வெளியேறியிருந்தது. ரஸ்யா அண்மையில் தயாரித்த 9எம்729 என்ற ஏவுகணை இந்த உடன்பாட்டை மீறியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. ஆனால் ரஸ்யா அதனை மறுத்திருந்தது.

அமெரிக்காவும் சீனாவும் பொருளாதாரப் போர் ஒன்றில் சிக்கியுள்ள இந்த சமயத்தில் தற்போது எழுந்துள்ள ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்பாடு மேலும் விரிசல்களைத் தோற்றுவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை

இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை சவுதி அரேபிய இராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஆனாலும் அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்ற காரணத்தால், அங்கு பதற்றம் நிலவுகின்றது.

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் இடையில் கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015முதல் ஹவுதிப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களில் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் கொண்டிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளித்து,  ஆயுதங்கள், பயிற்சிகளை அளிக்கின்றது.

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும், சவுதி இராணுவத்தினருக்கும் இடையே சண்டை ஏற்படவுள்ள நிலையில் கடந்த மே 14ஆம் திகதி, சவுதி அரேபிய அரசிற்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் குழாய் அமைப்பை தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்துள்ளனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் குழாய் ஒழுங்கமைப்பின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இன்று (மே 20) அதிகாலை 4மணிக்கு, சவுதி அரேபிய நகரான டைப் மீது வந்த ஏவுகணை ஒன்றை, சவுதி இராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்து தகர்த்தெறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கி ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சிலமணிநேரங்களில் மீண்டும் ஒரு ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர்.

ஜெட்டா நகர் மீது அந்த ஏவுகணை பறந்த போது, சவுதி விமானப்படையினர் இடைமறித்து அழித்தனர். இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரம்லான் நோன்பு நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளதானது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் இராணுவம் தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை இத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பது உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்கா

போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது.
சிறீலங்கா அரசின் இந்த ஏமாற்றுத்தனங்களை தகர்த்து அதன் மீது அனைத்துலக சமூகத்தின் உதவியுடன் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்துவதில் புலம்பெயர் அமைப்புக்கள் மிகப்பெரும் தடைகளைச் சந்தித்து வருகின்றன.

அவற்றில் முக்கியமானது புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஒரு அணியில் இணைந்து செயற்பட தயங்குவது தான். அதாவது விடுதலைப்பாதையில் முன்நகர்வதற்கு தமிழ் மக்களும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் மிகப்பெரும் தடைகளை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பின் தலைவரும், ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் முன்னாள் பிரதிநிதியுமான யஸ்மின் சூக்கா அவர்களுடன் இலக்கு மின்னிதழ் மற்றும் இணையத்தளத்தின் குழு ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

ஏறத்தாள ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், பல விடயங்கள் ஆராயப்பட்டன. நாம் யஸ்மின் சூக்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மிகவும் நீண்டதாக அமைந்ததால் அதனை பகுதிகளாக இங்கு தருகின்றோம்.


வினா:
இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்ற இத்தருணத்தில், போராலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதில், உலகெங்கும் பரந்திருக்கின்ற தமிழ் அமைப்புக்களின் முயற்சிகளை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்

பதில்: இதனைப் பலகோணங்களில் நோக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் பலமானவர்கள். ஆனால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

பொதுவாக தாங்கள் மேற்கொள்ளுகின்ற முயற்சியின் மூலம் யார் அதிகமாக சாதிக்கின்றார்கள் என்ற போட்டி மனப்பான்மை அவர்களுக்கிடையில் காணப்படுகின்றது.

சர்வதேச கடமைகளைப் பொறுத்தவரையில் இலங்கை அரசு தனது பங்கை தான் சரிவர ஆற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டுமானால் தமிழ் அமைப்புகள் ஒன்றுபட வேண்டியது கட்டாயமானதாகும்.

தமிழ் அமைப்புக்கள் தாங்கள் வதியும் நாடுகளிலுள்ள அரசுகள் சரியான நடவடிக்கைகள் முன்னெடுக்கும்வண்ணம் இன்னும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்கலாம். இந்தத் தமிழ் அமைப்புக்கள் தங்களது ஆற்றலை பயன்படுத்துகிறார்களா அல்லது அதனை உணர்ந்துகொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

உதாரணமாக, போர் மிகவும் உக்கிரமடைந்திருந்த நேரத்தில் ரொறன்ரோ போன்ற ஒரு நகரத்தை ஸ்தம்பிதம் அடையச்செய்யும் ஆற்றல் அவர்களுக்கிருந்தது.

ஆகவே கனேடிய, பிரித்தானிய, அமெரிக்க அரசுகள் மட்டில்  இதுவரை எதற்காக அவர்கள் அதிக அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்பது நியாயபூர்வமான வினாவாகும்.

புகைப்படங்கள் எடுப்பதைவிட அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தங்களால் செய்யக்கூடியவற்றையெல்லாம் செய்தார்களா என்பது வினாக்குறியே.

மற்றைய விடயம் என்னவென்றால், ஒரு சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த அமைப்புகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இருந்தன. இலங்கை அரசு தான் செய்யவேண்டிய பணிகளைச் செய்வதற்கு உரிய அழுத்தங்களை இத்தமிழ் அமைப்புகள் பிரயோகித்தார்களா என்பது தெரியவில்லை.

அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டிய அவசியம் இருக்கின்றது.

மீண்டும் ஒருதடவை ஐ.நா. ஒரு வெறுமையான தீர்மானத்தை கொண்டுவராமல் இருப்பதற்கும் ஐ.நா. தனது கடமையை சரியாக செய்வதற்கும் தாம் செய்யவேண்டிய ஐந்து விடயங்கள் எவை என்பதை இந்த அமைப்புகள் ஒன்றாக இணைந்து சிந்திக்கலாம்.

balakumar 1 தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்காநீங்கள் வாழுகின்ற நாடுகளில் உள்ள அரசுகள் மட்டில் அழுத்தத்தை பிரயோகிப்பது மட்டும் போதாது. அத்துடன் ஜெனீPவாவிற்கு போவதாக இருந்தால் அங்கு போவதன் நோக்கம் என்ன என்பதைப்பற்றியும் ஆராய வேண்டும்.

உண்மையில் ஜெனீவாவில் என்ன செய்யவேண்டும் என்பதையும் அங்குள்ள இடைவெளியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இவர்கள் சரியாக புரிந்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது.

2009 முதல் 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை பின்னோக்கிப் பார்க்கும் போது, அக்காலப் பகுதியில் உருவாக்கப்பட்ட விடயங்கள் அதிவிசேடமானவை. என்னைப் பொறுத்தவரையில் மற்றைய நாடுகளிலுள்ள ஏனைய போராட்டங்களுக்கு உதவுவதற்கு தமிழ் அமைப்புக்களிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

நவீன கணனி நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்தி சிறப்பான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அப்படிப்பட்ட அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது வினாக்குறியே.

ஐ.நா. மேற்கொண்ட தீர்மானத்தின் ஏனைய அம்சங்களைப் பொறுத்தவரையில் ஐ.ரி.ஜே.பி. அமைப்பு நாட்டிற்கு உள்ளே இருப்பவர்களுக்கும் சரி வெளியே இருப்பவர்களுக்கும் சரி செயற்படுவதற்கான வழிவகைகளை திறந்துவைத்திருக்கின்றது.

உதாரணமாக, நில காணி விடயம் தொடர்பாக என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது? உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? எவ்வளவு மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பியுள்ளார்கள்? இப்படிப்பட்ட விடயங்கள் ஆதாரபூர்வ அறிக்கைகளாக தயாரிக்கப்பட வேண்டும்.

ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா. தீர்மானத்தைப்பற்றி பேசும்போது மேற்படி விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை நாங்கள் நிரூபிக்கலாம்.

உண்மையில் இப்படிப்பட்ட அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு கடுமையான உழைப்பு அவசியம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் தகவல்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.  ஆரம்பகால அறிக்கைகள் அவற்றைக் கொண்டிருந்தன.

நவீன உத்திகளைப் பயன்படுத்தி, இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்குமானால், அவற்றின்மூலம் தற்போதைய இராணுவ மயமாக்கலை ஆதாரபூர்வமாக நிரூபிக்கலாம்.  இப்படிப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அடுத்த ஜெனீவா அமர்வுக்கு முதல் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபட்டு இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் செயற்படத் தவறினால் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பிலிருந்து இலங்கை அரசு மறைந்துபோகக்கூடிய அபாயம் இருக்கின்றது.

2019 london 1 தமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் : யஸ்மின் சூக்காஐ.நா.வுக்கு செல்வதால் என்ன பலன் என்று பலர் வினா எழுப்புகின்றார்கள்.  சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு தொடர்ந்து இருப்பது முக்கியமானது.  ஏனெனில் அப்பொழுதுதான் இலங்கை அரசின் செயற்பாடுகள் சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் மற்றைய நாடுகளும் இலங்கை அரசின் செயற்பாடுகள்பற்றி தீர்ப்பிடுவதற்கு ஏதுவான நிலையிருக்கும். ஏனைய நாடுகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு தமிழ் அமைப்புக்கள் அயராது உழைக்கவேண்டும்.  அதுமட்டுமன்றி அவர்கள் ஐ.நா. மட்டிலும் அதிகமான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.

வெறுமனே துறைசார் வளங்களை வழங்கும் கதையை ஐ.நா. நிறுத்தி மனித உரிமைகளை கண்காணிக்கும் பணியில் ஐ.நா. அதிக கவனத்தை செலுத்தவேண்டும் என்பது வலியுறுத்தப்படவேண்டும்.

கடந்த சில வாரங்களாக இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் விடயங்கள் தொடர்பாகவோ அல்லது முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிக்காப் அணிவது தடைசெய்யப்பட்டது தொடர்பாகவோ ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு எந்தவிதமான அறிக்கைகளையும் வெளியிடாது மௌனமாக இருக்கின்றது.

ஆகவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் உண்மையில் என்ன செய்யவேண்டும் என்றால், நீங்கள் இதை செய்யுங்கள் நாங்கள் இதை செய்கிறோம் என்று தமக்கிடையே வேலைத்திட்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இப்படிப்பட்ட விடயங்கள் ஆராயப்படாவிட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் கண்காணிப்பிலிருந்து தப்பித்துவிடும்.

உலக அளவில் இன்று மனித உரிமைகள் விலங்கிடப்பட்டிருக்கும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்காத பல நியாயமற்ற அரசுகள் எங்கும் வியாபித்திருக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலே நீங்கள் எங்களுடன் இணைவீர்களானால் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவிருக்கிறோம் என்று அரசுகள் கூறுகின்ற இந்தச் சூழலில் மனித உரிமைகள் என்பதன் முக்கியத்துவம் மறைந்துபோகின்றது.

இனிவரும் காலங்களில் இதுதொடர்பாக நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.

தொடரும்……….

தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும். போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதிக்காக காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம் என முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்துலக மன்னிப்புச் சபை சனிக்கிழமை (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்னரும் சிறீலங்காவில் வன்முறைகள் தொடர்கின்றன.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாக சிறீலங்கா அரசு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் உறுதிவழங்கியிருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன.

இதுவே தற்போது இனங்களுக்கு இடையில் அதிகரித்துவரும் முரன்பாடுகளுக்கான காரணம். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுத்தது தான் தற்போது முஸ்லீம் இனத்தவர் மீதான தாக்குதலுக்கும் காரணம்.

kepapulavu4 தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டால் வரலாறு மீண்டும் திரும்பும்: அனைத்துலக மன்னிப்புச் சபைஇனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சிறீலங்கா தெரிவித்துவரும் போதும், சிறீலங்காவில் இனங்களுக்கு இடையில் மீண்டும் வன்முறைகள் தோற்றம் பெற்றுவருவது கவலை தருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென் ஆசியப் பணிப்பாளர் பிராஜ் பற்நெக் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் என்நலிகொட காணாமல் போயிருந்தார். 26 வருடங்கள் இடம்பெற்ற போர் நிறைவு பெற்ற பின்னர் இது இடம்பெற்றுள்ளது. 1980 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 60,000 தொடக்கம் 80,000 பேர் சிறீலங்காவில் காணாமல்போயுள்ளனர்.

உலகில் அதிகளவு மக்கள் காணாமல்போயுள்ள நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் ஒன்று. காணமல்போனவர்கள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு அவர்களின் குடும்பத்தினர் தற்போதும் காத்திருக்கின்றனர்.

2006 ஆம் ஆண்டு திருமலையில் சிறப்பு அதிரடிப்படையினரால் 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் பின்னர் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறையில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர், 2008 – 2009 காலப்பகுதியில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு சிறீலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் 2006 ஆம் ஆண்டும் ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா 2009 ஆம் ஆண்டும் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சிறீலங்கா அரசு நீதியை நிலைநாட்டத் தவறியதற்கான உதாரணங்களே இவையாகும். நீதி நிலைநாட்டப்படுவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானம் 30-1, சிறீலங்காவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம். நான்கு பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த சிறீலங்கா அரசு உடன்பட்டிருந்தது.

அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய நீதிக்கான குழுவை அமைப்பதை நிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதையும் அவர்கள் முற்றாக நிறைவேற்றவில்லை.

காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைக்கான அலுவலகம் அமைக்கப்பட்டபோதும் அது காணாமல் போனவர்களுக்கான பதிலை வழங்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்தபோதும் அந்த சட்டத்தை தற்போதும் அது பயன்படுத்தி வருகின்றது. அதன் மூலம் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்களை சிறீலங்கா அரசு அச்சுறுத்தி வருகின்றது.

பயங்கரவாதச் தடைச்சட்டத்தை பயன்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மீது அனைத்துலக சட்டவிதிகளின் அடிப்படையில் குற்றங்கள் சுமத்தப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும் காத்திருக்கும் மக்களுக்கு சிறீலங்கா அரசு நீதியை வழங்கவேண்டும் அல்லது வரலாறு மீண்டும் திரும்பலாம்.

எனவே ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவின் ஆணையாளர் ஆகியோர் சிறீலங்கா அரசுக்கு ஒரு காலவரையறையை நிர்ணயித்து தீர்மானங்களை நிறைவேற்ற உத்தரவுகளை வழங்கவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கின்றது.

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு! கைது செய்யப்படுவாரா?

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர் மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின கூட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தூள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கின் காரணமாக திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிருசுவில் படுகொலை படை அதிகாரிக்கு மரணதண்டனை உறுதி

2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற மக்கள் 8பேரை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்து கழிப்பறைக் குழிக்குள் போட்டிருந்தனர்.

இந்தச் சம்பத்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படை அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் தப்பிச் சென்ற மகேஸ்வரன் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், ஐந்து சிறிலங்கா படையினர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏனைய நான்கு பேரும் போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தீர்ப்பிற்கு எதிராக சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த விசாரணை தலைமை நீதிபதி நளின் பெரேரா, நீதியரசர்கள் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜெயவர்த்தன, முர்து பெர்னான்டோ ஆகிய ஐந்து நீதியரசர் குழுவினால் விசாரிக்கப்பட்டது.

இதனையடுத்து, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கொழும்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியானதே என ஐந்து நீதிபதிகளும் அறிவித்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இதுவரை 89 சந்தேக நபர்கள் கைது-சிறிலங்கா காவல்துறை பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவீச்சு தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவியல் புலனாய்வு திணைக்களமும் (Criminal Investigation Department – CID), பயங்கரவாத புலனாய்வு பிரிவும் (Terrorist Investigations Division -TID) 89 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதில் சிஐடியினர் 69 சந்தேக நபர்களையும் ரிஐடி 20 சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.