நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமைய முன்னெடுக்கப்படுகின்ற தெரிவிக்குழுவின் செயற்பாடுகளை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு அமைய மாற்ற முடியாது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
களனிப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் உண்மை எதுவென்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிலுள்ள கிருஸ்ணன் கோவிலுக்குச் சென்று தனது எடைக்கு எடை தாமரை மலர்களை தானம் செய்து, அடுத்து மாலைதீவு சென்று அங்கிருந்து சிறீலங்கா செல்வதை ரியூப் தமிழ் ஊடகத்தினர் ஆராய்ந்துள்ளனர்.
மாலைதீவு சென்ற நரேந்திர மோடி விமான நிலையத்தில் மாலைதீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது ஸோலியைச் சந்தித்தார். அங்கு வைத்து அவருக்கு நிஸான் இஸுதீன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதுவே மாலைதீவின் அதியுயர் விருதாகும்.
மாலைதீவின் தென்புலத்தில் மசூதி ஒன்றை அமைத்துத் தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும் மாலைதீவுடன் 6 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் ஒன்று இந்து சமுத்திர கடல் பகுதியை கண்காணிப்பதற்கான ராடர்களைப் நிறுவுவதற்கு அனுமதியை மாலைதீவு வழங்குவதற்கான ஒப்பந்தம். இதற்கு முன் இருந்த அப்துல்லா ஜமீன் சீனாவுடன் உறவு வைத்து பணத்தை வங்கியதால், சீனக் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கக் கூடிய இந்திய ராடர்களை அனுமதிக்க முடியாதென இடைநிறுத்தி வைத்திருந்தார். இவரது தோல்வியை அடுத்து, அப்துல்லா ஜமீன் பதவிக்கு வந்த பின் இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார். இதனாலேயே மாலைதீவு சென்று ஒப்பந்தங்கள் செய்து கொண்டார்.
அங்கிருந்து புறப்பட்டு சிறீலங்கா சென்றிருந்தார். அங்கு அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வரவேற்கப்பட்டு, கொச்சிக்கடை அந்தோனியார் கோவிலுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட தகவல்கள் பற்றி ஆராய்ந்தார். இவை பற்றி நேரடியாகக் கூறாது விட்டாலும், இதற்காகவே அங்கு சென்றிருந்தார். அங்கு இவர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை முற்றாக அழிப்போம் என்று இந்திய படைத்துறை தளபதி கூறியிருந்தார். இதை நரேந்திர மோடியே கூறியிருக்க வேண்டும். இந்த விடயத்தை படைத் தளபதி கூறியிருந்தார்.
அங்கு 40 நிமிடங்கள் வரையுமே தங்கியிருக்கும் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரையும் சந்திக்கவுள்ளார். இரண்டாவது தடவையாக பதவியேற்ற மோடி, இந்த இரண்டு தீவுகளுக்கும் பயணம் செய்ததன் நோக்கம் என்னவென்று ஆராய்ந்தால், தென்சீனப் பிரச்சினையே ஆகும். தென்சீனக் கடலின் கடலலைகள் சீனாவிற்கு சொந்தமானவை அல்ல என்றும், அவை தாய்வானுக்கே சொந்தமானவை என்றும் இந்தக் கடலலை வழியாக முதலில் பிரான்ஸிற்குரிய கப்பல்கள் சென்றன. பின்னர் அமெரிக்காவிற்குரிய கப்பல்களுடன் அமெரிக்காவின் எண்ணெய் தாங்கிகள் செல்கின்றன. இது சர்வதேச கடலுக்குரிய பகுதி என்று கூறி அமெரிக்கக் கப்பல்கள் பயணித்தன.
07 ஜுனில் பிலிப்பைன்ஸில் அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு வெறும் 15மீற்றர் தொலைவில் ரஸ்யாவின் போர்க்கப்பல் அதை இடிக்க வந்த போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக்காவும் ரஸ்யாவும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன. இது பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதலாகும். இந்தக் கடலைக் கைப்பற்றுகின்ற மோதலானது, பசுபிப் பிராந்தியத்திலிருந்து அடுத்த 5 வருடங்கள் என்று காத்திருக்கத் தேவையில்லை வெகு விரைவில் இந்து சமுத்திரத்திற்குள் நுழையப் போகின்றது.
ஆகவே தான் மாலைதீவில் ராடர் இந்தியாவிற்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது. மற்றும் தைவான் நீரிணையால் அமெரிக்காவின் கப்பல்கள் செல்ல முடியுமாக இருந்தால் பாக்கு நீரிணையால் ஏன் சீனாவின் கப்பல்கள் செல்ல முடியாது என்று சீனா கேட்கப் போகின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை நரேந்திர மோடி செய்ய வேண்டுமாயின் மாலைதீவிற்கும் இலங்கைக்கும் தான் மோடி முதலாவதாக செல்ல வேண்டும் என்பது இப்பொழுது தைவான் கடலில் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும். அதை அடியொற்றித் தான் இதைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது ஐ.எஸ் பயங்கரவாதப் பிரச்சினை கிழக்கிலிருந்து சீனா வடிவில் வருகின்ற பிரச்சினை ஒருபுறமாக இருக்க மேற்கிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத பிரச்சினை இப்போது சிறீலங்காவிற்குள் நுழைகின்றது. இதன் காரணமாக ஐ.எஸ் அமைப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவிற்கு அடுத்த தலைவலியாக மாறியிருக்கின்றது. உதாரணமாக மாலைதீவு ஒரு சுனி முஸ்லிம் நாடு. மாலைதீவு நாடு சௌதி அரேபியாவுடன் சேர்ந்து 11 நாடுகள் இணைந்து ஏமன் நாட்டில் குண்டு வீச்சுக்களை நடத்துகின்றதோடு இணைந்திருக்கின்ற நாடு. எனவே ஐ.எஸ் பயங்கரவாதமானது சிறீலங்காவிற்குள் மட்டுமல்ல மாலைதீவிற்குள்ளாலும் வரும் என்று இந்தியா கணிப்பிடுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் சிறீலங்காவிலிருக்கும் முஸ்லிம் தலைவர்கள் கூறியிருக்கும் கருத்துக்களும் இந்தியாவை சிந்திக்க வைத்திருக்கும். ஏனெனில் சிறீலங்காவிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான ஹிஸ்புல்லா கூறுகின்ற போது, சிறிலங்காவில் நாம் சிறுபான்மை ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மை. நம்மை அழிக்க முடியாது. அது இலகுவான காரியமல்ல என்று கூறியது ஊடகங்களில் இப்போது பரவலாக வெளிவந்துள்ளது. இவை போன்ற பேச்சுக்கள் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தான் மாலைதீவில் ராடர் தொடர்பான பிரச்சினைக்காகவும், சிறீலங்காவில் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலுக்குள்ளான கொச்சிக்கடை அந்தோனியர் கோவிலுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பின் தாக்குதல் பற்றியும் ஆராய்ந்துள்ளார். இந்த இரு பிரச்சினைகளும், சீனா, ஐ.எஸ் மற்றும் அமெரிக்கா அடங்கிய பசுபிக் பிராந்தியப் பிரச்சினையும் கலந்திருக்கும் காரணத்தினால், இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானால் வரும் பிரச்சினையை விட முக்கியமான பிரச்சினை மாலைதீவு, இலங்கை ஆகிய தீவுகளுக்கிடையால் வரும் என்பதால், இந்த இரு தீவுகளுக்கும் சென்றார்.
இந்தியா மதப்பிரச்சினையை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கேரளா கிருஸ்ணன் கோவில், மாலைதீவில் முஸ்லிம் பள்ளிவாசல், சிறீலங்காவில் கொச்சிக்கடை அந்தோனியர் கோவில் என முன்று கோவில்களுக்கும் சென்றுள்ளார். இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இந்தியாவை அண்மித்துள்ள கடல் பிரதேசங்களில் அச்சுறுத்தலை தவிர்க்க இந்த நாடுகளின் ஒத்துழைப்புத் தேவை என்பதால் இந்த நாட்டு விஜயங்களை முதன்மைப்படுத்தினார்.
குறித்த சர்ச்சைக்குரிய காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது.
அதேவேளை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும் கட்டுமான பணிகள் செய்ய முடியும்.
இதுவே நீதிமன்ற தீர்ப்பு. இந்த தீர்ப்பில் திருப்தில்லாத விகாரையின் பெளத்த தேரர் அவசியமானால் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி இனி கட்டுமான பணிகள் செய்ய முடியாது.
இதை இங்கே எனது அறிவுறுத்தலின் பேரில் வந்திருக்கும் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, பொலிஸ் அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
மாவட்ட செயலாளர் சகல தரப்பினருடன் ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
இதுவே இந்த விவகாரம் தொடர்பாக முல்லை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடளின் பின் தனது முடிவாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஸ்தலத்துக்கு நேரடி விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன், பின் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இவ்விவகாரம் தொடர்பிலான கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.
இக்கூட்டத்தில் எம்பிகள் சிவசக்தி ஆனந்தன், சார்லஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன், வேலுகுமார், மாவட்ட செயலாளர் ரூபவதி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், பிரசார செயலாளர் பரணிதரன், நிர்வாக செயலாளர் பிரியாணி, சர்ச்சைக்குரிய தேரர், நீராவியடி பிள்ளையார் ஆலய தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் இருந்த இடத்தில் பெளத்த விகாரை கட்ட மாட்டோம் எனவும், தமிழ் பெளத்த வரலாறு இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம் எனவும் கன்னியா விகாரை தேரர்கள் உடன்பட்டனர்.
புராதன சிதைவுகளுக்கு சேதம் ஏற்படாத முறையில் கன்னியா வளவுக்குள் வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைக்கவும், வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தையும் புனரமைக்கவும் உடன்பாடு காணப்பட்டது.
இது தொடர்பான அடுத்த கட்ட கலந்துரையாடலை கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், இந்து, பெளத்த விவகார அமைச்சர்கள் கலந்துக்கொள்ளும் மட்டத்தில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கன்னியா விநாயகர், சிவன் ஆலய கட்டுமானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சு வழங்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கணேசனுடன் யோகேஸ்வரன் எம்பி, வேலுகுமார் எம்பி, சுசந்த புச்சிநிலமே எம்பி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார, கன்னியா விநாயகர் ஆலயம் சார்பாக கணேஷ் கோகிலரமணி, கன்னியா விகாரை தேரர்கள், ஜமமு பிரசார செயலாளர் பரணிதரன் ஆகியோர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.
கலந்துரையாடலில் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் கன்னியா வெந்நீர் ஊற்று வளவுக்கு சென்று நேரடியாக ஸ்தலத்தை பார்வையிட்டு, சிவன்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜையிலும் கலந்துகொண்டனர். இதன்போது ஸ்ரீதரன் எம்பியும் அமைச்சருடன் இணைந்து கொண்டார்.
அவ்விடத்தில் அமைந்துள்ள பெளத்த விகாரைக்கும் அமைச்சர் மனோ கணேசன் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
2019 சூன் 5-ம் திகதி இரசியாவின் சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடந்த பன்னாட்டு பொருளாதார மாநாட்டிற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆயிரம் அரசுறவியலாளர்கள் புடைசூழ கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, வர்த்தகப் போர் மற்றும் படைத்துறை நெருக்குவாரங்கள் போன்றவற்றை இரசியாவும் சீனாவும் எதிர் கொண்டிருக்கும் வேளையில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருந்தது. 2014 இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்த பின்னர் மேற்கு நாடுகள் இரசியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை எதிர் கொள்ள இரசியா சீனாவுடன் தனது வர்த்தகத்தையும் படைத்துறை ஒத்துழைப்பையும் அதிகரித்ததில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உறவு மிக நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா பங்குபற்றாமல் தவிர்த்த சென். பீற்றர்ஸ்பேர்க் மாநாட்டில் உரையாற்றிய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் அமெரிக்கா சீனா மீது தொடுத்துள்ள வர்த்தகப் போரும் சீனத் தொடர்பாடல் நிறுவனமான உவாவே மீது அது விதிக்கும் தடைகளும் அமெரிக்காவின் உலகப் பொருளாதாரத்தின் மீதான ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே செய்யப்படுகின்றன என்றார். மேலும் அவர் அமெரிக்காவின் அந்த வலிய நகர்வுகள் உலக வர்த்தகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன என்றார். ஜீ ஜின்பிங்கும் தன் பங்கிற்கு அமெரிக்காவின் தனியாதிக்கத்தையும் உலகமயமாதலுக்கு எதிரான அதன் செயற்பாடுகளையும் தாக்கியதுடன் இரசியா ஒரே மாதிரியான மனப்பாங்கு கொண்ட நம்பிக்கையான பங்காளி என்றார்.
2016-ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த நோபல் பரிசு மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சீன இரசிய கேந்திரோபாய உறவையிட்டு வாஷிங்டன் கவனமாக இருக்க வேண்டும் என்றார். மேலும் அவர் வளரும் அந்த உறவைவிட ஆபத்தான ஒன்று அமெரிக்காவிற்கு இருக்காது என்றார்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங் அதிகப் பயணங்கள் மேற்கொண்ட தலைநகராக மொஸ்க்கொ இருக்கின்றது. இரசிய அதிபரும் சீன அதிபரும் 27 தடவைகளுக்கு மேல் சந்தித்து உரையாடியுள்ளனர்.
2016-ம் ஆண்டு 69.6பில்லியன் டொலர்களாக இருந்த இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் 2017-ம் ஆண்டு 84.2 பில்லியனாகி 2018-ம் ஆண்டு 107.1பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. 2016-ம் ஆண்டு சீனாவிற்கு அதிக அளவிலான மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக இரசியா உருவெடுத்தது. 2019- ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை 1.3 ரில்லியன் கன அடி எரிவாயுவை சீனாவிற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இரசியா கைச்சாத்திட்டுள்ளது.
இரசிய மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 54 விழுக்காட்டினர் அமெரிக்காவை வெறுக்கின்றனர். ஆனால் 12விழுக்காட்டினர் மட்டுமே சீனாவை வெறுக்கின்றனர். துருவ ஆதிக்கம் என்பது எத்தனை நாடுகள் உலகெங்கும் தமது படைத்துறை மற்றும் பொருளாதார வலிமையால் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது சம்பந்தமானது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தின் கீழ் உலகம் இருப்பதை பல்துருவ உலகம் என்பர். 1815இல் இருந்து 1945-ம் ஆண்டு வரை உலகம் பல்துருவ ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அந்தக் கால கட்டத்தில் இருந்த வல்லரசு நாடுகளிடையேயான நட்புறவை பொறுத்து ஆதிக்கச் சமநிலையும் மாறிக் கொண்டே இருந்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியா, இரசியா, பிரசியா, பிரான்ஸ், டென்மார்க்-ஹங்கேரி ஆகியவை உலக வல்லரசுகளாக இருந்தன. கிறிமியாவை துருக்கியிடமிருந்து மீளப் பெற எடுத்த முயற்சி அப்போது இருந்த பல் துருவ உலகச் சமநிலையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஹிட்லர் தலைமையில் ஜேர்மனி மற்ற வல்லரசு நாடுகளை ஆக்கிரமிக்க எடுத்த முயற்ச்சியால் உருவான இரண்டாம் உலகப் போர் பல் துருவ உலக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தமது உலக ஆதிக்கத்தை வளர்த்துக் கொள்வதில் போட்டியிட்டன. அவை இரண்டின் பின்னால் பல நாடுகள் ஆதரவாக இணைந்து கொண்டன. அது இரு துருவ உலகத்தை உருவாக்கியது.
1991 இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் உலகம் கொண்டு வரப்பட்டு ஒரு துருவ உலகம் உருவானது. அதன் பின்னர் சீனா சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தனக்கு ஏற்படக்கூடாது என்பதை உணர்ந்து தனது பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொண்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக இரசியா தனது படைத்துறை வலிமையை அமெரிக்காவிற்கு சவால் விடக்கூடிய வகையில் வளர்த்து வருகின்றது. 2020-ம் ஆண்டு இரசியாவை உலகின் முன்னணிப் படைத்துறை நாடாக மாற்ற புட்டீனும் 2030-ம் ஆண்டு அதே நிலைய சீனாவை அடைய வைக்க ஜின்பிங்கும் உறுதி பூண்டுள்ளனர். புட்டீனின் திட்டம் பெரிதும் நிறைவேறிவிட்டது என்பதை அவர் உக்ரேனிலும் சிரியாவிலும் மேற்கொண்ட நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் தடைக்கற்களாக இருப்பவற்றில் முக்கியமானது மத்திய ஆசிய நாடுகளாகும். முன்னாள் சோவியத்ஒன்றிய நாடுகளாக இருந்த மத்திய ஆசிய நாடுகளில் நிலப்பரப்பில் பெரிய கஜகஸ்த்தான் எரிபொருள் யூரேனியம், தங்கம் உட்பட பல கனிம வளங்களைக் கோண்டது. உஸ்பெக்கிஸ்த்தானிலும் தேர்க்மெனிஸ்த்தானிலும் எரிபொருள் நிறைய இருக்கின்றது. தஜிகிஸ்த்தானிலும் கிரிகிஸ்த்தானிலும் உள்ள மலைகள் தரும் நீரால் விவசாயம் செழிக்கும். பெருமளவு பருத்தி அந்த இருநாடுகளிலும் பயிரடப்படுகின்றன.
வேலை என்றால் இரசியாவிற்குச் செல்லும் மத்திய ஆசிய நாட்டுமக்கள் இரசியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளும் வடக்கிலும் மேற்கிலும் இரசியாவும் கிழக்கில் சீனாவும் தெற்கில் பாக்கிஸ்த்தான், ஈரான், ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளும சூழ இருக்கின்றன. சீனா தனது Belt & Road Initiative என்னும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இந்த நாடுகளை இணைத்து அவற்றின் மூலவளங்களை சுரண்டுவதும் அவற்றில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையும் இரசியா கரிசனையுடன் பார்க்கின்றது. ஆனால் சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் இரசியா முழுமனதுடன் ஒத்துழைக்கின்றது. 2017 சூலை மாதம் இரசிய சீனக் கடற்படைகள் இணைந்து வரலாற்றில் முதற் தடவையாக ஒரு போர்ப்பயிற்சியைச் செய்தன.
இரசியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் சீனாவால் இரசியாவிற்கு ஏற்படும் ஆபத்தைச் சமாளிக்க சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே கிழக்கு (Vostok) என்னும் பெயரில் செய்து வந்த போர்ப்பயிற்சியில் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் சீனப்படைகளையும் இணைத்துக் கொள்ளப்படும் அளவிற்கு சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான உறவு சுமூகமடைந்துள்ளது.
அமெரிக்காவின் படை வலிமை முக்கியமாக கடற்படை வலிமை, உலகெங்கும் அமெரிக்கா வைத்துள்ள படைத் தளங்கள், அமெரிக்காவிற்கு ஜப்பான் முதல் பிரித்தானியா வரையும் நியூசிலாந்து முதல் பெரு வரையும் இருக்கு நட்பு நாடுகளின் கூட்டம், பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா செய்துள்ள படைத்துறை மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள், உலக நாணயப் பரிமாற்றத்தில் அமெரிக்கா செலுத்தும் ஆதிக்கம், அமெரிக்காவின் தொழில்நுட்ப மேம்பாடு போன்றவற்றை தகர்க்காமல் அல்லது அவற்றிற்கு இணையான நிலையை தாமும் எய்தாமல் இரசியாவோ சீனாவோ இரு துருவ அல்லது பல் துருவ ஆதிக்க நிலையை உருவாக்க முடியாது. அதனால் இரு நாடுகளும் உலக அரங்கில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.
தமிழீழத் தேசிய மாணவர் எழுச்சி நாளினை ஒட்டி இந்நூல் சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்கள் மற்றும் அக்கினிப்பறவைகள் அமைப்பினரின் கூட்டுமுயற்சியால் Structures of Tamil Eelam: A Handbook’ நூல் பெரும் வரவேற்புக்கு மத்தியில் அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி மாநகரில் வெளியீடுசெய்யப்பட்டது.
இந்நிகழ்வினை,வைத்திய கலாநிதி சாம்பவி பரிமளநாதன் அவர்கள் மங்களவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, சிட்னி வாழ் ஈழத்தமிழ் இளைஞர்களின் சார்பாக வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இவ்வுரை நிகழ்விற்கு வந்தோரை வரவேற்று இந்நூல்வெளியீட்டின் முக்கியத்துவத்தை விளக்கியதோடு, தமிழீழ மக்களினை எமது அடுத்தகட்ட போராட்டத்தின் காலப்பகுதியிற்கும் வரவேற்று தெளிவான செயற்பாட்டிற்கான வேண்டுகோளையும் முன்வைக்கும் வகையில் அமைந்தது.
நூல் வெளியீட்டு நிகழ்வின் பிரதான பேச்சாளர்கள்; செல்வி கவிநிலா நக்கீரன் மற்றும் திரு குலசேகரம் சஞ்சயன் அவர்கள் இரு கோணங்களிலுருந்து தங்களது அனுபவங்களின் அடிப்படையில் உரைகளை வழங்கினார்கள். புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தினால் நடைமுறை அரசினைக் காணாத ஓர் இளவலாகிய செல்வி கவிநிலா அவர்கள்,இந்நூலினை அடிப்படையாக வைத்து எமது அடுத்த கட்ட போராட்டத்தினை எவ்வாறு முன்னகர்த்த வேண்டும் என்று தனது கருத்துகளை பதித்தார்.
நடைமுறை அரசின் ஓர் முக்கிய அலகாகிய தமிழீழ வைப்பகத்தில் பணியாற்றியவராகிய திரு குலசேகரம் சஞ்சயன் அவர்களும் தனது கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் அவ்வேளையில் பதிந்ததோடு,ஓர் வேண்டுகோளையும் அங்குவந்த மக்களுக்கு முன்வைத்தார். இந்நூலினை ஈழம் சார்ந்து நாட்டம் கொண்டவர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், தமிழீழமெனும் கோட்பாட்டினை இழிவு செய்பவர்களிடமும் இந்நடைமுறை அரசின் ஆவணமாகிய இந்நூலினூடாக விளக்கி, வலியுறுத்தவேண்டும் என்றார்.
இந்நூலின் முதலாவது பிரதி மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு, லெப். கேணல் அக்பரின் மூத்த மகனாகிய செல்வன் குமரனால்,இளைஞர்களின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது. நடைமுறை அரசின் உருவாக்கத்திற்குப் பின் பிறக்கும் இளைஞர்களுக்கும் எமது போராட்டத்தின் நுட்பங்கள் சென்றடைய வேண்டும் எனும் காரணத்திற்காகவும், எமது போராட்டம் இவர்களால் முன்னகர்த்தப்படும் என்பதை வலியுறுத்துவதற்காகவும், இம்முதற் பிரதி திரு சஞ்சயன் மற்றும் செல்வி கவிநிலா அவர்களால் செல்வன் குமரன் அவர்களிடம் கையழிக்கப்பட்டு,அச்சிறுவனால் மாவீரர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,சிட்னி வாழ் இளைஞர்களின் சார்பாகவும், அக்கினிப் பறவைகளின் சார்பாகவும், சிட்னி வாழ் அங்கத்தவர்களுக்குச் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. இதில் கல்வி, வர்த்தக மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக Australian Greens Partyன் முன்னால் அங்கத்தவரும், முந்நால் பாராள உருப்பினருமாகிய Lee Rhiannon அவர்களுக்கும் சிறப்புப் பிரதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இளைஞர்களால் உருப்பெற்ற இந்நிகழ்வையும் இந்நூலையும் பாராட்டிய இவர், இது பல சமூகங்களுக்கும் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய ஓர் அரிய ஆவணம் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து,புரட்சி Mediaவின் ஒருங்கிணைப்பாளராகிய திரு. நிதர்சன் அவர்கள், அமைப்பின் சார்பாக ஏற்புரையினை ஒலிப்பதிவினூடாக வழங்கினார். அடுத்த கட்ட போராட்டத்தினைப் பற்றி அவர் விளக்கிய விடயங்களை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை சிட்னி வாழ் இளைஞர்களின் சார்பாக செல்வி ஶ்ரீபைரவி மனோகரன் அவர்கள் வழங்கியது, அங்கு வந்து இளைஞர்களுக்கும் தெளிவினை ஏற்படுத்தியது.
அக்கினிப் பறவை அமைப்பினரால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட எழுச்சிப் பாடல்களின் கோர்வைக்கு ஓர் இளம் நடனக் குழு எழுச்சி நடனம் ஒன்றினை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து,அக்கினிப் பறவைகள் அமைப்பின் சார்பாக,செல்வன் யதுராம் அவர்கள் வழங்கிய நன்றியுரையினைத் தொடர்ந்து உறுதிமொழியுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது. மாவீரர் இட்ட பாதையிலும், தலைவர் காட்டும் வழியிலும் உறுதியாகப் பயனிக்கும் அக்கினிப் பற்வைகள் அமைப்பினரினைப் போன்று, சிட்னி வாழ் இளைஞர்களும் தம்மால் முடிந்தவரை செயற்பட முனைவதாகக் கூறினார்கள்.
“தமிழர் எனும் எமது அடிபணியா அடையாளத்தை எமது சிந்தனை, செயல் அனைத்திலும் முன்னிறுத்தி எம் தேசத்தின் விடியல் வரை எமது அடிப்படைக்கொள்கைகளை விட்டுக்கொடுக்காது தெளிவாகச் செல்வோம்.ஈழத்தமிழ் இளைஞர்களாகிய நாம்,எமது போராட்டத்தின் முன்னிலையில் நின்று, தமிழிறைமையினை என்றும், எதிலும்,எப்படியும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக்கொள்கிறோம். வெல்வது உறுதி”
என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் செல்வி ஆருதி குமணன் அவர்கள் அங்கு கூடிய மக்களின் சார்பாகப் பிரமானமெடுத்துக் கொண்டதோடு,மக்களின் “தமிழரின் தாகம்,தமிழீழத் தாயகம்” எனும் ஒருங்கிணைந்து கோசத்துடன் மிகவும் உணர்வாக இந்நிகழ்வு நிறைவுபெற்றது. நூல்வெளியீட்டு நிகழ்வினைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட மக்களினால் ஏராளமான நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டமையும் மேலும் அந்நாட்டின் வேறு மாநிலங்களில் இந்நூலின் வெளியீட்டு நிகழ்வினை ஒழுங்கமைப்பதற்காக பலர் முன்வந்தமையும் குறிப்பிடத்தக்க விடயங்களாகும்.
சிறிலங்காவில் தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவுறுத்தல்களை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக,
ஒருவரின் தேசிய அடைாள அட்டையை வேறொருவர் வைத்திருப்பது குற்றமாகும். இவர்களுக்கு தண்டனையாக ஒரு இலட்சம் ரூபா அல்லது 5வருட சிறைத் தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறான குற்றம் புரிபவர்கள் பற்றிய விபரம் அறிந்தால், பொலிசாருக்கோ அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினருக்கோ அறியத் தரும்படி பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
புதிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு, அதன் பின்னர் பழைய அடையாள அட்டையை பயன்படுத்தினால் அதுவும் குற்றமாகும்.
அடையாள அட்டை காணாமல் போனால், புதிதாக தேசிய அடையாள அட்டை பெற்ற பின்னர் காணாமல் போன அடையாள அட்டை கிடைக்குமாயின் அதை கிராம சேவகர் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். இரு அடையாள அட்டையைப் பயன்படுத்துவது குற்றமாகும்
இவ்வாறு வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி அகாருக்கு திடீரென ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், “அமெரிக்காவின் அதிநவீன எப்-35 போர் விமானங்களையும், ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளையும் துருக்கி ஒரு சேரப்பெற முடியாது. இந்த இரண்டில் துருக்கிக்கு எது வேண்டும் என்பதை ஜூலை மாதத்துக்குள் நீங்கள் முடிவு செய்ய வேண்டும்” என கூறி உள்ளார்.
அமெரிக்கா இப்படி கெடு விதித்திருப்பது துருக்கிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேட்டோ நேச நாடுகளான அமெரிக்காவும், துருக்கியும் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு பிரச்சினையில் ஏற்கனவே சிக்கலுக்கு ஆளாகி உள்ளன.
ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிரானது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று அமெரிக்கா கூறுகிறது. மேலும் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புக்கு பதிலாக தனது நாட்டின் பேட்ரியாட் போர் விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் 100 அதிநவீன எப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு துருக்கி ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்காக பெரும் முதலீடும் செய்துள்ளது.
இந்த நிலையில் ரஷியாவின் எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி பெற துருக்கி தனது வீரர்களை ரஷியா அனுப்பி உள்ளது.
இந்த நிலையில்தான் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை வாங்கக்கூடாது என்று கிடுக்கிப்பிடி போட்டுத்தான் இப்போது அமெரிக்க ராணுவ மந்திரி, துருக்கி ராணுவ மந்திரிக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவுக்கு சில மணிநேர பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் என சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடம் உறுதி வழங்கியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மோடியின் பயணம் மிகவும் குறுகியதாக அமைந்ததால், சில முக்கிய பேச்சுவார்த்தைகளை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வாகனத்தில் பயணம் செய்யும்போதே மேற்கொண்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பேச்சுக்களுக்கே அங்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.
ஏப்பிரல் 21 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவின் பொருளாதாரம் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. அதனை சீர் செய்வதன் மூலம் சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சிகளை மேற்குலகமும், இந்தியாவும் முதன்மைப்படுத்தி வருகின்றன.
அவசர அவசரமாக பயண எச்சரிக்கைகளை தளர்த்திய மேற்குலக நாடுகள், தமது மக்களை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. அதே சமயம் இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்ற இந்தியப் பிரதமர் மோடி அவசர அவசரமாக சிறீலங்காவுக்கு மேற்கொண்ட பயணமும் தற்போதைய மேற்குலகம் மற்றும் இந்திய கூட்டணிக்கு ஆதரவான ரணில் அரசைக் காப்பாற்றும் முயற்சியாகும் என கொழும்பைத் தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர் ஒருவர் இலக்கு இணையத்திற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடியின் இந்தப் பயணம் ரணில் அரசுக்கு ஒரு உறுதித்தன்மையை வழங்கும் அதேசமயம் சிறீலங்காவின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும், சிறீலங்கா பாதுகாப்பானது அங்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல முடியும் என்ற தோற்றப்பாட்டையும் அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வானூர்தி நிலையத்தில் இருந்து சிறீலங்காவின் தலைநகருக்கு வரும் வழியில் இருவரும் பல விடயங்களை அவசரமாக கலந்துரையாடியுள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, நீண்டகாலப் திட்டதின் அடிப்படையில் சிறீலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது போன்றவை அங்கு முக்கியமாகப் பேசப்பட்ட விடயங்களாக இருந்தபோதும், தற்போததைய சூழ்நிலையில் சிறீலங்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்தும், அதில் தற்போதைய ரணில் அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதகமான நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவு அரசு சீனாவிடம் இருந்து பெற்ற பெரும் தொகை கடன்களை அடைத்து அங்கு தனக்கு சாதகமான ஒரு அரசை அமைப்பதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்த இந்தியா தற்போது சிறீலங்கா பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.