Home Blog Page 2763

கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை பறித்து முஸ்லிம் குடியேற்றங்கள் – வடக்கில் சொன்ன தேரர்

கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளைப் பெயர்மாற்றம் செய்து முஸ்லிம் குடியேற்றங்களை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஸ்தாபித்துள்ளார்,இந்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் எதுவும் பேசாமல் மெளனம் காத்து நிற்பதாகவும் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோதே தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத் தமிழ் மக்களை கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாக்கி வருகின்றனர்.

தவிர, கிழக்கிலுள்ள ஒரு பகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் தமிழ் மக்களின் நிலங்களைக் கபளீகரம் செய்வதிலும் ஏழைத் தமிழ்ப் பெண்களை வர்த்தக நிலையங்களில் பணி நிலைக்குச் சேர்த்துவிட்டு, பின்னர் அவர்களுக்குத் தொந்தரவு செய்வதும் அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மத மாற்றம் செய்வதுமான பெரும் கொடுமை நடந்தாகிறது.

இதுபற்றி கிழக்கு மாகாணத்துத் தமிழ் மக்கள் கண்ணீரோடு கூறுவர்.

எனினும் இந்த நாசகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந் தர் வாய் திறந்ததில்லை என்பதுதான் அதிகமான உண்மை.

கிழக்கு மாகாணத்தை தங்களுக்கான மாகாணமாக மாற்றுகின்ற கயமைத்தனத்தில் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம்கள் மும்முரமாக இருக்கையில்,

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் போன்றவர்கள் எதுவும் பேசாமல் மெளனம் காத்து நிற்கின்றனர்.

தமிழர்களுக்கு வாய்த்த அரசியல் தலைமை காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தனர்.

நிலைமை இதுவாக இருக்கையில், தமிழ் மக்களின் நிலங்களை பெயர்மாற்றம் செய்து அந்த நிலங்களில் முஸ்லிம் குடியேற்றங்களை ஹிஸ்புல்லாஹ் செய்தார் என்ற உண்மையை அத்துரலிய ரத்ன தேரர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

தலைமை கூறாத உண்மையை, அத்துரலிய ரத்ன தேரர் கூறியதன் மூலம்; கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ் மக்களை விரட்டுகின்ற செயற்பாடு படிப்படியாக நடந்து வருகிறது என்ற உண்மை உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே அத்துரலிய ரத்ன தேரர் கூறிய உண்மைச் சாட்சியத்தோடு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் உசார் அடைந்து பறிக்கப்பட்ட தங்களின் நிலங்களை மீட்பதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டும்.

அருமையான இந்தச் சந்தர்ப்பத்தை கிழக்கு மாகாணத் தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும்.

 

இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு; குற்றத்தை ஒப்புக்கொண்டார் சாரா

இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே,1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார். தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டில் வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

வழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின் மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள் பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக்கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல் (சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம் நகர மாஜிஸ்திரேட் அவிட்டால் சென் தீர்ப்பளித்தார்.

மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின் பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் – பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

பிரதமரும், ஜனாதிபதியும் தம்மை தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறாகள் அத்துடன் இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகை தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதனுடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். thumb large pratest கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதம் - பிரதமரும் ஜனாதிபதியும் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு

இந்த உண்ணாவிரப்போராட்டத்தில் இவர்களுடன் பிரதேச சமூகநல அமைப்புக்களின் சில பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டகார்கள் தாம் அரசியல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எங்கள் விடயத்தில் பொடுபோக்காக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த நல்லாட்சி ஆரம்பித்த நாள் முதல் எங்களுக்கான இந்த விடயம் பாராமுகமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுப்பது கல்முனையில் உள்ள ஒரு அரசியல்வாதியே.

பிரதமரும், ஜனாதிபதியும் எங்களை தொடர்ந்தும் ஏமாற்றிவருகிறார்கள்.

நாங்கள் இங்கு இனவாத, பிரதேசவாத அலையை தோற்றுவித்து பிரச்சினையை உண்டாக்க வரவில்லை. எங்களுடைய போராட்டம் இந்த செயலகத்தை தரமுயர்த்தும் வரை தொடரும். நாங்கள் உணவருந்தாமல்,நீர் கூட அருந்தாமல் எங்கள் உரிமைக்கால போராட்ட இங்கு வந்திருக்கிறோம் என்றனர்.

 

புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு – சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இலங்கை இராணுவத்தை சேரந்த 160 பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட யாத்திரையை ஜூன் 15-18 காலப் பகுதியில் இரண்டாவது தடவையாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது.

இரு நாடுகளினதும் ஆயுதப் படையினரிடையே இடைத்தொடர்பு மற்றும் நட்பு என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடலின் அடிப்படையில் இந்த விசேட யாத்திரை ஏற்பாடு கடந்த வருடம் ஆரம்பமாகியது.

இந்த வருட யாத்திரை, கடந்த வருடத்தை விட இரண்டிலிருந்து நான்கு என அதிகரித்த நாட்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிலிருந்து 160 ஆயுதப் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இலங்கைக்கு பரஸ்பரம் விஜயம் செய்தல் என்பதையும் உள்ளடக்கி விரிவுபடுத்தப்பட்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

யாத்திரையின் போது, இலங்கை ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் புனித மாகாபோதி ஆலயம், 80 அடி உயர புத்தர் சிலை, ராஜ்கிர் மற்றும் நாலந்த அருங்காட்சியகம் என்பவற்றுக்கு விஜயம் செய்வார்கள்.

இலங்கை இராணுவத் தளபதியின் ஒரு விசேட வேண்டுகோளின் பெயரில் வரும் இந்தியக் குழுவினர் இலங்கையிலுள்ள முக்கியமான இடங்களுக்கு விஜயம் செய்வார்கள்.z p07 Indian HC 888 புத்தரின் பெயரால் இறுக்கமடையும் ஆரிய கூட்டுறவு - சிறிலங்கா இந்திய படைத்துறை குடும்ப கூட்டுறவு.

இது, கண்டியில் புனித தந்த ஆலயத்திற்கு விஜயம் செய்து வணக்கம் செலுத்துதல் மற்றும் காலிக்கான விஜயம் என்பவற்றை உள்ளடக்கியிருக்கும். இந்திய ஆயுதப் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஒரு பெரும் குழு ஒரு விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்திய விமானப் படையின் C – 17 குளோப்மாஸ்டர் விமானம் இலங்கை மற்றும் இந்திய பயணக் குழுவினரின் போக்குவரத்துக்காக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலாச்சார மற்றும் வரலாற்று ஈடுபடுதல்களுக்கு மேலதிகமாக, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் ஆயுதப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கிடையில் பெரியளவிலான இடைத்தொடர்புகளும் இதன்போது மேற்கொள்ளப்படும்.

இலங்கைக்கான, இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஆகியோர் இலங்கைக்கு வரும் இந்தியக் குழுவினரை வரவேற்பதற்கும் மற்றும் இலங்கைக் குழுவினரை இந்தியாவிற்கு வழியனுப்பி வைப்பதற்குமாக விமான நிலையத்தில் இருந்தனர்.

செய்மதி ஊடாக சிறீலங்காவைக் கண்காணிக்க ஜப்பான் முயற்சி?

இன்று திங்கட்கிழமை, சிறிலங்காவின் முதலாவது செய்மதியான ராவணா 1 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

சிறிலங்கா தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது செய்மதியாக இது கருதப்படுகின்றது என ஆதர் சீ. கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது புவியிலிருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள விண்ணிற்கு இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு செலுத்தப்படுகின்றது.

ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த செய்மதிக்கு ராவணா 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவுக்கு உதவிகளை மேற்கொள்வதன் மூலம் அங்கு தமது ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் ஜப்பான் களமிறங்கியுள்ளது. முன்னர் சிறீலங்காவுக்கு அதிக நிதி உதவிகளை வழங்கிவந்த ஜப்பான் தற்போது தொழில்நுட்ப உதவிகள் என்ற போர்வையில் தனது கண்காணிப்பை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த முற்பட்டுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிராக மைத்திரியின் அடுத்த காய்நகர்த்தல் – பூட்டினுக்கு அழைப்பு

அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றார். அதன் அடுத்த நகர்வாக ரஸ்யா அதிபர் விளாமிடீர் பூட்டினுக்கு சிறீலங்கா வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஆசியப் பிராந்திய நாடுகளின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக தஜிகிஸ்த்தானுக்கு சென்றுள்ள சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா அங்கு ரஸ்ய அதிபர் பூட்டினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ரஸ்யாவில் இருந்து சிறீலங்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தடை தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதனை எவ்வாறு முறியடிக்கலாம் எனவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் சிறீலங்காவுக்கு வருமாறு ரஸ்யா அரச தலைவருக்கு மைத்திரி அழைப்பு விடுத்ததுடன், இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்தும் திட்டங்கள் தொடர்பிலும் ஆரயப்பட்டதாக சிறீலங்கா அரச தலைவர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரோஸ் அமைப்பின் கிளை அலுவலகம் முல்லைத்தீவில்

ஈழப் புரட்சி அமைப்பின் மாவட்டக்கிளை நேற்று முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஈழப்புரட்சி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு ராஜேந்திரா அலுவலகத்தை திறந்து வைத்தார். அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு நேசரட்ணம் அலுவலகத்தின் பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் தோழர்களான அருளப்பு ராசநாயகம், மலையக மக்கள் இணைப்பாளர் தோழர் ஜீவன், மூத்த உறுப்பினர் திருச்செல்வம் உட்பட அமைப்பின் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிறீலங்கா காவல்துறையில் தமிழ் இளைஞர், யுவதிகள்

வடமாகாணத்தில் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் கால்துறைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் பேசும் காவல்துறை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் தமிழ் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக பெண்கள் தங்கள் பிரச்சினைகளை காவல்துறையினரிடம் தெரிவிப்பதற்கு மொழி பெரும் பிரச்சினையாக  உள்ளதாகவும், இதனால் சட்டத்தை அமுல்ப்படுத்துவதில் காவல்துறை அலுவலகம் பெரும் சவாலை எதிர்நோக்குவதாகவும் அவர் கூறினார்.

இதற்குத் தீர்வாகவே இம்முறை வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளை காவல்துறை திணைக்களத்தில் இணைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் த.கணேசநாதன் மேலும் தெரிவித்தார்.

 

லண்டன் ஓவல் மைதான முன்றலில் தமிழர் ஆர்ப்பாட்டம்

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் போது, சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா பங்குபற்றிய போட்டியின் போது, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மைதான முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

இதன் போது சிறிலங்கா அணி ஆதரவாளர்கள் பப்பரே வாத்தியங்களை இசைத்து புலம் பெயர்ந்த மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு இடைபூறு ஏற்படுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கோவையில் கைதான ஐ.எஸ் சந்தேக நபர்கள்

சிறிலங்காவில் இடம்பெற்ற 21 ஏப்ரல் தாக்குதல்தாரியுடன் சமூகவலைத்தள தொடர்பைக் கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் இந்தியா, கோவையில் சிலர் கைதாகியிருந்தனர். ஷஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் தேசிய புலனாய்வாளர்களினால் கோவை உக்கடம் பகுதியில் 7இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள், உட்பட பல மின்சாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கோவை மாநகர நுண்ணறிவு காவல்துறையினர் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவல்களையடுத்தே இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 13ஆம் திகதி கோவை தெற்கு உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த ஷாஜகான் (25), கோவை வின்சென்ட் சாலையிலுள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன் (25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஷேக் சபியுல்ல (36) ஆகியோரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களின் வீடுகளில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மூவரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வந்தனர்.  நேற்று காலை 8 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.