Home Blog Page 2696

தீர்வு வழங்குவோம்; வடக்கு, கிழக்கிற்குத் தனியாக அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்வாக அது அமையாது – ஜேவிபி

வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில், உண்மையில் அப்பிரச்சினைக்கான பதில் அரசியல் தீர்வு தான். மாறாக இராணுவ மையப்படுத்தல் தீர்வல்ல. எனவே அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

மக்கள் விடுதலை முன்னணி வடக்கு, கிழக்கிற்குத் தனியாக அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்வாக அது அமையாது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேராத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றோம். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் உத்தியோகப்பூர்வமல்லாத வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.

அதன்போது எமக்குச் சாதகமான சமிக்ஞைகளே கிடைக்கப்பெற்றன. எனினும் அவர்களின் கட்சிக்குள் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமான தீர்மானமெதுவும் தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரையில், உண்மையில் அப்பிரச்சினைக்கான பதில் அரசியல் தீர்வு தான். மாறாக இராணுவ மையப்படுத்தல் தீர்வல்ல. எனவே அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாங்கள் கொண்டிருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்கிற்குத் தனியாக அதிகாரங்களை வழங்கும் வகையிலான தீர்வாக அது அமையாது.

மாறாக இந்நாட்டு மக்கள் அனைவரும் சம அளவு உரிமைகளையும், அதிகாரங்களையும் அனுபவிக்கக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை ஏற்படுத்துவதன் ஊடாகவே அத்தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். அதன்படி மொழிக்கொள்கை, மக்களின் காணிப்பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்புதல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றார்.

ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.

பவார் 737 என்ற உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை  ஜனாதிபதி பார்வையிடுவதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணைகள் எங்களிடம் உள்ளதால் எங்களால் 300 கிலோமீற்றருக்கு அப்பால் வைத்து விமானங்களை இனம் கண்டு 200 கிலோமீற்றருக்குள் வைத்து அவற்றை அழிக்க முடியும் என ஈரானின் பாதுகாப்பு துறை அமைச்சர் அமீர் ஹட்டாமி தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது தேசிய பாதுகாப்பு தினத்திலேயே புதிய ஏவுகணை பொறிமுறையை காட்சிப்படுத்தியுள்ளது.

இதேவேளை ஈரான் வெளிநாடுகளிலிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைகளை தொடர்ந்து அந்த நாடு உள்நாட்டில் பாரிய ஆயுத உற்பத்தியை ஆரம்பித்துள்ளது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.iran bavar 373 small ஈரான் அதிகாரபூர்வமாக தனது புதிய வான்காப்பு ஏவுகணைத் தொகுதியை வெளிப்படுத்தியது.

இதேவேளை இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி ஹசன் ருகானி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பயனில்லை என தெரிவித்துள்ளார்.

எங்கள் எதிரிகள் அர்த்தபூர்வமான விடயங்களை ஏற்றுக்கொள்வதில்லை  என தெரிவித்துள்ள அவர் எதிரி எங்களிற்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொள்ளும்போது நாங்கள் உரையாற்றிக்கொண்டிருக்க முடியாது எனவும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் பங்களிப்புடன் தீர்ப்பாயம் உருவாக்கப்பட வேண்டும்: மனித உரிமைகள் காப்பகம் வலியுறுத்து

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப் பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்ட ங்களை முன்னெடுத்துவரும் நிலையில், அவர் இராணுவத் தளபதியாக நியமிக் கப்பட்டுள்ளமை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீர மைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நலிவ டையச் செய்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப் பகம் வலியுறுத்தியிருக்கிறது.

லெப்டினன் ஜெனரல் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுந்தொனியில் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப் பதாவது,

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம், சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58 ஆவது படையணி இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கிறது.

சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிகோரி போராட்டங்களை முன்னெடுத் துவரும் நிலையில், இந்த நியமனம் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசாங்கத்தின் வாக்குறு திகளை நலிவடையச் செய்துள்ளது.

இந்நிலையில் உடனடியாக சர்வதேசத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும்.

 

 

சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமித்தார் அனந்தி சசிதரன்

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான சிறி சிறிலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அங்கமான சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய த்துடன் கொள்கை அடிப்படையில் இணைந்து செயற்படப்போவதாக் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின செயலாளர் திருமதி அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அனந்திர சசிதரன் மேலும் தெரிவிக்கையில்வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துவந்த தாம் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுக்க தீர்மானித்துள்ளேன்.

இதற்காக நான் மலையகத்தை சேர்ந்த மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கொள்கை அடிப்படையில் இணைந்து பயணிக்க தீர்மானித்துள்ளேன்.

இதன் ஊடாக மலையக மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளை ஐ.நாவில் மலையக மக்கள் சார்பில் பேசவுள்ளேன் என்றார்.

முன்னாள் போராளியான எனக்கு உயிர் அச்சுறுத்தல் -சசிதரன்

மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர பொலிஸ் சேவை, தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்டம் முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார்.

நேற்று (21) மாலை காரைதீவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நாங்கள் நித்திரையில் இருந்த போது இரவு 2 மணி அளவில் இனந் தெரியாத நபர்கள் சம்மாந்துறை பொலிஸில் இருந்து வந்திருக்கிறோம் என்று கூறி  சன்னல் கதவு போன்றவற்றை பலமான முறையில் தட்டினார்கள்.

ஒருவரை கொல்ல வரும் விதத்தில் வருபவர்கள் செய்ய நடந்து கொள்வது போல் நடந்து கொண்ட இந்த இனந்தெரியாத நபர்களின் மிலேச்சத்தனமான செயற் பாட்டின் பிரகாரம் எமது உயிரைப் பாதுகாக்க அன்றைய தினமே உடனடியாக நான் அவசர பொலிஸ் பிரிவினருக்கு நான் தகவல் கொடுத்திருந்தேன்.

எனது விலாசம் எனது தொலைபேசி இலக்கம் எனது முழு பெயர் போன்றவற்றை மேலதிக விவரங்களை என்னிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட அவசர பொலிஸ் பிரிவினர் 2 கிழமைகளில் ஆகியும் கூட இது சார்ந்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அச்சத்தின் காரணமாக தற்போது உறவினர்களின் இல்லத்தில் தற்காலிகமாக தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டி ருக்கிறது.

ஏனெனில் தொடர்ந்து எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்ற சூழ்நிலை யால் நாங்கள் இடத்தை மாற்றி மாற்றி தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் எனது உறவினர்கள் பாதிக்கப்படுகின்றனர். எங்கள் வீட்டில் பொலிஸார் என தெரிவிப்பவர்கள் தொடர்ந்து வருகை தந்து விசாரணை செய்வதால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றோம்.

எனினும் சம்பவம் நடைபெற்ற போலிஸார் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்த தகவலை தெரிவிப்பதற்காக கல்முனை மனித உரிமை ஆணையத்துக்கு சென்று விவரங்களை கூறினோம். அவ்வேளை பொலிஸாரிடம் சென்று புகார் அளித்த முறைப்பாடு பிரதியினை காட்டுமாறும் அதன் பின்னரே மனித உரிமை ஆணையத்தில் புகார் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

ஆனால் அவ்வேளையில் தான் அவசர பொலிஸ் பிரிவினர் நான் கொடுத்த புகாரினை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு தெரிவிக்கவில்லை என எனக்கு அறியக் கிடைத்தது. நான் அவசர பொலிஸ் பிரிவிற்கு முறைப்பாட்டினை தெரிவித்ததன் குரல் பதிவு என்னுடன் உள்ளது. எனது விடயத்தில் கவனம் செலுத் தாத சம்பவத்தை பொலிஸ்மா அதிபருக்கு ஊடகங்கள் மூலமாக தெரியப்ப டுத்துகிறேன்.

ஒருவேளை மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர பொலிஸ் சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடும் எழுகின்றது என தெரிவித்தார்

 

பப்புவாவில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் பிராந்தியத்தில் பதற்றம்

இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது

ஆனால் அண்டை நாடாக இருந்த இந்தோனேசியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது.

அதே சமயம் பப்புவா பிராந்தியத்துக்கு இந்தோனேசிய அரசு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

எனினும் பப்புவா பிராந்தியம் இணைக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட தொடங்கின. அதன்படி பல ஆண்டுகளாக பப்புவா பிராந்தியத்தில் இந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா மாகாணங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. மேலும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக இந்தோனேசியா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இந்தோனேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்தோனேசிய தேசியக்கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய மாணவர்களை இந்தோனேசிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பப்புவா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின் போது சோரோங் நகரில் உள்ள சிறையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டிடத்துக்கு தீவைத்தனர்.

இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர்.

இதற்கிடையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றனர். இதில் சிறை அதிகாரிகள் உள்பட பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய நீதித்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மார்லியன் லாண்டே, “சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிவிட்டனர். அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பினர்” என கூறினார்.

மக்கள் போராட்டத்தினால் ஏற்கனவே பப்புவா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியிருப்பது போலீசாருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

30 நாட்களுக்குள் பிரெக்ஸிட் விவகாரத்தில் தீர்மானத்துக்கு வருமாறு ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்து

பிரெக்ஸிட் விவகாரத்தில் 30 நாட்களுக்குள் தீர்வு காணுமாறு இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெல் வலியுறுத்தி உள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தின்படி 2019 மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பிரெக்ஸிட்டை எதிர்த்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.
உடனடியாக அவர் பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கினார். பிரெக்ஸிட்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு உடன் தெரசா மே ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனாலும் பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் கடந்த ஜூன் 7-ந் தேதி பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். அதன் பிறகு இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.
அதே வேளையில், பிரிட்டனில் உள்ள வடக்கு அயர்லாந்து மாகாணத்துக்கும், அயர்லாந்து குடியரசுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டிய நிலையில் இங்கிலாந்து உள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கெலை பெர்லின் நகரில் நேற்று சந்தித்து பேசினார் போரிஸ் ஜான்சன். அந்த சந்திப்பின் போது, ஒப்பந்தம் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேறுவதை தவிர்க்க இன்னும் 30 நாட்களுக்குள் அயர்லாந்து எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டு பிரெக்ஸிட் விவகாரத்தை முடிக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமரை ஏஞ்ஜெலா மெர்கெல் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க உள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானக் குற்றங்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதி மட்டுமன்றி சர்வதேச உலகில் மேலும் மக்கள் இவ்வாறான குற்றங்களுக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளும் முக்கிய பொறிமுறை வேறு. இந்நிலையில் சவேந்திர சில்வாவை சர்வதேசத்தில் தண்டிக்கபட வேண்டிய முக்கிய போர்த்தண்டனைக் குற்றவாளியாக நிலைநிறுத்தும் ஆதாரங்களின் சாராம்சம் வருமாறு…

#சவேந்திரசில்வா பற்றிய இந்த ஆவணக் கோவையானது 2008 – 9 ஆண்டுகளில் அவர் கட்டளைத் தளபதியாக இருந்த 58 ஆவது படைப்பிரிவு இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் தொடர் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களை விபரிக்கின்றது. அந்த தாக்குதல்கள்

★- – – பொதுமக்கள் மீது வேண்டுமென்றும் கண்மூடித்தனமாகவும் நடாத்தப்பட்ட தாக்குதல்கள்
– – – வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள்
– – – பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்கள்
– – – தடைசெய்யப்பட்ட மற்றும் கண்மூடித்தனமான ஆயுதப்பாவனை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

★கட்டளைப் பொறுப்பு

சர்வதேச சட்டத்தின் கீழ் சவேந்திர சில்வா போன்ற கட்டளைத் தளபதி பின்வருவனவற்றுக்கு நேரடியாக பொறுப்புடையவராவார்:
– – – சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு கட்டளை வழங்கியமை
– – – சட்டத்திற்குப் புறப்பான நடவடிக்கைக ள் அவருக்கு கீழ் இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட போது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தவறியமை (அவர் அவற்றுக்கு கட்டளையிட்டாரோ இல்லையோ)

சவேந்திர சில்வா சர்வதேச சட்டங்கள் பற்றி இராணுவ வீரர்களுக்கு படிப்பித்துவருவதாக அவர் குறித்த இலங்கை இராணுவக் குறிப்புத் தெரிவிக்கின்றது. ஆகையால் இது பற்றி அவருக்கு தெளிவாகத் தெரிய வேண்டும்.

★பொதுமக்கள் மீதான தாக்குதல்கள்

இந்த ஆவணக் கோவை பொதுமக்களின் உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஒரு வகையான அழிவாகவே பார்க்கின்றது. பொதுமக்கள் மீது எவ்வாறான போர் நடாத்தப்பட்டது என்பதை தெளிவாக் காட்டக்கூடிய ஆயிரக்கணக்கான படங்கள் வெளிவந்துள்ளன. அரசாங்கத்தின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு தற்காலிக வைத்தியசாலைகள் உள்ளான போது ஏற்பட்ட முற்றிலும் பயங்கரமான காட்சிகளை அதனை நேரிக்கண்ட சாட்சிகள் விபரிக்கின்றனர்:

“அது கூச்சல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது. அதனை வார்த்தைகளால் விபரிக்கமுடியாது. அழுது கொண்டும் கூச்சலிட்டபடியும் பெற்றோர்கள் தமது காயப்பட்ட பிள்ளைகளை இங்கும் அங்கும் பதற்றத்துடன் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் படுகாயமடைந்திருந்தார்கள். சிலரது அரைவாசி துண்டிக்கப்பட்ட அபயவங்கள் அவர்களின் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது.”

mullivaikal may 18 3 சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்2009 ஆண்டு இடம்பெற்ற போரில் உயிர் பிழைத்த தமிழர்கள் பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் பயங்கரக் கனவுகளாலும், மனவடுவினாலும், இறப்புகள் பற்றி அடிக்கடிவரும் நினைவுகளாலும், இன்னமும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குழந்தை ஒன்றினுடைய தலை தனக்கு அருகில் வந்து விழுந்ததாக ஒருவர் விபரிக்கின்றார். மற்றவர் தொங்கிக் கொண்டிருந்த தனது குடலைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றதாக ஞாபகப்படுத்துகின்றார். சிலர் பாதுகாப்பிற்காக பதுங்குகுழி வெட்ட முயன்ற போது அங்கு அழுகிய உடல்கள் வருவதைக் கண்டார்கள். வேறு சிலர் இரத்த வெள்ளத்தின் மீது வெறுங்காலுடன் ஓடியதாக கூறுகிறார்கள். தமது அன்புக்குரியவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டது கூட தெரியாமல் அவர்களை பதுங்குகுழிகளுக்குள் கொண்டு செல்வதை அடிக்கடி பார்த்தாக அவர்கள் விபரிக்கின்றார்கள். போரில் தப்பிப் பிழைத்தவர்களின் மனதில் இப்பொழுதும் பயங்கரமான சம்பவங்கள் பற்றிய நினைவுகள் தொடர்ந்தும் உள்ளன. இவர்களில் பலர் போருக்குப் பின்னரான காலப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

“ஒரு குடும்பத்தில் ஒரு 18 மாதப்பிள்ளையும் அவனுடைய தகப்பனாரையும் தவிர அனைவருமே இறந்தார்கள். இருவரும் தலையில் காயமடைந்தார்கள். அந்த ஆண்பிள்ளை மிகவும் பசியுடன் இருந்தது. அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று கூடத் தெரியவில்லை. அத்துடன் அவன் மிகவும் பசியுடன் இருந்தமையால் தன்னுடைய தலைக் காயத்தால் ஏற்பட்ட வலி மற்றும் இரத்தம் போன்றவற்றைக் கவனிக்காமல் தன்னுடைய பெருவிரலை சூப்பிக் கொண்டிருந்தான் என்று நான் நினைக்கின்றேன்.”

★கிளிநொச்சி தாக்குதல்கள்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட வேளையிலும் அது மீண்டும் மீண்டும் தாக்குதல்களுக்கு உட்பட்ட வேளையிலும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கட்டளைத் தளபதியாக இருந்தார். சவேந்தர சில்லா பொதுமக்கள் இழப்புகள் ஏற்படும் வகையில் வைத்தியசாலை மற்றும் ஐ நாவின் கட்டிடங்கள் போன்ற பொதுமக்கள் இலக்குகள் மீது வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொள்வதற்கு கட்டளையிட்டார் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

★புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்

சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படையணி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்துடன் தொடர்பில் இருந்தமையால் அவருக்கு வைத்தியசாலையின் ஆள்கூற்று நிலை பற்றி தெரியும். அத்துடன் அந்தப் பிரதேசத்தை நோட்டமிட்ட ஆளில்லா வேவுவிமானங்கள் மற்றும் ட்ரோன் போன்றவற்றுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. ஐ நா அதிகாரிகள் வைத்தியசாலை தாக்குதலுக்கு உள்ளாவதாக பலமுறைகள் இலங்கை இராணுவத்திற்கு அறிவித்திருந்தமையால் லெப்டினன் ஜெனரல் சில்வாவிற்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை குண்டுத் தாக்குதலுக்கும் எறிகணைத்தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தமை அவருக்கு நன்றாக தெரியும் என்பதை நம்புவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன. தனக்கு கீழ் இருந்தவர்கள் தன்னுiடைய முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தை பாரியளவில் மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது லெப்டினன் ஜெனரல் சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் தான் கட்டளைத் தளபதியாக இருந்தும் அவருடைய சக்திக்கு உட்பட்டதாக இருந்தும் கூட அவர் அந்த தாக்குதல்களை நிறுத்தவில்லை.

★பொக்கனைத் தாக்குதவல்கள்

சவேந்திர சில்வாவின் முழுமையான கட்டளையின் கீழ் இருந்த படையினர் பொக்கனையில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட நேரத்தில் கண்மூடித்தனமாக மற்றும் வேண்டுமேன்றே பொதுமக்கள் மீது தாக்குதல்களையும் நடாத்தினார்கள். இதில் பால் மா வழங்கும் நிலையம் மீதான தாக்குதலும் உள்ளடங்கும் இதில் பொதுமக்களுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டன. பல பெண்கள், பிள்ளைகள் கொல்லப்பட்டும் காயத்திற்கும் உள்ளானார்கள். தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதியில் பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் வேண்டுமென்று தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் அத்துடன் பொதுமக்கள் மத்தியில் இறப்பு மற்றும் காயம் ஏற்படும் வகையில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது பற்றி சில்வாவிற்கு தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் உள்ளது என்பதனை நம்புவதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த தாக்குதல்கள் குறிப்பிட்ட நீண்ட காலப்பகுதியில் திரும்பத் திரும்ப இடம்பெற்றன அத்துடன் முன்னைய தாக்குதல்கள் பற்றிய தகவல் அவரைச் சென்றடைந்திருக்க வேண்டும்.

★புதுமாத்தளன் தாக்குதல்கள்

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தலைமை தாங்கிச் சென்றார். அத்துடன் அவரின் கட்டளையின் கீழ் இருந்த படையினரே வைத்தியசாலையையும் கைப்பற்றினார்கள் என்பதனை இந்த அறிக்கையிலுள்ள ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

WWW3 சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்

வைத்தியசாலைப் பகுதி உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களை லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவே திட்டமிட்டு கட்டளையிட்டதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இத் தாக்குதல்களில் வைத்தியசாலையிலும் அதனை சுற்றிய பகுதியிலும் பொதுமக்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டன. வைத்தியசாலையானது பல தடவைகள் தாக்குதல்களுக்கு இலக்கானமையால் பொதுமக்கள் இலக்கினைத் தாக்கும் நோக்கத்துடனான தாக்குதல்களை லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவே கட்டளையிட்டார் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனைவிட புதுமாத்தளனில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரே மாதிரியானதாக இருக்கவில்லை என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

★வலைஞர்மடம் தாக்குதல்கள்

சவேந்திர சில்வாவின் படையினர் வலைஞர்மடத்திலுள்ள வைத்தியசாலை மற்றும் கிறிஸ்த்தவ தேவாலயம் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுடன் கட்டிடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. 58 ஆவது படைப்பிரிவு உட்பட்ட இலங்கை இராணுவத்தினர் எறிகணைகள் டாங்கிகள் மற்றும் கொத்துக்குண்டுகளை கண்மூடித்தனமான வழிகள் மற்றும் போர் முறைகளிலும் பயன்படுத்தினார்கள். லெப்டினன் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே வலைஞர்மடத்திலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பதனை அவர் அறிந்திருக்க வேண்டும் என்பதை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன.

★முள்ளிவாய்க்கால் தாக்குதல்கள்

லெப்டினன் ஜெனரல் சில்வாவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தவர்கள் வேண்டுமென்றே முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த பொதுமக்கள் மீதும் பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தார்கள். அத்துடன் பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் இறப்பு மற்றும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கண்மூடித்தனதான தாக்குதல்களையும் மேற்கொண்டார்கள் என்பது அவருக்கு தெரியும் அல்லது அறிந்திருக்க சந்தர்ப்பம் உண்டு என்பதனை நம்புவதற்குரிய போதிய ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவர் “தரைப்படையினரை நேரடியாக வழிநடாத்திச் சென்றமையால்” அவர் அந்தப் பிரதேசத்தில் இருந்தார் அத்துடன் அப்போது பாதுகாப்புவலயம் -3.2 சதுரக் கிலோ மீற்றர்களைக் கொண்டதாக இருந்தமையால் அவர் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்ததை அவர் பார்த்திருக்க வேண்டும் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தன்னுடைய கட்டளையின் கீழ் இருந்தவர்களில் இவற்றுக்கு பொறுப்பானவர்களை அவர் தண்டித்தார் அல்லது இவ்வாறான தாக்குதல் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தார் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை.

★சரணடைவுகள்

வட்டுவாகல் பாலத்தடியில் இடம்பெற்ற சரணடைவுகள் 58 ஆவது படையணியிடமே இடம்பெற்றதாக ஐ.நா அறிக்கை தெரிவிக்கின்றது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்த கட்டளைகளுக்கும் பொறுப்பாக இருந்தாக கூறும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் கைகுலுக்கி கொண்டார்.

savendra சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்அவர்களுடைய இறந்த உடல்கள் கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் வட்டுவாகல் பாலத்திற்கு மற்றைய பக்கத்தில் இருந்த வீதியோரத்தில் காணப்பட்டன என ITJP இனால் செவ்வி காணப்பட்ட நேரடிச் சாட்சி ஒருவர் தெரிவித்தார். அவர் அங்கு பிரசன்னமாகியிருந்ததையும் அந்தப் பகுதிக்கு கட்டளை வழங்கியதையும் கருத்திற் கொண்டு அவருடைய பொறுப்பின் கீழ் இருந்த படையினரே சரணடைந்தவர்கள் பலவந்தமாக காணமல் ஆக்கப்பட்டமைக்கும் மற்றும் அவர்களில் சிலர் உடனடியாக படுகொலை செய்யப்பட்டமைக்கும் பொறுப்பு என்பது அவருக்கு தெரியும் அல்லது அதனை தெளிவாக காட்டும் தகவல்களை வேண்டுமென்றே கவனத்தில் எடுக்காமல் விட்டார் என்பதை நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன.

பாலியல் வன்புணர்வு மற்றும் ஏனைய வடிவிலான பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதை

சித்திரவதையினை மேற்கொள்வதற்கு லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அனுமதி வழங்கினார் என சித்திரவதை செய்யப்பட்ட சாட்சியொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இலங்கை பற்றிய உத்தியோகபூர்வ விசாரணை அறிக்கை மற்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினர் சித்திரவதையில் ஈடுபட்டமை மற்றும் அவர் இந்த வன்முறைகளை தடுக்கத் தவறியதுடன் அதற்குப் பொறுப்பானவர்களையும் தண்டிக்க தவறிவிட்டார் என்பதால் அவருக்கு இது பற்றி தெரியும் அல்லது தெரிந்திருக்க சந்தர்ப்பம் இருந்தது என்பதை நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

balakumar 1 சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்இவ்வாறே இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் இலங்கை பற்றிய உத்தியோகபூர்வ விசாரணையின் கண்டிபிடிப்புக்களையும் கருத்தில் எடுத்துப் பார்க்கும் போது லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற, பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் அவமானப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கும் அத்துடன் சித்திரவதை ஒரு தனியான குற்றமாகவும் சவேந்திர சில்வா குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க முடியும் அத்துடன் எதிர்நோக்க வேண்டும்.

 

செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது – தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள அரசு நிகழ்த்தியது. உண்மையில் செஞ்சோலைப் படுகொலைகளை உலகம் தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நிகழ்ந்திராது. செஞ்சோலைப்படுகொலை என்பது பாரிய இனப்படுகொலைக்கான சிங்கள அரசின் உத்திகையாகும்.

அந்த நாளே ஒரு இருண்ட யுகத்தின் நினைவுகள் போலத்தான் இருக்கின்றன. 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி சிங்கள அரசு வடக்கிற்கான பாதையை மூடி வடக்கை தனியரு நாடாக துண்டித்து வலிந்த போரைத் தொடங்கியது. யாழ்ப்பாண மக்கள் பசியிலும் இருட்டிலும் துடித்த நாட்கள். சமாதான ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலம். ஏற்கனவே அவ்வப்போது, விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதாக சொல்லிக் கொண்டு வடக்கிலும் கிழக்கிலும் விமானததாக்குதல்களை சிங்கள அரசின் விமானப்படைகள் மேற்கொண்டு வந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதும், விமானத்தாக்குதல்கள் பாடசாலைகளை அண்டியும் வீடுகள்மீதும் நடந்தன. எல்லாம் புலிகளின் முகாம்கள் என்றே அரசால் கூறப்பட்டது. இதனை வெறுமே பதிவு செய்து கொண்டிருந்தது போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு. தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தினாலும் சர்வதேசத்தினாலும், போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினாலும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

இதனால் ஒன்றல்ல இரண்டல்ல, 53 மாணவிகளை கொன்று கின்னஸ் சாதனை பதிக்கும் முயற்சியில் சிங்கள அரசு ஈடுபட்டு வெற்றி பெற்றது. உலகிலேயே ஒரே தடவையில் அதிக பெண்கள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக மாணவிகள் கொல்லப்பட்ட கொடூரச் செயல் செஞ்சோலைப் படுகொலையாகும். உலகிலேயே அதிக சிறுவர்கள் கொல்லப்பட்ட மனித விரோதச் செயல் செஞ்சோலைப்படுகொலையாகும். Kulu 03 செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது - தீபச்செல்வன்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு, வலயக் கல்வி அலுவலகம் ஊடாக உரிய அனுமதி பெறப்பட்டு, தலைமைத்து அனர்த்த முகாமைத்துவப் பயிற்சி நடத்தப்பட்டது. இப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீதுதான் சிங்கள அரசின் இன அழிப்பு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தினர். இதில் சுமார் 50 மாணவிகள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

அத்துடன் சில மாணவிகள் வவுனியா வைத்தியசாலைக்கும் கண்டி வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப் பட்டார்கள். கண்டி வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்ட மாணவியை அச்சுறுத்தி, அவரிடம் பொய்யான வாக்குமூலங்களை பெற்றது சிங்கள அரச ஊடகம். இறுதியில் அந்த மாணவியையும் அங்கு வைத்து கொன்றது. இந்த தாக்குதல் குறித்து அப்போதைய சனாதிபதி, தமிழ் இனப்படுகொலை மகிந்த ராஜபக்ச அன்றே வெளிநாட்டில் இருந்து என்ன கூறினார் தெரியுமா? செஞ்சோலையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று ஒரு சர்வதேச ஊடகவியலாளர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த மகிந்த ராஜபக்ச, அவர்கள் புலிகள், அவர்கள் பயங்கரவாதிகள், அத் தாக்குதல் எனக்கு நூறு வீத திருப்தியை தருகின்றது. நாங்கள் பயங்கரவாதிகளைத்தான் அழித்து வருகிறோம்.. என்று கூறினார். அந்தப் பிஞ்சு முகங்களை பார்த்து, மாணவிகளைப் பார்த்து மகிந்த ராஜபக்ச கூறினார் பயங்கரவாதிகள் என்று, புலிகள் என்று. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் ஐ.நா அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். அவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் தலைமைத்துவ பயிற்சிக்காக ஒன்றிணைந்தபோது அரச விமானங்கள் தாக்கி கொல்லப்பட்டனர் என்பதையும் பதிவு செய்தார்கள்.

இப்படுகொலை நடைபெற்று, ஓராண்டு. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிக்காக ஒரு ஆவணப்படத்தை தயாரிப்பதற்காக அந்த மாணவிகளின் வீடுகளுக்குச் சென்றேன். அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்தேன். பாடசாலை அதிபர்களிலிருந்து ஆசிரியர்களிலிருந்து காயப்பட்ட மாணவர்கள்வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதிருந்தனர். காலில் பெரும் காயத்தை அடைந்த மாணவி ஒருவர் பேசமுடியால் அழுத காட்சி இப்போதும் பெருவலி தருகின்றது. அவரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்.

அப் படுகொலை குறித்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் அளித்த மூன்று மாணவிகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். 53 மாணவிகளும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்க கூடியவர்கள். இன்றிருந்தால், வைத்தியர்களாக, பொறியர்களாக, ஆசிரியர்களாக, தலைவர்களாக நம் சமூகத்திற்கு தொண்டாற்றியிருப்பார்கள். இந்த சமூகத்தை நடத்தியிருப்பார்கள். அவர்களை அழிப்பதும் இல்லாமல் செய்வதும்தான் சிங்கள அரசின் வேலை என்பதைத்தான் இப்படுகொலையும் உணர்த்துகின்றது.

கல்வி உரிமைக்காகபோராடினோம். வேலை வாய்ப்புக்காக போராடினோம். ஆனால் சிங்கள அரசோ எமது மாணவர்களை பள்ளிக்கூடங்களில் வைத்தே படுகொலை செய்தது. சந்திரிக்கா அரசு நாகர் கோவில் பாடசாலையில் விமானத்தாக்குதல் நடத்தியதில் 39 மாணவச் சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள்.nkm 01 செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது - தீபச்செல்வன்

மகிந்த அரசு சமாதான ஒப்பந்தத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு 53 மாணவிகளைப் படுகொலை செய்தது. இது குறித்து சர்வதேச சமூகம் எந்த கண்டனங்களையும் விடுக்கவில்லை. அப்படியிருந்தால் கொத்துக் கொத்தாக மாணவர்களையும் மக்களையும் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும் துணிவு சிங்கள அரசுக்கு வருமல்லவா?

செஞ்சோலைத்தாக்குதலில் காயமடைந்த மாணவி ஒருவர் இப்போது, ஆசிரியராக கடமையாற்றுகிறார். ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் புனிதர்களாக அவதாரம் எடுக்க சிங்கள இராணுவத்தினர் முயற்சித்தனர். பாடசாலை வாசல்களில் அவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில் ஆக்கிரமித்தனர். அவர்களை தாண்டி, அவர்களின் விசாரணைகளைத் தாண்டி வருவதற்கு அந்த ஆசிரியர் கடுமையாக தயங்கினார். அஞ்சினார். பத்து ஆண்டுகள் கடந்து, பன்னிரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்த தாக்குதலின் வடு இன்னும் நீங்கவில்லை.

இன்று செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் உலகத்தில் அதாவது இணைய ஊடகத்தில் செஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் வலுவாக இடம்பெற்றுள்ளது. இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள் இதில் பெரும் அக்கறை கொண்டு ஈடுபடுகின்றனர். என்றாவது ஒருநாள் சிங்கள அரசு இதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அன்றுதான் இப்படுகொலையின் வடுக்கள் மறையக்கூடும்.

 

தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (22) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் போராட்ட தளத்தின் முன்னால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்ட களத்தில் இருந்த தந்தை ஒருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்த தனது மகனான செல்வராசா அச்சுதன் (வயது 21) என்ற மகனை தேடி வந்த நிலையில் மகன் பற்றிய எந்த தகவலுமின்றி செவ்வாய்கிழமை தனது 56 ஆவது வயதில் காலமானார். இதனை வெளிப்படுத்தும் முகமாகவே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மரணித்தவரின் பதாதை மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

கவனயீர்ப்பு போராட்ட முடிவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்,

தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசாங்கத்துடன் இணைந்து எமது போராட்டத்தை மழுங்கடித்து வருவதுடன், சர்வதேச விசாரணையை உள்ளூர் விசாரணையாக மாற்றியமைத்துள்ளது. இருப்பினும் எமக்கான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனர்.