Home Blog Page 2685

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 5 பேர் பலி, 21 காயம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாசில் மிட்லேண்டு பகுதி அருகே பாரவூர்தி ஒன்றை 2 பேர் கொண்ட கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.  அவர்கள் பொதுமக்கள் மீதும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.  21 பேர் காயமடைந்தனர். பின்னர், அவர் தபால் கொண்டு செல்லும் பாரவூர்தியை கடத்தினார்.

இதுபற்றிய தகவல் அறிந்து கடத்தல்காரர்களை பிடிக்க காவல் துறையினர் உடனடியாக சென்றனர்.  பாரவூர்தியை மடக்கினர். அதில் இருந்தவர், போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டார்.  அவர்கள், சினெர்ஜி என்ற திரையரங்கு அருகே கடத்தல்காரர்களில் ஒருவரை சுட்டு கொன்றனர்.  அந்நபருக்கு 30 வயது இருக்கும் என போலீசார் கூறினர். இரண்டு வாகனங்களில் இருந்தபடியே, அந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், சினெர்ஜி என்ற சினிமா தியேட்டரின் பார்க்கிங் பகுதி பரபரப்பானது.

ஏற்கனவே, ஆகஸ்டு 4-ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கைக்கு வெளியே பொறிமுறை ;புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு ஆகிய நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 900நாட்களுக்கு அதிகமாக தமது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கும் தாய்மார்கள் உள்ளிட்ட உறவினர்களுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். அத்துடன் புலம்பெயர் நாடுகளில் தயாகத்தில் போராடும் உறவுகளுக்காக குரல்கொடுப்பவர்களுக்கும் எமது ஒத்துழைப்புக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சர்வதேச மன்னிப்புச்சபையின் தகவல்களில் பிரகாரம் 1980ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் இலங்கையில் மூவின சமூகத்தினையும் சேர்ந்த 60ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலானவர்கள் காணமலாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 40ஆயிரம் முதல் 80ஆயிரம் பேர் வரையிலானவர்கள் தமிழர்களாக காணப்படுகின்றார்கள்.

காணமலாக்கப்பட்டவர்கள் பற்றி ஆராய்வதற்காக 2015ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழுவானது பல்வேறு ஆராய்வுகளைச் செய்திருந்தது. காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அக்குழு குறிப்பிட்டிருந்தது.

மேலும் அண்மையில் இலங்கையின் 23 ஆவது இராணுவத் தளபதியாக இறுதி போரில் பங்கேற்றிருந்த சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இறுதிப்போரில் பல்வேறு கட்டளைகளை வழங்கியவர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டடிலும் காணப்படுகின்றன. மிக முக்கியமாக சரணடைந்தவர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு சவேந்திர சில்வாவின் கீழ் இயங்கிய படைப்பிரிவினர் காரணமாக இருந்துள்ளனர்.

மேலும் அவர் சரணடைந்தவர்கள் குறித்து பொறுப்புக்கூறவேண்டிய ஒருவராகவும் உள்ளார். அவ்வாறான நிலையில் அவரது நியமனமானது, காணமல்போன உறவினர்களின் போராட்டத்தினையும் அவர்களது கோரிக்கையும் அவமரியாதைக்குட்படுத்துவதாகும்.

போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகளாகின்ற போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. 40.1தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவற்கு கால அவகாசமும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில் போரின் இறுதியில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, காணமலாக்கப்பட்டவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பது குறித்து உரிய பதில்களை அரசாங்கம் அளிக்க வேண்டும். ஆனால் அதுகுறித்த முற்போக்கான செயற்பாடுகள் எவற்றையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியவில்லை.

ஆகவே நீதிக்காகவும், உண்மைகளை கண்டறியவும் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு பொறுப்பான பதிலளிப்பதற்காக இலங்கைக்கு வெளியே நீதிவழங்குவதற்கான பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறு சர்வதேச சமுகத்திடம் கோருகின்றோம். தாமதமின்றி இக்கட்டமைப்பினை உருவாக்க வேண்டும் என்றும் நாம் கோருகின்றோம் என்றுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு தமிழர் காணிகள் அச்சுறுத்தல்…;அவ்வாறில்லாத காணிகள் விடுவிக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் படையினர் அடாத்தாக அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்  இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் பற்றி மீளாய்வுக் கூட்டம் யாழ்.ஆளுநர் அலுவலகத்திலும், வன்னிமாவட்டத்திற்கான கூட்டம் கிளிநொச்சியிலும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வடமாகாணத்தில் படையினரிடத்தில் உள்ள பொதுமக்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமில்லாத அனைத்துக்காணிகளையும் அடுத்து வரும் ஓரிரு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு கூறியிருந்தார்.

அதற்கமைவாக, வடமாகாணத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம். அதன் பிரகாரம், எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட ரீதியாக விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் பற்றி விபரங்களை எனக்கு அனுப்பி வைக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.

அதன் பின்னர் மாவட்ட ரீதியாக உரிய தரப்பினரையும், மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவிக்கையில்,

போரின் பின்னர் படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இறுதியாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்களின் பிரகாரமும் அடுத்த ஒருமாத காலத்திற்குள் எஞ்சிய காணிகளை விடுவிப்பேன் என்ற வாக்குறுதிக்கும் அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிகள் மற்றும் மாவட்டங்கள் ரீதியாக முழுமையான தகவல்களை ஆளுநரிடத்தில் முன்வைத்து அவற்றை விடுவிப்பது தொடர்பில் உரிய தரப்பினைரையும் அளைத்து ஆராயவுள்ளோம்.

வலி.வடக்கில், தெற்கில் விடுவிக்கப்படாதிருக்கும் காணிகள் மற்றும் பலாலி விமான நிலையத்திற்கு அவசியமாகவிருக்கும் காணிகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தவுள்ளோம என்றார்.

இதேவேளை, கீரிமலையில் தனியாருக்குச் சொந்தமான காணிகளில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை நட்சத்திர சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அதனை மத்திய, மாகாண கூட்டு நிருவாகத்தின் கீழ் கொண்டுவருவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த நிர்மாணம் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதோடு அம்மாளிகையின் பின்னால் அமைந்துள்ள கோவில் மற்றும் சமாதிக்குச் சொந்மான தனி நபரையும் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளோம் என்றும் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ரணிலின் , எச்­ச­ரிக்­கை­க­யையும் மீறி குரு­நா­கலில் சஜித் தரப்பின் கூட்டம்

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி  சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான மாபெரும் மக்கள் ஆத­ரவுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் திட்­ட­மிட்­ட­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்ள அவ­ரது ஆத­ரவு அணி­யினர் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளனர்.

முன்­ன­தாக, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கும் கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ருக்கும் இடையில் விசேட சந்­திப்­பொன்று கடந்த புதன்­கி­ழ­மை­யன்று இரவு  அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரத்­துடன் இடம்­பெற்­றது.

இந்த கலந்­து­ரை­யா­டலில் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ,கட்­சியின் தவி­சாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ரம உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது பல­வி­ட­யங்கள் பேசப்­பட்­ட­தோடு, அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வது  குறித்து  அடுத்த மக்கள் கூட்டம் எதிர்­வரும் 5ஆம் திகதி குரு­நா­க­லையில் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அடுத்­த­கட்­ட­மாக மேற்­கொள்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தோடு ,அசோக அபே­சிங்­க­விடம் அதற்­கான பொறுப்பும் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­படும் வரையில், ஒரு­ந­பரை ஆத­ரித்து பொது­வெ­ளியில் கூட்­டங்­களை நடத்­தக்­கூ­டாது, கட்­சியின் உறுப்­பி­னர்­களை அழைத்து இர­க­சிய சந்­திப்­புக்­களை நடத்­தக்­கூ­டாது, குறித்த நப­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு பிற அர­சியல் கட்­சி­க­ளுடன் இர­க­சிய பேச்­சுக்­களை நடத்­தக்­கூ­டாது, மாவட்ட ரீதி­யான மக்கள் கூட்­டங்­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை உடன் நிறுத்த வேண்டும் உள்­ளிட்ட பல்­வேறு உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருந்தார்.

அத்­துடன், ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பாளர் பாரா­ளு­மன்ற குழு­வி­னதும், மத்­திய செயற்­கு­ழு­வி­னதும் அங்­கீ­கா­ரத்­து­டனும் முன்­மொ­ழி­யப்­படும் எனவும் அடுத்த கூட்­டத்­தினை எதிர்­வரும் ஆறாம் திகதி கூட்­டு­வ­தற்கும் இதன்­போது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் இறுதி வரை­வினை ஆராய முடியும் என்றும் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­த­வர்­க­ளி­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­ய­தாக அறிய முடி­கின்­றது.

மேற்­படி பிர­த­மரின் உத்­த­ர­வு­க­ளுடன், ஏற்­க­னவே சுஜீவ சேர­சிங்க மற்றும் அஜித் பீ பெரே­ரா­வுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு பிர­தமர் நேர­டி­யா­கவே எச்­ச­ரித்­தி­ருந்த நிலை­யிலும் சஜித்தை ஐ.தே.கவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டு­வ­தற்­காக எதிர்­வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட மாபெரும் மக்கள் கூட்­டத்­தினை ஒத்­தி­வைப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் கட்­சித்­த­லை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உத்­த­ர­வு­க­ளையும், எச்­ச­ரிக்­கை­க­ளையும் கடந்து திட்­ட­மிட்­ட­படி குரு­நா­கலில் சஜித் ஆத­ரவு மக்கள் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

குறித்த மக்கள் கூட்­டத்தின் ஏற்­பாட்­டா­ள­ராக இருக்கும் இரா­ஜாங்க அமைச்சர் அசோக் அபே­சிங்க கூறு­கையில், ஐந்தாம் திகதி திட்­ட­மிட்­ட­படி எம­து­கட்­சியின் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ ஆத­ரவு மக்கள் கூட்டம் குரு­நா­கலில் நடை­பெ­ற­வுள்­ளது. எமது கட்­சியின் தலைவர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது சில உத்தரவுகளை பிறப்பித்ததாக அறிய முடிகின்றது.

எனினும் அதுபற்றி எமக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. தற்போது பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த மக்கள் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ஹரீன் பெர்னாண்டோ, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகல் நகரில் பிற்பகல் 2.30இற்கு மக்கள் பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது என்றார்.

தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்

தூத்துக்குடி முதல் இராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடலரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இராமநாதபுரம் தொடக்கம் கன்னியாகுமாரி வரையுள்ள 10,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான மன்னார் வளைகுடா பகுதியானது கடல் வாழ் உயிரினங்கள் வாழ சிறந்த பகுதியாகவும், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்வதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பவளப்பாறைகள் நிறைந்துள்ள இத்தீவுகளால் சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து இப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால் தற்காலிகமாக ஏற்படும் இயற்கை பேரிடர்களால் இந்தத் தீவுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது. இயற்கை மாற்றம், பேரிடர் போன்ற காரணங்களால் தூத்துக்குடி பகுதியிலிருந்த விலங்கு சல்லித்தீவு, கீழக்கரை பகுதியில் இருந்த பூவரசன்பட்டி உட்பட 2 சிறிய தீவுகள் கடலில் மூழ்கிவிட்ட நிலையில், மேலும் 19 தீவுகள் கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி, வேம்பார் கடல் பகுதிகளில் வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லதண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கிள் தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளன.

இதில் தூத்துக்குடி பகுதியில் 4 தீவுகள், வேம்பாரில் 3 தீவுகள், கீழக்கரையில் 7 தீவுகள், மண்டபத்தில் 7 தீவுகள் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக கடல்சார் ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி பகுதியிலுள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளது. கீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் 43.49 சதவீதம், வேம்பார் பகுதியில் உள்ள தீவுகள் 36.21 சதவீதம், மண்டபம் பகுதியிலுள்ள தீவுகள் 21.84 சதவீதம் நிலப்பரப்பில் குறைந்துள்ளன. விதிவிலக்காக மண்டபம் பகுதியிலுள்ள முயல் தீவு, மனோலி  தீவு, சிங்கிள் தீவு உட்பட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தீவுகளின் பரப்பு சுருங்குவதற்கு முக்கிய காரணமாக கடலரிப்பு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வரும் 2036இற்குள் முழுமையாக கடலினுள் மூழ்கிவிடும்.

இதேபோல் வேம்பார் பகுதியிலுள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064ஆண்டில் இருந்தும், கீழக்கரை பகுதியில் உள்ள ஆனையப்பர், வாலிமுனை, புவரசன்பட்டி உட்பட்ட தீவுகள் 2032ஆண்டில் இருந்தும், மண்டபம் பகுதியில் உள்ள மனோலி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140 ஆண்டிலிருந்தும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வனவளத்துறையினர் கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் வளைகுடா கடலில் உள்ள தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பாறைகளை மீனவர்கள் சேதப்டுத்தாமல் இருந்தாலே தீவுகள் அழியாமல் காப்பாற்றப்படும். மேலும் தீவுகளில், வனத்துறை சார்பில் வருடத்திற்கு 500 மரக்கன்றுகளை நட்டு வருகின்றோம். ஆகவே தீவுகள் அழியாது என்றனர். அத்துடன் மீனவர்கள் பவளப்பாறைகளை சேதப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம் என்றும் கூறினர்.

 

அமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா

அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தரப்பில் குறிவைக்கப்படும் நிறுவனங்களுள் அப்பிள், ஃபொக்ஸ்கான், விஸ்ரான் கார்ப் போன்ற நிறுவனங்கள் முக்கியமானவை என்றும் கூறப்படுகின்றது.

ஓகஸ்ட் 14ஆம் திகதி சந்திப்பு நிகழ்த்திய இந்திய அதிகாரிகள், குறிவைக்கப்படும் நிறுவனங்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். அந்தக் கலந்துரையாடல் தாய்வான் நாட்டை தலைமையகமாகக் கொண்ட பீகட்ரான் கோப்பிறேஸன் என்ற நிறுவனத்தையும் உள்ளடக்கியிருந்தது.

சீனா மற்றும் அமெரிக்கா என்ற உலகின் இரண்டு பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடுகள், தமக்குள் வணிக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. பரஸ்பரம் இறக்குமதி செய்து கொள்ளும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை மேற்கொள்கின்றன.

எனவே இந்த பாதிப்பில் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து மீள விரும்பும் நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து இயங்கச் செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

தமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற பதத்தையே கையாளுவோம். கணினி வளர்ச்சியின் ஆரம்ப காலமான 1950களில் இருந்தே செயற்கை புத்தி பற்றி ஆய்வாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். 1970களில் கணனி பாவனை அதிகரித்த பின்னர் இதுபற்றி மேலும் பரவலாக பேசப்பட்டது.

1990களில் செஸ் விளையாடும் ஒரு கணனி மென்பொருள் அக்காலத்திய உலக செஸ் சம்பியளை தோற்கடித்ததது. இங்கிருந்து தான் செயற்கை புத்தி பிரபலமடைகிறது. இருந்தாலும் 1990களில் கிடைக்கும் இதற்கான கணினி தொழில்நுட்பம் இன்று கிடைக்கும் தொழில் நுட்பத்தைவிட பல விதங்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மட்டுப்படுத்தப்பட்ட கணினி தொழில்நுட்பத்தில் செயற்கை புத்தியின் வரம்பை உணர்ந்த ஆய்வாளர்கள் இதுபற்றி ஆர்வமாக பேசுவதை நிறுத்தி விட்டார்கள். சில காலத்திற்கு செயற்கை புத்தி ஆய்வுகள் கவர்ச்சியற்று போய் விட்டன. ஆனால் காலம் செல்ல அதிகரித்த கணனியின் வேகமும் இணையத்தினூடாக கிடைக்கக் கூடிய பெருமளவிலான தரவுகளும் ஒரு புதிய வகையான செயற்கை புத்தி ஆய்வை முடக்கிவிட்டது.

இன்று செயற்கை புத்தியை பற்றி விபரிக்கும் பிரபலமான சொற்களாக, ஆழமான நியூரல் வலைப்பின்னல் (deep neural network), ஆழமான இயந்திர கற்றல் (deep machine learning) போன்றவை கையாளப்படுகின்றன. இன்றைய செயற்கை புத்தி தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்கள் இயங்குதலின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டன.

இத்தொழில் நுட்பம் மனித மூளையின் நியூரல்களை போன்ற ஏராளமான சிறிய கணினிகளை வலைப்பின்னலாக உருவாக்குகிறது. ஏதாவது ஒரு விடயத்தை கற்பதற்கு இந்த செயற்கை புத்திக்கு ஏராளமான தரவுகள் கொடுக்கப்படும். இத்தரவுகளை வைத்து இச்செயற்கை புத்தி சரியான முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்கிறது.1 RJUo ahJ2sP2eOlODMTh6Q சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் - ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

இந்த நியூரல் வலைப்பின்னல் பல அடுக்குகளை கொண்டிருப்பதாலேயே இது ஆழமான கற்றல் என்று விபரிக்கப்படுகிறது. இத்தகைய தொழில் நுட்பமும் அதற்கு கொடுக்கப்படும் ஏராளமான தரவுகளுமே அதற்கு, ஒருவரின் குரலையும், முகத்தையும் அடையாளம் காணவும், ஓட்டுனர் இல்லாமல் வீதியில் கார் ஓட்டவும், மொழி மாற்றம் செய்யவும் தேவையான முடிவுகளை எடுக்கும் வல்லமையை கொடுக்கிறது.

இவையாவும் நியூரல் வலைப்பின்னல் மற்றும் ஆழமான கற்றல் ஆகியவை கொடுத்த நன்மையான வல்லமைகள். இதே தொழில்நுட்ப வல்லமைகள் இன்று நேர்மையற்ற விதத்தில் அரசியலிலும் வர்த்தக விளம்பரங்களிலும் கையளப்படுவதே இன்று பலருக்கும் மிகவும் கவலை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு தொழில்நுட்பத்தை கொண்டு Cambridge Analytica (CA) என்றவொரு அமைப்பு பிரேக்சிட் வாக்கெடுப்பிலும் ஐ-அமெரிக்க தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்திய போதுதான் இந்த நேர்மையற்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் பொதுவெளிக்கு வந்தன. இவையிரண்டும் வாக்காளர் பற்றிய தரவுகளை முகநூலில் இருந்து எடுத்து ஒவ்வாரு வாக்காளரையும் தனித்தனியாக குறிவைத்து விளம்பரங்கள் காட்டி தேர்தல் முடிவகளை மாற்றியது.maxresdefault 1 சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் - ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

முன்னொரு காலத்தில் ஒலி மற்றும் ஒளி ஊடகங்களை, அவற்றின் தாக்கம் செலுத்தும் வல்லமை கருதி, அரசுகளே தம் கையில் வைத்திருந்தன. ஆனால் இன்றைய நவதாராளவாத கொள்கை இவற்றை சுதந்திரமாக சந்தையின் தாக்கத்திற்குள் செயற்பட வைத்துள்ளது. இதே போலத்தான் இணையமும். இன்று முகநூல் மற்றும் கூகிள் போன்ற இராட்சச கம்பனிகள் ஏராளமான தரவுகளையும் அதே நேரத்தில் அதிவேகமாக முன்னேறி வரும் செயற்கை புத்தி தொழில்நுட்பத்தையும் சொந்தமாக வைத்திருக்கின்றன. கூகிள் ஏற்கனவே இத்தொழில்நுட்பத்தை கொண்டு நாம் எதைப்பார்க்க விரும்ப வேண்டும் என்று எமக்கு சொல்கிறது.

கேம்பிரிஜ் அனலிற்றிக்கா போன்ற நிறுவனங்கள் பெரும் காப்பரேட் முதலாளிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பான ஒரு கூட்டுத்தான். ஆனாலும் இவை அந்த அரசியல் கட்சியின் கட்டமைப்புகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் வெளியே இயங்குகிறது. அந்த அரசியல் கட்சிக்கு சாதகமாக இவற்றால் பொய் தகவல்களை பரப்ப முடிகிறது. பல அரசியல் பித்தலாட்டங்களை சுட்டிக்காட்டும் RJ  பாலாஜியின் LKG என்ற தமிழ் சினிமாவில் இவ்விடயமும் சுட்டிக்காட்டப்படுவதை கவனியுங்கள்.

வளரும் நாடுகளில் ஒவ்வொரு வீடுகளிலும் இணைய சேவை வைத்திருப்பது பெரும்பான்மை மக்களுக்கு முடியாத ஒன்றாகவே உள்ளது. அதே நேரத்தில் மோபைல் கைப்பேசிகளை மிகவும் குறைந்த விலையில் மக்கள் பெறக்கூடியதாக இருக்கிறது. அதனூடாக சில சமூகவலைத்தளங்களும் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது. இதனால் வளரும் நாடுகளில் மோபைல் கைப்பேசியூடாக மக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பங்குபற்றுகிறார்கள்.

இவ்வாறு கைப்பேசியூடாக கிடைக்கும் சமூவலைத்தளங்கள் அளவுக்கு வளரும் நாடுகளில் உள்ள மக்களுக்கு இணைய வசதி கிடைப்பதில்லை. சமூகவலைத்தளங்கள் மக்களை பொய்ப்பிரச்சாரத்தில் வீழ்த்துவதற்கு இதுவும் வசதியாக உள்ளது. இணையத்தினூடாக ஏனைய செய்திகளையும் மக்கள் இலகுவாக படிக்க முடிந்தால் இத்தகைய பொய்ப்பிராச்சாரம் வெற்றியடைவதை ஓரளவு மட்டுப்படுத்த முடியும். அண்மைய பிரேசில் தேர்தலில் கடும் வலதுசாரியாளரின் வெற்றிக்கு இத்தகைய சமூகவலைத்தள பொய்ப்பிச்சாரம் பெரிதும் உதவியதாக சொல்லப்படுகிறது.

முகநூல், கூகிள் போன்ற இரட்சச கம்பனிகளால் வரக்கூடிய தீமைகளை உணர்ந்து கொள்வதில் மக்கள் பின்தங்கியே உள்ளார்கள். செயற்கை புத்தி தொழில்நுட்பம் அதி வேகமாக முன்னேறி வரும் காலத்தில் இதனால் வரும் தீமைகளை புரிந்து கொள்வதில் மக்கள் அதே வேகத்தில் முன்னேற முடியாமல் திணறுகிறார்கள். ஒன்றை புரிந்து கொள்வதற்கு முன்னேரே இன்னுமொரு தீமை பூதாகரமாக விரிகிறது.

இணையத்தின் ஆரம்ப காலங்களில் அது தகவல்களை பகிரவும், மக்களின் கைகளுக்கு பலம் சேர்க்கும் ஒரு வளமாகவும் பார்க்கப்பட்டது. அநீதியை எதிர்க்கும் போராட்டங்களுக்கு உதவும் வெளிப்படையான ஒரு வளமாக பலரும் இணையத்தை நோக்கினார்கள். அப்படியான காலம் இன்று மலையேறிவிட்டது. இன்று தொழில்நுட்பம் எம்மை ஏமாற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கிறது. நாமும் அதன் கைதிகளாகிவிட்டோம்.eu facebook google twitter fake news 600x315 சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் - ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

இன்றைய நவதாரளவாத முதலாளித்துவ பொருளாதாரம் தொடர்ந்த எல்லையற்ற வளர்ச்சியையே மையப்படுத்துகிறது. இதே சூழலில் இதே கொள்கையுடன் வளரும் இராட்சச இணைய கம்பனிகளும் செயற்கை புத்தி ஆய்வுகளுக்கு பெரும் தொகையான பணத்தை செலவு செய்கிறது. இதனால் மக்களின் சனநாயக வெளிக்கு செயற்கை புத்தி கொண்டுவரும் ஆபத்துக்களிலிருந்து அதை பாதுகாப்பது ஒரு சவாலாகவே உள்ளது. ஆனால் செயற்கை புத்தி ஆய்வுகள் இவ்வாறுதான் வளரவேண்டும் என்றில்லை.

சனநாயகத்தை பாதுகாப்பதற்கு மக்களின் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம். அதே நேரம் இராட்சச கம்பனிகளின் வல்லமைகளை கண்காணித்து,  மக்களின் சனநாயக செயற்பாடுகளுக்கான வெளியை இந்த இராட்சச கம்பனிகளின் பொய்பிரசாரங்களில் இருந்து பாதுகாப்பதும் அவசியமாகிறது.

 

இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை காவல்துறை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் சிறிலங்கா டெலிகொம் ஆகியன ஒன்றிணைந்து இந்த தொடர்பாடல் கட்டமைப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து விலகிச் செல்பவர்கள் பற்றிய தகவல்கள் இந்தக் கட்டமைப்பில் உள்ளடக்கப்படும்.

எந்தவொரு காவல்துறை அதிகாரியும் எவ்விடத்திலிருந்தும் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக அக்கட்டமைப்புடன் தொடர்பு கொண்டு குற்றவாளியை அடையாளம் காணமுடியும்.

இதனால் குற்றவாளிகளை துரிதமாக சட்டத்தின் முன் நிறுத்தவும், போக்குவரத்துக் குற்றங்களை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கிலேயே இக்கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, காவல்துறைத் திணைக்களத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் அதன் மனிதவள மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து சிறந்த பண்புடனான தரமான கொவல்துறை சேவையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், அதன்கீழ் இந்த புதிய திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு  கருத்தரங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 29.08 ஆரம்பமானது. இக்கருத்தரங்கை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்தனர்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அதைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வரவேற்புரை நிகழ்த்த, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கொட்டேகொட சிறப்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த நிபுணர்களும், உள்நாட்டு இராஜதந்திரிகளும் உரையாற்றினர். இக்கருத்தரங்கில் 42 நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 800 பேர் கலந்து கொண்டதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Army seminar 2019 1 சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்ஆனால் நேற்றைய கருத்தரங்கில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொள்ளவில்லை.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனாலேயே சவேந்திர சில்வா தலைமையில் நடைபெறும் இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில் இவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சனாதிபதி தேர்தலில் சூழலியலாளர் அஜந்தா பெரேரா;தமிழர்களின் பிரச்சனையையும் தீர்ப்பேன் என்கிறார்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போட்டியிட்டதன் பின்னர், இதுவரை நடைபெற்ற எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடவில்லை.

1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளராக முதல் முதலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.

இந்நிலையில் 1999ஆம் ஆண்டே இறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீமனி திஸாநாயக்க ஆகியோர் முழுமையான அரசியல் பின்புலத்தை கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் என்ற போதிலும், கலாநிதி அஜந்தா பெரேரா நேரடி அரசியல் பின்புலத்தை கொண்டவர் கிடையாது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

யார் இந்த கலாநிதி அஜந்தா பெரேரா?

1957 ஆம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் திகதி ஆஜந்தா பெரேரா பிறந்துள்ளார். தனது ஆரம்ப கல்வியை கொழும்பு விஸாக்கா கல்லூரியில் தொடர்ந்த அவர், தனது உயர்கல்வியை சென்னை குட்ஷெபட் கல்லூரியில் தொடர்ந்துள்ளார்.

அதன்பின்னர், இங்கிலாந்து சென்ற அஜந்தா பெரேரா, ஹரோ கல்லூரியில் தனது மேல் நிலை கல்வியை தொடர்ந்துள்ளதுடன், இங்கிலாந்தின் ஷெபில்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனிலுள்ள மியூமிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனது உயர் படிப்பினை பயின்றுள்ளார்.

ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பெற்ற அவர், மீண்டும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

தான் சூழலியலாளராக தனது தொழில்துறையை தேர்ந்தெடுத்து நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட காரணம்?

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டிய விதம் தொடர்பில்தான் இந்த நாட்டிலுள்ள பல அரசியல்வாதிகளிடம் கூறிய போதிலும், அவர்கள் அதனை பொருட்படுத்தாது செயற்பட்டமையே தான் அரசியலுக்குள் பிரவேசிக்க காரணம் என இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி அஜந்தா பெரேரா குறிப்பிடுகின்றார்.

நாட்டை முன்னோக்கிகொண்டு செல்வதற்காக தான் தனது பணத்தில் பஸ்ஸில் சென்று தேநீர் அருந்தி அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் பணம் உழைக்கும் நோக்கிலேயே செயற்பட்டதாக அவர் குற்றம் சுமத்துகின்றார்.

இந்த நிலைமையை மாற்றியமைத்து, நாட்டை சிறந்ததொரு பாதைக்குகொண்டு செல்வதற்காகவே தான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது பொறுப்புக்களை சரிவர முன்னெடுக்காத அரசியல்வாதிகளே தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்ததாகவும் கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில் தமிழர்களின் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பீர்கள்?

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா நம்பிக்கை வெளியிடுகின்றார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்காக தீர்வை தமிழர்களிடமிருந்தே பெற்று, அதற்கான தீர்வுத்திட்டத்தை தான் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து வடக்கில் எவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்க முடியாது என கூறிய அவர், அதற்கான பொறுப்பை அந்த மக்களிடமே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி திட்டமொன்று முன்னெடுக்க வேண்டுமாயின், அந்த மக்களின் தேவையை அறிந்தே அந்த திட்டம் தமது ஆட்சியில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான தலைவர்களை தமிழர்கள் மிக நீண்டகாலமாக தேடிய போதிலும், அவர்களுக்கு அந்த தலைமைத்துவம் கிடைக்கவில்லை என கூறிய அவர், தமிழர்களுக்கான தலைமைத்துவத்தை வழங்க தான் தயாராகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை அடிப்படை தேவைகள் மற்றும் அவர்களின் நாளாந்த சம்பள பிரச்சினை ஆகியவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கலாநிதி அஜந்தா பெரேரா தெரிவிக்கின்றார்.