Home Blog Page 2449

சுதந்திர தின நிகழ்வுகளைப் புறக்கணிப்போம்: ஶ்ரீகாந்தா அழைப்பு

தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது எனும் அரசாங்கத்தின் முடிவானது இலங்கையில் வாழும் தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதன் வெளிப்பாடு என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசின் ஏற்பாட்டில் செய்யப்படும் சகல சுதந்திர தின நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நல்லூரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்:

எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள சுதந்திரதினக் கொண்டாட்டத்தில், குறிப்பாக கொழும்பிலே நடத்தப்படவிருக்கிற கொண்டாட்டத்தில் தமிழிலே தேசிய கீதம் இசைக்கப்படாது என்கிற அறிவிப்பு அரசாங்கத்தின் சார்பிலே வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, இது குறித்த தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானபோது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. அப்பாடியான சந்தர்ப்பத்திலே இது தொடர்பாக எந்த வொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றே அரசாங்கத்தின் பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் சிலர் பேசினார்கள்.

ஆனால், இப்பொழுது அரசாங்கத்தின் சார்பிலே திட்டவட்டமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின் ஊடாக இலங்கையிலே தமிழை தாய் மொழியாகக் கொண்ட தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இரண்டாம் தரப் பிரஜைகள் என்கிற தோரணையிலே அரசு நடந்து கொள்கிறது என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

இந்த முறை இந்த அறிவிப்பு நன்கு ஆராயப்பட்ட பின்னர்தான் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதிலே சந்தேகம் இல்லை. இது இந்த நாட்டில் வாழ்கிற தமிழர்களையும் தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் உணர்ச்சிபூர்வமாக காயப்படுத்துகிற ஒரு நடவடிக்கை என்று நாங்கள் பகிரங்கமாக தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

இந்த நிலையில், சுய மரியாதை கொண்ட தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தமட்டில் நாம் ஒரேயோரு விதத்தில் தான் எமது உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும். அந்தவகையில், எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பில் அர சாங்கம் ஏற்பாடு செய்துள்ள சுதந்திர தின நிகழ்வுகள் மட்டுமல் லாது, இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளையும் தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென நாம்கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.

தமிழ் புறக்கணிக்கப்பட்டால் தனிநாடு கோரும் நிலை ஏற்படும்; அநுரகுமார

தனிநாடு கோரி 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், 2009ஆம் ஆண்டுடன் அந்தக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டார்கள். அவர்கள் தற்போது பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள்தான் தங்கள் உரிமைகளைக் கேட்டு ஜனநாயக வழியில் போராடி வருகின்றார்கள். அவர்களைப் புறக்கணிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் மீண்டும் அவர்களைத் தனிநாடு கோரும் நிலைக்கே தள்ளிவிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினநிகழ்வில் இம்முறை சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவித்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம். தேசிய மொழி. அது அரச கரும மொழி. எனவே, சிங்களத்துடன் தமிழிலும் தேசிய கீதம் பாடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது? என்ன முரண்பாடு இருக்கின் றது? சுதந்திர தினத்தில் கட்டாயம் தமிழிலும் தேசிய கீதம் பாடப் பட்டேயாக வேண்டும்.

தமிழர்களைப் புறக்கணிக்கும் வகையிலும் தமிழ் மொழியை அவமதிக்கின்ற வகையிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு கோட்டாபய அரசு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல் அது நாட்டின் நல்லிக்கணத்துக்குப் பாதகமாக அமையும். மீண்டும் ஒரு தனி நாட்டுப் போருக்கே வழிவகுக்கும்” என்றார்.

தமிழில் தேசிய கீதம் பாடினால் தமிழீழம் உருவாகிவிடும்: விமல் வீரவன்ச

“சிறீலங்கா சிங்கள – பெளத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆகவேண்டும். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு பிரிவினர் இருக்கின்றார்கள் என்று அர்த்தப்படும். அந்த அர்த்தம் தனி நாடு உருவாகுவதற்கு – பிரபாகரன் விரும்பிய தமிழீழம் மலர்வதற்கு வழிவகுக்கும்” என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்

தேசிய கீதம் தொடர்பாக உருவாகியிருக்கும் சர்ச்சைகள் குறித்துப் பேசிய போதுதான் இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்.

கோட்டாவின் சீன விஜயம் ரத்து: கொரோனா வைரஸ் தொற்றே காரணம்

சீனாவுக்கான பயணத்தை சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிற்போட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த பயணம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பயணம் இந்த மாதத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

தமிழரசு கட்சியை ஓரங்கட்டிய சிறிகாந்தா! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பாரு கூட்டணியாக இருக்கக்கூடாது என விமர்சித்துள்ள தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா.

தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய மாற்றுத் தலைமையை உருவாக்க முயற்சிகள் பல முனைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த முயற்சியானது கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர வெறுமனே பதவி ஆசைக்காகவும் நாற்காலிகளுக்காகவும் உருவாக்கப்படுவதாக இருக்கக்கூடாது. மேலும் உருவாக்கப்படும் கூட்டணியானது சாம்பார் கூட்டணியாக இருக்கக்கூடாது மக்களுக்கு சேவையாற்ற கூடிய பலமான ஒரு கூட்டணியாக இருக்க வேண்டும் என்றே நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

எனவே நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளோம் அவ்வாறு தனித்துப் போட்டியிடும் போது கொள்கை அளவில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். மேலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தால் அதற்கும் தயாராக இருக்கின்றோம்.

மக்கள் எம்மை தோற்கடித்தாலும் பரவாயில்லை நாம் கொள்கையில் உறுதியாக இருப்போம். தற்போதைய நிலவரத்தின் படி எமது கட்சி தனித்து போட்டியிடுவதாக இருந்தால் நான் திருகோணமலை மாவட்டத்திலும் எனது கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்திலும் போட்டியிடுவது என உத்தேசித்துள்ளோம்.

அதற்கான முடிவினை எமது கட்சி விரைவில் கூடி ஆராயும். எனவே எம்முடன் பயணிக்க விரும்பும் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய தேசிய கட்சிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? – தீபா

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு “மூலம்” உள்ளது. தாவரமாக இருந்தால் அதற்கு விதையும், மனிதன் முதற்கொண்டு புழு பூச்சிகள் வரை உள்ள உயிரினங்களுக்கு விந்தே மூலமாக அமைகிறது. “மூலம்” என்பது உண்டாகக்கூடிய அல்லது உண்டாக்கக்கூடிய ஒரு உயிரியாகும். இந்த உயிரிக்கு மூல காரணமே ஐம்பெரும் சக்திகளான காற்று, நீர், நெருப்பு,ஆகாயம், மண் ஆகியவைகளாகும். இந்த ஐந்தும் ஒருங்கிணையும் போது தான் உற்பத்திக்கு வித்தான “உயிரி” தோன்றுகிறது. இந்த உயிரி சார்ந்திருக்கக்கூடிய மனித உடலுக்கும் இந்த பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்பு மிகமிக அவசியமாகும்.

இந்த பஞ்சபூத சக்திகளை தங்களின் தவவலிமையால் தங்களுக்கு கட்டுப்பட வைப்பவர்களே சித்தர்கள். தமிழன் என்ற இனம் சித்தர்கள் வழி மற்றும் வழிகாட்டுதலில் தோன்றியதேயாகும். நமது அத்தனை பாரம்பரிய விழுமியங்களும் சித்தர்களின் மெய்ஞானத்தால் கண்டறியப்பட்டு நம் முன்னோர்க்கு பயிற்றுவிக்கப்பட்டு, வாழையடி வாழையாக நம்மால் கடைபிடிக்கப்பட்டு வருபவையே. இதனால் தமிழன் தன் உணவு பழக்க வழக்கம் மற்றும் மருத்துவம் உட்பட அனைத்து துறைகளிலும் உன்னத நிலையிலேயே இருந்தான்.

தமிழர்களின் உணவுகள் முறையே அறம் வளர்க்கும் தானியமாகிய அரிசி,அருந்தானியங்களான கம்பு,தினை, சாமை, வரகு,குதிரைவாலி, தானியங்களான உளுந்து,பாசிப்பயறு, தட்டைப் பயறு,எண்ணெய்வித்துகளான நிலக்கடலை,எள்,மற்றும் கிழங்கு வகைகள், பழங்கள், மூலிகைகள், காய்கறிகள் ஆகியவற்றையே சார்ந்திருந்தன.

நம் முன்னோர்கள் இனிப்புச் சுவைக்காக தேன்,கருப்பட்டி (பனைவெல்லம்) சுத்திகரிக்கப்படாத கரும்பு சர்க்கரையையும் (Unrefined cane sugar) புளிப்புச் சுவைக்காக குடம் புளி(Malabar tamarind) என்கின்ற புளியையும் காரச் சுவைக்காக நல்ல மிளகு (Black Pepper), இஞ்சி,திப்பிலியையும் உவர்ப்புச் சுவைக்காக கடலுப்பையும் பயன்படுத்தியுள்ளனர்.Tamil News large 2456635 தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? - தீபா

நல்ல மிளகானது உடலின் வெப்பத்தை சீராக வைத்தல்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்,உடலின் நச்சுக்களை வெளியேற்றுதல்,உடலின் உள் உறுப்புகள் மற்றும் செல்களை புதுப்பித்தல் ஆகிய முக்கிய பணிகளைச் செய்கிறது.

மேலும் கற்பக மரங்களான பனை மற்றும் தென்னை சார்ந்த உணவுகள் மிக அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தன. தேங்காய் மிகச் சிறந்த மனித உணவு.இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை  (LDL) நல்ல கொழுப்பாக (HDL) (மாற்றுகிறது. தேங்காயை சூடுபடுத்தினால் அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

சமையல் எண்ணெய்யாக மரச்செக்கில் ஆட்டப்பட்ட (Raw & Cold Pressed) நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்தி யுள்ளனர். இந்த இயற்கையான பாரம்பரிய உணவுகளே எம் உடலுக்கான இயற்கை மருந்தும் கூட. இதனையே “உணவே மருந்து மருந்தே உணவு” என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு வாழ்ந்த அறிவார்ந்த தமிழ் சமூகம் தமது பாரம்பரிய உணவு பழக்கத்தை எங்கே தொலைத்தது?

வணிகத்தை முன்னெடுக்க உருவான இன்றைய அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சியாலும் ,பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர உத்திகளாலும் நமது எண்ணங்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றது.

வெள்ளைச் சீனி,தீட்டப்பட்ட வெள்ளை அரிசி, தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மற்றும் கலப்படம் செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள், மைதாவினால் செய்யப்பட்ட பரோட்டா (கொத்து ரொட்டி), நாட்டு மாட்டுப் பால் அல்லாத ஜெர்சி மற்றும் கலப்பின மாட்டுப்பாலும் அதைச் சார்ந்த உணவுகளும் (தயிர், மோர்,வெண்ணெய்நெய்) நம் உடலின் செல்களை சிதைத்து விடுகின்றன.

இன்று நாம் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமையால் செய்யப்பட்ட உணவே சிறந்தது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் கோதுமை நமது பாரம்பரிய உணவே அல்ல. அது நாடோடிகளின் உணவு. அவர்களுக்கே எளிதில் கெடாத உணவு தேவைப்பட்டது. கோதுமையானது 60 வருடமாக தான் இந்தியாவில் உள்ளது. கோதுமையில் உள்ள சில அமினோஅமிலங்கள்(Gluten) நம் கணையத்தை பாதிப்பதாக ஆவணங்கள் இன்று நம்மிடையே உள்ளன.

பச்சை மிளகாய் (Green Chilli)  மற்றும் வற்றல் பொடி (Red Chilli Powder)ஆகியவற்றை கார சுவைக்காகவும், புளிப்புச் சுவைக்காக அமிலத் தன்மை அதிகம் உடைய புளியையும் நாம் இன்று பயன்படுத்துகிறோம். இவை நமது நரம்பு மண்டலத்தைச் சிதைத்து விடுகின்றன.

நாம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட், கேக்,சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களாகிய தொழிற்சாலை உணவுகளில் முக்கியமாக மூன்று மூலப்பொருட்களைச் சேர்க்கின்றனர். முதலாவது HFCS (High Fructose Syrup அல்லது Glucose Fructose Syrup) இது மதுவிற்கு இணையான பொருள்.images தமிழன் எங்கே தன் ஆரோக்கியத்தை தொலைத்தான்? - தீபா

இரண்டாவது Aspartame (E951) என்கின்ற செயற்கை சர்க்கரை. இது வெள்ளைச் சீனியை விட 200 மடங்கு இனிப்புச் சுவை உடையது. மூன்றாவது Emulsifiers (E471) என்கின்ற மாமிச மற்றும் தாவர கொழுப்புகள். இவை மூன்றுமே இல்லாத தொழிற்சாலை உணவுப் பொருட்கள் இன்று அங்காடிகளில்(Super Market)விற்பனை செய்யப்படுவதில்லை.

இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் கொடிய இராசயனங்களைக் கொண்டே தொழிற்சாலைகளில் தயாரிக்கின்றனர். இந்த இராசயனங்கள் நம்மை கொல்லும் விஷங்கள். இவற்றை நம் உடலால் செரிமானம் செய்ய இயலாது. ஏனென்றால் நம் முன்னோர் உண்ட உணவின் பதிவுகள் நமது DNAவில் (Genetic Code)உள்ளன.

நாம் நமது பாரம்பரிய உணவை உண்ணும்போது மட்டுமே நமது செல்கள் மகிழ்ச்சியடைந்து செரிமானத்திற்கான என்சைம்களை சுரக்கின்றன. ஆனால் தொழிற்சாலை உணவுகளை உண்ணும்போது அவை கழிவுகளாக நம் உடலில் தேங்குகின்றன. இந்த கழிவுகளின் தேக்கமே நோய்களின் உருவாக்கம்.

அடுத்து விதையற்ற பழங்கள், ஒட்டுரகங்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள்,பழங்கள் அனைத்துமே நமது உடலின் செல்களை சிதைத்து நம் மரபணுவில்(DNA)மாற்றத்தைக் கொண்டு வருகின்றன. இதனால் உன்னத நிலையில் இருந்த நாம் நமது பாரம்பரிய அறிவு மற்றும் குணாதிசயங்களை இழந்து திறனற்ற இனமாக மாறி வருகிறோம். சுருக்கமாக, நமது சொந்த செலவிலேயே நமக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் நாமே சூனியம் வைத்துக் கொள்கிறோம்.

இந்த உணவு முறை மாற்றத்தின் உச்சகட்டமாக இன்று நம்மிடையே செயற்கை கருவூ ட்டல் (IVF,IUI)முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளிடம் இயற்கையாக பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கும் வீரியம் இருக்காது.

இதிலிருந்து எப்படி நமது அடுத்த தலைமுறையை மீட்டெடுப்பது?

நமது குடும்பங்களில் நமது பாரம்பரிய உணவு முறையை பின்பற்ற வேண்டும். அதற்கு முதலில் நமது எண்ணங்களில் மாற்றம் வேண்டும். இந்த எண்ணங்கள் நம்பிக்கையாகி செயல் வடிவம் பெற வேண்டும். இந்த செயல் பழக்கமாகி அதுவே ஒரு தனி மனித குணமாக மாற வேண்டும்.

உணவு என்பது நாவின் ருசிக்காக அல்ல, மாறாக உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பதாக அமைய வேண்டும்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா கோ.நம்மாழ்வார்.

தமிழராய் வாழ்வதில் நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வோம்! நோயில்லா பெரு வாழ்வு வாழ்வோம்!

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

பபூன் சமூக படிநிலைகள் மானிட சமூகத்திலும் உள்ளதா?

பபூன்கள்(Baboon) 50-100 பபூன்கள் கொண்ட குழுக்களாக வாழும். பபூன் சமூகம் கடுமையான படிநிலைகளை கொண்டது. ரோபேர்ட் சப்லோஸ்கி(Robert Sapolsky) என்னும் பேராசிரியர் இளைஞராக இருந்த போது தனது கலாநிதி பட்டத்திற்காக பபூன் சமூகத்தில் ஆய்வுகள் செய்தார். சமூக படிநிலைகளுக்கும் படிநிலைகளில் இருந்த பபூன்களின் மனஅழுத்தத்திற்கும் உள்ள தொடர்பையே பேராசியர் சப்லோஸ்கி ஆய்வு செய்து வந்தார். மனஅழுத்தத்தை இரத்த பரிசோதனை மூலமே அவர் கணித்தார்.

அவருடைய ஆய்வு மனஅழுத்தத்திற்கும் சமூக படிநிலையில் ஒரு அங்கத்தவர் இருக்கும் இடத்திற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காட்டியது. இந்த பபூன் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பபூன்களுக்கே மனஅழுத்தம் அதிகம் என்றும் அவையே அதிகம் நோய்வாய் படுகின்றன என்பதும் இவரின் ஆய்வுகள் கண்ட முடிவுகள். பேராசிரியர் இவ்வாறு ஆய்வு நடத்திக் கொண்டிருந்த போது அந்த பபூன் சமூகத்தில் ஒரு பெரும் துயரம் நடந்தது. அவரின் பபூன் சமூக ஆய்வுகளை முற்றாக அழிக்கும் ஒரு சம்பவம். பின்னர் அதுவே அவருடைய பிற்கால ஆய்விற்கு அவருக்கு ஆழமான புரிதலை உண்டாக்கியது. அவர் மீண்டும் மீண்டும் சொல்லி வரும் அச்சம்பவத்தை பார்ப்போம்.

பபூன் சமூகத்தின் உச்சத்தில் ஆண் பபூன்களே இருக்கும். ஏனைய பலமுள்ள ஆண் பபூன்களுடன் சண்டையிட்டே இவை இந்நிலையை அடையும். இவ்வாறு படிநிலைகளில் உள்ள ஆண் பபூன்கள் படிநிலைகளில் தமக்கு கீழ் நிலையில் உள்ள பபூன்களையும் துன்புறுத்தும். பேராசிரியர் சப்லோஸ்கி ஆய்வு நடத்திய பபூன் சமூகத்தில் சமூக படிநிலையின் உச்சத்தில் இருந்த ஆண் பபூன்கள் தமக்கு ஏமாற்றங்கள் வந்தபோதெல்லாம் ஏனைய பபூன்களை சித்திரவதை செய்யும். குழந்தையுடன் இருந்த தாய் பபூன்களை கூட விட்டு வைக்காது. ஆரம்பத்தில் பபூன் சமூகங்களை ஆய்வு செய்த வேறு ஆய்வாளர்கள் வன்முறையும் தொல்லை கொடுப்பதும் ஆண் பபூன்களுக்கு இயற்கையானவை என்ற முடிவுக்கே வந்தார்கள்.

இந்த பபூன் சமூகம் வாழ்ந்த இடத்திற்கு பக்கத்தில் ஒரு சுற்றுலா பயணிகளுக்கான உணவகம் இருந்தது. இந்த உணவகத்தில் எஞ்சிய உணவுகளை அவர்கள் வெளியே ஒரு குப்பை கிடங்கில் எறிவார்கள். எறியப்பட்ட உணவை சாப்பிட வெவ்வேறு பபூன் குழுக்களில் இருந்து பபூன்கள் அக்குப்பை கிடங்கிற்கு வரும். அவை அங்கு எறியப்பட்ட உணவுக்காக சண்டையிட்டே சாப்பிடும். ஒரு முறை அவ்வாறு எறியப்பட்ட உணவு கெட்டுப்போயிருந்தது.Sapolsky Photo Linda A Cicero Stanford News Service VS091030 001 மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

அதை சாப்பிட்ட அத்தனை பபூன்களும் இறந்து விட்டன. பல ஆண்டுகளாக தனது கலாநிதி பட்டத்திற்காக செய்து வந்த ஆய்வு வீணாகி போய்விட்டதே என்ற கவலையுடன், அவருக்கு பல வருடங்களாக பழகிவிட்ட பபூன்களின் இழப்பும் சேர்ந்து பேராசிரியரை துயரத்தில் ஆழ்த்தியது. கவலையுடன் மிஞ்சியிருந்த பபூன் சமூகத்தில் தனது கவனத்தை செலுத்தினார். பேராசியருக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

அன்று வரை சமூக படிநிலையின் உச்சத்திலிருந்த ஆண் பபூன்கள் ஏனைய பபூன்களை சித்திரவதை செய்வதை அவதானித்து வந்த பேராசியர், இத்தைகைய நடத்தைகள் முற்றாக அழிந்து போனதை இப்போது அவதானித்தார். இது ஏன் என்று தேடிய போது கெட்டுப்போன உணவை சாப்பிட்டு இறந்து போன பபூன்கள் எல்லாம் இந்த பபூன் சமூகத்தின் படிநிலைகளின் உச்சத்திலிருந்த ஆண் பபூன்களே என்பதை கண்டார். குப்பை கிடங்கில் எறியப்பட் உணவை சண்டையிட்டே பெற வேண்டி இருந்ததால் படிநிலையில் உச்சத்திலிருந்த சண்டையில் வல்லமையுள்ள பபூன்களே அங்கு சென்று உணவை சாப்பிட்டு வந்திருக்கின்றன. இவையே பேராசியரின் பபூன் குழுவில் அதிகம் தொல்லை கொடுத்த ஆண் பபூன்கள். மிஞ்சியிருந்த பபூன் சமூகத்தில் ஆண் பபூன்களைவிட பெண் பபூன்களே அதிகமாக இருந்தன.

மிஞ்சியிருந்த ஆண் பபூன்கள் சமூகத்தின் ஏனைய பபூன்களுடன் அன்பாக பழகுவதை பேராசியர் அவதானித்தார். பல வருடங்கள் சென்ற பின்னரும் இச்சமூக பழக்கம் மாறாமல் இருப்பதையும் அவதானித்தார். பபூன் சமூகத்தில் வாலிப வயதை அடைந்த ஆண் பபூன்கள் தமது குழுக்களை விட்டு வேறு பபூன் குழுக்களுடன் சில சமயங்களில் இணையும். இவ்வாறு பேராசிரியரின் பபூன் குழுவில் வந்து இணைந்த ஆண் பபூன்களும் இதே அன்பான நடத்தையை தமதாக்குவதையும் அவதானித்தார். பல வருடங்களின் பின் ஒரு சந்ததி பபூன்கள் இறந்து புதிய சந்ததி பபூன்கள் தோன்றிய பின்னரும் கூட அவருடைய பபூன் சமூகம் இதே கலாச்சாரத்துடன் இருப்பதையும் பேராசியர் கண்டார்.

மாற்றமடைந்த இந்த பபூன் சமூகத்தில் அவரை அதிகம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, இரு ஆண் பபூன்கள் ஒருவருக்கொருவர் தடவி அன்பை வெளிப்படுத்தும் காட்சியே பேராசிரியரை ஆழமாக பாதித்த இந்த அவதானிப்பை இன்றுவரை அவர் தொடர்ச்சியாக தனது உரைகளில் சொல்லி வருகிறார். அது மட்டுமல்லாமல் இதை மானிட சமூகங்களுடனும் ஒப்பிட்டு ஏனைய மனிதரை அன்போடு நடத்தாத ஆண்களை கொலை சொய்தால் சமூகம் திருந்துமோ என்று நகைச்சுவையுடன் சொல்லுவர்.

“தற்கால ஆண் கொலை” என்ற கருத்தை கூர்திஸ்தான் மக்களின் போராட்ட தலைவரான ஒச்சலானும் அடிக்கடி சொல்லி வருவதும் இங்கு குறிப்பிட தக்கது. அதாவது சிறந்த ஒரு புதிய சமூகத்தில், ஒரு “புதிய ஆண்” உருவாகுவார் என்றும் அதற்காக “தற்கால ஆண் கொலை” இடம் பெறும் என்பதும் அவரின் கருத்து. பேராசியர் பபூன் சமூகத்தில் அவதானித்ததும் ஒச்சலானின் கருத்தும் ஒத்திருப்பதை இங்கு காணலாம். ஒரு சிறந்த சமூகத்தில் ஒரு “புதிய பெண்” மட்டுமல்ல ஒரு “புதிய ஆணும்” உருவாக வேண்டிய தேவையை வேறும் பலர் சொல்லி வருகிறார்கள்.

இன்று அழிக்கப்பட்டு விட்ட அன்றைய விடுதலைப்புலிகள் சமூகத்தில் இவ்வாறான ஒரு மாற்றம் ஆரம்பமாகியிருந்ததை பலர் அவதானித்திருப்பார்கள். அங்கும் “ஒரு புதிய ஆண்” உருவாகியிருந்தார். இதை பல மூத்த விடுதலைப்புலி உறுப்பிர்களிடம் அவதானிக்க கூடியதாக இருந்தது. பபூன் சமூகத்தில் நடந்தது போல ஆதிக்கத்தை கையிலெடுத்து ஏனையவர்களுக்கு கெடுதல் செய்த ஆண்களின் கைகளை ஒடுக்கி விடுதலைப்புலிகள் வேறு ஆண்களுக்கு தலைமைத்துவ பொறுப்பை கொடுத்ததால் இம்மாற்றம் உருவாகி வந்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், லெப். கேணல் திலீபன் போன்றவர்கள் இப் “புதிய ஆணின்” சிறந்த உதாரணங்கள். இவர்களைப் போல வேறும் பலர் அப்போது இருந்தார்கள். “இப்புதிய ஆண்களும்”, திலீபனால் உருவாக்கப்பட்ட பெண்கள் வலைப்பின்னலும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பெண்களுக்கு கொடுத்த மதிப்பும் ஊக்கமுமே விடுதலைப்புலிகள் சமூக மாற்றத்தின் அடித்தளமாக திகழ்ந்தன. சமூக நீதி செழிக்கும் சமூகத்தை உருவாக்க பெண்கள் பொது வெளிக்கு வருவேண்டும் என்பதை தனது இளவயதிலேயே உணர்ந்து செயற்பட்டவர் திலீபன். 73099877 427632821495400 4349545124762484736 n மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 02)- ந.மாலதி

இன்று தமிழர்கள் மத்தியில் விடுதலைப்புலி பெண்களின் சமூக சாதனைகளைப் பற்றி பேசுபவர்களே இல்லை. அப்படி பேசினாலும் அவர்கள் விடுதலைப்புலி பெண்களின் படைத்துறை சாதனைகளையே பேசுகிறார்கள். “புதிய பெண்ணை” பற்றி பேசினால் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகியையும் மாதவியையும், மணிமேலையில் வரும் மணிமேகலையையுமே மேற்கோள் காட்டுவார்கள். பாராதி, பாரதிதாசன் போன்றவர்களின் அண்மைக்கால எழுத்துக்களையும் எடுத்துச் சொல்வார்கள்.

ஒவ்வாத பழைய இலக்கியங்களையே சொல்லிச் சொல்லி தமிழர்கள் புதுமைப் பெண்ணை போற்றுபவர்கள் என்று நிரூபிக்க இவர்கள் முனைவதும் இவர்களின் பெண்கள் பற்றிய சிந்தனா வறுமையையே காட்டுகிறது. இவற்றின் மத்தியில் பெரியார் பெண்களைப் பற்றி சொன்னவை தீவிரமான கருத்துக்கள். இன்று பெரியாரை பல தமிழர்கள் போற்றினாலும் அது அவருடைய சமய சாதிய மறுப்புக்காகவே அல்லாமல் அவருடைய பெண்கள் பற்றிய கருத்துக்கள் அதிகம் கவனிக்கப்படாத நிலையிலேயே உள்ளன.

2009க்கு முன்னரான வன்னியில் முளைவிட்ட “பெண் புரட்சிக்கு” அப்பால் தமிழ் பெண்கள் தம் சமூகத்திற்கு சுதந்திர விடுதலையை தரக்கூடிய “பெண் புரட்சியை” கற்பனை செய்யக்கூட முடியமலே உள்ளனர்.

தொடரும்…

மானுட சமூகத்தின் பரிணாமம் (பாகம் 01)- ந.மாலதி

வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.

வவுனியா மன்னார் வீதி குருமன்காடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்றையதினம் காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அவ்வீதியால் பயணிக்கும் அனேகமான பயணிகள் மற்றும் வாகனங்கள் பதிவு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயணிக்க அனுமதிக்கபடுகின்றனர்.

இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகியதுடன் விசனமும் தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை ஒளிப்பதிவு எதனையும் மேற்கொள்ள வேண்டாம் என இராணுவத்தினர் இதன்போது தெரிவித்திருந்ததுடன், வேறு விடயங்களை கூறவும் மறுத்து விட்டனர்.
dff வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.

dffd வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.

dffdd 1 வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.

dffddd வவுனியா குருமன்காட்டு பகுதியில் இராணுவ சோதனை சாவடி. மக்கள் அசௌகரியம்.
நாட்டில் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கடந்த மாதம் கூறியதையடுத்து தற்போது சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் நேற்று பாடசாலையின் அதிபர் செ. யேசுநேசன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் கல்வி திட்டமிடல் திருமதி தே.உமாதேவன், சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஓமந்தை கு. சசிக்குமார், கௌரவ விருந்தினராக ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி த. ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் என்பனவற்றை வழங்கி கௌரவித்தனர்.

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.jesu 5 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

jesu 3 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

jesu 4 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

jesu 2 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

jesu 1 வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி.

நிகரகுவாவில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினர் படுகொலை

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறும் உள்ளூர் காவல்துறை, இதுவரை இரண்டு இறப்புகளை மட்டும் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நிலவும் குழப்பத்திற்கான காரணம் குறித்து தெளிவில்லை

நிகரகுவா நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதியில் வாழும் மாயக்னா பழங்குடியினரை மையமாக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போசாவனஸ் உயிர்க்கோளக் காப்பகத்துக்குட்பட்ட இந்த பகுதிதான் பழங்குடி குழுக்களுக்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான நில மோதல்களின் மையமாக இருந்து வருகிறது.

தனது சமூகம் படிப்படியாக “அழிக்கப்பட்டு” வரும் நிலையில் இதை தடுப்பதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று மாயக்னா பழங்குடிகளின் தலைவர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டி இருந்தார்.