வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பேருந்துநடத்துனர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில் முல்லைதீவில் இருந்து வவுனியா நோக்கிசென்ற தனியார் பேருந்து நெடுங்கேணி நொச்சியடி ஜயனார் ஆலயத்தில் வழிபாட்டிற்காக நிறுத்தப்பட்டது.இதன்போது பேருந்தின் நடத்துனர் ஆலயத்தின் உண்டியலில் பணத்தினை இடுவதற்காக வீதியை கடந்து சென்றபோது திருகோணமலையில் இருந்து முல்லைதீவு நோக்கிபயணித்த கார் அவரை மோதியது.
விபத்தில் பேருந்தின் நடத்துனர் காயமடைந்த நிலையில் நெடுங்கேணி பிரதசே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக நெடுங்கேணி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பன்முக கலந்துரையாடல்கள் மூலம் அமைதி மற்றும் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்குதல் செயலமர்வின் இரண்டாம் பகுதி பயிற்சி செயலமர்வு இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் ஜெட்விங்ஸ் விருந்தினர் விடுதியில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசியல் பிரதிநிதிகள், அரச ஊழியர்கள் பொது அமைப்பினருக்கான இச் செயலமர்வில் 40ற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இழுத்து மூடும் துர்ப்பாக்கிய நிலையில் வவுனியா சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை.
வவுனியா மாவட்டம் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவுக்குற்பட்ட சின்னத்தம்பனை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை 1957 ஆண்டு மக்களின் முயற்சியில் ஓலைக் கொட்டில்களில் ஆரம்பிக்கப்பட்டது.
1960.10.29 திகதி சின்னத்தம்பனை பாடசாலையை இலங்கை அரசு பொறுப்பேற்று சின்னத்தம்பனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையாக இயங்கிவந்தது.
1984ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற வன்செயல் காரணமாக சின்னத்தம்பனை மக்கள் கிராமத்திலிருந்து இடம் பெயர்ந்தனர் அப்போது பாடசாலை மூடப்பட்டது. பின்னர் 1990 ஆண்டு கிராமத்தில் மக்கள் மீளக்குடியமர்ந்து பாடசாலை சிறப்பாக இயங்கிவந்தது. தோடர்ந்து நாட்டில் இடம் பெற்ற போர் காரணமாக மீண்டும் பாடசாலை மூடப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்தனர்.
2001ஆம் ஆண்டு சின்னத்தம்பனை கிராம மக்கள் மீண்டும் கிராமத்தில் மீள்குடியேறினர் அதன் பின் 2002.01.04 ஆம் திகதி ஓலைக் கொட்டில்கள் அமைத்து கொட்டில் வகுப்பறையில் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கல்வி கற்று வந்தனர்.
2013.12.15ம் திகதி எஸ். மரியநாயகம் என்பவர் பாடசாலை அதிபராக நியமனம்பெற்று 75 மாணர்களுடன் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்தது.
இவ்வாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னத்தம்பனை பாடசாலையில் இன்று இரண்டு மாணவர்கள் மாத்திரமே கல்வி கற்றுவரும் துர்ப்பாக்கிய நிலையில் பாடசாலை இழுத்து மூடும் அபாய நிலையில் இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த காலங்களில் செட்டிகுளம் பெரியபுளியாளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் 2010 ஆண்டு காண்டைக்குளம் திருநாவுக்கரசு வித்தியாலயமும் மாணவர்கள் வருகை குறைவால் இழுத்து மூடப்பட்ட சம்பவவும் பதிவாகியுள்ளது.
சின்னத்தம்பனை கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாத காலத்தில் சிறப்பாக இயங்கி வந்த பாடசாலை தற்போது நிரந்தர வகுப்பறைக்கட்டடங்கள் மலசலகூட வசதி, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, என அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியிருந்தும் மாணவர்கள் வருகை மிகையாகக் குறைந்துள்ளமையால் கல்விக்கூடம் மூடப்படும் நிலையில் உள்ளது.
அதிபர் உற்பட மூன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கவேண்டும் என்ற ஆவலுடன் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்கு வருகைதந்தால் இரண்டு மாணவிகள் மத்திரமே பாடசாலைக்கு வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் புதிதாக மாணவர்கள் பாடசாலையில் இணைவார்கள் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புகின்றனர்.
வகுப்பறையை சுத்தம்செய்தல், பூக்கண்டுகளுக்கு நீர் ஊற்றுதல், முற்றம் கூட்டுதல் உற்பட அனைத்து வேலைகளையும் ஆசிரியர்களும் அதிபரும் இணைந்தே செய்கின்றனர்.
சின்னத்தம்பனை கிராமத்தில் பாடசாலையில் ஏன் பெற்றோர்கள் அக்கறை செலுத்தவில்லை.?
கிராமத்தல் இயங்கும் ஆரம்ப பாடசாலையில் கல்விகற்கும் நிலையில் இருக்கும் சுமார் 40 தொடக்கம் 50 மாணவர்கள் கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி கற்காமல் ஏன் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் பாடசாலைக்குச் செல்கின்றார்கள்?
சுpன்னத்தம்பனை பாடசாலை உயிர்ப்புடன் மீள் எழுற்சி பெற்று கிராமத்தின் கல்வி வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்லவேண்டிய கிராமசேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர, மாதர்; அபிவிருத்திச் சங்கத்தினர் ஏன் மௌனமாக இருக்கின்றார்கள்.?
கிராமத்தின் அழியாத கல்விச் சொத்தை கட்டிக்காப்பாற்றவேண்டிய கிராம மக்கள் ஏன் பாடசாலையில் தமது வெறுப்பைக் காட்டுகின்றனர் என பல கேள்விகள் எழுகின்றது.
நாடாளுமன்றம் எப்படியும் இந்த மாத இறுதியில் கலைக்கப்படப்போகின்றது. ஏப்ரல் இறுதிப்பகுதியில் பொதுத்தேர்தல் நடக்கப்போகின்றது. இதில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது.
தேர்தல் வரப்போகிறது என்பது ஏற்கனவே தெரிந்துவிட்டதால் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கட்சிகளை போல தமிழ் கட்சிகளும் தங்களை பலப்படுத்துவதிலும், கூட்டணி அமைத்துக் கொள்வதிலும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். இந்தப் பலப்படுத்தும் செயற்பாடுகளிலும் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் தமிழ் தரப்பினரிடையே குழப்பங்களும் குளறுபடிகளும் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெறும் சில குளறுபடிகள் தொடர்பில் இந்த வாரம் பார்க்கலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இப்போது மூன்று கட்சிகள் தான் இருக்கின்றன தமிழரசுக்கட்சி பிரதானமாக இருக்கின்றது அதனைவிட புளொட், ரெலோ என்பன அதில் அங்கம் வகிக்கின்றன. ரெலோவிலிருந்து ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தலைமையிலான அணி வெளியேறிச்சென்றமை ரெலோவை யாழ்ப்பாணத்தில் சற்று பலவீனப்படுத்தியுள்ளது.
சார்பில் யாழ்ப்பாணத்தில் யாரை இறக்குவது என்பதில் உருவாகிய பிரச்சினைக்கு ரெலோ முடிவு காண்டுள்ள போதிலும் கூட, சர்ச்சைகள் தொடர்கதையாக தான் இருக்கின்றது. கூட்டமைப்புக்குள் இருக்கும் மூன்று பங்காளிக் கட்சிகளின் பிரச்சினை தீர்ந்தாலும் கூட, தமிழரசுக்குள் உருவாகியிருக்கும் புதிய பிரச்சினைதான் சம்பந்தனுக்குத் தலையிடியைக் கொடுக்கின்றது.
தமிழரசுக் கட்சிக்குள் புதியவர்களுக்கு இடம்?
வடமாகாணத்தில் ஆசனங்கள் எவ்வாறு பங்கேற்பது என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இணக்கப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 10 வேட்பாளர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிறுத்த வேண்டும்.
இதில் ரெலோவுக்கு ஒன்று. புளொட்டுக்கு இரண்டு இடங்களையும் கொடுத்திருக்கின்றார். தமிழரசு கட்சியின் சார்பில் ஏழு பேர் களமிறங்குகின்றார்கள். இந்த ஏழு வேட்பாளர்களும் யார் என்பதில் தான் இப்போது சர்ச்சை உருவாகி இருக்கின்றது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கட்டாயம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதே நடைமுறையாக இருக்கின்ற போதிலும் கூட, இந்த முறை அதில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு கோஷத்தை கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் முன்வைத்திருக்கின்றார்.
இளைஞர்கள், புதிய முகங்கள், மற்றுட் பெண்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்பதால் முதியவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிகொள்வது கட்சியின் எதிர்கால நலன்களுக்கு முக்கி யமானது என்ற கருத்தை சுமந்திரன் முன்வைத்திருக்கிறார்.
இதனடிப்படையில் மாவை சேனாதிராஜா, உதயன் உரிமையாளர் சரவணபவன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சுமந்திரனால் முன்வைக்கப்படுகின்றது. அவர்களுக்கு பதிலாக இளையவராக இருக்கின்ற தன்னுடைய ஆதரவாளர்கள் சிலரை வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் இலக்கு என கூட்டமைப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாண மேயர் ஆர்னோல்ட், சாவகச்சேரி சயந்தன், வலி வடக்கு சுகிர்தன் உட்பட தன்னுடைய ஆதரவாளர்களான 4 பெயரையாவது களத்தில் இறங்க வேண்டும் என்பதுதான் சுமந்திரனின் நோக்கம். அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டுமானால் மாவை சேனாதிராஜா சரவணபவன் போன்றவர்களை ஒதுக்கிவிட வேண்டும் என அவர் எதிர்பார்க்கின்றார்.
ஆனால் ஆனால் அந்த இரண்டு பேருமே தாம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். மாவை சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றத்துக்கு வரலாமென சுமந்திரன் ஒரு யோசனை தெரிவித்து இருந்தார். ஆனால் சம்பந்தனும் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்றம் பார்ப்பதிலேயே குறியாக இருப்பதால் தனக்கு உரிய இடம் கிடைக்குமா என்ற கேள்வி மாவைக்கு ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்து விட்டதாக தெரிகின்றது.
ஒதுங்கிக்கொள்ள மறுக்கும் சரா
மறுபுறத்தில் சரவணபவனும் ஒதுங்கிக் கொள்வதற்குத் தயாராகவில்லை. சரவணபவனுக்கான ஆதரவு தளம் யாழ்ப்பாணத்தில் பெருமளவிற்கு வீழ்ச்சியடைந்து இருப்பதாகவே தெரிகின்றது. இருந்தபோதிலும் தன்னிடம் இருக்கக்கூடிய பணபலத்தையும் பத்திரிகைப் பலத்தையும் பயன்படுத்தி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தன்னால் வர முடியும் என்ற நம்பிக்கையுடன் சரவணபவன் இருப்பதாக தெரிகின்றது. அதற்காக சுமந்திரனுட ன் நேருக்கு நேராக மோதுவதற்கும் சரவணபவன் தயாராக இருக்கின்றார்.
சுமந்திரன் இந்த செயற்பாடுகள் தொடர்பில் மாவை சேனாதிராஜாவிடம் சரவணபவன் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிகிறது. இருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என மாவை தெரிவித்திருக்கின்றார். “என்னுடைய நிலைமையும் உங்களுடைய நிலைமை போன்று தான் இருக்கின்றது” என மாவை சரவணபவனுக்கு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.
இந்த விவகாரம் பெரும்பாலும் சம்பந்தனின் கைகளுக்குப் போகலாம் எனத் தெரிகின்றது. சம்பந்தன், சரவணபவனின் ஒரு உறவினரும் கூட. யாழ்ப்பாணம் செல்லும்போதெல்லாம் சரவணபவனின் இல்லத்தில் அல்லது அவருடைய விடுதியில் தங்குவதே சம்பந்தன் வழமையாக கொண்டிருக்கின்றார். அதனால் சம்பந்தன் மூலமாக தன்னுடைய சீட்டை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் சரவணபவனுக்குஇருப்பதாக தெரிகின்றது.
தமிழரசுக் கட்சிக்குள் தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு தனக்கு ஆதரவான இளைஞர் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சுமந்திரன் இறங்கியிருப்பது தமிழரசுக் கட்சியின் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சம்பந்தன் வயது காரணமாவும், உடல்நிலை காரணமாகவும் தீவிரமாகச் செயற்பட முடியாத ஒருவராகிவிட்டார்.
அதேபோல, மாவை சேனாதிராஜாவும் மருந்து மாத்திரைகளுடன்தான் திரிகின்றார். அத்துடன், சிங்களக் கட்சித் தலைவர்கள், இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தக்கூடிய ஒரு ஆளுமையைக் கொண்டவராக அவர் இல்லை. அதற்கான ஆளுமை சுமந்திரனிடம்தான் இருக்கின்றது.
தனக்கு சவாலாக வரக்கூடிய ஒருவருமே தமிழரசுக் கட்சிக்குள் இல்லை என்பதை உணர்ந்துகொண்ட ஒருவராகவே சுமந்திரன் செயற்படுகின்றார். வடமாகாண சபைத் தேர்தல் வருமானால் தனது ஆதரவாளரான ஆர்னோல்டை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவது சுமந்திரனின் திட்டம் எனச் சொல்லப்படுகின்றது. இதனால், மாவையும், சீவி.கே.சிவஞானமும் குழப்பமடைந்திருக்கின்றார்கள். “மாவை அண்ணை பாராளுமன்றம் சென்றால், முதலமைச்சர் வேட்பாளர் நான்தான்” என சி.வி.கே. அடித்துச் சொல்லிவிட்டார். பத்திரிகை அறிக்கை ஒன்றிலேயே அவர் அவர் கூறியிருக்கின்றார்.
ஆக, தமிழரசுக் கட்சிக்குத் தலைமை தாங்க பொருத்தமான ஒரு ஆளுமை இல்லாமையால் சுமந்திரன் அதற்கு வருவதைத் தடுக்க முடியாத ஒரு நிலைமை இருப்பது உண்மை. சிறிதரன் அதற்கான முயற்சிகள மேற்கொள்கின்ற போதிலும், அதற்கான ஆளுமையோ இ◌ாஜதந்திரிகளுடன் பேசக் கூடிய ஆற்றலோ அவருக்கு இல்லலாவதுதான் மிகப்பெரிய குறைபாடு. ஆக, சுமந்தரனை வீழ்த்த வேண்டும் என தமிழரசுக் கட்சியில் யார் நினைத்தாலும் அது சாத்தியமாகும் என எதிர்பார்க்க முடியாது!
சிறீலங்காவின் ஜனாதிபதி கோட்டமாபய ராஜபக்ஷ தெரிவித்த ஒரு கருத்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை ஒன்றை உருவாக்கியிருக்கின்றது. பொறுப்பான பதவி ஒன்றில் இருப்பவர், ஏற்கனவே மற்றொரு பொறுப்பான பதவியில் இருந்தவர் பொறுபற்பற்ற வகையில் பதிலளித்திருப்பது மனித உரிமைகளுக்காப் போராடுபவர்களுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
அத்துடன், பொறுப்பு கூறல் பொறி முறை எதனையும் அவர் ஏற்கப்போவதுமில்லை. நடைமுறைப்படுத்தப் போவதுமில்லை என்பதையும் இது உறுதிப்படுத்தியிருக்கின்றது. இந்த மாற்று வழி ஒன்றைத் தேடிச் செல்ல வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
போரின் இறுதிக் காலகட்டத்தில் அல்லது போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து அல்லது கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் இப்போது உயிருடன் இல்லை என்ற ஸ்ரீலங்கா அரசாங்க தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கருத்தே இப்போது சர்ச்சைக்குரியதாக இருக்கின்றது. ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது கூட இதேபோன்ற ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் குறித்து பெரும்பாலான தமிழ்த் தலைமைகள் கூட மௌனமாகத்தான் இருக்கின்றன.
2009இல் தமிழின அழிப்புப் போர் இடம்பெற்றபோது ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கைகளுக்கு கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதுடன், பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர செயலாளராகவும் கோட்டாபய ராஜபக்சவே கடமையாற்றினார். அந்தவகையில் அப்போது இடம்பெற்ற நிகழ்வுகள் அனைத்திற்கும் பொறுப்புக்கூற வேண்டிய ஒருவராக அவர் இருக்கின்றார்.
அதற்கு மேலாக இப்போது சிறிலங்கா நாட்டின் அதிபராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் ஒருவர் பொறுப்பற்ற விதத்தில் சொல்லியிருக்கிற பதில் ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறைகளையும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு அவர் தயாராக இல்லை என்பதைத் தெளிவாக புலப்படுத்தியிருக்கின்றது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிருடன் இல்லை என்பதை கோதாபய ராஜபக்ஷ அறிவித்திருப்பது தானும் சிறி லங்கா அரசும் பன்நாட்டு சட்டத்தை மோசமாக மீறியுள்ளோம் என்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை சமனானது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட செயலகம் கூட அதிகாரம் அற்றதாகவும், சிறப்பான முறையில் செயற்படாத ஒன்றாகவுமே இருந்துள்ளது. சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான ஒரு நாடகமாக மட்டுமே இந்தச் செயலகம் இருந்துள்ளது என்பதையும் கோதாபய ராஜபக்ஷவின் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.
காணாமல் போனோர் விவகாரத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஆக்கபூர்வமாக எதனையுமே செய்யப் போவதில்லை என்பது கடந்த காலத்திலேயே வெளிப்படையாக தெரிந்தது. இப்போது சிங்கள பௌத்த மக்களின் ஆதரவுடன் அதிகாரத்திற்கு வந்திருக்கும் கோட்டாபய முழு அளவில் அவர்களுடைய நலன்களையே முன்னிலை படுத்தும் ஒருவராக காணப்படுகின்றார்.
அதனால், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. அதனால் மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச சமூகமும் இவ்விடயத்தில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏதாவது ஏற்படக் கூடிய வகையில் மாற்று திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றைய அவசரமும் அவசியமும் ஆகும்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஜெனீவாவில் ஆரம்பமாக உள்ள நிலைமையில் இதற்கான தேவையும் முன்னரை விட அதிகமாக உள்ளது என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம். மனித உரிமை அமைப்புக்கள் இதற்கான தயாரிப்புக்களை இப்போதே ஆரம்பிக்காவிட்டால், சிறீலங்கா அரசாங்கம் வழமைபோல சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான உபாயங்களுடன் களமிறங்கும்.
அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து அதற்கான உறுதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
துருக்கி நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கிய போது திடீரென விபத்து ஏற்பட்டு அந்த விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 179 பேர் படுகாயமடைந்ததாகவும் 3 பேர் உயிரிழந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று, நேற்று தரை இறங்கியது. அந்த விமானத்தில், மொத்தம் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் தரையிறங்கியபோது, விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், ஓடுபாதை ஈரப்பதத்துடன் காணப்பட்டது. அப்போது, தரையிறங்கிய விமானம் திடீரென வழுக்கிக்கொண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
மெரிக்காவின் செனட் சபையில் ட்ரம்ப்புக்கு எதிரான பதவிப் பறிப்புத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இவ்வருட இறுதியில் போட்டியிட உள்ளார் ஜோ பிடன். இதில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தகத் தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த விசாரணையை நடத்தி முடிக்கும் வரை உக்ரைனுக்கு அமெரிக்காவின் நிதியுதவியையும் நிறுத்தி வைத்ததாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து ட்ரம்ப்பை பதவியை விட்டு நீக்கத் திட்டமிட்டு, முதல் கட்டமாக பிரதிநிதிகள் சபையில்பதவி நீக்கக்கோரும் தீர்மானம் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 230 பேரும், எதிராக 197 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்தார் என்ற இரண்டாவது தீர்மானத்துக்கு ஆதரவாக 229 பேரும்,எதிராக 198 பேரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப்புக்கு எதிரான இரண்டாவது தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் ட்ரம்ப்பை பதவியை விட்டு விலக்கும் தீர்மானம், செனட் சபையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டது. இதில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்குத் தடையாக இருத்தல் ஆகிய இரு தீர்மானங்களும் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் செனட் சபையில் தோல்வி அடைந்தன.
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் ட்ரம்ப்புக்கு ஆதரவு இருந்ததால் இந்த முடிவு எதிர்பார்த்ததே என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாலராசா ஜெதீஸ்வரன்(48) என்ற குறித்த நபர் தனது வயலினை அறுவடை அங்கு சென்ற வேளை சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
மாங்குளம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டு வருவதாகவும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட் டுள்ளதாகவும்
தெரியவருகிறது.
சீனாவின் வூகன் மாநிலத்தில் உருவாக்கி உலக நாடுகள் எங்கும் பரவியுள்ள வைரசின் தாக்கத்தால் இதுவரையில் 563 பேர் பலியாகியுள்ளதாக சீனா தேசிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (05) மட்டும் 73 பேர் வைத்தியசாலைகளில் இறந்துள்ளனர். அதேசமயம் 28,276 பேர் இதுவரையில் தோற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.