Home Blog Page 2438

பல்கலைக்கழக பகிடிவதை ; அதிகாரிகள் எடுத்துள்ள மூன்று முக்கிய தீர்மானங்கள்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மோசமாகப் பகிடிவதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுக்களையடுத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்படி, மாணவர் நலச்சேவை உதவிப் பதிவாளர், மாணவர்கள் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், மாணவர் ஆலோசகர்கள், மூத்த மாணவர் ஆலோசகர்கள் அடங்கிய குழு அமைத்துச் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாணவிகளுக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குறுந்தகவல்கள், வட்ஸ் அப் தகவல்கள், தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய தரவுகளைப் பொலிஸாரின் இணையவழிக் குற்றங்கள் பிரிவு ஊடாக விசாரணை நடத்தல் மற்றும் மாணவர் ஒன்றியம் உடனடியாக புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வை நடத்த ஒழுங்கு செய்தல் ஆகிய 3 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகக் கிளிநொச்சி வளாகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாகத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி, உயர்கல்வி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அந்த முறைப்பாடு தொடர்பாக யாழ். பல்கலைக் கழக நிர்வாகத்துக்குக் கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

இந்நிலையில் யாழ். பல்கலைக் கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், முறைப்பாட்டு அதிகாரி, பிரதி முறைப்பாட்டு அதிகாரிகள், மாணவ ஆலோசகர்கள், மூத்த மாணவ ஆலோசகர்கள், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்பட மாணவர் ஒழுக்கத்துடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி நேற்று யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான வளாகத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டம் நிறைவடைந்ததும் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் கிளிநொச்சி வளாகத் துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுக்கப் பயணமாகினர்.

இதேவேளை, யாழ். பல்கலைக் கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் ஊக்கங்களையும் வழங்குவதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதை குறித்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். அவர் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்குச் சென்று இந்த விடயங்கள் தொடர்பாக நேரில் ஆராய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து ஆராய்வதற்கென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளது என்றும் கூறப்பட்டது.

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாகப் பொதுத் தேர்தல்? ஆளுங்கட்சி தீவிரமாக ஆராய்வு

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் பிரகாசமாக தென்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் கடந்த புதன் நடைபெற்ற ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஓராண்டு பூர்த்தியாகின்றது. இந்நிலையில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமானால் அது ஏதேனும் ஒரு விதத்தில் தமது கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத் தும் என்பதால் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் பச்சைக்கொடி காட்டியுள்ளது என தெரியவருகின்றது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின்பிரகாரம் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னரே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனினும், நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானமொன்றை நிறைவேற்றினால் முன்கூட்டியே கலைக்க முடியும் என்றும், இதன்பிரகாரம் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனவும் அரசியல் களத்தில் பேசப்படுகின்றது.

ஏ 9 வீதி சோதனைச் சாவடிகளை உடன் அகற்றுங்கள்: சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்து

வடக்கில் ஏ 9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளை உடனடியாக அகற்றி தமிழ் மக்கள் மீதான சோதனைகளை நிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் –

“யாழ். ஏ 9 வீதியில் 10 இற்கும் மேற்பட்ட இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்றுக்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் பயணிகள் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மக்கள் இறக்கப்பட்டு சோதனையிடப்படுகின்றனர்.

கஞ்சா, குடு என்ற பெயரில் தமிழ் மக்கள் வீதிகளில் இறக்கப்பட்டு தொல்லைப்படுத்தப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது. அத்துடன் இந்தச் சோதனைச் சாவடிகளில் பெண் பொலிஸாரோ, பெண் சிப்பாய்களோ இல்லை. இதனால் தமிழ்ப் பெண்கள் பெரும் அசெளகரியங்களுக்கு ஆளாகின்றனர்.

இதனால் யாழ். ஏ 9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் மீதான சோதனைகள் நிறுத்தப் படவேண்டும். இது தொடர்பான நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ எடுக்க வேண்டும். இவ்வாறான சோதனைகள், இறக்கி ஏற்றல்கள் மூலம் உங்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.

அத்துடன் யுத்தத்தில் பேரழிவைத் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கான எந்தவித உயிரிழப்பு நஷ்டஈடுகளோ அல்லது பொருள் இழப்பு நஷ்ட ஈடுகளோ யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டபோதும் எந்த அரசாலும் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக தம்மைக் கொல்ல வெளிநாடுகளிட மிருந்து அரசுகள் கொள்வனவு செய்த நவீன ஆயுதங்களுக்கான வரியையும் தமிழ் மக்கள் செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.

4 நாள் பயணமாக மகிந்த டெல்லி சென்றடைந்தார்

சிறீலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ஸ 4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் மகிந்த ராஜபக்ஸவை மத்திய அமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார்.

சிறீலங்காவின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபாயா ராஜபக்ஸ தனது முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியா சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கோத்தபாயா ராஜபக்ஸ உறுதியளித்திருந்தார். அதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்தியா சென்றார். அவரிடம் கோத்தபாயா ராஜபக்ஸ அளித்த உறுதிமொழி குறித்து இந்தியத் தரப்பில் நினைவூட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது 4 நாட்கள் விஜயமாக மகிந்த ராஜபக்ஸ டெல்லி சென்றுள்ளார். அங்கு வாரணவாசி, திருப்பதி உட்பட பல இடங்களுக்கும் மகிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லிக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்ஸ முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மேலும் இவ்விவகாரத்தை இழுத்தடிக்கக் கூடாது.

ஏழு பேரை விடுதலை செய்யும் கோப்பை தன்னிடம் ஓராண்டிற்கும் மேலாக வைத்திருக்கும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

பழனிச்சாமி அரசிற்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுத்து இவர்களின் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

அண்மையில் பட்டிருப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளமன்ற உறுப்பினராக சாணக்கியா ராகுல் இராசபுத்திரனை முன்னிலைப்படுத்த முயற்சிகள் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இது பட்டிருப்பு தொகுதி மக்களை மட்டுமன்றி தமிழரசுக் கடசியின் பாரம்பரிய ஆதரவாளர்களையும் மிகுந்த விசனத்துக்குள்ளாக்கியது.

இதுதொடர்ப்பிக்க கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபோது தாம் இன்னும் அதுதொடர்பான எந்த முடிவுக்கும் வரவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் கூட்டமைப்பில் நாடாளமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக சாணாக்கியா ராகுல் தற்போது அறிவித்துள்ளார்.இவர் முன்னாள் தமிழரசுக் கட்சி நாடாளமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் அவர்களின் அடையாளத்துடன் இன்று வலம் வந்தாலும் இவரின் கடந்தகால செயற்பாடுகள்  எந்த தமிழனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே.16487727 1870326813182029 7854520140266581420 o கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

சிங்கள பேரினவாத கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளராக அக்கட்சியின் 2015 ஆண்டு தேத்தல் பட்டியலில் 06 இடத்தில் சேர்க்கப்பட்ட உறுப்பினராக தமிழின விரோதி ஹிஸ்புல்லாவுடன் கைகோர்த்து செயற்பட்ட மனிதர் இவர். மேடைகளில் தமிழ் கட்சித் தலைவர்களுக்கு எதிராக வசைமாரி பொழிதவர். ஆக தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டவர்.

இவரின் தாயார் ஒரு சிங்களப் பெண்மணி என்பதற்காக நாம் இவர்மீது எந்த வன்மமும் கொள்ளவில்லை.நாம் பார்த்திருக்க தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பட்ட இந்த மனிதர் நாளை மீண்டும் சிங்களக் கட்சிகள் பக்கம் தாவமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.sa கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

அம்பாறையில் கூட்டமைப்பில் இருந்து தனது கூட்டத்தோடு ஓடிய பியசேனாவிடமிருந்து,மட்டக்களப்பில் ராஜபக்சவின் கோடிகளில் தடுக்கி விழுந்த வியாழேந்திரனிடமிருந்து கூட்டமைப்புகற்ற பாடத்தை இன்று காற்றில் விட்டுவிட்டதா?

பதவிக்காக இன்று தமிழரசுக் கட்சிக்கு தாவியிருக்கும் சாணாக்கியா இராசபுத்திரன் போன்றவர்களை சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியது கூட்டமைப்பின் கடப்பாடாகும்.

இவர்போன்ற பச்சோந்திகளை தவிர்த்து இந்த மண்ணில் உறுதியாக நிலைத்து நின்று தமிழ் மக்களுக்கு பணியாற்றக்கூடிய தேசப்பற்றாளர்களே இன்று எமக்குத் தேவையாகும்.

சாணாக்கியா போன்றவர்களை தவிர்த்து கொள்கைப் பற்றுள்ள மனிதர்களை முன்னிறுத்துவதே கூட்டமைப்பின் தார்மிக கடமையாகும்.இது இந்த மண்ணுக்கும் மண்ணை நேசித்த அந்த மனிதர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய குறைந்த பட்ச நன்றிக்கடனாகவாவது அமையும்.

viber image 2020 01 23 10 34 19 கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

viber image 2020 01 23 10 34 12 1 கூடாதவர்களின் கூடாரமாகிறதா கூட்டமைப்பு;பியசேனாக்களும் வியாழேந்திரன்களும்-மண்மகன்

 

 

முல்லை யேசுதாசன் காலமானார்

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார்.

மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை தூண்டுவதற்கு காரணமாக இருந்தது சேரலாதன் என்பவராவார்.

உதிரிப்பூக்கள் இயக்குநர் மகேந்திரன், ஜான் மகேந்திரன் போன்ற இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றிய பெருமையுடன் நீலமாகி வரும் கடல் சிறுகதை தொகுதியும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக இயக்குநர் பாராதிராஜா, மற்றும் நடிகர் மணிவண்ணன் போன்ற தென்னிந்திய இயக்குநர்கள், நடிகர்களுடன் நண்பனாக இருந்த பெருமையும் இவருக்கு உண்டு

இறுதிக்காலத்தில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றிய நிலையில், உயிரிழந்துள்ளார்.

செ.கீதாஞ்சன்

வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 2020 வீடியோ படங்கள் இணைப்பு

இயற்கை எழில் கொஞ்சும் வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் இரதேர்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இன்று (07.02) காலை முதல் கிரியைகள் இடம்பெற்று பின்னர் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பிரம்மாட்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரை மக்கள் கூடி வடம்பிடித்து இழுத்து மகிழ்ச்சியுடன் தேர்திருவிழாவை கொண்டாடினர்.

ggg 1 வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 2020 வீடியோ படங்கள் இணைப்புDSC 0269 5 வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா 2020 வீடியோ படங்கள் இணைப்பு

எல்லை மீறிய பகிடிவதை – மாணவி தற்கொலை முயற்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் செய்தி

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுவரும் பகிடிவதைகள் மாறிவருகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பீடத்திற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மாணவிகள் மீது மிகக் கொடூரமான முறையில் பகிடிவதை மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் கசிந்துள்ளன.

புதுமுக மாணவிகளின் தொலைபேசி இலக்கங்களை வாங்கும் மாணவர்கள் அநாகரிகமான முறையில் அவர்களுடன் உரையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடரும் இவர்களின் தொல்லை காணரமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவியின் தந்தை அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.அதாவது மாணவியின் தொலைபேசி இலக்கத்திற்கு ஏராளமான தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்ச்சியாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் வாட்ஸ் குழு ஒன்றினை உருவாக்கிய அவர்கள் மாணவியிடம் நிர்வாணப் படங்களை அனுப்புமாறும் மிரட்டியுள்ளனர்.இவ்வாறான அழைப்புக்கள் குறித்த மாணவி உட்பட்ட ஏனைய மாணவிகளுக்கும் வந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2444 எல்லை மீறிய பகிடிவதை - மாணவி தற்கொலை முயற்சிசமூக வலைத்தளங்களில் வைரலாகும் வைரலாகும் செய்தி

தொழிநுட்பத்தின் அசுர வளர்ச்சி இவ்வாறு பல்கலைக் கழக மாணவர்களிடையே அநாகரிகமாக செயற்பட்டு வருவதனை ஏன் பல்கலைக் கழக நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பது கேள்விக்குறியே.பல்கலைக்கழகங்களிற்குள் பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருவதாக அண்மையில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இதற்கேற்ப இவ்வாறு யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற போர்வையில் நிர்வாணப்படம் கேட்டு மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துவரும் மாணவர்களை எவ்வாறு எப்போது தண்டிக்கப்போகின்றீர்கள்.

கல்வி கலை கலாசாரம் என பல்துறைசார்ந்து பல அரசியலில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் இது போல சில மாணவர்களின் வரம்பு மீறிய செயல் கல்வி சமூகத்தை மிகையாகப் பாதிக்கின்றது.

பகிடிவதை எனும் போர்வையில் எல்லை மீறும் மாணவர்களுக்கு கடுமமையான தண்டணைகள் வழங்குவதன் மூலமே பல்கலைக்கழகத்தின் நற் பெயரையும் கல்வி சமூகத்தினரையும் கட்டியெழுப்பமுடியும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.