Home Blog Page 2391

அடிப்படை வசதிகளின்றி வாழும் மட்டு வாகரைப் பிரதேச மக்கள்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மீள்குடியேற்றக் கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது ஜீவனொபாய தொழிலை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

2007ம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் உருவாக்கப்பட்டது குகனேசபுரம் கிராமமாகும். இக்கிராமத்தில் 65 குடும்பங்களில் 350 நபர் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இடம்பெயர்ந்த வீட்டுத் திட்டத்தில் 65 குடும்பங்களில் பத்து பேருக்கு மாத்திரம் வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மலசலகூடம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தும் இதுவரை அமைத்து தரப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேறி தங்களது ஜீவனோபாய தொழிலான தோட்ட விவசாய செய்கையை மேற்கொண்டு வரும் நிலையில் யானைகள் மற்றும் மாடுகளின் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதனால் பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் யானை வேலி அமைப்பதற்கு 20 இலட்சம் பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதியை மக்கள் பெற்று வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளித்தும் இதுவரை யானை வேலி போடப்பட்டதாக தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் வாழும் மக்கள் கோடை காலங்களில் குடத்தில் நீர் சுமந்து தங்களது ஜீவனோபாய தொழிலான தோட்ட பயிர் செய்கைகளுக்கு நீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

யானை வேலி அமைப்பதற்கு வனவிலங்கு அதிகாரிகளுக்கு இருபது இலட்சம் வழங்கியும் யானை வேலி அமைக்கபடவில்லை என குகனேசபுரம் கிராம அபிவிருத்திச் சங்க உப செயலாளரும், யானைகளினால் பாதிக்கப்பட்ட நபருமான சுப்பிரமணியம் அருளம்மா தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் யானை வேலி அமைப்பதற்கு இருபது இலட்சம் ஒதுக்கப்பட்டது. இதனை அம்பாறைக்கு சென்று கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஊடான வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணத்தினை எடுத்து வழங்கினோம். ஒரு மாத்திற்குள் யானை வேலியை அமைப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

வனவிலங்கு அதிகாரிகள் எங்களை வாகனத்தின் மூலம் அம்பாறைக்கு கொண்டு சென்றனர். அவ்விடத்திலேயே பணத்தினை வழங்கினோம். பணம் வழங்கி பத்து மாதங்கள் கடந்துள்ளது. இவ்விடயமாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கேட்ட போது யானை வேலை அமைக்கும் பணி இடம்பெறுவதாக கூறுகின்றனர்.

தற்போது யானை எங்கள் பகுதிக்கு மீண்டும் வந்தவுடன் தெரிகின்றது. இவர்களை யானை வேலி அமைக்கவில்லை என்று. இவர்கள் யானை வேலி போடுவார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருப்பது ஏமாற்றத்தினை தருகின்றது.

எமது பகுதிகளுக்கு யானை வருவது தொடர்பில் அரச அதிகாரிகளிடம் தகவல் வழங்கினால் யாரும் வருகை தந்து பார்வையிடுவதும் இல்லை. இது எங்களுக்கு மிகவும் வேதனையை தருகின்றது என்றார்.

குகனேசபுரம் மக்கள் யானை மற்றும் மாடுகளினால் மிகவும் துன்பகரமான செயல்களை அனுபவித்து வருகின்றனர் என குகனேசபுரம் கிராமத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட நபரான சுப்பிரமணியம் சின்னத்தம்பி இவ்வாறு தெரிவித்தார்.

யானை வேலி கிராமத்திற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு அப்பால் போடப்பட்டுள்ளது. ஆனால் யானை வேலை சரியாக போடப்பட்டுள்ளதாக அல்லது யானை வேலி விழுந்தள்ளதாக என்று அதிகாரிகள் வருகை தந்து பார்வையிடுவதில்லை.

தென்னை மரங்கள் நாட்டிய காலம் தொடக்கம் காய்க்கும் காலம் வரைக்கும் யானைகள் தொடர்ச்சியாக வருகை தந்து பத்துக்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்துச் செல்கின்றது. அத்தோடு மாடுகள் வந்து சேதப்படுத்தினால் மாடுகளை கட்டி வைத்தால் அதற்கான அதிகாரி நான்கு நாட்களுக்கு பிறகுதான் எமது பகுதிக்கு வருவார்கள்.

எமது பகுதியில் யானைகளினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான பொலிஸ் முறைப்பாடு மற்றும் அரச திணைக்களங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பில் எங்களுக்கு எந்தவித நஷ்ட ஈடுகளும் வழங்கப்படுவதில்லை. நஸ்ட ஈடுகள் கேட்டால் அது இப்போது இல்லை. வழங்க முடியாது என்றார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90 1 அடிப்படை வசதிகளின்றி வாழும் மட்டு வாகரைப் பிரதேச மக்கள். 625.0.560.320.160.600.053.800.700.160.90 2 அடிப்படை வசதிகளின்றி வாழும் மட்டு வாகரைப் பிரதேச மக்கள். 625.0.560.320.160.600.053.800.700.160.90 3 அடிப்படை வசதிகளின்றி வாழும் மட்டு வாகரைப் பிரதேச மக்கள்.

குகனேசபுரம் கிராமத்தில் யானைகளினால் பாதிக்கப்பட்ட நபரான சுப்பிரமணியம் தங்கப்பாக்கியம் தெரிவிக்கையில்,

குகனேசபுர கிராமத்தில் பதினான்கு வருமடாக வசித்து வருகின்றேன். பலரிடம் கடன் வாங்கி தோட்டங்களை செய்து வரும் நிலையில் யானைகள் மற்றும் மாடுகளுக்கு பயிர்களை உண்பதற்கு வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இடம்பெற்றால் நாம் எப்படி முன்னேற முடியும். இது தொடர்பில் அரச அதிகாரிகள் மற்றும் கிராமமட்ட அமைப்பினரிடம் முறையிட்டால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நாங்கள் இடம்பெயர்ந்து பல இடங்களில் இருந்து குகனேசபுரத்தில் பதினான்கு வருடங்கள் ஒரு குடிசையில் ஐந்து நபர்கள் வாழ்கின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீடு தரவில்லை. வீடு தருவதாக பதிவு செய்து செல்வார்கள். ஆனால் எங்களை கவனிப்பது கிடையாது.

எனவே அரச அலுவலகத்தில் கடையாற்றும் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது வாழ்க்கையை திறம்பட மேற்கொள்ள தகுந்த உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்றார்.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாளேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், எம்.எஸ்.எஸ்.அமீர் அலிஇ அலிஷாஹிர் மௌலானா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், அரச அதிகார் உடனடியாக யானை வேலி அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படையினரரை மீள பெறும் நடவடிக்கை ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் செய்த அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருந்து தனது வீரர்களை திரும்ப பெறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த பிப்ரவரி 29ம் தேதி அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகள் படிபடியாக திரும்ப பெறப்படும். அதேபோல், தலிபான்களும் தீவிரவாத அமைப்புக்கள் உடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.

இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க படை வீரர்களின் ஒரு பகுதியை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வருகிறது. மேலும், ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சிறையில் இருக்கும் தலிபான்களை விடுதலை செய்யும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. ஏற்கனவே அதிபர் அஷ்ரப் கனி கூறியது போல். தலிபான்களை விடுவிப்பதில் ஒரு வாரம் தாமதம் ஆகியுள்ளது.

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் பலி 8,500 பேருக்கு தொற்று

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 631 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,500 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் சுமார் 1.6 கோடி மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த தொற்றுநோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றொரு பகுதியாக இத்தாலி முழுவதும் உள்ள பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் கேளிக்கை சேவைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் வைரசினால் பாதிப்பு

உலகில் உள்ள 112 மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் தப்பவில்லை.

பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் நடீன் டொறீஸ் கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் சுயமாக தன்னை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் நேற்று (10) இரவு பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் பிரித்தானியா பிரதமர் வழங்கிய விருந்துபசாரத்தில் கடந்த வாரம் கலந்துகொண்ட டொறீஸ் நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்திருந்ததால் அவர்களும் நோயினால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய இராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

இங்கிலாந்தில் 324 பேரும், ஸ்காட்லாந்தில் 27 பேரும், வடக்கு அயர்லாந்தில் 16 பேரும், வேல்ஸில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இத்தாலி முற்று முழுதாக உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 631 பேர் மரணமடைந்துள்ளதுடன், 10,149 பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் இதுவரை 4000 இற்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதுடன், 113,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 64,000 குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் தீயணைப்புவாகனத்தை உருவாக்கி பிரதேசசபை சாதனை!!

சாதாரண தண்ணீர்தாங்கி வாகனம் ஒன்றில் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை எற்படுத்தி தீயணைப்பு வாகனமாக உருமாற்றம் செய்துவவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் து.நடராயசிங்கம் எமது பிரதேசபைக்கு தீயணைப்பு வாகனம் ஒன்றின் அவசியத்தை கருத்தில் கொண்டு உள்ளுராட்சி ஆளுகை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அவர்களது 5 இலட்சம் ரூபாய் நிதிஉதவியுடன் பிரதேசசபையினரின் தொழில்நுட்ப அறிவினையும பயன்படுத்தி குறித்த தீயணைப்பு வாகனம் உருவாக்கபட்டுள்ளது.

வடமாகாணத்திலே குறைந்தளவு நிதியினை செலவளித்து இவ்வியந்திரத்தை உருவாக்கியுள்ளோம். இதனை இன்று பரீட்சித்து பார்த்துள்ளோம். இனிவரும் காலங்களில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி தீ விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த வாகனம் தீயணைப்பு வாகனத்தை ஒத்தவகையில் அதிதிறன் வாய்ந்தவாறு உருவாக்கபட்டுள்ளதுடன் காலை வேளைகளில்.0242225737என்ற தொலைபேசிஇலக்கத்திற்கும் இரவுவேளைகளில் 0773634511,என்ற தொலைபேசிஇலக்கத்திற்கும் தொடர்புகொண்டு பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும் என்று மேலும் தெரிவித்தார்.

DSC00880 குறைந்த செலவில் தீயணைப்புவாகனத்தை உருவாக்கி பிரதேசசபை சாதனை!!

DSC00892 1 குறைந்த செலவில் தீயணைப்புவாகனத்தை உருவாக்கி பிரதேசசபை சாதனை!!

DSC00909 குறைந்த செலவில் தீயணைப்புவாகனத்தை உருவாக்கி பிரதேசசபை சாதனை!!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் : விக்கி – சுமந்திரனுக்கும் அழைப்பு!

எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடவுள்ள மூன்று பிரதான கட்சிகளும் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏனைய இரண்டு கட்சிகளுக்கும் சவால் விடுத்துள்ளது.

பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தயார் எனத் தெரிவித்துள்ள கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண், அந்த விவாதத்திற்கு சுமந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கNஐந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகிய மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அந்த அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக் கொண்டு பிகிரங்க விவாதத்திற்கு தாம் தயார் என அறிவித்துள்ளதுடன் ஏனையவர்களும் அவ்வாறு விவாதத்தை மேற்கொள்ளத் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணண், ‘தேர்தலொன்று நடைபெறவிருக்கின்ற நிலையில் மூன்று தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் பிகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டுமென யாழ் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பகிரங்க விவாதத்தை மேற்கொள்வதற்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையினால் அத்தகைய விவாதத்திற்கு எமது கட்சி தயாராகவுள்ளது. அதே போல ஏனைய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் தயார் என்றால் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள முடியும். அதனூடாக மக்களும் பல விடயங்களைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகையினால் பகிரங்க விவாதத்தை மேற்கொள்ள வேண்டியது பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.

எனவே ஒவ்வொரு கட்சிகளிலில் இருந்து இரண்டு பேர் கலந்து கொள்ளக் கூடிய வகையில் அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகள் விவாதத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும். மக்களுக்கு எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் செயற்படுகின்ற எமது கட்சியானது எதற்கும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

அதனடிப்படையில் பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் என்பதை தெரிவித்துக் கொள்கின்ற அதே வேளையில் ஏனைய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் அதற்குத் தயாரா என்பதையும் கேட்கின்றோம்.

ஆகவே விடுக்கப்பட்ட பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை ஏனைய இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கு முன்வரும் போது எமது கட்சியும் அந்த விவாதத்தில் பங்கெடுக்கத் தயார்’ எனக் குறிப்பிட்;டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றிய முதலாவது நபர் இனம் காணப்பட்டார்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான இலங்கையை சேர்ந்த ஒருவர் முதன் முறையாக இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் குறித்த நபர் தற்போது அங்கொட ஆதார வைத்தியசாலையில் (IDH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில் அவர் கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அதனை உறுதி செய்வதற்காக MRI பரிசோதனை செய்ய உள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

52 வயதுடைய சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்படும் ஒருவரே இவ்வாறு வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளார்.

குறித்த நபர் இத்தாலி நாட்டு குழு ஒன்றிற்கு சுற்றுலா வழிகாட்டியாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருக்கு தேவையான வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா பயணிகள் பயணித்த இடம் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் : அரசு ஒருபோதும் தப்பவே முடியாது!

இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த விடயத்தில் இருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது. இது தொடர்பில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைத்தே தீருவோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி தமிழர் தாயகத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம். எவரையும் நாம் காணாமல் ஆக்கவில்லை. அதேவேளை, சரணடைந்த எவரையும் நாம் சுட்டுக்கொல்லவும் இல்லை’ என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களான தமிழ் இளைஞர்கள் சிலரை அலரி மாளிகையில் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ‘காணாமல் ஆக்கப்பட்டோர் என்று கூறப்படுபவர்கள் இறுதிப் போரில் உயிரிழந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வதே சிறந்தது’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடத்திய கலந்துரையாடலின்போது கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் மேற்படி கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும்போது தெரிவித்ததாவது:-

“அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தமிழர்கள் மறந்துவிடவே முடியாது. இது மறக்கக்கூடிய விடயம் அல்ல.

இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்.

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த விடயத்தில் இருந்து அரசு ஒருபோதும் தப்பவே முடியாது. இது தொடர்பில் சர்வதேச அரங்கில் இலங்கை அரசைப் பொறுப்புக்கூற வைத்தே தீருவோம்.

ஜனாதிபதியும் பிரதமரும் இந்த நாட்டின் தலைவர்கள். இருவரும் தமிழர்கள் விடயம் தொடர்பில் பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இது ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல” – என்றார்.

சர்வதேச விசாரணை முழுமையாக இடம்பெறவில்லை! வி.உருத்திரகுமாரன்

இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை முழுமையாக இடம்பெறவில்லை என்பதோடு, பொறுப்புக்கூறலின் சர்வதேச நீதிக்கான விசாரணை இன்னமும் தொடங்கப்படவே இல்லை எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் 43வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்றிருக்கும் இவ்வேளையில், இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடைபெற்றுள்ளதா என எழுந்துள்ள வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2014ம் ஆண்டு ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட Mr. Martti Ahtisaari, ( former President of Finland), Ms. Silvia Cartwright, (former High Court judge of New Zealand), Ms. Asma Jahangir( former President of the Human Rights Commission of Pakistan) ஆகிய வளஅறிஞர்களினால் மேற்கொள்ளப்பட்டு 2015ம் ஆண்டில் Report of the OHCHR Investigation on Sri lanka (OISL) அறிக்கை வெளிவந்திருந்தது.

இலங்கையில், அரசாங்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், மற்றவர்களை விசாரணை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பதோடு, யுத்தம் தொடர்பான ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக (நம்பத்தகுந்த) பாரிய அளவில் பாலியல் வன்புணர்வுகள், சித்திரவதைகள் என பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முக்கியமாக அந்த அறிக்கையில் பாவிக்கப்பட்ட சட்டவிதிகள் reasonable grounds to believe அடிப்படையில் நீதிமுறையிலான விசாரணைகளை போதுமானதாக காணப்படுகின்றது. இந்த விதிகளின் அடிப்படையில் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையினை பிறப்பிக்கின்றது.

குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், judicial investigation முறையில் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிவிசாரணை ஒன்றின் மூலம் குற்றங்களுக்கான பொறுப்பானவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட முடியும்.

இதனை OISL அறிக்கையின் பரிந்துரையின் 36வது சரத்தில் (under universal jurisdiction, investigate and prosecute those allegedly responsible for violations, such as torture, war crimes or crimes against humanity ) விசாரணை செய்யப்பட வேண்டும் என தெளிவாக குறிக்கப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்தின் 6வது சரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவது,

foreign judges, defence lawyers and authorized prosecutors and investigators வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுனர்கள் மட்டுமல்ல விசாரணையாளர்களும் investigators தேவை என தெரிவிக்கப்பட்டிருப்பதானது, நீதிமுறையிலான விசாரணையின் (judicial investigation) அவசியத்தினை அது வலியுறுத்துகின்றது.

1000க்கு மேற்பட்ட தரவுகளின் அடிப்படையில், இரகசியமான முறையில் பெறப்பட்ட சாட்சியங்கள், வாக்குமூலங்களின் அடிப்படையில் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது என்பதனை இதன் விசாரணை OISL அறிக்கையாகிய போதும் இது முழுமையான சர்வதேச விசாரணை ஆகிவிடாது. judicial investigation மூலமான பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச நீதிவிசாரணை ஒன்றின் மூலமே இது முழுமையடையும்.

சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதா, இல்லையா என்பது பற்றி வாதப்பிரதிவாதங்கள் செய்து கொண்டிருக்கின்ற காலம் இதுவல்ல. இந்த வாதத்துக்கான தேவை ஏன் எழுகின்றது என்பது புரியவில்லை.

ஜெனீவாவில் நமக்கான நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டும், காத்துக் கொண்டும் இருக்க முடியாது. ஜெனீவாவையும் ஒரு களமாக கையாள்வது போல், வேறு நீதிக்கான களங்களை நாம் திறக்க வேண்டும்.

சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் ஜெனீவாவில் எடுக்கின்ற முடிவுகளுக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் அமைய, எமது செயற்பாடுகளை அமைத்து விட முடியாது.

நமக்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஜெனீவாவை ஒரு களமாக பாவிக்க வேண்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் அமைந்துள்ள Transitional justice பொறிமுறையினை நாம் கோரவில்லை.

ஈடுசெய்ய Remedial justice நீதிப்பொறிமுறையினைத் தான் நாம் கோரியிருந்தோம். இது நமது நிகழ்ச்சி நிரல். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது ஐ.நாவின் இனப்படுகொலை தடுப்புக்கான உடன்பாட்டுக்கு அமைய, இலங்கையை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துதல், அரசியல் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சி நிரலின் உள்ளம்சங்களாகவுள்ளன.

மேலும் இலங்கையில் காணப்படுவது பௌத்த பேரினவாத இனநாயகமே அன்றி ஜனநாயகம் அல்ல. சிங்கள தேசத்தின் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதல்ல தமிழர் தேசத்தின் நோக்கம். அது மேலும் மேலும் இலங்கையில் சிங்கள பௌத்த இனநாயகத்தையே இறுக்கமடையச் செய்யும்.

நமக்கான நீதிக்காகவும், அரசியல் இறையாண்மைக்காகவும் போராடுவதே தமிழர் தேசத்தின் தேவையென பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.

பிணை முறி மோசடி விவகாரத்தில் அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2000 ஆண்டு தொடக்கம் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை பிணை முறி மோசடி தொடர்பில் தேர்தல் மேடைகளில் கருத்து தெரிவித்து வந்ததாக தெரிவித்தார்.

தற்போது அனைத்து அதிகாரங்களும் இவர்களுக்கு இருக்கின்ற நிலையில் குற்றவாளிகளை கைது செய்வது சிரமமான காரியம் அல்லவென அவர் தெரிவித்தார்.