Home Blog Page 2383

ஸ்ரீலங்காவில் திருமண நிகழ்வுகள் செய்வதற்கு தடையா? – புதிய நடைமுறை அமுல்

இலங்கையில் திருமணம் நிகழ்வுகளை தடை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் திருமண நிகழ்வுகளை நடத்தும் போது, சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, முழுமையான சுகாதாரத்துடன் திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்வுகளுக்கு குறைந்த பட்ச எண்ணிக்கையிலானோரை இணைத்துக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைதானங்களில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்காக அனுமதி வழங்க கூடாதென அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன கூறியுள்ளார்.

தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு பொலிஸ் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பேரவையுடன் -பா. டெனிஸ்வரன்

முன்னாள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைப்புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் த.இ.மலரவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மக்கள் போரவை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சைக் குழுவாக போட்டியிடுவுள்ளது. இந்நிலையில் அவர்கள் வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டு வரும் நிலையில் பா. டெனிஸ்வரனும் இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுக்கள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணி ஒருவருடனும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவாகவும் தெரிவித்தார்.

அண்மையில் பா. டெனிஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வேட்பாளர் தெரிவின் போது முன்னாள் போராளிகளைளும் உள்வாங்குமாறு பகிரங்கமாக கடிதமொன்றினை அனுப்பியிருந்த நிலையில் அது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதிலளிக்காத நிலையிலேயே அவர் விடுதலைப்புலிகள் மக்கள் போரவையுடன் இணைந்து வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவுள்ளார்.

இதேவேளை அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றில் அதிகளவில் முன்னிலையாகி வருபவரும் வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியொருவருடனும் தாம் பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

ss 1 விடுதலைப்புலிகள் பேரவையுடன் -பா. டெனிஸ்வரன்

சுகாதார அமைச்சு கர்ப்பிணித் தாய்மாருக்கு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் பரவிவரும் கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு, இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும், ஏனையோர் தேவை ஏற்படும் பட்சத்தில் மாத்திரம் வருகை தருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவர்களில், குறிப்பாக 8 மாதங்கள் பூர்த்தியாகாத கர்ப்பிணி தாய்மார்களின் வீடுகளுக்கு சென்று சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு குழந்தைகளுக்கு ஏற்றப்படும் ஊசியை ஏற்றாதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் தேவையேற்படும் பட்சத்தில் மாத்திரம் வெளியே செல்லுமாறும், வீணாக வெளியே சுற்றித்திரிவதை தடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

வெந்நீரூற்று கிணறு பிரதேசத்திற்கு தற்காலிக பூட்டு

ஊள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் அரிய திலக இது தொடர்பாக தெரிவிக்கையில் நேற்று முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாக கூறினார்.

இதேவேளை நிலாவெளியில் உள்ள பறவைகள் தீவும் நேற்று முதல் 2 வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக வன ஜீவராசிகள் உதவிப்பணிப்பாளர் கீர்த்தி சந்திர ரத்ன தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்கள் ஆணைகுழு அதிகாரிகளுக்கும் சுகாதார துறை அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (16) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றைய தினத்தில் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்றைய தினத்தை (16) அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டே வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை அதேபோல் கட்டுப் பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை என்பன இன்றைய தினம் இடம்பெறாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாளை (17) மற்றும் நாளை மறுதினம் (18) ஆகிய நாட்களில் காரியாலய நேரத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.30 முதல் மதியம் 12 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும் கட்டுப் பணத்தை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 19 ஆம் திகதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கை அதேபோல் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் செயற்பாடு என்பன நிறைவடைந்தன் பின்னர் அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் அனுப்பி வைக்கும் தரவுகளுக்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வாக்கெடுப்பு இடம்பெறும் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார்.

அதாவது சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒருவரை மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்ல முடியும் என அவர் அறியுறுத்தியுள்ளார்.

அதேபோல் வேட்புமனு தாக்கல் செய்யும் மண்டபத்திற்குள் வெளியில் ஆதரவாளர்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு பொது மக்கள் கூட்டங்களை நடத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சி உறுப்பினர்களை கேட்டுள்ளார்.

இலக்கு-இதழ்-69-மார்ச்15,2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு-இதழ்-69-மார்ச்15-2020

சுவிற்சலாந்தும் கோரோனோ வைரசும்;வதந்திகளை தவிர்த்து உண்மை நிலையை அறியுங்கள்

பறவைக்காச்சலில் இருந்து உருவம் மாறி «மலர் மகுடம்» எனும் பொருள் கொண்ட பெயரில் கொறோனா எனும் உயிர் கொல்லக்கூடிய கிருமி இன்று மூன்றாவது உலகப்போரை நோய் வடிவில் தொடங்கி இருக்கின்றது. சீனாவில் பிறப்பெடுத்து அண்டை நாடுகள் முதல், உலகம் முழுவதும் பரவி இன்று ஐரோப்பாவையும் அதன் நடுவில் சுவிறடசர்லாந்தையும் முற்றுகையிட்டு விட்டது.

டிசம்பர் 2019 முதல் இந்நோயின் பரவல் தொடரந்திருந்தாலும் 20 பெப்பிரவரி முதல் சுவிசை அணுகிய நோய், திடீர்பரவலால் இத்தாலிக்குப் போட்டியாக சுவிசிலும் நோய்பரவச் செய்துள்ளது.

சமூக அக்கறை என்ற பெயரில் அறிந்ததையும், அறியாததையும் சிலர் தெரிந்தும் – தெரியாமலும் சமூகவலைத் தளங்களில் பெரும் பதற்றத்தை தங்கள் பங்கிற்குப் கொழுத்திப் போயுள்ளார்கள். பாட்டி வைத்தியம் முதல், சித்த வைத்தியம், உணவில் இரசம் வரை பலரும் பல வைத்தியங்களும் தம் விருப்பம்போல் பரப்பியும் விட்டுள்ளார்கள்.

வளர்ந்த சுவிற்சர்லாந்து நாடு பேரிடர் பெருங்குழுவொன்றைக் கொண்டதாகும். இருந்தபோதும் யப்பான் நாடு எடுத்த நடவடிக்கையினை ஏன் சுவிற்சர்லாந்து எடுக்கவில்லை என்று எம்மில் கேட்போரும் உண்டு. 13. 03. 2020 பிற்பகல் நடைபெற்ற பொதுக்கூடத்த்தில் சுவிசின் நான்கு நடுவன் அரச அமைச்சர்கள் பங்கெடுத்து தத்தமது துறைசார்பில் எட்டப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கைகளை விளக்கினர்.

அப்போது நீங்கள் திடீரென இம்முடிவுகளை ஏன் எடுக்கின்றீர்கள் என்றும் வினாவப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நாம் முற்கூட்யே முடிவுகளை எடுப்பது சிறந்தல்ல. கிரிமித்தொற்றின் போக்கே எமது செயல்களை முடிவெடுத்தது. எதுவும் நடக்காதபோது நாம் முடங்கி இருப்பின் அதுவும் சிறந்ததல்ல, இப்போது எச்செயலும் ஆற்றாமல் இருப்பதும் சிறந்ததல்ல. இன்று நாம் அறிவிக்கும் முடிவுகளை அறிவிக்க இன்றே பொருத்தமான நாளாகும். யேர்மன் நாட்டின் மருத்துவ ஆய்வு சிறார்களை கொறோனா பாதிக்கவில்லை என்றும், அப்படிப் பாதிப்பு அடைந்திருந்தாலும் சிறார்கள் மற்றும் இளையோர் உடல் அந்நோயின் தாக்கத்தினை வெளிக்காட்வில்லை என்றும், நோயின் அறிகுறிகள் இல்லாதா இளவயதினர் வீடுகளில் உள்ள முதியோர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு கொறோனாவை பரப்பக்கூடிய ஆபத்து இருப்பதாலும் பாடசாலைகளை மூடுவது நோய்த்தொற்றைக் குறைக்கும் என்ற முடிவிற்கு தாம் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

சுவிற்சர்லாந்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நிறுவனமும் இக் கொறோனா காலத்தில் தமது நிறுவனங்களின் நலனையும் அதேநேரம், பேரிடர் ஏற்பாட்டால் எப்படித் தாம் முகம் கொடுத்து செயற்பட வேண்டும் என்ற ஒத்திகையினையும் தமது தொழிலாளர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்து வருகின்றது. இப்படியான முன்னேற்பாட்டுக்கூடத்தின் தகவல்கூட கடந்தவாரத்தில் பேர்ன் மாநிலத்தில் அமைந்திருக்கும் «சோன்பூலில்» பெரும் அங்காடியான «சொப்பிலாண்ட்» பூட்டப்படவுள்ளது என்ற தவறான செய்தியையும் பரப்பச் செய்தது.

இதுபோன்ற வதந்திகளுக்கும் பதில் அளிப்பதாக 13. 03. 2020 அன்று சுவிற்சர்லாந்தின் அதிபர் தெரிவித்த கூற்று கீழ்கண்டவாறு அமைந்தது: சமூகவலைத்தளங்களி;ல் தவறான செய்திகள் பரவுகின்றன. நாம் எவ்வேளையும் கடைகளைப் பூட்டமாட்டோம் என்றார். செய்தியாளர் இடைமறித்து இத்தாலியில் நிறுவனங்கள் பூட்டப்படதுபோல் என்று உவமை சொன்னார். சுவிஸ் அதிபர் அதனையும் திருத்திச் சொன்னார் இத்தாலியிலும் உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் விற்கும் அங்காடிகள் முழுமையாக மூடப்படவில்லை என்றார்.

உண்மையான அக்கறை என்பது மக்களை அச்சப்படுத்துவது கிடையாது. மாறாக சுவிற்சர்லாந்தின் துறைசார் மருத்துவ மற்றும் பேரிடர் நீக்கும் சிறப்புக் குழு உறுப்பினர்கள் வழங்கும் மதியுரைகளைப் பொருள்மாறாமல் உண்மையுடன் எளிமுறையில் புரியக்கூடியதாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்வதாகும். பொதுமக்களைக் கலகப்படுத்தி, பொருட்களை வாங்கி அடுக்குங்கள் என்று குழப்பிவிடுவது எந்த நலனையும் கொடுக்காது. ஆதாரமற்ற செய்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பகிர்வதைத் தவிருங்கள், வீண் பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்.

சுவிசில் கொறோனா தொடர்பான உண்மையான செய்தியினை சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் இணையப் பக்கத்தில் சென்று பாருங்கள் டொச், பிறெஞ், இத்தாலி மற்றும் ஆங்கில மொழியில் தகவல்கள் உடனுக்குடன் தரவேற்றப்படுகின்றது:

https://www.bag.admin.ch/…/situation-schweiz-und-internatio…

பொய்ச் செய்தியை படிக்காதீர் – பரப்பாதீர்.

சுவிற்சர்லாந்து நடுவன் அரசு வெளியிட்டிருக்கும் பேரிடர்கால நடவடிக்கைச் சுருக்கம்:

28. 09. 2012ம் அண்டு இயற்றப்பட்ட (திருத்தப்பட்ட) சுவிற்சர்லாந்து அரச யாப்பின் 184வது சட்டம் 3ம் மற்றும் 185வது 3ம் பிரிவிற்கமைய இவ்விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

பேரிடர் நடவடிக்கையின் நோக்கம் இதுவாகும்:

13. 03. 2020 வெள்ளிக்கிழமை சுவிற்சர்லாந்தின் நடுவன் அரசு சிறப்பு விதி கொறோனா கிரிமி பரவலைத் தடுப்பதற்கும், தொற்றை மட்டுப்படுத்திக்கொள்வதற்கும், பெருமளவில் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், இத் தொற்றால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வயதெல்லை உடையவர்களைக் காப்பதற்கும், பெருந்தொற்றுக் காலத்தில் சுவிற்சர்லாந்து நாட்டின் நலவாழ்வுத் (சுகாதார) துறையின் வளங்களைப் பேணிக்காப்பதற்கும் அமைக்கப்படுகின்றது.

நலவாழ்வு (சுகாதாரத்துறையின்) வலுவைப் பேணுவதற்கு எல்லைப் போக்குவரத்து வரையறுக்கப்படுகின்றது

சுவிற்சர்லாந்தில் வாழும் மக்களின் நலனைப் பேணுவதற்கு நோய்த் தொற்றினைப் பெருக்கக்கூடிய பகுதிகளில் இருந்து சுவிசிற்குள் வரும் மக்களை வரையறுக்க வேண்டி உள்ளது.

நோய்த் தொற்றினை அதிகரிக்கும் பகுதி என சுவிசால் நோக்கப்படும் இடம் சுவிற்சர்லாந்துடன் எல்லையினைக் கொண்டு, அங்கு கொறோனா காரணமாக அவசரகால நடைமுறை அமுல் படுத்தப்பட்டிருந்தால் அப்பகுதி இவ்வாறு நோக்கப்படுகின்றது. தற்போதைக்கு இது இத்தாலி நாட்டிற்கு மட்டுமே பொருந்தும்.

கீழ்க்காணும் தகை உடையோர் மட்டுமே சுவிற்சர்லாந்து எல்லைகளில் என் நேரமும் உள் நுழைய முடியும்:

• சுவிற்சர்லாந்துக் குடியுரிமை

• சுவிசில் தங்குகை அல்லது வதிவிட அனுமதி

• சுவிசில் தொழில் செய்ய அல்லது வியாபாரம் செய்ய அனுமதி உள்ளோர்

• தொழில்ரீதியாகப் பொருட்களை கொண்டுசெல்வோர் – வழங்கல் பணிசெய்வோர்

• சுவிற்சர்லாந்து ஊடாக 3வது ஒரு நாட்டிற்கு பயணம் செய்வோர்

• மிகுந்த அவசரநிலையில் உள்ளோர், தக்க சான்றுகளுடன்

சுவிசிற்குள் உள்நுழையும்போது எல்லைக்காப்பு அதிகாரிகளிடம் மேலே குறிப்பிட்ட தகையினை உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடாக நாட்டிற்குள் நுழைய முயன்றால் சட்டப்படி தண்டிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திற்குள் நுழையத் தடை விதிக்கப்படும்.

செங்கன் நாட்டின் விமான நிலையத்தில் இருந்து உள் நுழைந்தாலும் அல்லது விமானம் மூலம் சுவிசிற்குள் நுழைந்தாலும் மேலான விதிகள் பொருந்தும். தேவைப்பட்டால் தொற்று அபாயம் உள்ள நாடு அல்லது பகுதி நாட்;டுடன் விமானப் போக்குவரத்தும் சுவிசரசால் துண்டிக்கப்படலாம்.

பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நடவடிக்கை:

நேரில் தோற்றி கல்வி கற்கும் பாடசாலைகள், மேல்நிலை மற்றும் உயர்கல்வி நிலையங்கள், இடைநிறுத்தப்படுகின்றன. ஆனால் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களுக்கு விடுப்பு வழங்கி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. வாய்பிற்கேற்ப இணையவழியில் கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. குழந்தைகள் பராமரிப்பு மாநில அரசின் பொறுப்பென நடுவன் அரசு அறிவித்திருக்கின்றது. ஆகவே சரியான முடிவுகள் மாநிலங்களால் பெரும்பாலும் 16. 03. 2020 எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னரே தீர்மானிக்கப்பட்ட உயர்தேர்வுகள் (பரீட்சைகள்) பாதுகாப்பு நடவடிக்கை கைக்கொள்ளப்பெற்று சூழல் ஏற்புடையதாயின் நடத்தப்படலாம்.

100 மக்களுக்கு மேற்பட்டு தனிப்பட்டோ பொதுவாகவோ நிகழ்வுகள் நடத்தப்படுவது தடைசெய்யப்படுகின்றது. 100 விருந்தினர்களுக்கு உட்பட்டோர் பங்கெடுக்கும் நிகழ்வுகள் சரியான உடல் நல நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்பட்டு நடாத்தப்படலாம்.

நோய்வாய்ப்பட்டோர் நிகழ்வுகளில் பங்கெடுக்கக்கூடாது, அப்படி அறியப்பட்டால் அவர்கள் நிகழ்வுகளில் இருந்து வெளியேற்றப்படவேண்டும்.

நோய் தொற்றக்கூடிய ஆபத்து உள்ளவர்களை விலக்கி வைக்கப்பட வேண்டும். உரிய இடைவெளி விடப்பட்டு, பொதுவான மாசு-, நோய்த்தொற்று தவிர்க்கும் முறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

இவ்விதிகள் அடிப்படையில் உணவகம், இரவு விடுதி, நடனவிடுதி ஆகியன 50 விருந்தினர்களை உள்ளடிக்கி விருந்தோம்பலாம். போதியளவு இடைவெளிகள் விடப்படுவதுடன் முன்னர் குறிக்கப்பட்ட நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கைக்கொள்ளப்பட வேண்டும்.

நடுவன் அரசினால் வெளியிடப்படும் இவ் விதிகளை மக்கள் ஒழுகவைக்க மாநில் அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் நடுவன் அரசினால் வழங்கப்படுகின்றது.

பொது இடங்களில் இதுதொடர்பாக அதிகாரிகள் எந்நேரமும் சோதனை மேற்கொள்ளலாம். அதிகாரிகள் உள்நுழைந்து ஆய்வுசெய்ய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உடல்நலப்பாதுகாப்பு தொடர்பான கட்டாய அறிவிப்பு

அனைத்து மாநிலங்களும் நடுவன் அரசினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நடுவன் அரசின் உடல்நலப்பாதுகாப்பு நடுவத்திற்கு தாம் பராமரிக்கும் நோயாளர்கள் தொகை, மற்றும் தயாராக இருக்கும் நோயாளர் படுக்கைத் தொகையினை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும்.

கொறோனா தொற்றுத் தொடர்பாக ஆயப்படும் தகவல்கள், பயன்படுத்தப்படும் படுக்கையின் தொகை என்பனவும் நடுவன் அரசிற்கு தெரிவிக்கப்படவேண்டும்

தீவிரசிகிச்சை பெறும் நோயாளர்கள் தொகை, தயாராக இருக்கும் படுக்கைகள் தொகை என்பன அறிவிக்கப்பட வேண்டும்.

கையிருப்பில் இருக்கும் நோய்க்காப்பு ஆடைகள், மாசு தவிர்க்க பயன்படும் பொருட்கள், மூச்சுநலன்பேண் முகமூடிகள், கையுறைகள், காப்பு அணிகள் மற்றும் காப்புக்கண்ணாடிகள் நடுவன் அரசிற்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணியில் உள்ள மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் தாதிமார் தொகையும் தெரிவிக்கப்படவேண்டும்.

தற்போது நிலவும் பேரிடர்சூழலில் மருத்துவமனைகள் தம்மால் பொறுப்பேற்கக்கூடிய ஆகக்கூடிய நோயாளர் தொகை, தம்மால் வழங்கக்கூடிய கட்டில்தொகை, தமது முழு வலு எது என்பதனையும் நடுவன் அரசிற்கு அறிவிக்க வேண்டும்.

28.02.2020 சுவிற்சர்லாந்து நாட்டின் நடுவன் அரசால் வெளியிடப்பட்ட பேரிடர் பாதுகாப்பு விதிகள் இத்தால் விலக்கப்படுவதுடன் 13.03.2020 வெள்ளிக்கிழமை 15.30 மணிமுதல் இங்கு குறிக்கப்படும் புதிய விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. இதில் எல்லைப் பாதுகாப்பு விதிகள் மட்டும் 16.03.2020 காலை 06.00 மணிமுதல் நடைமுறைக்கு வருகின்றது.

பாடசாலைகள் தொடர்பாக எட்டப்பட்ட முடிவு 04. 04. 2020 வரைக்கும் செல்லுபடியாகிறது.

ஏனைய அனைத்து விதிகளும் 30. 04. 2020 வரை நடைமுறையில் இருக்கும்.

குறோனா நோய்த் தொற்றுச் சூழலிற்கேற்ப இவ்விதிகள் நடுவன் அரசினால் மேலும் கடுமையாக்கப்படலாம் அல்லது தற்போதைய சூழல் சீரடைந்து நலன் பெருகினால் தடைகள் தளர்த்தப்படலாம்.

ரிச்சீனோ மாநிலத்திற்கு அடுத்தபடியாக பிறைபூர்க் மாநிலம், சுவிஸ் நடுவன் அரசின் இம்முடிவிற்கு முன்னரே பாடசாலை மூடப்படுவதாக அறிவித்திருந்தது. ஏனைய மாநிலங்கள் நடுவன் அரசின் பரிந்துரை மற்றும் கட்டளைகளை தாம் எப்படி நடைமுறைப்படுத்த உள்ளோம் என்பதை எதிர்வரும் 16. 03. 2020 திங்கட்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடுவன் அரசின் அறிவித்திலிற்கு அடுத்து உடன்கூடிய பேர்ன் மாநில அரசு, சுவிஸ் நடுவன் அரசு முன்மொழிந்திருக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மற்றும் கட்டளைகளையும் தாம் அப்படியே மாற்றம் ஏதுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பேர்ன் நகரசபை மாநில அரசின் மற்றும் அதுபோல் நடுவன் அரசின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பு உத்தரவாதத்தினை வழங்கி உள்ளது.

தொகுப்பு: சிவமகிழி

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து வருகை கந்தகாடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 பேரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

ghfghfhfghghf வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

ghghhfgh வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

கருணா ஈ பி டி பி இல் இணையலாம் டக்ளஸ் பகிரங்க அறிவிப்பு

கருணா விரும்பினால் எமது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வீணைச் சின்னத்தின் ஊடாக இணைந்து தேர்தலில் போட்டியிட முடியும் யாரும் எமது கட்சியில் இணைய தடையில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் நீரியல்வள அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாக அம்பாறை திருக்கோவில் பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வருகைதந்த அமைச்சரிடம் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் நோக்கில் வாக்குகளை சிதறடிக்காத வகையில் கருணாவுக்கு ஈ பி டி பி யில் இடம்கொடுக்குமாறு கருணாவின் ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பு தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்று நான் எந்த கட்சியின் ஆட்சிக்கும் முட்டுக் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்த கட்சிகளுக்கு மேலதிக ஆதரவாகவே நான் இணைந்து செயற்பட்டு இருந்து வந்தேனே தவிர எந்த கட்சிக்கும் நான் இதுவரை முட்டுக் கொடுக்கவில்லை.

நான் மட்டும் தொடர்ந்து நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களின் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியாது என்னுடன் பலர் நாடாளுமன்றம் வருகின்ற போது நிச்சயமாக மூன்று வருடங்களுக்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க நிச்சயமாக என்னால் முடியும்.

நான் ஆயுதப் போராட்டம் மற்றும் ஜனநாயக நீரோட்டம் என பல வழிகளில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின் ஊடாக நான் தொடர்ந்து கூறுவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மாகாணசபை முறையை முழுமையாக நடைமுறையில் ஆரம்பித்து தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் இது முடிவல்ல ஆரம்பமே.

இந்த நாட்டில் எனது அனுபவத்தின் படி சேர் பொன் ராமநாதன் தொடக்கம் பிரபாகரன் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாளாமையே இவ்வாறு பிரச்சினைகள் நீண்டு செல்வதற்கு காரணமாக இருந்தன என்பது தான் எனது கருத்தாக அமைகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

நாம் பலரானாலும் ஒன்றே… உலகெங்கும் இருந்திங்கு வருகிறோம்… எம் கனவை ஒரு குரலில் பாடுகிறோம்…நீயும் நானும் நாமும் அவுஸ்திரேலியர்களே

பிலொ-ஈலா கும்பத்தின் ஒரு ஆதரவாளர்

நடேசும் பிரியாவும் அகதி தஞ்சம் கோரி கடல்வழியாக வெவ்வேறு காலத்தில், 2012இலும் 2013இலும், அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். இங்குதான் இருவரும் சந்தித்து திருமணம் செய்து கோபிகா தர்சிகா என்ற இரு பெண் குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டது.

அகதிக்கான ஒரேயொரு நேர்காணல் மட்டுமே தன்னிடம் எடுக்கப்பட்டதாக பிரியா சொல்கிறார். அதுவும் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தொலை பேசியில் எடுக்கப்பட்டது. அப்போது தொலைபேசி தொடர்பும் இடையிடை துண்டிக்கப் பட்டதால் பிரியா சொன்ன பல விபரங்கள் நேர்காணலில் சேர்க்கப்படவில்லை. இருந்தும், பிரியா குடும்பம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் என்பதையும், பிரியாவின் தாயார் சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதையும் பிரியா முன்னர் திருமணம் செய்ய இருந்தவர் சிறிலங்கா இராணுவத்தால் கொலைசெய்யப்பட்டார் (கழுத்தில் ரயர் போட்டு கொழுத்தி) என்பதையும்  நேர்காணல் எடுத்த அதிகாரி  ஏற்றுக்கொண்டார்.

ஆனால் பிரியா சிறிலங்கா விமானநிலயம் ஊடாக சட்டப்படி நாட்டிலிருந்து வெளியேற முடிந்ததால் அவருக்கு அங்கு பிரச்சனையில்லை என்ற அடிப்படையில் அவருடைய அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அதுபோலவே நடேசுக்கும் விடுதலைப்புலிகள் தொடர்பு இருந்தாலும், அவர் போர்நிறுத்த ஒப்பந்த காலத்தில் சிறிலங்காவிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு போய் வந்ததால் அவருக்கும் சிறிலங்காவில் எதுவித ஆபத்தையும் இல்லை என்ற அடிப்படையில் அவருடைய அகதி கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

இவர்கள் குடும்பம் பிரிஸ்பேன் மாநிலத்தின் பிலொ-ஈலா என்ற ஒரு கிரமத்தில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரியாவின் தற்காலிக விசா முடிவடைந்த அடுத்த நாள் அதிகாலை, அவுஸ்திரேலிய எல்லைகாக்கும் படையினரும் காவல்துறையினரும் சேர்ந்து இக்குடும்பத்தின் வீட்டை முற்றுகையிட்டனர். தங்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள அவர்களுக்கு பத்து நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

குடும்பம் மெல்போனில் உள்ள தடுப்புகாவல் இடமொன்றிற்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். சில நாட்களின் பின் சிறிலங்காவுக்கு திரும்ப அனுப்பும் நோக்குடன் ஒரு விமானத்திலும் ஏற்றப்பட்டனர். அகதி செயற்பாட்டாளர்களின் முயற்சியால் குடும்பத்திற்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது என்பதை கருத்திலெடுத்து நீதிமன்றம் அவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு உத்தரவிட்டது. அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.11463254 3x2 ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

அவுஸ்திரேலிய அரசோ தொடர்ந்தும் குடும்பத்தின் அகதி நிலையை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி வருகிறது. மேலும் இரண்டு வெளியேற்ற உத்தரவுகளை எதிர்த்து குடும்பம் வாதாடி அவை நீதிமன்றத்திதால் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது அக்குடும்பம் அவர்களின் இரண்டு சிறு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் தீவில் தனியாக அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் கடைசி மகள் தருணிகாவின் அகதி கோரிக்கையின் நீதிமன்ற முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இக்குடும்பத்தின் அவலம் ஈழத்தமிழர்களின் அவலத்தையே பிரதிபலிக்கிறது. பிரியா சிறுபிள்ளையாக இருந்தபோது அவருடைய அண்ணன் விடுதலைபுலிகள் அமைப்பில் இணைந்தார். இதனால் பிரியா குடும்பம் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளின் போது சிறிலங்கா இராணுவத்தால் துன்புறுத்தபபட்டது. இரவு நேரங்களில் குடும்பத்தின் வீடு குறிவைக்கப்பட்டு தாயோ தந்தையையோ அழைத்து செல்லப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து செல்லப்பட்ட பிரியாவின் தாயார் காயங்களுடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். தந்தையோ ஒரு கண்பார்வையை இழந்துள்ளார். தாயார் பாலியல் வன்புணர்வுக்கும் உள்ளாக்கப்பட்டு நினைக்கவியலாத துன்புறுத்தல்கள் அவருக்கு செய்யப்பட்டுள்ளன. பிரியாவுக்கு வயது வந்த போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டவர் இராணுவத்தால் தீயிட்டு எரிக்கப்பட்டார். பிற்காலத்தில் அவர்கள் வீடு விமான குண்டுதாக்குதலில் அகப்பட்ட போது பிரியாவுக்கும் பாரிய காயங்கள் ஏற்பட்டன.

பிரியா-நடேசின் அனுபவங்கள் இன்று உயிருடன் இருக்கும் 20-90 வயதுக்கு உட்பட்ட ஈழத்தமிழர்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 20-90 வயதுக்கு உட்பட்ட ஈழத்தமிழர் எல்லோருமே சிறிலங்கா அரசின் துன்புறுத்தல்களுக்கு ஏதோவொரு வழியில் முகம்கொடுத்திருக்கின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச்சாவடிகளில் நடந்த துன்புறத்தல்களிலிருந்து விபரிக்க முடியாத கொடிய சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்படல் மற்றும் நீதிக்கு புறம்பான கொலைகள் என்று இவை விரிகின்றன. 50களிலிருந்து தமிழருக்கு எதிராக தொடர்ந்த தீவுதழுவிய பல படுகொலைகளே ஆயுதப்போராட்டத்திற்கும் வித்திட்டன.Lee Scotte War Sri Lanka ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

அரச வன்முறைகளுக்கு ஆளாக்கப்படும் உலகின் பல மக்களை போலவே ஈழத்தமிழர்களும் உலகின் பல நாடுகளில் தஞ்சம் கோருபவர்களாக அறியப்பட்டுள்னர். அவ்வாறு தஞ்சம் கோருபவர்களும் இந்நாடுகளில் மேலும் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்தியா-ஐரோப்பா-கனடா-அவுஸ்திரேலியா என்று எங்கும் கொடுமைக்கு ஆளாக்கப்படும் ஈழத்தமிழ் அகதிகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

உலகெங்கும் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் உண்ணாவிரத போராட்டம் செய்து வருகிறார்கள். கொடுமையும் ஏக்கமும் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள். சில நாடுகளில் பாலியல் வன்புணர்விற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட பலரில் சிலர் மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இம்மாதிரியான அனுபவங்களின் பின்னணி உள்ள 20-90 வயதுக்குட்பட்ட ஈழத்தமிழருக்கு பிரியா-நடேஸ் பிலொ-ஈலா தமிழ் குடும்பம் அவலநிலையில் உள்ள பல லட்சம் தமிழர்களில் ஒன்று போலவே தெரியும்.

இந்த குடும்பத்தின் நிலைமையில் ஒரு பாரிய வித்தியாசம் என்னவென்றால், இக்குடும்பத்தின் போராட்டத்தை பிலொ-ஈலா கிராமத்து மக்களும் தமதாக்கி விட்டார்கள் என்பதுதான். இக்குடும்பம் அவுஸ்திரேலிய எல்லைப்படையினாரால் அன்று அதிகாலை வெளியேற்றப்பட முன்னரே இவர்களை பிரொ-ஈலா கிராமம் நன்கறிந்துள்ளது. இக்கிராமத்தவர் இவர்களுக்காக உருவாக்கிய போராட்ட இணையத்தளம் இது. Portfolio FeaturedImage PressRelease 2 ஈழத்தமிழரின் அவலம்தான் பிலொ-ஈலா (Biloela) ஈழத்தழிழ் குடும்பம்-ந.மாலதி 

பிலொ-ஈலா கிராமத்தினர் சிலரின் உழைப்பால் இக்குடும்பத்தின் கதை இன்று அவுஸ்திரேலியா மையநிரோட்ட ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. இதனால் அவுஸ்திரேலிய மக்களிடம் இவர்களின் கதை பிரபலமாகியுள்ளது. அவுஸ்திரேலியா எதிர்கட்சியினரும், ஐநா மனிவுரிமை கவுன்சிலும் கூட இக்குடும்பத்திற்காக குரல் கொடுத்துள்ளனர். யூரியூப்பில் ‘Biloela Tamil family’ என்று தேடினால் பல ஊடகச்செய்திகளை பார்க்கலாம்.

கடலால் கப்பலில் வரும் அகதிகளை அவுஸ்திரேலியா துரிதகதியில் கையாளும் முறையை எதிர்க்கும் போராட்டங்களுக்கு இக்குடும்பத்தின் கதை ஒரு மையப்பொருளாகி விட்டது. இந்த மனிதநேயமற்ற அவுஸ்திரேயாவின் கொள்கையை, “தவறானது”, “அகதிகளை இருவகையாக பிரித்து இவர்களை மட்டமாக கையாளுகிறது”, “துரிதமான முடிவை எட்டும் நோக்குடன் நியாயத்தை விலையாக கொடுக்கிறது” என்றெல்லாம் விபரித்துள்ளனர்.

மனிதநேயமுள்ள அவுஸ்திரேலிய மக்கள், சிறந்த உழைப்பாளிகளான இக்குடும்பத்தின் மனதை உருக்கும் நிலைமைக்காக போராட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். போராடுகிறார்கள். ஆனால், முதலில் கூறியதுபோல ஈழத்தமிழருக்கோ, பிலொ-ஈலா தமிழ் குடும்பத்தின் நிலைமை இது போன்ற பல லட்சம் ஈழத்தமிழர்களின் கதைகளில் ஒன்றுதானே என்றுதான் தோன்றும். ஈழத்தமிழர்களின் உணர்வுகளும் களைத்து விட்டது. மனித நேயமும் வற்றிவிட்டது. இக்குடும்பத்தின் கதை இவர்களை போராட்டத்திற்கு தூண்டவில்லை.

போராட்டத்திற்கு மக்களை ஒன்று சேர்ப்பதற்கு குறியீடுகள் தேவையானவை, அவசியமானவை. இக்குடும்பம் ஒட்டுமொத்த அவுஸ்திரேலியாவின் கவனத்தை ஈர்த்திருப்பதால், ஈழத்தமிழர்களும் தங்கள் நிலைமையின் பிரதிநிதியாக, பிலொ-ஈலா குடும்பத்தை குறியீடாக ஏற்க வேண்டும். அவர்களுக்கான போராட்டங்களில் இணைய வேண்டும்.