Home Blog Page 137

காசாவில் தொடரும் போர்: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகரிப்பு

ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இரண்டு மாத போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காசாவுக்குள் நுழையும் உதவிகளுக்கு இஸ்ரேல் 11 வார தடையை விதித்தது. இந்த தடை ஓரளவு நீக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இதன்படி காசாவுக்குள் வரும் அனைத்து உதவிகளையும் சரிபார்க்க இஸ்ரேல் வலியுறுத்துகிறது. ஹமாஸ் பொருட்களைத் திருப்பிவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஹமாஸ் இதனை மறுத்து வருகிறது.

மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ஐ.நா தலைமையிலான ஊட்டச்சத்து குழு நடத்திய பகுப்பாய்வில், காசாவில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5.8% பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டியதாகக் கண்டறிந்துள்ளது.

இந்த நிலையில்,இஸ்ரேல் – காசா இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில கோரிக்கைகைளை ஹமாஸ் அமைப்பினர் ஏற்காததால், இஸ்ரேல்-காசா இடையேயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதில் சிக்கல் தொடர்வதாக கூறப்படுகின்றது.

தமிழரசு கட்சிக்கு கதவு திறந்திருப்பதாக கஜேந்திரகுமார் தெரிவிப்பு

தங்களது கூட்டணியிலிருந்து ஒரு சிலர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய நேர்மையாக பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியத்தை குறிப்பிட்டு வாக்கை பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியும் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தங்களது இணக்கப்பாட்டை போன்று இலங்கை தமிழரசு கட்சியும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுக்கு வந்து அதனூடாக உள்ளூராட்சிமன்றங்களில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே, தங்களது கூட்டணியில் இணைவதற்கு இலங்கை தமிழரசு கட்சிக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கதவு திறந்தே இருக்கிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற மற்றுமொரு ஊடக சந்திப்பில் கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்காக தமிழ் தேசிய கட்சிகள் என்ற சொற் பதத்துக்கு பதிலாக தமிழ் கட்சிகளுடன் பேசுவது என்ற அடிப்படையிலேயே தங்களது கட்சி தீர்மானம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அத்துடன் தங்களது கட்சி யாருடனும் கூட்டணி வைப்பதற்கு தீர்மானிக்கவில்லை என்றும் உள்ளூராட்சிமன்றங்களில் அதிக ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது: அன்னலிங்கம் அன்னராசா

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள்  வடக்கு கடல் பாதிக்கப்படுவதாக வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்  வியாழக்கிழமை (05)  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டை பண்ணைகள் மற்றும் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை அகற்றாமல் அதனை மீன்களும் உண்டு அதை நாமும் உண்டு பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் இந்த செயற்பாட்டை தடை செய்யாமல் இருப்பது கவலையளிக்கிறது.

பருத்தித்தீவிலே அமைக்கப்பட்ட சீன அரசாங்கத்தின் கடல் அட்டைப் பண்ணையில் பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் காணப்படுகின்றன அவை அகற்றப்படவில்லை.

இதற்கு தற்போது உள்ள அரசாங்கம் தமிழ்  அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொள்கலன்களில் வந்தது பிரபாகரனின் ஆயுதங்களா? பாதுகாப்பு அமைச்சு மறுப்பு

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே 300 கொள்கலன்களில் கொழும்பு வந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று பாராளுமன்றில் தெரிவித்திருந்ததை  பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் தெரிவித்துள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றது பொய்யானது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொண்டா  தெரிவித்துள்ளதுடன் ,இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எவையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு விடயங்களை அரசியல்மயப்படுத்தக்கூடாது,பொதுஅரங்குகளில் பிழையாக சித்தரிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்​கை – இந்திய குழுவினர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங், இலங்கையின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று (05) இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறாக நடைபெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த முக்கியத்துவத்துவம் வாய்ந்த சந்திப்புக்களில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் கலந்து கொண்டார். இதன்போது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, இராணுவ பரிமாற்றங்கள் மற்றும் கூட்டு பயிற்சி வாய்ப்புகள், திறன் மேம்பாடு, அனர்த்த முகாமைத்துவ ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவி உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், கடந்த காலங்களில், இந்தியா அளித்த ஆதரவிற்காக இந்திய மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றிகளை தெரிவித்தார்.

இதேவேளை, இந்திய தூதுக்குழுவினர் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரைப் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, இலங்கையுடன் நெருக்கமான மற்றும் நட்புறவைப் பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தியப் பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். மேலும் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். இரு தரப்பினரும் வழக்கமான உயர் மட்ட ஈடுபாடுகளைத் தொடரவும், குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராயவும் இணக்கம் தெரிவித்தனர்.

குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை!

தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை  காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன்   (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார்.

குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் உள்ள சில காணிகளின் உரிமை தொடர்பாக மாகாணத்தின் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் சர்ச்சையைத் தீர்ப்பதில் முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பு உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

அந்த காணி தொல்பொருள் துறைக்குச் சொந்தமானதாக சட்டப்பூர்வமாக்கப்படவில்லை என்பதை காவல்துறையினரும் தொல்லியல் திணைக்களமும் ஒப்புக்கொண்டதாக, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர், சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வழக்குத் தொடுனர் சார்பில் தொல்பொருள் திணைக்களத்தாலும் சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன. இந்த இரண்டு சந்தேகநபர்களும் இந்த வழக்கில் இருந்து பூரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த நீதிமன்ற கட்டளையிலேயே, விசேடமாக குறித்த பிரதேசமானது இன்னமும் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது என வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என்பதை வழக்குத் தொடுனரே ஏற்றுக்கொண்டிருந்ததை நீதவான் சுட்டிக்காட்டியிருந்தார்.”

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு விவசாயிகளின் சார்பாக சாட்சியங்களை முன்வைக்க 12 சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக சட்டத்தரணி வி.எஸ். தனஞ்சயன் மேலும் தெரிவித்திருந்தார்.

தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரர் கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, புனித பிரதேசத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மே 10 அன்று மூன்று தமிழ் விவசாயிகளை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.

ஆரம்பத்தில் முல்லைத்தீவின் குருந்தூர்மலை பகுதிக்கு 78 ஏக்கர் பரப்பளவு சொந்தமானது என, மே 12, 1933 அன்று ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை மேற்கோள் காட்டி தொல்பொருள் துறை அதிகாரிகள்  அறிவித்ததாக அப்பகுதியின் தமிழ் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர், தொல்பொருள் கலைப்பொருட்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் மேலும் 229 ஏக்கர் நிலம், குருந்தூர்மலை தொல்பொருள் காப்பகத்திற்காக தொல்பொருள் திணைக்களத்தால் வரையறுக்கப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள தன்னிமுறிப்பு குளத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபடும் அப்பகுதி மக்கள், 229 ஏக்கர் நிலத்தில் அவர்களின் உறவினர்கள் 100 வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் நெல் வயல்களும் அடங்குவதாக கூறுகின்றனர்.

மே 10 ஆம் திகதி, குருந்தூர்மலை அடிவாரத்தில், மூன்று தொழிலாளர்கள் உழவு இயந்திரத்தின் ஊடாக நிலத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, தொல்பொருள் துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சங்கநாயக்க தேரரான கல்கமுவே சாந்தபோதி ஆகியோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

மூவரில் பாடசாலை சிறுவனை விடுவிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நீதிபதி டி. பிரதீபன், சந்தேகநபர்களான சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் அறிக்கை சமர்ப்பிப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என  தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தொடர்பில் அப்பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் மற்றும் விகாரைக்கும் இடையில் பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.இந்த பிரச்சினைக்கு இனவாதம் என்ற உருவமளிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள்.

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலக சட்டத்தின் பிரதான பொறுப்பாக ‘ பல்லின சமூகத்துக்குள் மற்றும் அவர்களுக்கிடையில் சிறப்பான மற்றும் முரண்பாடுகளை தோற்றுவிக்க கூடிய விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை முன்வைப்பதாகும்’ உள்ளது.இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அலுவலகத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த பிரதேசத்துக்கு பலமுறை சென்று பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாவதாக யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவரிடமிருந்து பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் தலைமையில் யாழ் மாவட்ட சகவாழ்வு சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அதேபோல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நல்லிணக்க மத்திய நிலையத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வடக்கு மாகாண காணி பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கட்டம் கட்டமாக காணிகள் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் தையிட்டி பகுதியில் காணி உரித்து கோரும் 13 குடும்பங்களின் உறுப்பினர்கள், தையிட்டி விகாரையின்  விகாராதிபதி உட்பட நிர்வாக சபை மற்றும் பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவை விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் யாழ்.நாக விகாரையில் விசேட கருத்தாடல் அமர்வும் நடத்தப்பட்டது.

பெற்றுக்கொள்ளப்பட்ட யோசனைகளை ஒன்றிணைத்து, இந்த விடயத்தை ஒழுங்குப்படுத்தல் தொடர்பிலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு யோசனைகள் உள்ளடங்கிய அறிக்கை அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலைமையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இராணுவம் மீட்ட நகைகளை பொதுவுடைமையாக்க வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன்

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  அந்த நகைகளை அரச  பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக  ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5)  நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்‌ஷ காலத்தில் நடந்த போரின் போது விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் காணாமல் போய்விட்டன. பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளன என்று பேசப்படும் நிலையில், இந்த அரசாங்கம்   இராணுவத்தினர்  வசமிருந்த நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லவொரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதை நாங்கள் பாராட்ட வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்த நகைகள் சாதாரண மக்களுடையவையே. அவர்கள் அந்த வைப்பகத்தில் நகைகளை வைத்தமைக்கான அத்தாட்சிகளை பலரும் வைத்திருக்கின்றனர். என்னிடமும் அவர்கள் வழங்கியுள்ளனர். அதனை சபையில் சமர்ப்பிக்வும் முடியும். ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் அவை செல்ல வேண்டும். அவற்றை பொதுவுடமையாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.

இந்த நகைகளை கொடுப்பதில் சட்ட வரையறைகள் உள்ளன. கூடுதலாக ஆதரங்களை காட்டும் மக்கள் இருப்பதை போன்று அந்த ஆதாரங்களை காணாமலாக்கியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவற்றை காணாமலாக்கியவர்கள் தமது நகைகளின் அடையாளங்களை கூறும் போது அதனையும் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.இதேவேளை கொடுக்கப்படாத மிகுதி நகைகளை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள். இது நல்ல விடயம் தான் ஆனால் கூடுதலாக அந்த நகைகள் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது என்றார்.

செம்மணி மனித புதை குழி: இணைந்த நிலையில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள்!

43 3 செம்மணி மனித புதை குழி: இணைந்த நிலையில் மீட்கப்படும் எலும்புக்கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை கைக்குழந்தைகள், குழந்தைகள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு , அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் , இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , வெற்று உடல்கள் ஆகவே அவை புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக காணப்படலாம் எனும் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

முழு அளவிலான போருக்கு தயாராகும் இரு பெரும் தென்னாசிய நாடுகள் – வேல்ஸில் இருந்து அருஸ்

சிந்தூர் நடைவடிக்கையை இடைநிறுத்தியுள் ளதாக இந்தியா தெரிவித்துள்ள அதேசமயம் இந்தியா பாகிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளும் ஒரு முழு அளவிலான போருக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றன.
இரு நாடுகளும் உத்தியோகபூர்வமாக போரை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை, மாறாக சிந்தூர் படை நடவடிக்கையை இடை நிறுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் தென்னாசிய பிராந்தியத்தில் ஒரு புதிய ஒழுங்கு தோன்றியிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அது மிகவும் ஆபத் தானது. அது மிகப்பெரும் போருக்கு முன்னரான ஒரு அமைதியாகும்.
அதாவது இந்த போர்நிறுத்தத்தை இரு தரப்பும் முடிவுக்கு கொண்டுவந்து ஒரு முழு அளவிலான போருக்குள் நுழையலாம். எனினும் பாகிஸ்த்தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து ஒரு சாதாரண நிலையை ஏற்படுத்த விரும்பு கின்றது. எனவேதான் மூன்று விடயங்கள் குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்துகின்றது.
நீர் விநியோகம், காஸ்மீர் பிரச்சினை மற்றும் வர்த்தகம் இந்த மூன்று விடயங்களிலும் இந்தியாவுடன் பேச பாகிஸ்தான் விரும்புகின்றது. ஆனால் இந்தியாவுக்கு அதில் ஆர்வமில்லை. ஆனால் பாகிஸ்தானின் இந்த திட்டத்திற்கு சீனாவின் ஆதரவும் உண்டு. எனினும் இந்தியா தீவிரவாதம் தொடர்பில் பேசவே விரும்புகின்றது. ஆனால் தற்போதைய உலக ஒழுங்கில் பயங்கர வாதத்திற்கு சரியான வரைவிலக்கணம் இல்லை.
ஏனெனில் அமெரிக்காவினால் பயங்கர வாதி என அறிவிக்கப்பட்டவர் தான் தற்போது மேற்குலகத்தினால் சிரியாவின் அதிபாரக பதவி யில் அமர்த்தப்பட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் வசம் உள்ள காஸ்மீரை கைப்பற்றுவதில் இந்தியா அதிக அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அது சாத்தியமற்றது. எனவே இரு நாடுகளும் ஒரு தீர்க்கமுடியாத கட்டத்தில் வந்து நிற்கின்றன. எனவே சிந்தூர் படை நடைவடிக்கையில் ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்து மற்றுமொரு போருக்கு இந்தியா தயாராகின்றது. அதேசமயம் பாகிஸ்தானும் தன்னை பலப்படுத்தி வருகின்றது.
அதன் முதற்கட்டமாகவே பாகிஸ்தான் தனது இராணுவத் தளபதி அசீர் முனிருக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்த்துக் கொண்ட பீல்ட்மார்சல் பதவியை வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் இந்த பதவி முன்பு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை. இது இரண்டு நோக்கங்களை கொண்டது. ஒன்று இந்தியாவுடன் போரா சமாதானமா என்பதை அவரே தீர்மானிப்பார். அதாவது பாகிஸ்தான் அரசு அதில் அதிகம் தலையிடாது. இரண்டாவது அவர்தான் தற்போது இந்தியாவுக்கு எதிரான அடுத்த கட்டபோருக்கான தயாரிப்புக்களில் ஈடு பட்டு வருகின்றார்.
இந்த போருக்கான தயாரிப்புக்களில் பின்வரும் செயற்பாடுகள் முக்கியமானது. அச்சுறுத்
தல்கள், களமுனை பலப்படுத்தல், படைத்துறை வல்லமை, போர்த்திட்டம், பயிற்சி, ஆயுதவிநி யோகம், விரைவாக படை நகர்த்தல்கள் என்பனவே அவை. தனக்குள்ள அச்சுறுத்தல்கள் என்ன என் பதை பாகிஸ்தான் அறியும், இந்தியாவும் அறியும் என்றாலும், இந்தியா தற்போது முன்று முனைகளில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது. பாகிஸ் தானுக்கும் இந்தியாவுக்கும் போர் ஆரம்பித்தால் சீனா தனது எல்லைகளில் இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை மறைமுகமாக அதிகரிக்கும். அதன் மூலம் இந்திய வான்படையினரின் நடமாட்டத்தை மட்டுப்படுத்த முயற்சி செய்யும்.
ஜம்மு மற்றும் காஸ்மீர் பகுதிகளில் இந்திய படையினர் இரு பிரிவுகளாக இயங்கவேண்டி நிலை ஏற்படும், மேலும் சிந்தூர் படை நட வடிக்கையில் இணைந்து இயங்கியதை போல சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து இயங்கலாம். வானிலும், தரையிலும் யார் அதிக ஆளுமை யுள்ளனர் என்பதும் எதிர்வரும் போரில் முக்கிய மானது. எனவே தான் 40 ஜே-35ஏ ரக தாக்குதல் விமானங்களை பாகிஸ்தான் கொள்வனவு செய் துள்ளது. அவை எதிர்வரும் ஆகஸ்ட்டு மாதம் பாகிஸ்தானுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதாவது ஐந்தாம் தலைமுறை விமானத்தை அடுத்த போரில் பாகிஸ்தான் பயன்படுத்தப்போகின்றது. இது ஒரு உருமறைக்கப்பட்ட விமானமாகும். இந்த விமானம் சைபர் மற்றும் இலத்திரனியல் போர் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட தாக்குதல் பொறிமுறையை கொண்டது.
மேலும் அண்மையில் இடம்பெற்ற சமரில் இந்திய ஏவுகணைகளை தடுப்பதற்கு சீனாவின் எச்.கியூ-9 என்ற ரஸ்யாவின் எஸ்-300 ஏவுகணைக்கு இணையான ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்திய போதும் அதில் முழுமையாக அது வெற்றிபெறவில்லை. எனவே தற்போது சீனாவிடம் இருந்து நவீன எச்.கியூ-19 என்ற தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணையை கொள்வனவு செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
எச்-கியூ-19 என்ற ஏவுகணை அமெரிக்காவின் தாட் ஏவுகணைக்கு இணையானது. அது 2000 கி.மீ தூரவீச்சுக் கொண்ட இடைத்தர பலிஸ்ரிக் ஏவுகணைகளையும் தடுக்கும் சக்தி கொண்டது. அது களமுனையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாது, இலத்திரனியல், விண் வெளி மற்றும் எலெக்ரோமக்னற்றிக் போரியல், சைபர் போரியல் முறையில் உள்ள ஆளுமையும் நவீன போரின் போக்கை தீர்மானிக்கும். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலகோட் தாக்குதலின் போதும் இலத்திரனியல் போர் முறையில் பாகிஸ்தான் வான்படை மிகவும் தரமான கட்டுப் பாட்டை பேணியிருந்தது.
இலத்திரனியல் போர் முறை மூன்று உத்திகளை கொண்டது. முதலாவது இலத்திரனியல் புலனாய்வுக் கட்டமைப்பு, அதாவது எதிரிகளின் ரடார்கள், தொடர்பாடல் முறைகள், செய்மதி தொடர்பாடல்களின் தகவல்களை கண்டறிவதும் அவற்றை ஆய்வு செய்து எதிரியின் பலம் பலவீனங்களை அறிந்துகொள்வதுமாகும். இர ண்டாவது இலத்திரனியல் போர் முறையின் மூலம் எதிரியின் இலத்திரனியல் புலனாய்வு மற்றும் தாக்குதல் வியூகங்களை முறியடிப்பது. சீனாவின் ஐந்தாம் தலைமுறை ஜே-35 விமானம் அதனை கொண்டுள்ளது. பாகிஸ்தான் விமானிகள் எற்கனவே சீனாவில் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகின்றனர்.
மூன்றாவதாக இலத்திரனியல் போர் முறை என்பது எதிரிகளின் இலத்திரனியல் சாதனங்களை குழப்புவதும், தகவல்களை சேகரிப்பதுமாகும் அதற்கு செயற்கைக்கோளின் உதவிகள் தேவை அதனை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கும். எனவே பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய இடங்களை அதன் மூலம் ஆய்வு செய்யமுடியும்.  எனவே தான் பல தளங்களில் தாம் போரை விரிவுபடுத்தியதாக கடந்த 8 ஆம் நாள் செய்தி யாளர்களிடம் பேசும்போது பாகிஸ்தானின் வான்படை அதிகாரி தெரிவித்திருந்தார். அதாவது இந்த விரிவான போர் முறைக்கு சீனா உதவிகளை வழங்குகின்றது. பாகிஸ்தானின் ஆயுதங்களில் 80 வீதமானவை சீனாவின் ஆயுதங்களாகும்.  லிங்-17 என்ற பொறிமுறை ஊடாக பாகிஸ் தான் வான்படை செயற்கைக்கோள், தாக்குதல் விமானம், தரையில் உள்ள ரடார் கட்டுப்பாட்டு மையம், வானில் பயணிக்கும் அவ்காஸ் உளவு விமானம் என்பவற்றை ஒருங்கிணைத்து தான் கடந்த 7 ஆம் நாளும், 10 ஆம் நாளும் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது. இந்த நடவடிக்கைக்கு மிக உயர்தர பயிற்சிகள் மற்றும் கருவிகள் தேவை அதனை சீனா வழங்கிவருகின்றது. சீனாவின் மக்கள் இராணுவம் அதற்கு பழக்கப்பட்டதாகும்.
மேலும் விமானிகளுக்கும் விமானத்திற் கும் இடையிலான விகிதம் என்பதை பொறுத்த வரையில் பாகிஸ்தனிடம் 2.5 விமானிகளுக்கு ஒரு விமானம் உள்ளது. ஆனால் இந்தியாவின் பக்கம் 1.5 விமானிகளுக்கு ஒரு விமானம் தான் உள்ளது. அதாவது பாகிஸ்தானின் வான்படை என்பது இந்தியாவை விட பலமாகவே உள்ளது. மேலும் அது சீனாவின் மக்கள் படையின் வான்படையுடன் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அதனை தீவிரப்படுத்தியுள்ளது.
நிதி நிலையை பொறுத்தவரையில் சீனா பாகிஸ் தானுக்கு ஆயுதங்களை அதிக விலைக் கழிவுடன் அல்லது இலவசமாக வழங்க முன் வந்துள்ளது. அதில் சீனாவுக்கு இரண்டு நன்மைகள் உண்டு ஒன்று தனது ஆயுதங்களை மேற்குலக ஆயுதங்களுக்கு எதிராக பரிசோதனை செய்வது இரண்டாவது அதன் தரமான பயன்பாட்டை காண்பித்து உலகின் ஆயுத சந்தைவாய்பை கைப்பற்றுவது.
இறுதியாக தகவல் தொழில்நுட்ப போர். இது உண்மையான போரை ஒத்தது. அண்மையில் நடந்துமுடிந்த போரில் உலகிற்கு நம்பகமான தகவல்களை கொடுப்பதில் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறப்பாக செயற்பட்டிருந்தது. பல மேற்குலக ஊடகங்களும் அதனை பின் பற்றி யிருந்தன. மேலும் படைத்துறை நகர்வுகள் என்பது பாகிஸ்தானுக்கு அனுகூலமானதும், பாதகமானது மாக உள்ளது. வான்படைத் தளங்கள் இந்திய எல்லைகளுக்கு அருகில் இருப்பது ஆபத்தானது ஆனால் படைகளை விரைவாக எதிரியை நோக்கி நகர்த்துவதற்கு அது அனுகூலமானது.
அதேசயம், இந்தியாவும் ஐந்தாம் தலை முறை விமானங்களை நோக்கி தனது பார்வையை திருப்பியுள்ளது. எனினும் அது தனது சொந்த தயாரிப்புக்களை விரும்புகின்றது ஆனால் அது உடனடியான களமுனைக்கு ஏற்றதல்ல அதா வது அடுத்த போருக்கு முன்னர் இந்தியா தனது படைத்துறையை பாகிஸ்தானுக்கு நிகராக பலப்படுத்தவேண்டும் இல்லையெனில் காந்தி யின் வழியில் அமைதியாக பேச்சக்கு செல்வது அதன் எதிர்காலத்திற்கு நல்லது.