Home Blog Page 125

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை

ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவேண்டிய 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.

விசாரணையாளர்கள், கடந்த வாரம், 28 சிறைச்சாலைகளின் பதிவேடு அறைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளின் விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.இதன்படி, ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், ஒரு கைதி தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், விசாரணையாளர்கள், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலான காலப்பகுதியில் ஜனாதிபதி மன்னிப்பு மற்றும் பிற பொது மன்னிப்புகளின் கீழ் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், முழுமையான மதிப்பாய்வை மேற்கொள்ளவுள்ளார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்மடுக்குளத்தையும் அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிக்க – ரவிகரன் நா.உ வலியுறுத்து

வவுனியாவடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட தமிழர்க ளின் பூர்வீக கல்மடுக் குளத்தையும், அதன்கீழான வயல்நிலங்களையும் விடுவிப்புச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா மாவட்ட அபி விருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலை வரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம்  நாடாளுமன்ற உறுப்பி
னர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தி யுள்ளார்.
அத்தோடு தமிழ்மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்த இடங்கள், தற்போது பயன்பாடின்றி பற்றைக்காடுகளாகக் காணப்படுகின்றபோது, அந்தஇடங்களை வனப் பகுதியாகக் கருதி வனவளத் திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்யும் செயற் பாட்டிற் கும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக் கையில், கல்மடுக்குளம் என்றொரு குளம் இருப்பின், அக்குளத்தின்கீழ் மக்களுக்கு வயல்காணிகள் கட்டாயம் இருந்திருக்கும். எனவே அக்குளத்தின் கீழ் மக்களுக்கு வயல் காணிகள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இவ் வாறிருக்கும்போது வனவளத்திணைக்களம் மக்களுக்குரிய வயல் காணிகளை பகிர்ந்தளிக்கமுடியாது எனக்கூறு வதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.
இந்நிலையில் வனவளத்திணைக்கள அதிகாரி இதன்போது பதிலளிக்கையில், கல்மடுக்குளமெனவனவளத் திணைக்களத்தால்   அடை யாளப்படுத்தப்பட்டுள்ளபிரதேசம் நடுக்காட்டிற் குள், ஐந்துகிலோ மீற்றர் தூரத்திலேயே குறித்த குளம் காணப்படுகின்றது. அந்தவகையில் அக் குளம் நடுக்காட்டிற்குள் காணப் படுவதால், அது வனமாக பாதுகாக்கப்படுவதால் அதனைவிடுவித்துக் கொடுக்கமுடியாதநிலை காணப் படுவதாகத் தெரிவித்தார்.
இதன்போது வனவளத்திணைக்கள அதிகாரியின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்த  ரவிகரன், கடந்தகால அசாதாரண சூழ்நிலைகாரணமாக குறித்த பகுதி யில் குடியிருந்த, விவசாய நடவடிக் கைகளில் ஈடுபட்ட தமிழ் மக்கள் குறித்த பகுதி களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடப்பெயர்வைச் சந்தி த்த மக்கள் அவர்களுடைய பகுதிகளில் மீளக் குடியமர்த்தப் படாதநிலை காணப்படுகின்றது. அத்தோடு அவர்கள் விவசாய நடவடிக்கைக்காகப் பயன்படுத்திய குளங்களும், குளங்களுக்குக் கீழான வயல்நிலங்களும் விடுவிக்கப்படாத நிலையிலும் காணப்படுகின்றன.
இந்நிலையில் மக்கள் குடியிருந்த மற்றும், விவசாய நடவடிக்கைக்குப் பயன் படுத்திய நிலங்கள் பற்றைக் காடுகளாகக் காணப்படுகின் றன.
இவ்வாறு மக்கள் விவசாயத்திற்காக பயன்படுத்திய குளமும், வயற்காணிக ளும் நீண்டகாலமாக பயன்படுத்தாத நிலையில் பற்றைக்காடுகளாக காணப்படும்போது, குறித்தபகுதியை வனப்பகுதி எனக் கூறிக்கொண்டு
வனவளத் திணைக்களம் விடுவிப்புச் செய்யாமல் தொடர்ச்சியாக ஆக் கிரமித்து வைத்திருப் பது நியாயமற்ற செயல்பாடு  என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளு மன்ற உறுப்பினர், குறித்த கல்மடுக்குளம் என்ற பகுதியில் மக்களால் முன்பு விவ சாயம் செய்யப்பட்ட மையினால்தால் தற்போதும் கமநல அபி விருத்தி திணைக்களத்தில் குறித்த குளம் தொடர்பான பதிவுகள் காணப் படுவதாகவும் சுட்டிக் காட்டினார். எனவே குறித்த காணிகளை அரசாங்கம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டு மெனத் தெரிவித்தார். அதைவிடுத்து இவ்வாறாக திணைக்களங்கள் மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரிப்புச் செய்துவைத்திருந்தால் மக்கள் எங்கே செல்வார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு, வவு னியா, மன்னார், கிளிநொச்சிஎன பாரிய அளவில் மக்களால் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு, நெல் வடக்கிலிருந்து தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்த வரலாறுகளே காணப்பட்டன. இவ்வாறு மக்களால் நெற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்ட பெருமளவான காணிகளை அரச திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையே காணப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும்,பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க இந்த விடயத் தில் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென வலியுறுத்திய   ரவிகரன், அரசதிணைக்களங்களால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் குடியிருப்பு மற்றும், விவசாயக்காணிகளை விடுவிப்புச் செய் வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் கோரிக்கை முன்வைத்தார்.
அதேவேளை கல்மடுக்குளத்தின்கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விண்ணப் பித்தவர்களின் தரவுகளையும், அங்கு ஏற்கனவே மக்கள் பயிற்ச்செய்கை மேற்கொண்டமைக்கான ஆதாரங்களையும் வவுனியா வடக்கு பிரதேச செயலரிடம் சமர்ப்பிக்குமாறு கமநல அபி விருத்தித் திணைக்கள உத்தியோகத்தரிடம்   ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இணைந்து செயற்பட முக்கிய தமிழ் கட்சிகள் தீர்மானம்!

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சைக் குழுக்கள் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளன.

இந்த கூட்டு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் எப்படி செயற்படுவதென இன்று (15) கலந்துரையாடல் நடத்தியது. இதன்மூலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் ஒரு உள்ளூராட்சிசபையில் ஆட்சியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

மன்னார், வவுனியாவில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் அண்மையில் ரெலோ தரப்பினர், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், செயலாளரை சந்தித்து பேசியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எப்படி நடந்து கொள்கிறதோ அதேபோலவே வன்னியில் தமிழரசு கட்சி நடந்து கொள்ளும் என அதன் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அப்படி கூறியிருந்தாலும், கள யதார்த்தம் தமிழரசு கட்சிக்கு பாதகமாக இருந்தது.
தமிழரசு கட்சி- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணையாவிட்டால் வவுனியா மாநகரசபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இழக்கும்.

இலங்கை தமிழரசு கட்சி வவுனியா, முல்லைத்தீவில் அனேகமான சபைகளை இழக்கும்.
இந்த கள யதார்த்தத்தை புரிந்துகொண்ட வன்னி மாவட்ட தமிழரசு பிரமுகர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முடிவில் மாற்றமில்லையென குறிப்பிட்டு வந்தனர்.
முன்னதாக, வவுனியா மாவட்ட உள்ளூராட்சிசபைகள் தொடர்பாக இரு தரப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

அந்த உடன்படிக்கையின்படியே செயற்படுவோம், வன்னி முடிவில் மாற்றமில்லையென பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கமும், சக தமிழ் தரப்புக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த கூட்டு உறுதியாகியுள்ளது.

உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக மாறிய தங்கம்

உலகின் இரண்டாவது பெரும் பின்னிருக்கை செல்வமாக தங்கம் மாறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரோவின் இடத்தை அது தற்போது பிடித்துள்ளது என கடந்த புதன்கிழமை(11) ஐரோப் பிய ஒன்றியத்தின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நெருக்கடி காரணமாக பல நாடுகள் தங்கத்தில் முத லீடுகளை மேற்கொள்வதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தங்கத்தின் கையிருப்பு கடந்த ஆண்டு 1000 தொன்களாக அதிகரித்துள்ளது. அது கடந்த தசாப்தங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு அதிகமாகும். தற்போது அதன் மொத்த கையிருப்பு 36,000 தொன்களாகும்.
இது 1965 ஆம் ஆண்டு நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க டொலருக்கு அடுத்த நிலையில் இருந்து ஈரோ நாணயத்தின் பின் னிருக்கை நிலையை தங்கம் பின் தள்ளி தற்போது இரண்டாவது நிலையை எட்டியுள்ளது. உலகின் பின்னிருக்கை நாணயமாக 57 வீதம் டொலரே உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் 20 வீதமாக தங்கமும், 16 வீதமாக ஈரோ நாணயமும் உள்ளன.
தங்கத்தின் விலை கடந்த வருடம் 30 விகிதம் உயர்ந்திருந்தது. அது தற்போது 28 கிறாம் தங்கத்தின் விலை 3500 டொலர்களாக உள்ளது. எனினும் உலகில் இரண்டாவதாக அதிகம் பயன்படுத்தும் நாணயமாக ஈரோ உள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன்-ரஸ்ய மோதல்கள், அமெரிக்க – சீனா பொருளாதார மோதல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் என்பன தங்கத்தின் மீது பல நாடுகள் முதலீடுகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தியுள்ளன.

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 3 தசாப்தங்களின் பின் பொதுமக்கள் வழிபாடு

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழல் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 34 வருடங்களின் பின்னர் ஆலயத்திற்கு செல்லும் மக்கள், கட்டுப்பாடுகளுடன் செல்லவே இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வேலிகள் பின் நகர்த்தி உரிய முறையில் அமைக்கவில்லை எனவும் , அவற்றை உரிய முறையில் அமைத்த பின்னர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்படும் என முன்னதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று முதல் மக்கள் சுதந்திரமாக செல்வதற்கு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளனர்.

அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் 4 நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை உத்தரவை விடுத்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போரில் இதுவரை யில் 54,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். 126,000 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற் றங்கள் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த வருடம் நவம்பர் மாதம் பிடி விறாந்தை பிறப்பித்திருந்தது.
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட நான்கு நீதிபதிகளில் இருவர் முன்னர் ஆப் கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவர்கள். அவர்கள் மீது அமெரிக்கா முன்னரும் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாக 2021 ஆம் ஆண்டு அந்த வழக்கு கைவிடப்பட்டிருந்தது.
அனைத்துலக குற்றவியல் நீதமன்றத்தின் தலைவர் கரீம் கான் மீதும் அமெரிக்கா கடந்த பெப்ரவரி மாதம் தடை விதித்திருந்தது. இதனிடையே இஸ்ரேலின் மீது நடவடிக்கை எடுத்தால் அனைத்துலக நீதிமன்றத்தில் இருந்து பிரித்தானியா விலகும் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் அனைத் துலக நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி கானை எச்சரித்ததாக பிரித்தானியாவின் நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கையின் பிணைப்பு அதிகரித்துவரும் பின்னணியில், பல சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கமைய, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பல தொடர்புகளை மேம்படுத்துவதில், பல நட்பு நாடுகள் இலங்கையுடன் அண்மைய காலமாக, முனைப்புடன் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

அந்த வகையில், கடந்த மாத இறுதியில் போலந்தின் வெளிவிவகார அமைச்சர், மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்ததுடன், அவுஸ்திரேலியாவின் துணை பிரதமரும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர்   (15) காலை நாடு திரும்பினர்.

கடந்த 11 ஆம் திகதி ஜேர்மனிக்கான தமது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை தொடங்கிய ஜனாதிபதி, இருதரப்பு அரசியல் சந்திப்புகள், வணிக வட்டமேசை மாநாடு மற்றும் ஜேர்மன் சுற்றுலாத் துறையுடனான சந்திப்புடன் வெற்றிகரமாக தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பிய இன்றைய தினத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் 2 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைத்தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, நிதி அமைச்சும், இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியமும் இணைந்து நடத்தும் ‘இலங்கையின் மீட்புக்கான பாதை – கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற தலைப்பில் நாளை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் விசேட அதிதியாக கலந்துக்கொள்ளவுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் அபிவிருத்தி குறித்து கவனம் செலுத்தும் சர்வதேசம் பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை மீறல் விடயத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.

அதனடிப்படையில், எதிர்வரும் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர் யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில், அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளுக்கு முன்னர் அவரது இந்த விஜயம் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் திருகோணமலை உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயத்தில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் திருகோணமலை மாநகர சபையில் தமக்கு துணை மாநகர முதல்வர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு தவிசாளர் பதவி தரவேண்டும் எனக் கேட்டிருந்தார்கள்.அத்துடன், மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுக்கு உப தவிசாளர் பதவி தரவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இவை அனைத்துக்கும் நாம் சம்மதம் தெரிவித்திருந்தோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.இந்த விடயங்களை இறுதியாக கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து செல்வம் அடைக்கலநாதனிடம் கூறியிருந்தேன்.அவர் என்னை 8 ஆம் திகதி திருகோணமலையில் சந்திப்பதாக கூறியிருந்தார்.

எனினும் அவர் சந்திக்கவில்லை.பலமுறை நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். எனினும், விரைவில் அவர் என்னுடன் தொடர்பு கொள்வார் என்று நம்புகின்றேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்

“மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…” என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை எழுதிய கவிஞர் தமிழ் அறிஞர் பண்டிதர் வீ. பரந்தாமன் அவர்கள் காலமானார்.

கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

தமிழீழம் கோரிய வட்டுக்கோட்டையை அழிக்கத்திட்டம்: கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம்

கடந்த காலங்களில் தமிழீழம் கோரிய முதல் இடமாக திகழ்ந்த வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர், சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துமாறும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்று வரை பொது மலசலம்கூட இல்லை’. ‘ஒரு காவல்நிலையம் மட்டும் உள்ளது’.எனவே, திட்டமிட்டு வட்டுக்கோட்டை அழிக்கப்படுகின்றதா? என்றும் கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அரச அதிகாரிகள் இதன்போது பதிலளித்திருந்தனர்.