Home Blog Page 116

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி “அணையா விளக்கு” போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் என்கிற தன்னார்வ இளையோர் அமைப்பினால் எதிர்வரும் திங்கட்கிழமை (23) புதன்கிழமை (25) வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அணையா விளக்குப் போராட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தின்போது தமிழர்களது பண்பாட்டில் நம்பிக்கை சார்ந்த மரபாக இருக்கின்ற அணையா விளக்கினை முன்னிலைப்படுத்தியே இந்தப் போராட்டம் ஏற்பாட்டாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரையில் செம்மணி பகுதியில் பல்வேறு இடங்களிலும் மனிதப் புதைகுழிகள் அகழப்பட்டுள்ள போதிலும், அது குறித்த மர்மம் இருள் சூழ்ந்ததாகவே காணப்படுகிறது.

இனவழிப்பிற்கு ஆதாரமான இந்தக் குற்றச்செயல்களுக்கான காரணமோ, இதற்கு அதிகாரம் வழங்கிய தரப்புக்கள் யார் என்பதோ, மீளவும் இதுபோன்ற மனிப் புதைகுழிகள் உருவாக்கப்படாது என்பதற்கான பொறுப்புக்கூறலோ வெளிப்படுத்தப்படவில்லை.

எனவே இருள் சூழ்ந்திருக்கும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திற்கு ஒளி பாய்ச்சப்படல் வேண்டும் என்கிற குறியீட்டு அர்த்தத்திலேயே இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக மூன்று தினங்கள் எரியக்கூடிய அணையா விளக்கு ஏற்றப்படுகின்றது.

போராட்டம் இடம்பெறும் மூன்று தினங்களில், முதல் இரண்டு நாட்களிலும் சுழற்சி் முறையிலான அடையாள உண்ணாவிரதமும், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான செய்திப் பட கண்காட்சியும், மக்கள் கையெழுத்து திரட்டலும், செம்மணி மனிதப் புதைகுழியோடு தொடர்புபட்ட கதை, கவிதை படிப்பும், நாடக அளிக்கையும் இடம்பெறும்.

25ஆம் திகதியாகிய மூன்றாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறும். போராட்டத்தின் இறுதி நாளன்று ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மாத்திரமல்லாது வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் முகமாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் அதிகளவில் பொதுமக்களை இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பிற்கு தீர்வைக் காணுமாறு வோல்க்கெர் டேர்க்கரின் விஜயத்தின்போது வேண்டுகோள் விடுக்கவேண்டும் – ஓக்லாந்து நிறுவகம்

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கர் இலங்கைக்கு  23ம் திகதி முதல் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையில் தற்போது இடம்பெறும் நில அபகரிப்புகள் கடந்த கால நில அபகரிப்புகள் மற்றும் தமிழர்களிற்கு எதிரான மனித உரிமைமீறல்களிற்கு இலங்கை அரசாங்கம் தீர்வை காணவேண்டும் என ஐக்கியநாடுகள் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என ஓக்லாந்து நிறுவகம் வேண்டுகோள் விடுக்கின்றது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களாகின்ற போதிலும்,1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஒடுக்குமுறைக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்னமும் நீதிக்காக காத்திருக்கின்றார்கள்.

பொறுப்புகூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பை மனித உரிமை ஆணையாளரின் விஜயம் வழங்குகின்றது.

கடந்தமாதம் பல சிறுவர்கள் உடல்கள்கள் உட்பட 19 பேரின் மனித எச்சங்கள் காணப்பட்ட மனித புதைகுழி கடந்த மாதம் இலங்கையின் வடக்கில் யாழ் நகரத்திற்கு அருகில் உள்ள செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டபோதிலும்,பல தசாப்தங்களாக தண்டனை விடுபாட்டுரிமை,அவற்றை விசாரணை செய்ய தவறியமை போன்றவை காணப்பட்டதால் ,மனித புதைகுழியை தோண்டும்போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்ற காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் வேண்டுகோள்களுடன் ஒக்லாந்து நிறுவகம் இணைந்துகொள்கின்றது.

நிலைமையை முழுமையாக மதிப்பிடுவதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வடக்குகிழக்கின் அனைத்து பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொள்ளவேண்டும்.

2009ம் ஆண்டு யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலைகள் காரணமாக  169 796 தமிழர்கள் காணாமல்போயுள்ளதாகவும் கொல்லப்பட்டதாக கருதப்படுவதாகவும் முள்ளிவாய்க்காலிற்கு மனித உரிமை ஆணையாளர் விஜயம் மேற்கொள்ளவேண்டும் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த விஜயங்கள் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புகள்,நில அபகரிப்பு,கண்காணிப்பு, அச்சுறுத்தல் தமிழர்களின் பாரம்பரியம் திட்டமிடப்ட்டு சிதைக்கப்படுதல்,தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் புத்தவிகாரைகள் உருவாக்கப்படுதல் தடையின்றி தொடர்தல் போன்றவற்றைமதிப்பிடுவதற்கும் பார்ப்பதற்கும் உதவியாக அமையும்.

யாழ்ப்பாணம் தையிட்டியில் படையினரின் சட்டவிரோத விகாரைகளிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.தமிழர்களின் வரலாற்றை கலாச்சாரத்தை அழிப்பதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் திட்டமிட்ட தந்திரோபாயம் இதுவாகும்.

அநீதிகள் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வடக்குகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் சட்டங்களை மீறியமைக்கா பொலிஸ் விசாரணை அச்சுறுத்தல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

ஓக்லாந்து நிறுவகம் ஆவணப்படுத்தியுள்ளபோல தங்கள் நிலங்கள் காலனித்துவம் செய்யப்படுவது தொடர்வதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வீடுகள் நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளனர்.

வடக்குகிழக்கை பிரிப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை பிரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்கின்றன.நீர்ப்பாசன திட்டங்கள், இராணுவ குடியேற்றங்கள் தொல்பொருள் ஒதுக்கீடுகள், சரணாலயங்கள்,பௌத்தமயமாக்கல், போன்றவற்றின் மூலம் இதனை செய்கின்றனர்.

வடக்குகிழக்கு தொடர்ந்தும் பெரும் இராணுவமயப்படுத்தலின் கீழ் காணப்படுகின்றது இது அந்த மக்களின் நாளாந்த நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் பொறுப்புக்கூறல் நீதிக்கான தமிழ்மக்களின் தடையற்ற அர்ப்பணிப்பு-இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் அழுத்தங்களை பேண உதவியுள்ளது.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும்,பொறுப்புக்கூறல் இடைவெளிக்கு முடிவை காணஅரசமைப்பு நிர்வாக சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்,என டேர்க் முன்னர் விடுத்த வேண்டுகோள்களால் நாங்கள் நம்பிக்கைகொண்டுள்ளோம்.

ராஜபக்ச யுகம் முடிவிற்கு வந்துள்ள போதிலும்,ஜனாதிபதி திசநாயக்கவின் அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்களின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது.

சர்வதேச சட்டத்தினால் பாதிக்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தியமைக்காக பொதுமக்களை தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது.

சர்வதேச நடவடிக்கைகளை தூண்டுவதற்கு மனித உரிமை ஆணையாளரின் விஜயமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59 வது அமர்வும் முக்கியமானவை.

சர்வதேச மனித உரிமை மனிதாபிமான சட்டங்களை மீறியமைக்காகவும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காகவும் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவேண்டும்.

இராணுவமயப்படுத்துதலை நிறுத்தவேண்டும்,களவாடிய நிலங்களை மீள கையளிக்கவேண்டும்,வடக்குகிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியேற்றவேண்டும் என அதற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும்.

நம்பகதன்மை மிக்க உண்மையை தெரிவிக்கும் நடைமுறை, நீதி,இழப்பீடு போன்றவற்றை ஆரம்பிப்பதற்கும்,தமிழ் மக்களின் நீண்டகால துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் தீர்வு ஆகியவற்றிற்கு இது அவசியமானது.

மயிலத்தமடு மேச்சல் நில விவகாரம்: தொடரப்பட்ட வழக்கில் இருந்து 30 பேர் விடுதலை

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி 2023 ஒக்டோபர் 8 அன்று கொம்மாதுறை பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு எதிராக ஏறாவூர்  காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த 2023 ஒக்டோபர் 8 அன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மட்டக்களப்பு – செங்கலடி வருகையின்போது, மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிராக, வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு செய்தல், முறைகேடாக ஆட்களைத் தடுத்து வைத்தல் மற்றும் தேசிய வீதிச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஏறாவூர் காவல்துறையினரால் வழக்குத் தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (20) நடைபெற்றது.

விசாரணையின்போது, வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு மேலதிக ஆதாரங்கள் இல்லாததால், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 186ஆவது பிரிவின் கீழ் நீதிபதிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா யசீதன் நியமனம்!

வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பாபு தேவ நந்தினி தலைமையில்  வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தெரிவு செய்யும் கூட்டம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 8 பேர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சார்பில் 5 பேர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் 4 பேர், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 பேர், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) சார்பில் 2 பேர், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர், மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் 2 பேர் என மொத்தம் 28 உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் கந்தையா யசீதன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சார்பில் நாகராசா பகீரதன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், தவிசாளர் தேர்வு பகிரங்க வாக்கெடுப்பு மூலமா அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமா நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டார்.

இதன்போது, பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்புக்கு 9 வாக்குகளும் பதிவாகின.

பகிரங்க வாக்கெடுப்பில், கந்தையா யசீதன் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.டி.பி., மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

நாகராசா பகீரதனுக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தேசிய மக்கள் சக்தி (6 வாக்குகள்) நடுநிலை வகித்தது.

இதேவேளை, உப தவிசாளர் தேர்வுக்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் பேரின்பநாயகம் சுபாகர் மற்றும் சங்கு-சைக்கிள் கூட்டணியின் சார்பில் தர்மகுலசிங்கம் உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பேரின்பநாயகம் சுபாகர் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி நிதியமைச்சர் ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகல்

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி நிதியமைச்சருமான ஹர்சன சூர்யபெரும தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்
வெற்றிடமாகியுள்ள நிதியமைச்சின் செயலாளர் பதவியை ஏற்று கொள்ளும் வகையில் அவர் பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அறியப்படுத்தியுள்ளார்.
இதன்படி இன்று (20) முதல் அமுலாகும் வகையில் ஹர்சன சூர்யபெருமவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் 90% அதிகரிப்பு : ஜனாதிபதி தெரிவிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

நாட்டின் பொருளாதாரம் மற்றும்  கிராமிய வாழ்க்கையை மேம்படுத்தும் பணியின் பெரும்பகுதி இலங்கை முதலீட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய முதலீட்டுத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நாடாக புதிய முதலீட்டுத் துறைகளை  இனங்காணவேண்டும். அதற்கான பொறுப்பு முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு, 1978 ஆம் ஆண்டு முதல்  இதுவரை சுமார் 22 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈட்டவே முடிந்தது. பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை வேகமாக முன்னேற வேண்டியுள்ளது. அத்தோடு வியட்நாம் 2022 இல் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை எட்டியுள்ளது.

முதலீடுகளை ஈர்க்கும் போது, சேவைத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். தவறவிட்ட வாய்ப்புகளைப் பின்தொடர்வதைத் தாண்டி, புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதே முதலீட்டு சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதியின்  சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் மற்றும் முதலீட்டு சபையின் பதில் பணிப்பாளர் நாயகம்  ரேணுகா வீரகோன் உட்பட முதலீட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் சந்திரசேகரன்

கிழக்கு மாகாண கடற்பரப்புக்குள் இடம்பெறும் கடல் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற கூட்டமொன்றின்போதே அமைச்சர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள்,  காவல்துறை மற்றும் அரசாங்க அதிகாரிகளும் மேற்படி கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

கிழக்கு கடற்பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் கடற்கொள்ளைச் சம்பவங்களால் அம்பாறை, மட்டக்களப்பு மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அதனை தடுப்பதற்குரிய வழிமுறைகள் பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

கிழக்குப் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்திலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பிலும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளின் பாதகமான தாக்கத்தை எடுத்துரைத்து இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆகிய இருவருக்கும், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா ஏற்கனவே கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.

நிலைமையை விரிவாக மதிப்பாய்வு செய்தல், மீன்பிடி சமூகங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமலாக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைந்த தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்தப் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, இலங்கையின் கிழக்கு கடலோர நீரில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான உடனடி தலையீடுகள், நடுத்தர கால நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் உள்ளிட்ட பல கட்ட அணுகுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், இது தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி மட்டக்களப்பில், அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அரச மற்றும் எதிர்க்கட்சி), இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்கள, காவல்துறை  மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகள்,கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காணி மற்றும் வீட்டுரிமைக்கான அமைதிவழி போராட்டத்திற்கு ஜீவன் தொண்டமான் ஆதரவு!

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளைய தினம்(21) ஹட்டன் நகரின் மல்லியப்பு சந்தியில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள  அமைதிவழி போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவினை  வழங்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

காணி உரிமைக்கான தினம் என்பது ஒரு கொண்டாட்டம் அல்ல! இது-நமது உரிமைக்காக, நமது நிலத்திற்காக, நமது வாழ்வாதாரத்திற்காக, நமது வரலாற்றுக்காக நாம் எழுப்பும் குரல் என்ற தொனிப்பொருளிலே நாளைய தினம்(21) இந்த காணி உரிமைக்கான போராட்டமானது நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஜீவன் தொண்டமான்  கருத்துத் தெரிவிக்கையில்…

மலையக மக்களின் விடுதலைக்கு காணி உரிமை என்பது அடிப்படையானதாகும். காணி உரிமைதான் எமது மக்களை தலை நிமிர்ந்து வாழ வைக்கும். ஆகவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றமையை அனைவரும் அறிவார்கள்.

அந்த வகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகிய நாள் தொடக்கம் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த மக்களின் காணி உரிமைக்காக பாராளுமன்றத்திலும் , பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பலமாக குரல் கொடுத்து வருகிறேன். இந்தப் போராட்டம் கடைசி மலையைகத் தமிழனுக்கும் காணி உரிமை கிடைக்கும் வரை தொடரும்…

காணி உரிமை தொடர்பாக நான் அமைச்சராக இருந்தக் காலப்பகுதிகளில் இரண்டு அமைச்சரவை பத்திரங்களையும் சமர்ப்பித்திருந்தேன். மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸோடு
இனைந்து செயற்படுகின்ற அனைத்து சக்திகளையும் இனைத்துக்கொண்டு காணி உரிமை கோசத்தை இந்த நாடே கேட்கும் அளவிற்கு கொண்டுச்செல்ல வேண்டிய அவசியம் மலையக சமூகத்துக்கு இருக்கிறது .

ஆகவேதான் நாளை நடைபெறவுள்ள  “காணி உரிமை தொடர்பான அமைதிவழி போராட்டத்திற்கு” இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்கவுள்ளோம்” இவ்வாறு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு நீதி கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதேவேளை, வடக்கில் மனித புதைகுழிகள் என வதந்திகள் பரப்பப்படுவதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இஸ்ரேல்-ஈரான் போர்: ஈரானில் 639 பேர் பலி!

இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் ஈரானில் இது​வரை 639 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். 2,000-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​துள்​ளனர். ஈரானின் முக்​கிய அணு சக்தி தளங்​கள், எண்​ணெய் வயல்​களும் அழிந்​துள்​ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13-ம் திகதி அதி​காலை ஈரான் மீது இஸ்​ரேல் விமானப் படை திடீர் தாக்​குதல் நடத்​தி​யது. இரு நாடு​களிடையே 7-வது நாளாக நேற்​றும் போர் நீடித்​தது. கடந்த 7 நாட்​களில் ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்​டின் 1,100 இடங்​கள் மீது இஸ்​ரேல் போர் விமானங்​கள், ஆளில்லா விமானங்கள்  தாக்​குதல் நடத்தி உள்​ளன. குறிப்​பாக ஈரானின் அணு சக்தி தளங்​கள், ஆயுத உற்​பத்தி ஆலைகள், எண்​ணெய் வயல்​கள் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​பட்டு இருக்​கிறது. இதில் ஈரானின் 20 அணுசக்தி தளங்​கள், 16 எண்​ணெய் வயல்​கள் அழிக்​கப்​பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் இராணுவ தரப்​பில் இஸ்​ரேலை குறி​வைத்து இது​வரை 400 ஏவு​கணை​கள் வீசப்​பட்டு உள்​ளன. மேலும் 1,000 ஆளில்லா விமானங்கள் மூல​மும் தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்டு உள்​ளன. இஸ்​ரேலின் டெல் அவிவ் உட்பட பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் இராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 7 நாட்​களில் இஸ்​ரேல் முழு​வதும் 24பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் 200-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​துள்​ளனர்.