Home Blog Page 109

பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – விமல் சாடல்

யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை. நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோரை போன்று உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்துள்ளார். இவரது செயற்பாடு வன்மையாக கண்டித்தக்கது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத் தந்தார். அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாகவே உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகைத்தந்தார்.

இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்கள் இலங்கைக்கு வருகைத்தருவார்கள்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கைக்கு வருகைத் தந்தார்.பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்து விட்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்தார்.

அதேபோல் 2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செய்ட் அல் ஹுசைன் இலங்கைக்கு வருகைத் தந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களுடன் சந்திப்புக்களை நடத்தினார்.

இவருக்கு எதிராக பேரணி சென்றதற்காக எம்மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கு இன்றுவரை விசாரணையில் உள்ளது. இவரும் இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம் பிள்ளை,செய்ட் அல் ஹுசைன் ஆகியோர் பின்பற்றிய  கொள்கையை முழுமையாக பின்பற்றி தற்போதைய உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், விடுதலை புலிகள் அமைப்பு கொள்கையுடைய இனவாதிகளை மாத்திரம் சந்தித்தார்.

உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்துக்கு சென்று விடுதலை புலிகள் அமைப்பின் கொடிகளை ஏந்தியிருந்தவர்களுடன் ஒன்றிணைந்து முன்னாள் போராளிகளின் நினைவிடங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதேபோன்று செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.இவர் எவ்வாறு நடுநிலையாக செயற்படுவார் என்பது அதனூடாக வெளிப்பட்டது.

யுத்தத்தில் விடுதலைப் புலிகளால் இராணுவத்தினரும், பொலிஸாரும், சிங்கள மக்களும் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் மனித உரிமைகள் மீறப்படவில்லையா, இவர்களை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நினைவுகூரவில்லை.

யுத்தத்துக்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடைய உயரதிகாரிகள் உயர்ஸ்தானிகரை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

இனவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை மாத்திரம் சந்தித்து விட்டு உயர்ஸ்தானிகர் சென்றுள்ளார். இவரது செயற்பாடு வன்மையாக கண்டித்தக்கது.

தனிநபா் ஒருவரின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டியுளோம்:’அணையா விளக்கு’ போராட்ட செயல் அமைப்பு

சா்வதேச நாடுகளை உள்ளடக்கிய அமைப்பொன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அவ்வமைப்பில் முக்கிய பதவியில் இருக்கும் தனிநபா் ஒருவரின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டியுளோம் என்பதும் நீண்ட பயணத்திற்கான முதலடியை மக்கள் தன்னெழுச்சியாக எடுத்துவைத்துள்ளனா் என்பதுமே இப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  என்பதுமே இப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். என அணையா விளக்கு போராட்டத்தை ஏற்பாடு செய்த மக்கள் செயல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் செயல் அமைப்பு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

செம்மணி மனிதப் புதைக்குழிக்கு சர்வதேச நீதி வேண்டியும்இ தமிழ் சமூகத்திடையே விழிப்பை ஏற்படுத்தவுமாக மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 23-24-25 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட அணையா விளக்குப் போராட்டம் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக தாக்கம் செலுத்துகையை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு எம்மோடு துணைநின்றஇ வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மும்மதங்களின் தலைவர்கள் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சிவில் சமூக அமையத்தினர் தமிழ் அரசியல் கட்சிகள் ஊடகவியலாளர்கள்  ஊடக அமைப்புகள் வலையொளியாளர்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள்இ அரச சார்பற்ற தன்னார்வ அமைப்புகள் குடிநீர் உணவு சிற்றுண்டிகளை வழங்கிய அனுசரணையாளா்கள் அரசியல் – சமூக செயற்பாட்டாளர்கள்  கலைஞர்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் நல்லூர் பிரதேச சபையினர் யாழ்ப்பாண மாநகர சபையினர் போராட்டத்திற்குத் தேவைப்பட்ட பொருளுதவிகள் புரிந்த கொடையாளர்கள் எரிபொருள் நன்கொடையாளர்கள் கொட்டகை மற்றும் ஒளி ஒலி வசதிகளைச் செய்துதவியவர்கள்  சமூக வலைத்தளங்களில் போராட்டம் குறித்த பதிவுகளைப் பகிர்ந்து பரவலடையச் செய்தவர்கள் இறுதிநேரத்தில் மனிதச் சங்கிலியாக நின்ற நண்பர்கள் நலன்விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் செயலின் சார்பில் சிரம்தாழ்த்திய நன்றிகள். நீங்கள் புரிந்தவைகள் ”காலத்தினால் செய்த ஞாலத்திலும் மானப் பெரிய உதவி”.

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும்இசெம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் விடயத்திலும் சர்வதேசத்தின் கவனத்தைத் தொடர்ந்தும் தக்கவைக்கும் முகமாக நிகழ்த்தப்பட்ட இப்போராட்டத்தின் இறுதிநாளில் முகம்சுழிக்கவைக்கும் சில துர்நிகழ்வுகள் இடம்பெற்றுவிட்டன.

தங்களுக்குள் ஜனநாயகத் தன்மையைப் பேணமுடியாத அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் – அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் தாம்சார்ந்த அரசியல் பின்புலங்களின் இருப்பை முதன்மைப்படுத்தும் நோக்கில் அடிப்படை மனித அறத்திற்கு மாறாக நடந்துகொண்ட முறையானது போராட்டத்தின் செல்வழியை மடைமாற்றி அதன் வல்லமையை குன்றச்செய்யும் மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தமை இப் போராட்டத்தின் ஏற்பாட்டாளா்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியது. களத்திற்கு வெளியிலிருந்த பார்வையாளா்களுக்கு ஏற்பாட்டாளா்கள் தொடா்பில் கேள்விகளையும் ஏற்படுத்தியது. இத்தகைய பின்னணியில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவா்கள் எனும் வகையில் எதிர்பாராததும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுமான இவ் அநாகரிக செயற்பாடுகளினால் அசௌகரியங்களிற்கும்இ கௌரவக்குறைவிற்கும்  உள்ளான வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுவினர்களிடமும் பொதுமக்களிடமும்  அரசியற்  பிரமுகா்களிடமும் எமது உளப்பூர்வமான வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் அவா்தம் குடும்ப உறுப்பினா்கள் கடந்துவந்த நீண்ட நெடிய அலைச்சலும் கண்ணீரும் நிறைந்தஇ கொடிய பயணத்தின் வலிகளது கனதியையும் அவா்களின் போராட்ட நியாயப்பாடுகளையும் அறியாத ஊடக அறமற்ற சில  வலையொளியாளா்கள்இ தமது காணொளிகளிற்கான பார்வை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரபரப்பு அல்லது ஒரு குழப்ப நிலையை வலிந்து ஏற்படுத்துவதற்கு ஏதுவான புறச்சூழலை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டமை அருவருக்கத்தக்க விடயமாக அமைந்தது. எதிர்வரும் காலங்களில் போராட்டங்களைத் திட்டமிடும் தரப்புக்கள் இத்தகைய போலி ஊடகா்களைக் கையாள்வதற்கான விசேட பொறிமுறைகளில் கவனம்செலுத்த வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தி நிற்கின்றது.

இத்தகைய நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் போராட்ட நிகழ்விடத்திலிருந்து பகிரப்பட்ட காணொளிகள் மற்றும் நேரடிக் காணொளிகள்  போராட்டச் சூழலின் உண்மை நிலவரத்தினை மக்களுக்கு விளக்கியது.  இந்நிலையில் எத்தகைய கட்சிசார் – அமைப்புக்கள்சார் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் உட்படாது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் விடயத்தில் நீதி கோருவது மட்டுமே இப்போராட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் என்பதும் இக்கோரிக்கையின் பின்னுள்ள அறமும் ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளா் வோல்கர் டர்க்  யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் இக்கால கட்டத்தில் இப்போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவமும் புரிந்துகொள்ளப்பட்டது. இதன்விளைவாக நிகழ்விடத்தில் மக்கள் குழுமத் தொடங்கியதுடன் இப்போராட்டம் இன்னொரு பரிமாணத்தினை அடைந்தது. அணையா விளக்கு அனைவரது மனங்களிலும் பற்றிக்கொண்டது. மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் அணையாவிளக்கின் ஒளிக்கீற்றுக்கள் பிரகாசித்தமையை அறிந்திருப்பீர்கள். காலதேவை கருதி சட்டென இதனை ஏற்பாடுசெய்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளைத் தருகிறோம்.

இப்படியாக அணையா விளக்கென்பது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும் சூழ்ந்திருக்கின்ற இருளை நீக்கவேண்டிய அவசியத்தை உலகறியச்செய்திருக்கின்றது.

செம்மணி மனிதப்புதைகுழி  அகழ்விடத்தினைப் பார்வையிட்டுத் திரும்புவதனையே அதுவரை தனது நிகழ்ச்சி நிரலாகக் கொண்டிருந்த ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் நிகழ்ச்சி நிரலை மாற்றி போராட்டம் இடம்பெற்ற களத்திற்கு அவரை வரவைத்ததுஇ இப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ஏற்பாட்டாளா்களின் தீவிர முயற்சி என்பதற்கும் அப்பால் இப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் நீண்ட காத்திருப்பும் இவ் மனிதப்புதைகுழிகளில் புதையுண்டுபோன மக்களின் ஆத்ம பலமுமேயாகும். அந்த ஆத்மாக்கள் புதையுண்டும் பேசிக்கொண்டிருக்கின்றன. நிலம் பிளந்து நீதி கோருகின்றன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானம் வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவின் சகோதரரும் ஆவார்.

வடக்கில் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை

வடக்கில் 5,941 ஏக்கர் காணிகளை அரச காணிகளாக்கி கையகப்படுத்துவதற்கான வர்த்தமானிக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் சற்று முன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளைய சனிக்கிழமை (28) காலக்கெடு முடிவடையும் இறுதி தறுவாயில் இந்த உத்தரவு, எம்.ஏ. சுமந்திரனால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கையடுத்து வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜயரத்ன உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு

இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) தனது முழு ஆதரவையும் தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தபோது இந்தக் கருத்தை வெளியிட்டார்.

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் புதிய அரசியல் மற்றும் சமூக மாற்றத்தைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

தனது இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் நடைபெற்று வரும் புதிய மாற்றம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடிந்ததாகத் தெரிவித்த வோல்கர் டர்க், இன்று நாட்டின் அனைத்து மக்களும் சிறந்த எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்று தான் நம்புவதாகவும் கூறினார். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் வேதனைகள் ஒரேமாதிரியானவை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகள் நிறைவேறும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எதிர்பார்க்கிறது என்று உயர்ஸ்தானிகர் மேலும் கூறினார்.

தற்போதைய அரசியல் கலாச்சாரம் காரணமாக மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல்படத் தவறியுள்ளதால், காணாமல் போனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்தி மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது ஆராயப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கும் தனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே தற்போதைய நிலைமையில் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சவால்களை நன்கு புரிந்துகொண்டு, அந்த நோக்கத்திற்காக உறுதிபூண்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இலங்கையின் இந்த உண்மையான நிலைமையை உலகிற்கு கொண்டு செல்வதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவு அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கான ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franche), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவு பிரதானி ரோரி மங்கோவன் (Rory Mungoven), மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக அதிகாரி எலேன் சேன் (Elaine Chan), ஐ.நா அலுவலக சிரேஷ்ட மனித உரிமைகள் ஆலோசகர் லைலா நசராலி (Laila Nazarali), அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அதிகாரி அஸாம் பாக்கீர் மார்கர் (Azam Bakeer Markar), மற்றும் ஊடக மற்றும் தகவல் அதிகாரி அந்தணி ஹெட்லி (Anthony Headley)ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேவிபியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட குழுவினரைச் சந்தித்தார் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்  வோல்கர் டேர்க் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நிர்வாகத்தைப் பாதுகாப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் திருத்தம், மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்கள் மீதான விசாரணை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலக செயற்பாடுகளில் முன்னேற்றம்: ஐ.நா

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாக அந்த அலுவலக அதிகாரிகளிடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நீதி அமைச்சு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளை  வெளிவிவகார அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது உயர்ஸ்தானிகருக்கும் அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் உள்ளக நல்லிணக்க செயன்முறை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளிடம் வினவிய உயர்ஸ்தானிகர், குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் செயற்பாடுகளை செயற்திறன்மிக்கவகையில் முன்னெடுப்பதற்கு சர்வதேச சமூகம் எவ்வாறான உதவிகளை வழங்கமுடியும் என்றும் கேட்டறிந்தார்.

அதற்குப் பதிலளித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் தேவைப்பாடுகள் பற்றி தம்மால் மதிப்பீட்டு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டதாகவும், அதிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்தனர்.

அதேவேளை செம்மணி உள்ளடங்கலாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்த அதிகாரிகள், அம்மனிதப்புதைகுழிகளில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு ஏற்றவாறான தடயவியல் விஞ்ஞான ஆய்வுகூடமொன்றை நாட்டில் நிறுவுவது பெரிதும் பயனுடையதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினர்.

அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் ஆய்வுகூடத்தை நிறுவுதல் என்பது சாதகமான முறையில் பரிசீலிக்கப்படவேண்டிய விடயமாகும் எனக் குறிப்பிட்டதுடன் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் தன்னால் முன்னேற்றத்தை அவதானிக்கமுடிவதாகவும் தெரிவித்தார்.

விசாரணைகள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் : ஐ.நா. வலியுறுத்தல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்

நேற்றிரவு 7 மணியளவில் ஆரம்பமான இந்த சந்திப்பு இரவு 8.45 வரையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தற்போது சர்வதேச ரீதியாக இடம்பெற்றுவரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அக்கறை குறையுமா? என்ற சந்தேகத்தை தாம் எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் குறைவடைந்து விடக் கூடாது என்பதற்காகவே தாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் பதிலளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பொறுப்பு கூறல் விடயத்தை மனித உரிமைகள் பேரவைக்கு மேலதிகமாக பாதுகாப்பு சபையிலும் பாரப்படுத்த வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள், மனித புதைகுழி விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரிடம் தமிழ் அரசியல் தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் , தம்மால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர்  நேற்றைய தினம் (25) செம்மணி மனித புதைகுழி பகுதிக்கு சென்றிருந்தார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
அவரது இந்த விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த காணொளியில் வோல்கர் டர்க், செம்மணிக்கான தமது விஜயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களின் கவலையும் கடந்த காலமும் புலப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது உறவுகளை இழந்த மக்களையும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையும் தான் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதே அந்த மக்களின் கவலையாகவும் உள்ளது.
இது பொறுப்பு கூறல் மற்றும் நீதி என்பவற்றுக்கு ஒரு படி மேலே உள்ள விடயமாகும் என்றும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எக்ஸ் தளத்தில் உயர்ஸ்தனிகரின் செம்மணி விஜயம் தொடர்பில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன என்ற விடயம் அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவை தொடர்பான விசாரணைகள் பாரபட்சமற்றதாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ற வகையில் முழுமையானதாகவும் இருக்க வேண்டும் என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச நாள் இன்று நினைவு கூறப்பட்டது…

மனித குலத்திற்கு எதிரான கொடுமையான சித்திரவதையை தடுக்கும் முகமாக சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று (26) அனுஷ்டிக்கப்படுகிறது.

உலகெங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 26ஆம் திகதியை சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
சித்திரவதை என்பது ‘உடலால், உள்ளத்தால் நோவையும் வேதனையும் திட்டமிட்டு ஒருவர் மீது பிரயோகிப்பது’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் இந்த வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தினத்தின் இந்த ஆண்டிற்கான தொனிப்பொருள் ‘அது நானாக இருக்கலாம் ‘ என்பதாகும். மனிதனை மனிதன் வதைப்படுத்தும் காட்டு மிராண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்பதே பலரதும் எண்ணமாகும்.
மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்று வருகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதை என்பது ஒரு குற்றமாகும். சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதைக்கு முழுமையான தடை இருந்தபோதிலும், உலகின் அனைத்து பகுதிகளிலும் சித்திரவதை தொடர்கிறது

செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்பு

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள்  வியாழக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்ற உத்தரவாதத்திற்கு அமைய வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் குழந்தையின் மண்டையோட்டுத் தொகுதி உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

செம்மணி, சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வுகள் இடம் பெற்றன. மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் புதை குழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.

IMG 20250626 163031 செம்மணி சிந்துபாத்தி மையானத்தில் குழந்தை உட்பட மூன்று மனித சிதிலங்கள் மீட்பு

அத்துடன் 45 நாட்களுக்கு இரண்டாம் கட்ட அகழ்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி அகழ்வுகளுக்கான செலவீன பாதீடு சமர்ப்பிக்கப் பட்ட நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றும் என்ற உத்தரவிற்கு அமைய  வியாழக்கிழமை (26) இரண்டாம் கட்ட அகழ்வுகளை முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினத்துடன் இதுவரை 22 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 45 நாட்களுக்கு பாதீட்டு அளவு உள்ளதால் முதல் 15 நாட்களுக்கு  அகழ்வு பணிகள் சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்து  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.