Home Blog Page 104

மொழி ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கலாம்: மகேசன் தெரிவிப்பு

அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்க வேண்டும். மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம். மொழிகள் ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிக்க 1956 என்ற துரித தொலைபேசி இலக்கத்தையும் 071-19521436 என்ற வாட்சப் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் தெரிவித்தார்.

அரச கரும மொழிகள் தினம் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்துவது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதன் போதே நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன் இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன்  தெரிவிக்கையில்,

எமது தேசிய ஒருமைப்பாட்டு பிரிவானது இவ்வருடமும் அரசகரும மொழிகள் வாரத்தை நடைமுறைபடுத்த ஏற்பாடு செய்துள்ளது. எமது அரசின் கீழ் இயங்கும் தேசிய மொழி கல்வி நிறுவனம் மற்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்பவற்றின் ஒத்துழைப்போடு கலாசார அலுவல்கள் திணைக்களமும் இந்த திட்டத்திற்கு  முக்கியமான பங்காற்றி ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும், எமது அமைச்சு பலதரப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.மொழிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தவாறே, தெளிவான மொழிக் கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொழிக் கொள்கையை நடைமுறைபடுத்துவதன் முக்கிய பொறுப்புக்களை உரிய உத்தியோகத்தர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளளோம். அரச நிறுவனங்களில் மொழிக் கொள்கையை பிரயோகிப்பதற்குரிய முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளோம். அரச மொழி கொள்கையை நடைமுறைபடுத்துவதில் வளங்கள் ஒரு பிரச்சினையாகவுள்ளது. மொழி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்து மொழி ரீதியான கொள்கையினை ஏற்படுத்துவோம்.

இதற்கான நடைமுறையாக மொழிகள் ரீதியான உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1956 என்ற துரித தொலைபேசி அழைப்பு இலக்கத்தையும் 071-19521436 என்ற வாட்சப் இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளோம்.

செவ்வாய்க்கிழமை (01) அரச மொழி வாரம் ஆரம்பமாகின்ற நிலையில், பாடசாலை தினம், பொது மக்கள் தினம், இளைஞர்கள் தினம் போன்ற முறைகளில் அரச கரும மொழிகள் தினமும் அனுஷ்டிக்கப்டவுள்ளது. அரச மொழிக் கொள்கைகளை வெளிக்கொணர்வதன் ஊடாக அரச நிறுவனங்களில் மக்களுக்கு சிறந்த மொழி சேவை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார , அரச மொழிகள் ஆணையாளர் நாயகம் திலக் நந்தன ஹெட்டியாராச்சி ,அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர்  நிமல் ஆர். ரணவக்க , அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் சமிந்த மஹலேகம் , தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் மகேசன்  மற்றும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே.பண்டார ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

”பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

“​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ்  இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் திகதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ்  திடீர் தாக்​குதல் நடத்​தியது. இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ்  பணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர்.

இதையடுத்து காசா மீது இஸ்​ரேல்   கடுமை​யாக தாக்​குதல் நடத்​தி​ வருகின்றது. இது​வரை இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் காசா​வில் 56,000-க்​கும் மேற்​பட்ட பாலஸ்​தீனர்கள் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம்   வெளி​யிட்ட அறி​விப்​பில்,காசா தொடர்​பாக இஸ்​ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்​தில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதற்​கான பேச்​சு​வார்த்​தை​யில் இஸ்​ரேல் பிரதமர் நேதன்​யாகு ஈடுபட வேண்​டும்.

மேலும், இஸ்​ரேல் பணையக் கைதி​களை ஹமாஸ்  உடனடி​யாக விடு​வித்து போர் நிறுத்த ஒப்​பந்​தத்​துக்கு வரவேண்டும். போர் நிறுத்​தம் தொடர்​பாக இறுதி ஒப்​பந்​தத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு முடிவு செய்ய வேண்​டும். இவ்​வாறு டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பரில் ஆரம்பம்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஒக்டோபர் 03 ஆம் திகதிவரை இம்மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்று வரவுள்ளது. அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் மீளாய்வு அறிக்கையும் முன்வைக்கப்படவுள்ளது.

எனவே, இலங்கை அரசின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக்குழுவொன்று பங்கேற்கவுள்ளது என தெரியவருகின்றது.

அதேபோல ஜெனிவா தொடருக்கு முன்னதாக பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவுள்ளது எனவும், நிகழ்நிலை சட்டம்கூட மீளாய்வுக்குட்படுத்தப்படவுள்ளதெனவும் அறியமுடிகின்றது.

ஈரானின் கண்களுக்கு  முகமூடி போட்ட உளவாளி (பகுதி 1) – பருத்திவீரன்- வளைகுடாவில்

கேத்தரின் perez ஷக்தாம் – ஒரு பிரெஞ்சு ஊடகவியலாளர் என உலகிற்கு அறியப் பட்டவர்.இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மற்றும் ஷியாவை ஏற்றுக்கொண்டவர்.அவர்  ஈரானியப் புரட்சியைப் பாராட்டி னார், விலாயத்-இ-ஃபக்கியாவை ஆதரித்தார். இவரது கட்டுரைகள் கூட ஈரானின் தலைவர் அயத்துல்லா கமேனியின் இணையதளத்தில் அப்போது வெளியிடத் தொடங்கியது ஈரான் ஆனால் அவை எல்லாம் வெறும் முகத்திரைகள்…உண்மையில், மொசாத்தின் கண்கள் அதற்குப் பின்னால் ஒளிந்திருந்தன. ஈரானிய அமைப்புக்குள் இருந்து அனைத்தையும் பார்த்துக் தரவுகள் திரட்டி அனுப்பிய பெண் தான் கேத்ரின் பெரெஸ் ஷக்தாம்.
சாதாரண உளவாளி போல கேத்ரின் ஈரானில் நுழையவில்லை. மாறாக அவள் ஒரு எழுத்தாளராக, பத்திரிகையாளராக மற்றும் சிந்த னையாளராக வெளிவந்தாள் அவர் அரசியல் வாதிகளை சந்தித்தார், புரட்சியின் பாதுகாவ லர்களுடன் அமர்ந்தார். இப்ராகிம் ரைசியையும் சந்தித்தார் மற்றும் “பத்திரிகையாளர் ஆராய்ச்சி” என்ற முகத்திரையின் கீழ் முக்கியமான பகுதிகளை பார்வையிட்டார் ஆனால் மிகவும் ஆபத்தான உளவு வேலையை கச்சிதமாக மொசாத்துக்கு செய்து தந்தவர்  அவரைப்பற்றிய தொகுப்புகளை இந்த கட்டுரையில் காண்போம்.
பெரெஸ்-ஷக்டம் பிரான்சில் ஒரு மதச் சார்பற்ற யூத குடும்பத்தில் வளர்ந்தார், அவரது குடும்ப பின்னணி சோகம் நிறைந்தது….கேத்தரின் பெரெஸ்-ஷக்டம் யார், அவள் எப்படி ஈரானின் உள் வட்டத்திற்குள் ஊடுருவி னாள்?
கேத்தரின் வாழ்க்கை ஆயிரத்து ஒரு இரவுகளைப் போல வாசிக்கப்படுகிறது. துனி சியாவில் நாஜி வதை முகாமில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு தந்தைவழி தாத்தா, அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய யூதர்…
பிரெஞ்சு எதிர்ப்பில் போராடி ஹிட்லரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஒரு தாய்வழி தாத்தா, இந்த தாய் தகப்பனின் மகன் தான்.. இசிட்ரோ… இவர் தான் கேத்தரின் உடைய தந்தை….
இசிட்ரோவுக்கு யூதராக இருக்க விருப்ப மில்லை கடுமையாக யூத எதிர்ப்பு மனநிலை அடைந்ததோடு தான் எந்த மதத்தையும் ஏற்க வில்லை என மதச்சார்பற்றவனாக வாழ முடிவு செய்து அவரைப்போலவே மதச்சார்பற்ற மனைவி யோடு வாழ்ந்தார் நேர்த்தியாக வடிவ மைக்கப்பட்ட பாரசீக கம்பளத்தை விட மிகவும் சிக்கலான முறையில் பின்னப்பட்ட பிற கதைகள் ஆகியவை அவரது வாழ்க்கை வரலாற்றுக் கதை களில் அடங்கும் கேத்தரின் உடைய தாத்தா குடும்பம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அவர்கள் துனிசியாவிலேயே இருந்தனர். அவர்களின் மகன் இசிட்ரோ 18 வயதை எட்டியபோது, ​​அவர் பல்கலைக்கழகத்தில் படிக்க பாரிஸுக்கு குடிபெயர்ந்தார். Aish.com-க்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் கேத்தரின் கூறுவதுபோல்: “என் தந்தை தனது பெற்றோரின் துன்பங் களை அதிர்ச் சியை உண்மையில் உணர்ந்தவராக இருந்தார். அவர்கள் அனுபவித்தவற்றிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீளவில்லை எதிர்ப்பில் போராடினார், இரண்டு முறை பிடிக்கப்பட்டார், மீண்டும் போராடித் தப்பினார்.
போருக்குப் பிறகு, யூதர்கள் தங்கள் யூத அடையாளத்தை மீண்டும் தொடங்கினர், ஆனால் அது யூத அனுசரிப்பிலோ அல்லது பாரம்பரியத்திலோ வேரூன்றாத ஒரு மெல்லிய அடையாளமாக இருந்தது, பரப்ப முடியாத ஒரு வெட்டப்பட்ட பூவைப் போல. கேத்தரின் தனது 11 வயதில் அம்மா இறந்துவிட்டதால், கேத்தரின் தன் யூத எதிர்ப்பு தந்தையிடம் வளர்ந்து வந்தார். “யூத சமூகத்தைச் சேர்ந்தவள் என்ற உணர்வு அவளிடம் இல்லை. அவளும் மிகவும் மதச்சார்பற்றவளாக வளர்க் கப்பட்டாள்.  அங்கு தான் வழக்கமான பிரெஞ்சு வளர்ப்பைப் பெற்றாள் ஆனால் அதே நேரத்தில் தனது அடையாளத்தின் இந்த பகுதி ஒருபோதும் ஆராயப்படாமலும் வளர்க்கப்படாமலும் இருந் தது என சிந்தித்தாள் தனது மூல இனத்தை தேடி னாள் யூத அடையாளங்களை ஆராய்ந்தாள். யூத மத பற்றோடு மனதை மாற்றிக் கொண்டு வந்தாள். அவரது தாயார் இறந்த சிறிது காலத்திலேயே, கேத்தரின் தந்தை ஒரு கிறிஸ்தவ பெண்ணை மீண்டும் மணந்தார். கேத்தரின் ஒரு உயர்நிலை உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். உயர் நிலைப் பள்ளி பட்டம் பெற்ற பிறகு, அவர் பல்கலைக்கழகத்திற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார்.
இங்குதான் அவள் சுதந்திரமாக யூத மத ஆதரவாளர்களோடு நெருங்கியது மட்டுமல்ல மொசாத்தின் வலைக்குள் வீழ்த்தப்பட்டார்.மொசாத்தின் ஹனிட்ரிப் உளவு வேலை களுக்கு பயிற்சி தரப்பட்டு முழுமையாக தன்னை உளவாளியாக மாற்றிக் கொண்டாள்.இந்த யூத இனத்திற்காக தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உறுதியோடு மொசாத்தின் திட்டங்களுக்கு தன்னை தியாகப்படுத்த தொடங் கினார்.அவளுக்கு 18 வயது. ஈரானுக்குள் நுழைய வேண்டும் அதுதான் கேத்தரினுக்கு வழங்கப்பட்ட பணி ஈரானுக்குள் ஒரு அந்நிய பெண் நுழைவது சாத்தியமா? அதை சாத்தியமாக்கினார் கேத்தரின் அதற்கு துவக்கமாக  ஐக்கிய ராஜ்ஜியத்தில் அவள் ஏமனைச் சேர்ந்த ஒரு அழகான முஸ்லிம் மனிதரைச் சந்தித்தாள், அவருக்கு வணிகம் வருமானம் – ஒரு நிலையான குடும்பம் மற்றும் வலுவான மத அடையாளம் – கொண்டிருந்தார்.அவரோடு பழக ஆரம்பித்தாள் தனது வசீகர அழகில் வீழ்த்தி அவரை திருமணம் செய்து கொள்ளும் நிலை வரை சென்றடைந்தார்.
அவரது கணவர் தனது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்று அவளிடம் கூறினார்.
“எனக்கு அது ஆட்சேபனை இல்லை,” என்று கேத்தரின் கூறினார். கேத்தரின் குர்ஆனைப் படித்துவிட்டு சன்னி முஸ்லிமான தனது கணவனின் கொள்கைக்கு எதிர்மாறான சூஃபி மாயவாதத்தில் ஆர்வம் காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே அவள் தனது கணவர் பக்தியுடன் கடைப்பிடித்த சுன்னி இஸ்லாத்தை கிட்டத்தட்ட  நிராகரித்தாள்.
அது அவளுடைய நோக்கமும் அல்ல.
தொடரும்… 

செம்மணியில் மேலும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள்!

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்று திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அவற்றில் ஏற்கனவே 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்றின் பின்னி பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்பு கூடுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் புதிதாக எவையும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருந்தோட்ட மக்களின் குத்தகை ஒப்பந்தம் – வர்த்தக ஒப்பந்தமா? -மருதன் ராம்

இலங்கையின் வருமானத்தில் பிரதான பங்காளிகளாக மலையக தோட்ட தொழிலாளர்கள் 1820ஆம் ஆண்டின் முன்பிருந்தே தமது பங்களிப்பபை வழங்கி வருகின்றனர். ஆனால் இந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சி னைகள் அளவிட முடியாதவை.
குறிப்பாக வீட்டுரிமை, காணியுரிமை, கல்வியுரிமை, பாதுகாப்புரிமை தொடர்பாக பல்வேறு பிரச்சினை களுக்கு மத்தியில் வாழும் இவர்களின் நலன் களை மேம்படுத்தும் செயற்பாடுகளை மலை யக வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொண்டிருக்கவில்லை. மலையக பெருந் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தும் போது அந்த மக்களை தனியாருக்கு தாரைவார்த்த ஒப்பந்தம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
1972ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிடமிருந்து தேயிலை தோட்டங்களை பொறுப்பேற்ற போது சகல தோட்டங்களும் பெருந்தோட்டங்களாக காணப்பட்டன. எனினும் 1992ஆம் ஆண்டு அதனை அரசாங்கம், தனியார் மயப்படுத்த ஆரம்பித்த போதே தேயிலை தொழிற்றுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1995ஆம் ஆண்டு அரசாங்கமானது (பெருந்தோட்ட அமைச்சு)  பெருந்தோட்டங்களை பராமரிக்கவும் முகாமைத்துவம் செய்யவும் 23 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன்  54 வருட ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டது.
தோட்டங்களை தனியார் மயப்படுத்துவது என அரசாங்கம்  முடிவெடுத்தமைக்கு உலக வங்கியின் ஆலோசனையும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அச்சந்தர்ப்பத்தில் பிரதான தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானும் இதற்கு ஆதரவாகவே இருந்தார்.  அக்காலகட்டத்தில் அதற்குப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக தோட்டங்களை அரசாங்கமே வைத்திருந்தால் தமிழ் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
எனினும் அரசாங்கம் தமது பொறுப்புகளில் இருந்து விலகி செயற்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பெருந்தோட்ட காணிகளை தனியார் கம்பனிகளுக்கு வழங்குவதற்காக கைச்சாத்திடப் பட்ட ஒப்பந்தம் குத்தகை ஒப்பந்தமா? என்ற கேள்வி எழுகிறது. குத்தகை ஒப்பந்தம் என்பது நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு இடையே உள்ள உரிமைகள் மற்றும் பொறுப்பு களை வரையறுக்கிறது.
இது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். மேலும் இது சொத்தை குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதை உள்ளடக்கியது. எவ்வாறாயினும், 1995ஆம் ஆண்டு வரை தோட்டங்களை நிர்வாகம் செய்து வந்த இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத் தாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகிய இரண்டு பிரதான நிறுவனங்களும் தோட்டங்களை நிர்வகிப்பதில் முகங்கொடுத்த சிக்கல்கள் காரணமாகவும் நிதி நிர்வாகத்தில் அவை வீழ்ச்சியை சந்தித்திருந்ததன் காரணமாகவும் பெருந்தோட்டங்களை தனி யாருக்கும் வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதில் குறிப்பிடத்தக்கதொரு விடயம் உள்ளது. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (SLSPC) மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) ஆகியவற்றிடம் இருந்து நேரடியாக பெருந்தோட்டங்கள், கம்பனிகளிடம் ஒப்படைக் கப்பட்டன.
இது சில பிரச்சினைகளின் போது நிலத்தின் உரிமையாளர் யார்? என்ற கேள்வியை உருவாக்குகிறது. அதாவது அரசாங்கம் குறித்த காணிகளை பொறுப்பேற்று அதன் பின்னர் தனியார் கம்பனிகளிடம் ஒப்படைப் பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட இரண்டு அரச நிறுவனங்களினதும் வர்த்தகம் வீழ்ச்சி யடைந்துள்ளமையால் அதன் செயற் பாடுகளை தனியாருக்கு வழங்குவதாக ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்டுள்ளது. இதனையே நட்டத்தில் இருந்த தோட்டங்களை பொறுப்பேற்று முன்கொண்டு செல்வதாக தனியார் கம்பனிகள் கூறி வருகின்றன. அதேநேரம், ‘இந்த நிலம் அரசுடையது. அதில் கம்பனிகள் தொழில் செய்யலாம்’ என்ற அடிப்படையிலேயே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இவ்வாறான காரணங்களால் அந்த ஒப்பந்தத்தை முழுமையான குத்தகை ஒப்பந்தமாக கருத முடியாது. எனினும் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தில் பிரதான பங்கு தாரராக (Golden Share Holder) உள்ளது.
அதேநேரம், குத்தகை ஒப்பந்தத்துக்கான விதிகளின் அடிப்படையில், குத்தகைதாரர் பெற்ற காணியை மற்றுமொருவருக்கு குத் தகைக்கு வழங்க முடியாது. மாறாக வர்த்தக மாதிரி ஒப்பந்தத்தில் அவ்வாறான காணிகளை உப கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்க முடியும். இன்று பல பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களை உப கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளன. இதனூடாகவும், அரசாங்கம் கைச்சாத்திட்டது, குத்தகை ஒப்பந்தம் இல்லை என்ற விடயம் புலனாகிறது.
அத்துடன் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முறையான செயற்பாடுகள் இடம்பெறாதபட்சத்தில் காணிகளை அரசாங்கம் மீளப் பெற முடியும் என்ற ஒரு சரத்தும் அதிலுள்ளது. இருப்பினும் எந்த அரசாங்கமும் அதற்கு தயாராக இல்லை. அதேநேரம், தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைத்த போது அந்த செயற் பாடுகளை கண்காணிப்பதற்காக இரண்டு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. அந்த பிரிவுகளின் செயற்பாடுகளும் பெருந்தோட்ட கம்பனிகளு டன் தொடர்புப்பட்டதாகவே காணப்பட்டன. இதன்படி, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் மற்றும் பெருந்தோட்ட முகாமைத்துவ மேற் பார்வை பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் முக்கிய பணிகள், தோட்டப்புற மக்களின் சமூக நலன், வீடுகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இது தவிர, மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும் பொறுப்பும் அந்த நிதியத்துக்கு உள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட முகா மைத்துவ மேற்பார்வை பிரிவு என்பது பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாகும். இது பெருந்தோட்ட கம்பனிகளில் அரசாங்கத்தின் உரிமையைப் பாதுகாக்கவும், குத்தகை ஒப்பந்தங்களை மேற் பார்வையிடவும் நிறுவப்பட்டது. இந்த பிரிவு பெருந்தோட்டங்களின் முகாமைத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக ஆலோசனைக ளையும் வழங்குகிறது. இந்த பிரிவுக்கு அர சாங்கத்துக்கும் கம்பனிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் அதிகாரம் உள்ளது. அதாவது குறித்த ஒப்பந்தத்தின் விதிகள் மீறப்படும் சந்தர்ப்பத்தில் காணிகளை மீளப் பெறும் பரிந்துரைகளை பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவினால் வழங்க முடியும். இருப்பினும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையி லான ஒப்பந்தம் குத்தகை ஒப்பந்தமாக இருப்பின், அதன் விதிகளுக்கு புறம்பாக செயற்படும் கம்பனிகளிடம் இருந்து தோட்டங்களை மீளப் பெறும் பரிந்துரைகளை அந்த பிரிவினால் வழங்க முடியும். எனினும் குறித்த ஒப்பந்தம் ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்பதால் கம்பனிகள் அதற்குரிய விதிகளையே பின்பற்றுகின்றன.
எனவே, பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை குத்தகை ஒப்பந்தமாக கருத முடியாது. அப் படியாயின் அந்த ஒப்பந்தத்தை எளிதில் ரத்து செய்து பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்க முடியும். இருப்பினும் அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை என்பது அதன் செயற்பாடுகளில் தெளிவாகிறது. பல சந்தர்ப்பங்களில் கம்பனிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவே அரசாங்கம் கூறி வருகின்றது. இந்த நிறுவுதலின் அடிப்படையில் பெருந்தோட்ட மக்களின் விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர் யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

செம்மணி புதைகுழி : Ai படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சட்டத்தரணி ரனித்தா

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்புக் கூடுகளை Ai தொழில்நுட்பத்தின் ஊடாக மாற்றி அமைப்போருக்கும், அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழியில் காணப்படும் எலும்புக் கூடுகளை வைத்து, Ai தொழில்நுட்ப உதவியுடன் படங்கள் உருவாக்கப்பட்டு, அவை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

குற்றவியல் நடவடிக்கையாக நீதிமன்ற நடவடிக்கை ஊடாக விசாரணையில் இருப்பதனால் போலியாக உருவாக்கப்பட்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதனால், அவை குற்றவியல் விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்பட்டு, வழக்கினை பிழையாக திசைதிருப்பிக் கொண்டுசெல்வதற்கான உத்தியாக இதனை கையாள்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான படங்களை உருவாக்குபவர்கள் மற்றும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றோம்.

இனி வரும் காலங்களிலும் அவ்வாறான படங்கள் உருவாக்கப்பட்டு, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு எதிராக, குற்றவியல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் எனவும், நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இந்த வழக்கு விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் – யுத்தத்தை நிறுத்து”: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி!

“பாலஸ்தீனத்துக்கு சுதந்திரம் : யுத்தத்தை நிறுத்து” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று (30) ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்தன.

பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியாக அமைந்தது.

கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்ற இப்பேரணியினர் “கொல்லாதே கொல்லாதே குழந்தைகளை கொல்லாதே”, “இனப்படுகொலையை நிறுத்து” என கோஷமிட்டும் பதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வடக்கு கிழக்கில் இறுதியாக இரு உள்ளூராட்சி சபைகளில் இன்று ஆட்சி அமைப்பு

வடக்கு கிழக்கில் கடைசியாக இரு உள்ளூராட்சி சபைகளில் இன்று (30) ஆட்சி அமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி நெடுந்தீவு மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இரண்டிலும்இ. இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்தை அமைத்திருக்கிறது.

அதற்கமைய, நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசுக் கட்சியின் சங்கரப்பிள்ளை சத்தியவர்தன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். உபதவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் செபஸ்ரியன் விமலதாஸ் தெரிவாகியுள்ளார்.

‘இலங்கை தமிழரசுக் கட்சி 58 சபைகளில் போட்டியிட்டாலும், 12 சபைகளில் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள்’.  ‘ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதிகளைப் பெறுவதற்காகவே அவற்றில் நாம் போட்டியிட்டோம், அப்படி பிரதிநிதித்துவத்தைப் பெற்றும் கொண்டோம்’ என்று கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மிகுதி 46 சபைகளில் 34 சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகங்களை அமைத்துள்ளது.
இதன்படி ’58 சபைகளில், 46 இல் எமது இலக்கை அடைந்துள்ளோம் என்றும் மிகுதி சபைகளிலும் இரண்டாவது இடத்தை வகிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குக் கிடைத்த பெரு வெற்றி என்பதற்கு அப்பால், மக்கள் கொடுத்திருக்கும் ஆணையாக நாம் ஏற்றுக் கொண்டு உள்ளூராட்சி சபைகளின் முழு அதிகாரங்களையும் உபயோகித்து மக்களுக்கு சேவையாற்றுவோம்’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்: ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணி, மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக தகவல்!

நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சின் அண்மைய விசாரணையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையானது உள்ளூர் மக்களிடமிருந்து சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாளிகை கட்டப்பட்ட நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைக் கோரி எட்டு நபர்கள் முன்வந்துள்ளனர்.
இது சாத்தியமான முதலீட்டாளர்களுக்கு அங்கு முதலீடுகளை செய்வதில் சிக்கல்களை உருவாக்குகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, எந்தவொரு முதலீட்டாளருக்கும் சொத்தை வழங்குவதற்கு முன்னர் அனைத்து உரிமைப் பிரச்சினைகளும் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அங்குள்ள சட்ட தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகையை பல்வேறு முதலீட்டு நோக்கங்களுக்காக பெறுவதற்கு கனடாவை சேர்ந்த முதலீட்டாளர் உட்பட பல தரப்பினர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தனர். 2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி மாளிகை காங்கேசன்துறையில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.  அதில் சுமார் 15 ஏக்கரில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுமானங்களுக்காக சுமார் 3.5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.