சீனாவின் இந்தியா மேலான உளவு முயற்சிகளுக்கு
ஊக்கமளித்து ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க முயலும் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 253
இலங்கை விளையாட்டு வீரர்கள் உட்பட 12500 விளையாட்டு வீரர்கள் பங்குபற்றும 48 வகையான விளையாட்டுக்களை உள்ளடக்கிய 19வது ஆசிய விளையாட்டு விழா இன்று 23.09.23 இல் சீனாவில் ஆரம்பமாகின்றது இந்நிலையில் பத்து இந்திய விளையாட்டு வீரர்கள் இந்திய அதிகாரிகள் உடன் ஏற்கனவே விளையாட்டில் பங்குபற்ற சீனா சென்றுள்ளனர். இதற்கிடை அருணாசலப்பிரதேசத்தைச் சார்ந்த மூன்று வீராங்கனைகளுக்குச் சீனா விசா மறுத்ததினால் அதனை இந்திய வெளிவிகார அமைச்சின் பேச்சாளர் கண்டித்து அறிக்கை விட்டார். இதனை அடுத்து விளையாட்டுப் போட்டிக்கு விருந்தினராகச் செல்லவிருந்த இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரின் சீன அழைப்பைச் சீனா விலக்கியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் வெளியிட்ட கண்டன அறிக்கை தெரிவிக்கிறது.
அருணாசலப் பிரதேசத்தை தென்திபேத் எனத் தனதாக உரிமைபாராட்டும் சீனா அப்பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கு விசா வழங்கினால் அது இந்தியப் பிரதேசம் என்பதை ஏற்கும் செயலாகி விடும் என விசா இல்லாமலே அப்பிரதேச மக்கள் சீனா வரலாம் என்னும் முறைமையைக் கையாள்வது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வரும் செயலாக உள்ளது. சீன இந்திய கூட்டுப்படைப் பயிற்சியில் கலந்து கொள்ளவிருந்த அருணாசலப்பிரதேச படை அதிகாரிகளுக்கும் சீனாவின் செங்டு நகரில் கடந்த யூலையில் நடைபெற்ற உலகப் பல்கலைகழக விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்ளவிருந்த மூன்று அருணாசலப்பிரதேச வீரர்களுக்கும் இவ்வாறே சீனா விசா மறுத்தமை சீனா நடைமுறையில் அருணசலப்பிரதேசத்தைத் தனது இறைமைக்குட்பட்ட பகுதியாகவே கருதுகிறது என்பதைத் தெளிவாக்கி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தொடரும் சீன இந்திய எல்லைப்பிரச்சினை எந்நேரத்திலும் போராக மாறலாம் என்னும் சாத்தியக்கூறுகள் உள்ள நிலையிலேயே சீனாவின் ஷின் யான் 6’ 750 கி.மீ தூரத்திற்கு துல்லியமாக வேவுபார்க்கக் கூடிய ஆய்வுக்ககப்பல் இலங்கை நோக்கி இந்திய அரசின் சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினையும் மீறி நகர்கிறது.
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா விண்கல ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் தமிழ்நாட்டிலும் தெலுங்கு தேசத்திலும் உள்ள இராணுவ வான்படை ஆயுதக்கருவிகள் தளபாடங்கள் உற்பத்தி நிலையங்கள் தென்னிந்தியாவில் உள்ள ஆறு கடற்படைத்தளங்கள் ஆகியனவற்றை வேவுபார்க்கக் கூடிய வீச்சுக்குள் கொண்டுள்ள இக்கப்பல் இலங்கையை நோக்கிப் பயணித்து திடீரென இந்தியாவின் நிக்காபார் தீவுகளுக்கு அண்மையில் அனைத்துலக கடல் எல்லையில மெதுவாகப் பயணிக்கிறது இப்பகுதியில் அமைந்துள்ள கடலடி மலைத்தொடர்களை ஆய்வு செய்யும் நோக்கில் மெதுவான பயணத்தை அக்கடலடி மலைத்தொடர் மேற்பகுதி கடல் நீரில் தொடங்கியுள்ளது.
இந்த கடலடி ஆய்வினை ரஸ்யா 1940களில் மன்னார்கடலை அடுத்த பகுதிகளில் மேற்கொண்டுதான் இலெமூரியாக் கண்டக் கொள்கையை உருவாக்கி உலகின் முதல் மனிதன் ஈமத்தமிழக நிலப்பரப்புக்கள் ஒன்றாக இருந்த காலத்தில் தோன்றினான் என்பதை அறிவியல் ரீதியாகக் கண்டறிய முயன்றது.
இது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் என்னும் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்னும் தொன்மத்தை மறுப்பதால் அதனை உண்மையாக்கவே சுமேரிய நாகரிகம் என்னும் ஆதித்தமிழரின் பரவல் நிலையில் தோன்றிய நாகரிக வளர்ச்சியை அதுவே தமிழர்களின் இந்தியத் துணைக்கண்ட குடிவரவுக்கான மூலமெனத் திட்டமிட்ட முறையில் மேற்குலகு அறிவாகத் திணித்தது.
தமிழர்களின் இறைமையின் தொன்மையும் தொடர்ச்சியும் அதன்வழி அவர்களின் தன்னாட்சி உரிமையும் உறுதியாவதைத் தடுக்க இந்திய அரசும் இரஸ்யாவின் இலெமூரியாக் கண்டம் குறித்த கடலடி ஆய்வுகளை 1940களிலேயே தடைசெய்ய உழைத்தது. இந்தியா தனது அரசியல் நோக்குக்காக எதனையும் செய்யும் என்பதற்கு உதாணரமாக இன்றும் கனடாவில் இந்தியா அங்கு அரசியல் புகலிடம் பெற்று வாழ்ந்து வந்த சீக்கிய தலைவர்களில் ஒருவரான ஹாதீப்சிங்கை கொன்றழித்துள்ள சம்பவம் கடந்த வாரத்திலும் இடம்பெற்றுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 36வது நினைவேந்தல் ஊர்தியைத் திருகோணமலை நோக்கிச் செல்லுகையில் தாக்கி உடைத்து தொடர்ந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனையும் தாக்கிக் காயப் படுத்தி சட்டத்தின் ஆட்சி தங்களதே பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் தாம் நினைத்ததைச் செய்து பாராளுமன்ற சிறப்புரிமைகளையும் அவமதிப்போம் என்பதை வெளிப்படுத்திய சிங்களவர்கள் தங்களுக்கு இலங்கைத் தமிழர்களுடன் கூடிவாழும் மனநிலை இல்லை என்பதை மீளவும் நிரூபித்து இந்நிலையில் இந்தியா 13வது திருத்தத்தை எவ்வாறு தமிழர்களின் கண்ணியமான வாழ்வுக்கு தொடக்கமாக்கப் போகிறது என்ற கேள்விக்கு இந்தியாவையும் அனைத்துலக நாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியகதன்னாட்சி உரிமையினை ஏற்காது ஏன் ஈழத்தமிழர்கள் சிங்களமக்களால் இனஅழிப்புக்கும் பண்பாட்டு இனஅழிப்புக்கும் உள்ளாகின்றார்கள் என்ற கேள்விக்கு உலகையும் பதிலளிக்க வைத்துள்ளார்கள் என்பதே இலக்கின் கருத்தாக உள்ளது.
தமிழர்கள் இலங்கையின் மூத்த மக்களினம் என்ற இந்த வரலாற்று உண்மைகளை இன்று ஈழத்தமிழர்களின் நிலத்தை பௌத்த மத விரிவாக்கத்தின் மூலம் ஆக்கிரமிக்கவும் ஈழத்தமிழர்களின் வாழ்வை சிங்களமொழி விரிவாக்கத்தின் மூலம் ஒடுக்கவும் முயலும் இன்றைய சிங்கள பௌத்த பெரினவாதிகளும் ஐக்கிய நாடுகள் சபையில் ஒருவார்த்தை கூட இலங்கையில் இனநல்லிணக்கம் குறித்துப் பேசாது பொருளாதார வங்குரோத்து நிலையில் நின்று காத்த இந்தியாவுக்கு ஒருவார்த்தைகூட நன்றி சொல்லாது அமெரிக்காவுக்கே நன்றி கூறி பேசிவிட்டு அமெரிக்க அபிவிருத்தி நிதி 19.2 மில்லியன் அமெரிக்க டொலரையும் இரந்து பெற்றுள்ள சிறிலங்காவின் இன்றைய அரசத் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும், யாழ்ப்பாணத்தில் தியாகி திலீபனின் உண்ணாநோன்பு அறவழிப்போரின் பெயரையே கேட்க அஞ்சி நடுங்கி திருகோணமலையில் கோழைத்தனமாக நினைவு ஊர்தியையும் தாக்கி உடைத்து தொடர்ந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனையும் தாக்கி சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களுடன் கூடி வாழும் விருப்பு இல்லையென உலகுக்குத் தெளிவாக நிரூபித்து காயப்படுத்தி நீதிமன்றத் தடைகளைப் பெற முயன்று சட்டத்தின் முன் சிங்களவர்களுக்கே சிறப்பு முன்னுரிமை எனச் சட்டத்தின் ஆட்சி இல்லையென நிரூபித்து இறுதியில் நல்லூர் பிரதேசசபை அலுவலர் தியாகி திலீபனின் நினைவுச்சின்னத்துக்கு நிலம் கொடுத்தது கிரிமினல் குற்றம் எனத் தமிழ் அரசப்பணியாளர்களும் சிங்கள பௌத்தத்தை கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பாணியில் திலீபனுக்கு நினைவேந்தல் செய்வது சட்டவிரோதம் என முன்னெடுக்காவிட்டால் அவர்களும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என எச்சரிக்க முயலும் பொலிசாரின் கீழ் கண்ணியமான வாழ்வைப் பெறுவது எப்படி என்ற கேள்விக்கு இந்தியாவைப் பதிலளிக்க வைத்துள்ளார்கள். அதே வேளை இந்தியாவைச் சீனா உளவு பார்ப்பதற்கு கூட அனுமதித்து அதே நேரம் இந்தியாவிடமும் நிதியும் அனைத்துலக ஆதரவுக்கான துணையும் பெறும் ரணில் அக்டோபர் மாதத்தில் சீனாவுக்கு உத்தியோக பூர்வமாகவும் செல்லவுள்ளார். இவ்வாறு எல்லா நாடுகளையும் தமது நலனுக்குப் பயன்படுத்தும் இராஜதந்திரத்தை ஈழத்தமழர்கள் ஏன் கடைப்பிடிக்கின்றார்கள் இல்லை என்பதற்கு ஈழத்தமிழர்கள் பதில் சொல்ல வேண்டுமென்பது இலக்கின் அடுத்த கேள்வியாக உள்ளது.