உணவு வேண்டும் என்றால் பாலியல் உறவு கொள்ள வேண்டும் என காஸா பெண்கள் வற்புறுத்தப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவலை AP செய்தி முகமை வெளியிட்டுள்ளது.
மேலும் காஸா பெண்கள் அங்கு நிவாரண உதவிக்கு வரும் ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக கூறப்படுகின்றது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்க வரும் ஆண்கள், காஸா பெண்களின் தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு பின்னர் தவறான நோக்கத்தில் தொடர்பு கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், உணவு வழங்குவதாகக்கூறி அதற்க்குப் பதிலாக தங்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கேட்பதாக காஸாபெண்கள் கூறியதாகவும் இதற்க்கு காஸா பெண்கள் மறுப்புத்தெரிவித்ததாகவும் காஸாவில் இருக்கும் AP செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் ஆண்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.
காஸா பகுதியில் செயற்படும் மனித உரிமை அமைப்புகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியதோடு காஸாவில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளது.