எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” தாக்கும்!

ஈரானின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாக அந் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி  தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், ஈரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், படைகள் “டிரிக்கரை அழுத்த தயாராக” இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க ஈரான் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டுமென்று அந்நாட்டிடம் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அணு ஆயுதங்கள் கூடாது, போராட்டக்காரர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்” என்று கூறிய அவர், “ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக” குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த போதே  ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.