“நான் பதவி விலக மாட்டேன்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அறிவிப்பு

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் சங்கம் ஆகியோருடன் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் குறித்து தாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என அவர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறான நிலையில்,  “எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டேன்“ என பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

Tamil News