இரு நாடுகளுக்கும் இடையிலான  நட்புறவு தொடர எதிர்பார்க்கிறேன்-ரணிலுக்கு எலிசபெத் மகாராணி வாழ்த்து 

59 Views

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான நட்புறவை தொடர்ந்தும் பேணுவதற்கு எதிர்ப்பார்துள்ளதாக இரண்டாவது எலிசபெத் மகாராணி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

23.jpg

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக பதவியேற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள்  ஜனாதிபதியாக இருக்கும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான  நட்புறவை தொடர நான் எதிர்பார்க்கிறேன்.

உங்கள் எதிர்கால ஜனாதிபதி வகிபாகம் மற்றும் உங்கள் நாடு மற்றும் மக்களின் வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply