தமிழகத்தில் முதல்முறையாக இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடுகள்

230 Views

banner img

இலங்கை தமிழ் அகதிகளுக்காக திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்தில் ரூ. 17.17 கோடி இந்திய ரூபா மதிப்பில் நிர்மாணிக்கப்பட்ட 321 தனித்தனி வீடுகள் கொண்ட குடியிருப்பை சென்னையிலிருந்து காணொளி மூலம்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (14) திறந்து வைத்தார்.

தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்தில் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி ரூபா செலவில் கடந்த 08 மாதங்களில் 321 தனித்தனி வீடுகள் தலா 300 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன.

திண்டுக்கல்,தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியிலுள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு இலங்கை தமிழ் அகதிகள்  முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply