அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானது: சஜித்

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இரகசியச் சட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி, ராஜபக்ஷவின் அதி பாதுகாவலர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.