நவுருத்தீவில் சிறைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல, மனநலச் சிக்கல்கள்

நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல். கடந்த தடுப்பில் சிறைப்படுத்தப்பட்டிருந்த குழந்தைகள், இளையோர் பல்வேறு உடல்நல, மனநலச் சிக்கல்களை எதிர்கொள்வதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

நவுருவில் தஞ்சம் கோரிச் சென்ற குழந்தைகள், இளையோருடைய நடத்தப்பட்ட ஆய்வில், இவர்களிடையே அதிகப்படியான உடல் நல, மனநலச் சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி கற்பதற்கு இடையூறுகள், குடும்பத்தை விட்டு தனித்து இருத்தல், அதிர்ச்சியான நிகழ்வுகள் என பல பாதகமான குழந்தைப்பருவ அனுபவங்களை நவுருத்தீவில் சிறைப்படுத்தப்பட்டு இருந்த குழந்தைகள் கொண்டிருந்ததாக இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

62 குழந்தைகள், இளையோருடைய நடத்தப்பட்ட ஆய்வில், 55 பேருக்கு (89%) உடல்நலச் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 24 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டையும், 21 சதவீதம் பேர் பல் சார்ந்த நோயையும் 16 சதவீதம் பேர் வயிறு சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளனர். இதில் 27 சதவீதம் பேர் மனநலச் சிக்கல்களை கொண்டுள்ளனர். அதே சமயம், 79 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மனநலச் சிக்கலுக்கான அறிகுறியைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply