ரஸ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு வளைகுடா நாடுகள் எதிர்ப்பு

மேற்குலக நாடுகள் ரஸ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப்போவதில்லை என வளைகுடாவில் உள்ள அரபு நாடுகள் தெரிவித்துள்ளன.

வளைகுடாவில் உள்ள அரபு நாடுகளின் கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னரே ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் சேர்கி லவ்ரோவ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணியை சேர்ந்த பஹரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார்.

சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில் கடந்த புதன்கிழமை (01) இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ரஸ்யா மற்றும் பெலாரூஸ் போன்ற நாடுகள் மீதான பொருளாதார தடைகளில் தாங்கள் பங்கெடுக்கப்போவதில்லை என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த போரினால் உலகில் ஏற்படப்போகின்ற உணவுப் பற்றாக்குறை குறித்தும் இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Tamil News