645 Views
இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட் கிழமை இடம் பெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடக வியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அரசாங்கத்தையும் இராணுவ வீரர்களையும் காட்டிக் கொடுக்க முயன்றவர்களே இவ்வாறு அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரை யாடல்கள் நடை பெற்று வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.