ராஜபக்‌ஷ அரசுடன் மோத அனைவரும் இணைய வேண்டும்; ரணில் அழைப்பு

ranil 500 ராஜபக்‌ஷ அரசுடன் மோத அனைவரும் இணைய வேண்டும்; ரணில் அழைப்பு

“நாட்டு மக்களை நெருக்கடிக்கு ள்ளாகியுள்ள ராஜபக்ஷ அரசுடன் மோதும் பொறுப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரம் கிடையாது. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஏனைய தரப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போது பிரதான இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் போது பிற தரப்பினருடன் மோதி நேரத்தை வீணடிப்பது பயனற்றதாகும். நடை முறையில் நாடு எதிர் கொண்டுள்ள சவால்களில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து அரசுடன் மோத வேண்டும்.

தேசிய பொருளாதாரம், ஜனநாயகம் ஆகியவை பல நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளன. இந்த நெருக்கடி களிலிருந்து நாட்டையும் மக்களையும் நாம் காப்பாற்ற வேண்டும்” என்றார். இதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப் பட்டுள்ளன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 ராஜபக்‌ஷ அரசுடன் மோத அனைவரும் இணைய வேண்டும்; ரணில் அழைப்பு

Leave a Reply