கிழக்கு அரச நிறுவனங்களில் மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு

188 Views

மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு

மின் கட்டணத்தை 50% குறைக்க ஆளுநர் உத்தரவு: மாகாண சபைகளின் கீழ் உள்ள நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்  அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே இது  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி அனைத்து மாகாண அரச நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 20% ஆகவும் அதிகபட்சமாக 50% ஆகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அறிவுறுத்தல்களுக்கு அமைய, திங்கட்கிழமை (7) முதல் மின் கட்டணத்தை குறைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply