454 Views
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை
வவுனியா தெற்கு (சிங்கள பிரதேச செயலக) வளாகத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த மத குருமார்கள் இணைந்து குறித்த புத்தர் சிலையை வைத்துள்ளனர்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகமானது (சிங்கள பிரதேச செயலகம்) வவுனியா, மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள புகையிரத கடவை அருகில் அமைந்துள்ளது. குறித்த பகுதியானது தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியாக உள்ளதுடன், குறித்த பிரதேச செயலகத்திலும் உதவிப் பிரதேச செயலாளர் உட்பட அதிகளவிலான உத்தியோகத்தர்கள் தமிழ், முஸ்லிம் மக்களாகவே உள்ளனர்.
இந்நிலையில்,குறித்த பிரதேச செயலக வளாகத்தில் பிரமாண்டமாக பீடம் ஒன்று அமைக்கப்பட்டு புத்தருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெற்று வரும் அரசின் பௌத்தமயமாக்கல் திட்டங்களுக்கு பிரதேச செயலங்களும் உடந்தையாக செயற்படுகின்றனவா? என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.