வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் உடனடியாக விவசாய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அனைத்து வீட்டுத் தோட்டங்களிலும் மிளகாய், கத்தரிக்காய், கீரை வகைகள் போன்ற குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்தாவது வீட்டுத் தோட்டங்களில் விவசாயம் செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் ஆண்டு பாரிய உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு வருகின்ற நிலையிலேயே, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.