அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் பணம் இல்லை – அமைச்சர் பந்துல

244 Views

நிதி நெருக்கடி காரணமாக அரசாங்க பணியாளர்களுக்கு மாதாந்த சம்பளத்தை செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இன்று எழு்பபிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இதன்போது போக்குவரத்து அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தின் வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய பாரியளவிலான கொடுப்பனவுகளை முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிதி ஒழுக்கத்தை பேண வேண்டும் என்ற நிபந்தனை இருந்த போதிலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பணத்தை அச்சிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply