திருகோணமலை: அரசியல் தீர்வு கோரி தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

66 Views

 “கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 51 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று  திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் தொனிப்பொருளில் 100 நாட்கள் செயல்முனைவு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், 51 ஆவது நாள் போராட்டம் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி கிராமத்தில் நேற்று (20.09.2022) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள  பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

Leave a Reply