ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும் – மட்டு. மாவட்ட பல்சமய ஒன்றியம் 

331 Views

ஆசிரியர்களின் பிரச்சினை

ஆசிரியர்களின் பிரச்சினைக்கான தீர்வு காணப்பட்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மேலும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றி மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வழியேற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆசிரியர்களை மன உழச்சலுக்கு உள்ளாக்காமல் அரசாங்கம் விரைவாக ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021

Leave a Reply