யஸ்மின் சூக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த கோட்டாபய தரப்பு எடுத்த முயற்சி படு தோல்வி

சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞரும் நிலைமாறு நீதியின் வல்லுனருமான யஸ்மின் சூக்கா அவர்கள் மீது,  சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் கட்சியின் பிரித்தானிய பிரதிநிதியாக மிக அண்மைவரை செயற்பட்ட, ஜெயராஜ் பாலிகவதன, யாஸ்மின் சூக்கா அவர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றார் எனக் குற்றம் சுமத்தி கடந்த வருடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த முயற்சிக்கு எதிராக யஸ்மின் சூக்கா பிரித்தானிய உயர் நீதி மன்றத்தில் தொடுத்த  தகவல் பாதுகாப்பு   வழக்கு  வெற்றி பெற்றுள்ளது.

“தென்னாபிரிக்க மனித உரிமைகள் சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா அவர்களிடம் அவருக்கு எதிராக பொய்யான தகவல்களை வெளியிட்டமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார். தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழு ஒன்றுக்கு ஆதரவாக யஸ்மின் சூக்கா செயற்படுவதாக பொய்யாகக் கூறி அறிக்கை ஒன்றினைத் தயாரித்த ஜெயராஸ் பாலிகவதன 2021 ஆம் ஆண்டு ஜெனஜவாவிலுள்ள 41 இராஜதந்திர செயலகங்களுக்கு அனுப்பிவைத்தார். தனது நற்பெருக்கு கேடு விளைவிக்கும் தவறான தகவல்களை வெளிட்டமையை எதிர்த்து, 2018 தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சூக்கா தகவல் பாதுகாப்பு வழக்கு ஒன்றினை பிரித்தானியாவில் தொடுத்திருந்தார்”.

இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிய கீழ் இணைப்பை அழுத்தவும்,
Final-Yasmin-Sooka-Press-Release-13-Dec-2022-_Tamil (1)