இலங்கையை விட்டு கோட்டாபய குடும்பத்துடன் வெளியேறியதாக தகவல்

113 Views

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ   நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய குடும்பம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக  தகவல்கள் வெளியிட்டுள்ளன.

Leave a Reply